Showing posts with label Tamil Movie Review. Show all posts
Showing posts with label Tamil Movie Review. Show all posts

 

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில், வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் திரைப்படம் “மண்டாடி”.

ராமநாதபுரம், முகவைப்பட்டினம் பகுதியில் வாழும் மீனவர்களின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாக வைத்து நகர்கிறது கதை. ஊரில் நடக்கும் படகுப் போட்டியில் புறக்கணிக்கப்பட்ட மாரி (மிதுன்), எதிர்த்தரப்பு அணியின் பயிற்சியாளரும் ஊர் பெரிய புள்ளியுமான சாட்டைப்புலி என்கிற சுஹாஸைக் கொல்ல முயல்கிறார். இதிலிருந்து தப்பிக்க அவர் சென்னையில் வசிக்கும் முத்துக்காளியிடம் (சூரி) தஞ்சம் அடைகிறார். அதன் பிறகு, முத்துக்காளி ஏன் மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்? அவருக்கும் சுஹாஸுக்கும் இடையே இருக்கும் கடந்த காலப் பகை என்ன? 'மண்டாடி' (பாய்மரப் படகின் முன்னோடி) ஆக சூரி எப்படி பந்தயத்தில் களம் காண்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

காமெடி நடிகராக இருந்து தற்போது மாஸ் மற்றும் ஆக்‌ஷன் நாயகனாகத் தன்னை இப்படத்தின் மூலம் சூரி வலுவாக நிலைநிறுத்தியுள்ளார். அவரது உடலுழைப்பு படத்திற்குப் பெரும் பலம். வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் சுஹாஸ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  சத்யராஜ் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன. நாயகி மகிமா நம்பியாரும் தன் பங்கிற்கு உணர்வுப்பூர்வமான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

நடுக்கடலில் பாய்மரப் படகுப் போட்டி நடக்கும் காட்சிகளை வெவ்வேறு கோணங்களிலும், கழுகுப் பார்வையிலும் படமாக்கிய ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். கதிரின் உழைப்பு அற்புதம். படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவின் எடிட்டிங் கச்சிதமாக இணைந்து ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது.

இயக்குனர் மதிமாறன் புகழேந்தி உண்மையான படகுப் போட்டியின் உலகத்தை நம் கண்முன் நிறுத்துகிறார். இடைவேளைக் காட்சியும், கிளைமேக்ஸில் இடம்பெறும் பிரம்மாண்ட படகுப் போட்டி சண்டைக் காட்சிகளும் கண்களுக்கு விருந்து. படத்துக்கு படம் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுக்கும் சூரி ‘மண்டாடி’ என்ற தரமான கமெர்சியல் எண்டர்டெயினரை தந்திருக்கிறார். குடும்பத்துடன் திரையரங்கில் சென்று ரசிக்கலாம்.


A special RAW team is hunting for a spy who has been in hiding for years. Karthi attempts to capture this spy and hand him over to his superiors to prove his own mettle. However, before he can do so, an international mercenary group kills the spy and tries to seize a secret he was guarding. Karthi manages to obtain the secret from the spy before he dies and, through him, learns that his father is still alive.

While searching for his father, Karthi discovers that there are two other secrets safeguarded by two other spies—similar to the one held by the deceased spy. He also learns that the leader of the international mercenary group, S.J. Suryah, is trying to acquire all three secrets to execute a plan that could destroy the nation. Karthi attempts to secure the secret before the mercenary leader can and uncover the story behind it; in the process, he reunites with his father. Together, father and son set out to thwart the plot to destroy the country. *Sardar 2* tells this story—revealing the nature of the threat, how they stop it, and the identity of S.J. Suryah—through high-octane action sequences in the style of a Hollywood action movie.

Although it is a sequel to the first *Sardar* film, director P.S. Mithran addresses a different issue to warn the public. He presents a scenario of a potential future catastrophe on a grand, commercial scale, set against the backdrop of an adventurous spy's life.

Karthi, playing the dual roles of father and son, distinguishes the characters not only through his appearance but also through his acting. The film effectively handles action-packed sequences that showcase the protagonist as a simple, unassuming man who, when on the job, transforms into a super-spy—fearlessly risking his life to protect the public. Although romantic scenes are minimal, Karthi’s energetic performance in the action sequences and aerial stunts delights the audience.

S.J. Suryah, playing the villainous international mercenary leader 'Red Dragon', delivers a performance that strengthens the screenplay. Despite being the antagonist, he commands the screen effortlessly during a lengthy sequence where he explains the consequences of human errors, maintaining the audience's engagement throughout.

Malavika Mohanan impresses with her action sequences, even though her role is brief; conversely, Ashika Ranganath’s character, despite appearing throughout the film, fails to leave a lasting impression. Rajisha Vijayan makes only a fleeting appearance in a single scene.

The comedy pairing of Yogi Babu and Nizhalgal Ravi provides plenty of laughs. Their reactions while listening to the villain's (S.J. Suryah) story are particularly hilarious, causing the entire theater to erupt in laughter.

Cinematographer George C. Williams has captured the visuals on a grand scale. He has skillfully executed the action and stunt sequences so that the use of computer graphics remains unobtrusive and seamless.

Sam C.S.'s music elevates the film's quality. His background score is perfectly balanced, adding immense strength to the movie and creating an experience reminiscent of a James Bond film during the chase and stunt sequences.

Vijay Velukutty’s editing stands out as the film's greatest strength. Despite the film featuring a dual role for the protagonist, a villain played by S.J. Suryah, the 'Japan Plan' devised by spies to save the public, and flashback sequences involving the RAW agency, editor Vijay Velukutty has seamlessly woven these elements together to ensure the narrative moves without any lag. He has executed his editing work with such finesse—particularly in making the action sequences convincing and maintaining the screenplay's momentum—that the three-hour runtime flies by unnoticed.

Director P.S. Mithran, handling the sequel to the first part, once again addresses a significant social issue with impact; however, rather than turning it into a preachy lecture, he presents it through action-packed sequences that keep the audience on the edge of their seats.

Even while using the villain character to explain the impending danger facing the public, the director infuses the scene with humor, ensuring the film’s pace remains steady. By keeping the audience constantly curious about what happens next from start to finish, the filmmaker has once again achieved success with Sardar.
Having lost his mother at a young age and grown up in isolation without his father's affection, Hero T.Antony, turns to alcohol as a young man to escape his loneliness. Averse to romantic relationships or marriage, he makes it a habit to invite a sex worker to his home daily, simply to have heart-to-heart conversations. One night, Madhumita Das, a sex worker, visits his home and captivates him. Antony enjoys her company and conversation so much that he begins calling her over every day; touched by his genuine care, Madhumita Das eventually falls in love with him.

Madhumita Das’s arrival brings new enthusiasm and a renewed sense of hope to Antony’s lonely life. However, as they begin living together, Antony’s alcoholism creates a major rift in their relationship, leading to their separation. Thrust back into solitude, does Antony reunite with Madhumita Das? The film *Yen Ennai Edho Seidhai* tells this emotional story.

Both T. Antony and Madhumita Das deliver strong performances in their debut film. Their screen presence significantly bolsters a screenplay where the narrative is driven primarily by the dialogue between the two leads.

Since the film utilizes live sound recording, the director cleverly cast Madhumita Das—who does not speak Tamil—as a Bengali woman. Although she speaks English throughout the movie, her charming attempts to utter the occasional Tamil word captivate the audience. The protagonist, T. Antony—constantly seen with a cigarette and a drink—scores with his performance, executing even the subtlest reactions with great care.

Jeeva Ravi, Regin Rose, and Navya Suji have effectively contributed to the flow of the screenplay.

Although cinematographer Pietro Villani has kept the visuals simple, he has presented them naturally. By relying on natural light rather than excessive artificial lighting, he allows the audience to become truly immersed in the story.

Although the songs composed by Jaikar Harinath and Ashok Sridharan are primarily montage sequences, they breathe life into the screenplay's flow. Joey Reda’s background score articulates emotions that dialogue alone could not convey.

T. Antony—who wrote, directed, edited, and starred in the film—narrates a simple love story in an uncomplicated manner while powerfully capturing the essence of romance and the lovers' emotions. While the film relies heavily on conversations between the lovers and their friends, and the director keeps the narrative engaging, the runtime could have been trimmed.

While the premise—that the heroine cannot speak Tamil because she is Bengali, forcing the hero to communicate with her in English—is logical, the excessive use of English throughout the film feels jarring and occasionally difficult to follow (even the subtitles are in English).

Opting for live sound recording, Director T. Antony filmed scenes in secluded locations and at quiet times; by treating the beach as a character that journeys through the entire film, he effectively demonstrates the inseparable bond between love and the seaside.

Director T. Antony approaches the unconventional theme of a romance involving a sex worker with a fresh perspective, presenting the story in a simple yet enjoyable way.

- NithyaSana

 

குக் வித் கோமாளி புகழ், கும்கி அஸ்வின், இந்திரன் இளங்கோவன் மற்றும் திடியன் திருச்செல்வம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஒரு டார்க் காமடி சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் '4 இடியட்ஸ்' (4 Idiots).


பணத் தேவையில் இருக்கும் நான்கு நண்பர்கள், சட்டவிரோதமான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு பெரிய பங்களாவிற்குள் திருட நுழைகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான தாதாவிடம் மற்றும் பாதுகாவலரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான அந்தச் சூழ்நிலையில், அந்த பங்களாவிற்குள் இருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள், அந்தப் பணம் அவர்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.


குக் வித் கோமாளி புகழ், கும்கி அஸ்வின், இந்திரன் மற்றும் திடியன் ஆகியோரின் கூட்டணி சிரிக்க வைக்கிறது. வில்லத்தனமான மற்றும் நகைச்சுவையான பாதுகாவலர் பாத்திரத்தில் ரவி மரியா படம் முழுவதும் ரசிக்க வைக்கிறார்.


ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதை என்றாலும், யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. சுபாஷ் முனிரத்னம் இசையில் பாடல்கள், பின்னணி இசையும் ஒகே.


இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் சட்டவிரோதப் பணம் மற்றும் உடல் உறுப்பு திருட்டு போன்ற விஷயங்களால் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது என்ற ஒரு நல்ல விழிப்புணர்வு செய்தியைப் சொல்லியிருக்கிறார்.


 '4 இடியட்ஸ்' திரைப்படம் ஒரு எளிமையான கதையமைப்பில், சில நகைச்சுவை காட்சிகளுடன், இறுதியில் ஒரு நல்ல சமூகக் கருத்தைச் சொல்லும் படமாக அமைந்துள்ளது. லாஜிக் பார்க்காமல், வார இறுதியில் குடும்பத்தோடு சென்று திரையரங்கில் ஒரு முறை ரசிக்கலாம்.

 

துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஐ எம் கேம்' (I'm Game).


பணக்கார வீட்டுப் பிள்ளையான டான் ஜான் (துல்கர் சல்மான்), தனது தந்தையின் விருப்பப்படி நிறுவனத்தை நடத்தினாலும், அவனது முழு கவனமும் சூதாட்டத்தின் மீதே இருக்கிறது. இதனால் பெரும் கடனாளியாக மாறும் அவனது வாழ்வில் ஒரு விபரீதம் நடக்கிறது. அதன்பின் அவனுக்கு ஒரு கை மாற்று அறுவை சிகிச்சை (Hand Transplant) செய்யப்படுகிறது. அந்த புதிய கைக்கு என்று ஒரு தனி ஃப்ளாஷ்பேக் மற்றும் நோக்கம் இருக்கிறது. கிரிக்கெட் சூதாட்ட சாம்ராஜ்யத்தை நடத்தும் டேவிட் ஆபிரகாம் (மிஷ்கின்) என்பவனுடன் டான் ஜான் எப்படி மோதுகிறான், அந்த ஆபத்துகளில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே படத்தின் மீதிக்கதை.


நெகட்டிவ் ஷேட்ஸ் கலந்த, சூதாட்ட வெறி பிடித்த ஒரு திமிரான இளைஞன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் தனது ஒற்றை ஆளுமையால் படத்தை தாங்கிப் பிடிக்கிறார்.  விக்கி என்ற கதாபாத்திரத்தில் வரும் ஆண்டனி வர்கீஸ் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். கதாநாயகி காயடு லோஹர். கொஞ்சம் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அவரது அழகால் நம்மை சுண்டி இழுக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் அந்தோணி வர்கீஸ் பெப்பே அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். கதிர் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார். மிரட்டல் வில்லனாக மிஷ்கின் அவரது மிகைப்படுத்தட்ட நடிப்பால் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளார். சம்யுக்தா விஸ்வநாதன் நல்ல நடிப்பை பதிவு செய்துள்ளார்.


ஜெக்ஸ் பிஜாயின் அதிரடியான பின்னணி இசை மற்றும் ஜிம்ஷி காலீதின் நியான் விளக்குகள் நிறைந்த சூதாட்ட அரங்குகளைக் காட்டும் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம்.


இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் கடந்த சில ஆண்டுகளாக தேசத்தையே அடிமையாக்கி வைத்திருந்த சூதாட்டத்தின் பின்னணியில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். கூடவே ஒரு ஃபேண்டசி விஷயத்தை படத்துக்குள் கொண்டு வந்தது அருமை. முதல் பாதி முழுக்க திரில்லர் பாணியில் விறுவிறுப்பாகவும், புதுமையாகவும் கொண்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் எமோஷன் கலந்த ஒரு பழிவாங்கும் ஆக்ஷன் கதையாக மாற்றுகிறார். ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லர் படத்தை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

"Immortal" signifies an indestructible, immense power.

We have seen countless horror movies, but this one can be described as Tamil cinema's first "vampire comedy-fantasy" film. It is also technically impressive.

The story begins a thousand years ago with a couple; the wife is heavily pregnant. An elderly woman assists with the delivery. Upon the baby's birth, even the mother is terrified by the sight of the child. The midwife adds to the fear, warning that this is no ordinary infant. Consequently, they abandon the child on a mountaintop. The scene cuts there, and the story jumps to the year 2026.

Hero works at his uncle's printing press in Chennai and is looking for a rental home. Realizing that renting a house alone would be too expensive, he considers a shared-living arrangement—much like a shared auto—to cut costs.

The heroine appears like an angel sent his way; she calls him and asks if he would like to move in as a roommate. It is a sudden stroke of luck for a man who had been sleeping on a veranda.

If someone would drink Bermuda grass juice just because it’s free, would they say no to sugarcane juice? He readily agrees.

Upon arriving, he discovers it isn't just a house, but a bungalow. He is overjoyed to learn the rent is only 5,000 rupees.

He moves in with the heroine and occasionally tries to woo her; she, in turn, proves to be great company.

As their friendship deepens into intimacy, hero discovers a startling truth: the heroine is no ordinary human woman—she possesses a supernatural nature. Upon realizing this, the protagonist becomes alert and attempts to escape the house, but fails. He comes to understand that the house is under the heroine's control.

The events that unfold thereafter constitute the rest of the screenplay.

G.V. Prakash Kumar has delivered a fantastic performance as the protagonist. It is fair to say he hasn't had such a good role until now.

Kayadu Lohar appears as the heroine and a 'glamour queen.' Her acting is excellent, too; her smile and dialogue delivery are reminiscent of Andrea. This was the first Tamil film she signed (though other films of hers were released earlier).

Lollu Sabha Maran, T.M. Karthik, Kumar Natarajan, and Aditya Kathir handle the comedy.

Sam C.S. has composed music for two songs; they are decent. The background score, however, is terrific.

Arun Radhakrishnan’s cinematography is fantastic. The close-up shots of the heroine are excellent, as are the spine-chilling sequences; the camera work truly impresses.

With M. Rajesh handling the editing, the film has a runtime of 131 minutes.

The film is directed by debutant Mariyappan Chinna.

The first half moves along in a fun manner, focusing on the lead pair's attempts at romance; the chemistry between the hero and heroine works well.

The heroine's beauty and glamour are major assets to the film. Interest heightens once it is revealed that there is a mystery surrounding her character.

Sam C.S. has perfectly crafted a menacing background score, true to the style of horror-thriller films.

The twist during the interval block and the climax are good.

- NithyaSana

 

கருகாட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஜஸ்டின் (நிவின் பாலி), அந்தப் பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து கொண்டு, ஊர் மக்களுக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வரும் ஒரு பொறுப்பான நபர். சமூகத்தின் வழக்கமான திருமண வயதைத் தாண்டியும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில், குடிப் பழக்கம் உள்ள ஒரு பொறுப்பற்ற தந்தையின் மகளான ஆஷ்லி (மமிதா பைஜூ) தன் குடும்பத்துடன் அந்த ஊருக்குக் குடிவருகிறார். தனது குடும்பச் சூழலால் மனவேதனையில் இருக்கும் ஆஷ்லிக்கு, ஜஸ்டினின் அன்பான மற்றும் பொறுப்பான குணத்தைப் பார்த்ததும் அவர் மீது காதல் மலர்கிறது. ஆரம்பத்தில் இந்த வயது வித்தியாசக் காதலை ஜஸ்டின் ஏற்க மறுத்தாலும், ஆஷ்லியின் சுட்டித்தனமும் அன்பும் அவரை மாற்றுகிறது. இவர்களின் காதலைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப் பார்க்கிறது, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடனும் எதார்த்தத்துடனும் விவரிக்கிறது மீதிக்கதை.


காதல் தோல்வி, இளம்பெண்ணின் குறும்புத்தனத்தால் வெட்கப்படுவது, நடுத்தர வயதுக்கேற்ற உடல்மொழி எனப் பல உணர்ச்சிகளைத் தனது தேர்ந்த நடிப்பால் வெளிப்படுத்தி படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளார் நிவின் பாலி. ஆஷ்லி பாத்திரத்தில் வரும் மமிதா பைஜூ, படம் முழுக்கத் தனது வழக்கமான சுட்டித்தனத்தாலும் துருதுருப்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்கிறார்.  சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, ஷியாம் மோகன், வினய் ஃபோர்ட் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் செவ்வனே செய்துள்ளனர்.


விஷ்ணு விஜய்யின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் கேமரா கோணங்களால் படத்தின் அத்தனை ஃபிரேம்களும் அழகாகியிருக்கிறது.


இயக்குநர் கிரிஷ் ஏ.டி. அன்றாட வாழ்வில் நடக்கும் எளிய மனிதர்களின் இயல்பான நகைச்சுவையைத் திரைக்கதையாக்குவதில் மீண்டும் முத்திரை பதித்துள்ளார். படத்தில் வரும் ஒற்றை வரி வசனங்கள் வெடிச் சிரிப்பை வரவழைக்கின்றன.


பெத்லகேம் குடும்ப யூனிட் எந்தவொரு ஆரவாரமும் இன்றி, எளிய மனிதர்களின் உணர்வுகளையும், ஒரு அழகான காதலையும் மிக நேர்த்தியாகப் பேசும் ஒரு கலகலப்பான ஃபீல்-குட் திரைப்படம்.

 

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில், இன்னமும் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அங்கு நடக்கும் சட்டவிரோத அபின் (Opium) வர்த்தகத்தை மொத்தமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு ராயா (யாஷ்) மற்றும் அவரது சகோதரி கங்கா (நயன்தாரா) ஆகியோர் களம் இறங்குகிறார்கள். கோவாவின் டான் சால்வடாரின் மகள் ரெபெக்கா (தாரா சுதாரியா), சர்க்கஸ் கலைஞர் நாடியா (கியாரா அத்வானி) எனப் பல கதாபாத்திரங்களுக்கு இடையே ராயாவின் கேங்க்ஸ்டர் வாழ்க்கையும், அவரது ஆக்ஷன் சாகசங்களும் எப்படி முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.


யாஷ் தனது அசாத்தியமான ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் இரட்டை வேட நடிப்பால் (Dual Role) ரசிகர்களைக் கவர்கிறார். அவரது ஸ்டைல், துப்பாக்கிச் சண்டை காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. படத்தில் எங்கு திரும்பினாலும் நாயகிகள் பட்டாளம் தான். அதில் அதீத முக்கியத்துவம் நயன்தாராவுக்கு தான். ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் அக்காவாக வந்து ஓரளவு மனதில் நிற்கிறார். சர்க்கஸ் கலைஞராக வந்து கியாரா அத்வானி அவருடைய கவர்ச்சி மற்றும் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.


ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவும், ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் தியேட்டர் அனுபவத்தைக் கூட்டுகின்றன.


சர்க்கஸ் ஃபைட் சீன் மற்றும் இடைவேளைக்குப் பின் வரும் சில ஆக்ஷன் பிளாக்குகள் சிறப்பாகக் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் கிராஃபிக் நாவல் போன்ற உலகத்தை (Stylised Graphic World) இயக்குநர் கீது மோகன்தாஸ் மிக நேர்த்தியாகவும், விஷுவலாகவும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார். ‘டாக்ஸிக்’ யாஷின் மாஸ் அவதாரத்தையும், பிரம்மாண்டமான ஆக்ஷன்காட்சிகளையும், ஹாலிவுட் தர மேக்கிங்கையும் திரையரங்கில் ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து. 

 

கல்லூரி கால காதல் தோல்வி மற்றும் கடந்த கால ஏமாற்றங்களின் (Trauma) வடுவோடு, இறுக்கமான மனநிலையுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு சிவில் என்ஜினீயர் ரகு (அர்ஜுன் தாஸ்). பல வருடங்களுக்குப் பிறகு அவரை தற்செயலாகச் சந்திக்கும் அஞ்சலி (அதிதி ஷங்கர்), பார்த்த வேகத்திலேயே தன் காதலை வெளிப்படுத்துகிறார். முதலில் ரகு அதை மறுத்தாலும், அஞ்சலி அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். கடந்த காலத் துயரங்களை மறந்து, ரகு தன் வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை (Once More) காதலுக்கு இடம் கொடுத்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மையக்கதை.


அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான காந்தக் குரலாலும், கடந்த கால வலியால் தவிக்கும் எமோஷனல் நடிப்பாலும் ரகு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். துள்ளலான, வாயாடிப் பெண் கதாபாத்திரத்தில் அதிதி ஷங்கர் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் இது மிகச்சிறந்த நடிப்பு.


ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு, மணி ரத்னம் - கௌதம் மேனன் படங்களின் உணர்வைத் தருகிறது.


இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். ஒரு அழகான காதல் கதையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனித்துவமாக எழுதி ஒரு புத்துணர்ச்சியான படத்தை தந்திருக்கிறார். பழக்கப்பட்ட ஒரு காதல் கதைக்களமாக இருந்தாலும், நல்ல இசை, துடிப்பான முதல் பாதி மற்றும் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கரின் சிறப்பான நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.

 

பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் விருப்பமில்லாமல் வீட்டை விட்டு ஓடிவந்து சென்னைக்கு வருகிறார் தேவயானி (நயன்தாரா). அங்கு அவருக்கு கோயம்புத்தூர் கொங்குத் தமிழ் பேசும் மயில்சாமி (கவின்) அறிமுகமாகிறார். மயில்சாமிக்கு தேவயானி மீது காதல் மலர்கிறது. ஆனால், தேவயானியோ காதலின் மீது நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். இதற்கிடையில், இவர்களைத் தேடி இருவீட்டு குடும்பத்தினரும் சென்னைக்கு வர, சூழ்நிலை காரணமாக இருவரும் கணவன்-மனைவியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த பொய்யைச் சமாளிக்க அவர்கள் செய்யும் அடுத்தடுத்த குளறுபடிகள் தான் படத்தின் மீதிக்கதை.


 கவின் தனது வழக்கமான குறும்புத்தனம் மற்றும் இயல்பான நகைச்சுவை உடல்மொழியால் மயில்சாமி கதாபாத்திரத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளார். சீரியஸான கதாபாத்திரங்களுக்குப் பிறகு, நயன்தாராவுக்கு இது ஒரு துறுதுறுப்பான, அதேசமயம் முதிர்ச்சியான வேடம். இருவருக்குள்ளான காட்சிகள் கியூட்டாக இருக்கின்றன. கே. பாக்யராஜ், பிரபு மற்றும் ராதிகா சரத்குமார் பங்களிப்பு படத்திற்குப் பெரிய பலம். குறிப்பாகப் பிரபுவின் எமோஷனல் டிராக் மற்றும் பாக்யராஜின் காமெடி ரசிக்க வைக்கின்றன.


ஜென் மார்ட்டினின் இசையில் 'ரசகுல்லா' பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு இதம் சேர்க்கின்றன. ராஜேஷ் சுக்லாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு படத்திற்குப் பிரகாசமான தோற்றத்தைத் தந்துள்ளது.


இயக்குனர் விஷ்ணு எடவன் எளிமையான காதல் கதையை எழுதி அதை திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் ரசிக்க வைத்திருக்கிறார். காதல், குடும்ப உறவுகளின் உன்னதம் என பல காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஒரு எளிமையான கதை என்றாலும், குடும்பத்துடன் சென்று ஜாலியாகச் சிரித்து ரசிக்கக்கூடிய ஒரு சுவாரசியமான பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைந்துள்ளது.

திரு அருள் கிருஷ்ணா இயக்கத்தில், தேஜேஷ் ராஜன், ஐரா அகர்வால், ஜார்ஜ் மரியான், சாய் தீனா, நாகினீது, கல்கி ராஜன், ஹரிஷ் பேரடி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அமரம்'. பெரும்பாலும் புதுமுகங்களைக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் லட்சியமும் அதைச் செயல்படுத்திய விதமும் கவனிக்கத்தக்கவை.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இல்லாத தனது சமூகத்திற்காகவும் தனக்காகவும் கொள்ளை, கொலை போன்ற குற்றங்களைச் செய்து பிழைப்பு நடத்தும் ஒருவனின் கதையே 'அமரம்'. ஒரு கட்டத்தில், ஐரா அகர்வாலின் கதாபாத்திரத்தின் தந்தையான சுரேஷ் மேனனை அவன் கொல்கிறான். கடந்த காலத்தில் பல குற்றங்களைச் செய்தும் எவ்வித விளைவுகளையும் சந்திக்காத அவனுக்கு, இந்தச் சம்பவம் ஒரு புதிய சிக்கலை உருவாக்குகிறது; அவனைத் தேடிக் கண்டுபிடித்து பழிவாங்க ஒரு நபர் உறுதியுடன் களமிறங்குகிறார்.

தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவனைக் கண்டுபிடித்துக் கொல்ல ஐரா புறப்படுகிறாள். ஆனால், சூழ்நிலை எதிர்பாராத விதமாக மாறுகிறது; தேஜேஷின் கதாபாத்திரம் அவளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. அங்கிருந்து இருவரும் இணைந்து ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு ஆபத்தான கும்பல் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்க, இருவரும் ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார்கள். இந்தப் பயணம் அவர்களை எங்கு கொண்டு செல்கிறது என்பதே 'அமரம்' படத்தின் மையக்கரு.

புதுமுக நடிகரான தேஜேஷ் ராஜன், பல காட்சிகளில் தனது நடிப்பால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். சண்டைக் காட்சிகளிலும் அவர் கணிசமான உழைப்பைச் செலுத்தியுள்ளார்; திரையில் அவரது தோற்றமும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. சரியான கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் திறனைக் கொண்டுள்ளார்.

பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐரா அகர்வால், படம் முழுவதும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டு நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 'மாமா மொஸார்ட்' ஆக வரும் ஜார்ஜ் மரியான், பார்வையாளர்களின் மனதைத் தொடும் வகையிலான நடிப்பை வழங்கியுள்ளார். சாய் தீனாவின் கதாபாத்திரம் வில்லத்தனமான சாயலைக் கொண்டிருந்தாலும், அவரது நடிப்பு தனித்துத் தெரிகிறது. நாகினீது, கல்கி ராஜன் மற்றும் ஹரிஷ் பேரடி ஆகியோரும் மிகையாக இல்லாமல், கதைக்குத் தேவையான அளவில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இயக்குநர் திரு அருள் கிருஷ்ணா திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்து, முதல் பாதியிலேயே படத்தின் மீதான நம்பிக்கையை உருவாக்குகிறார். இருப்பினும், இரண்டாம் பாதியில் இன்னும் துல்லியமான படத்தொகுப்பு (editing) இருந்திருக்கலாம்; குறிப்பாகப் பாடல்கள் இடம்பெறும் இடங்கள் மற்றும் படத்தின் மொத்த நீளம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மிக்கி ஜே மேயரின் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன; ஆனால், விறுவிறுப்பாகச் செல்லும் படத்தில் அவை அவ்வப்போது இடம்பெறுவது படத்தின் வேகத்தைக் குறைப்பதாக அமைகிறது. மறுபுறம், படத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக அமைந்து, காட்சிகளின் தாக்கத்தை வெகுவாக உயர்த்துகிறது.

படத்தின் களத்தை மிகச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக ஒளிப்பதிவாளர் பரத் குமாரின் பணி பாராட்டத்தக்கது. ஸ்ரீ ராமின் படத்தொகுப்பு மற்றொரு சிறப்பம்சமாக அமைந்து, படத்தின் பல பகுதிகளை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் வைத்திருக்கிறது. மிராக்கிள் மைக்கேலின் சண்டைக் காட்சி வடிவமைப்பு படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன், அவரது அடுத்தடுத்த படைப்புகளைக் காணும் ஆர்வத்தையும் தூண்டுகிறது.

மொத்தத்தில், ஒரு படம் தாக்கத்தை ஏற்படுத்தப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மட்டுமே தேவை இல்லை என்பதை 'அமரம்' திரைப்படம் நிரூபிக்கிறது. புதுமுகங்கள், ஓரளவுக்கு வலுவான கதை மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை ஆகியவற்றைக் கொண்டு, தனது சொந்தத் திறனால் தனித்து நிற்கும் ஒரு படத்தை உருவாக்கத் திரு அருள் கிருஷ்ணா முயற்சித்துள்ளார். சில தர்க்கரீதியான முரண்பாடுகள் மற்றும் குறைகள் இருந்தாலும், இந்தத் புதிய முயற்சியின் பின்னணியில் உள்ள உழைப்பு நிச்சயமாகப் பாராட்டத்தக்கது.

 

நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் இருமுடி / இருமுடி கட்டு).


மத்தியதர வர்க்கத்துத் தந்தையான திரிநாத் (ரவி தேஜா), தன் மகள் மற்றும் குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர். குடிப்பழக்கம் உள்ளவரான இவர், ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு ஐயப்ப மாலை அணியும்போது முற்றிலும் சாதுவான, ஆன்மீகவாதியாக மாறுகிறார். அதே சமயம், அவர் வாழும் கிராமத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் அநீதிகளும், மர்மக் கொலைகளும் அரங்கேறுகின்றன. ஆன்மீகப் பயணத்தில் இருக்கும் ஒரு தந்தை, தன் மகளையும் ஊர் பெண் குழந்தைகளையும் காக்க எவ்வாறு போராடுகிறார், குற்றவாளிகளை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் முக்கியக் கதை.


நாயகன் ரவி தேஜாவின் எதார்த்தமான நடிப்பு படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. வழக்கமான மாஸ் ஹீரோ இமேஜை தள்ளி வைத்து விட்டு மகள் பாசத்துக்காக என்ன வேணாலும் செய்யும் ஒரு சாதாரண மனிதராக, அதே சமயம் தப்பு நடந்தால் தட்டிக் கேட்பவராகவும் நடித்திருக்கிறார். ரவி தேஜாவின் மனைவியாக பிரியா பவானி சங்கர். ஒரு குழந்தைக்கு அம்மாவாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரவி தேஜாவின் மகளாக நடித்திருக்கும் பேபி நக்ஷத்ரா, தனது கள்ளமில்லா மற்றும் அப்பாவியான நடிப்பால் படத்தின் ஆன்மாவாகத் திகழ்கிறார். சாய் குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் குருசாமியாக அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஸ்வாசிகா இதுவரை பார்க்காத ஒரு நெகடிவான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.


ஜி.வி. பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கும், த்ரில்லர் காட்சிகளுக்கும் பெரும் பலம் சேர்க்கின்றன. விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். அந்த இயற்கை எழில் கொஞ்சும் ஊரை நமக்கு விருந்தாக்குகிறார். பிரவீன் புடியின் படத்தொகுப்பு கச்சிதம்.


இயக்குனர் சிவா நிர்வாணா ஏற்கனவே மஜிலி போன்ற படங்களில் எமோஷனல் ட்ராமாவை அழகாக கையாண்டிருப்பார். இந்த படத்திலும் ஒரு அழகான ஃபேமிலி ட்ராமாவை பக்தி கலந்து முக்கியமான பெண்கள் பாதுகாப்பு பிரச்சினைகளையும் சிறப்பாக பேசியிருக்கிறார். இருமுடி கட்டு என்பது வழக்கமான தெலுங்கு மசாலா படம் போல இல்லாமல், ஒரு அழுத்தமான  உணர்வைத் தருகிறது. மகள்களைப் பெற்ற தந்தையர்களும், குடும்பப் பார்வையாளர்களும் கண்டிப்பாகத் திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்.

 

இயக்குநர் இளன் இயக்கி, நாயகனாக அவதரித்துள்ள 'பியார் பிரேமா கல்யாணம்' (Pyaar Prema Kalyanam) திரைப்படம் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.


சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸராக இருக்கும் பவித்ரா (சான்வீ மேக்னா), திருமணத்திற்குப் பிறகு தன் சொந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்குச் செல்ல மறுக்கிறார். இதனால் நாயகன் இளன், பாரம்பரிய மரபுகளை உடைத்துவிட்டு மனைவியின் வீட்டிற்கு ‘வீட்டோட மாப்பிள்ளையாக’ குடியேறுகிறார். அங்கு அவர் சந்திக்கும் கலாச்சார மோதல்கள், மாமியார்-மருமகன் சண்டைகள், மற்றும் ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் படும் கஷ்டங்களை ஒரு ஆணை வைத்து இயக்குநர் காட்டியுள்ள விதம் தான் படத்தின் மையக்கதை.


நாயகன் இளன் கொஞ்சம் குறும்போடு சிரித்த முகத்துடனே இருக்கும் இளைஞராக கலக்கியிருக்கிறார். அவர் செயல்பாடுகள் ஒவ்வொன்றுமே காமெடியில் ரசிக்க வைக்கிறது. காதல் காட்சிகளிலும் எந்த தயக்கமும் இன்றி அசால்ட்டாக நடித்திருக்கிறார். நாயகி பவியாக நடித்திருக்கும் சான்வீ மேக்னா, தன்னம்பிக்கை மிக்க ஒரு பெண்ணாகத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பவியின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார், எம். எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் தங்களின் அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.


படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு யுவனின் பின்னணி இசை மற்றும் எல்லா பாடல்களும் சிறப்பு. தினேஷ் கே பாபு ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக ரசிக்கும்படி உள்ளது.


நாயகன் மற்றும் இயக்குனரான இளன் தனக்கு என்ன வருமோ, தன்னுடைய பலம் என்னவோ அதை மிகச் சரியாக கணக்கிட்டு அழகாக எழுதி ஒரு ரொமாண்டிக் காமெடியாக தந்திருக்கிறார். வழக்கமான திருமண நடைமுறைகளை உடைக்கும் ஒரு நவீன குடும்பக் கதையாக, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற படமாகவும் தந்திருக்கிறார். நிச்சயம் குடும்பத்துடன் இந்த வார இறுதியில் நெட்ஃபிளிக்ஸில் கண்டுகளிக்கலாம்.

 


சங்ககிரி ராஜ்குமார் இயக்கி, தயாரித்து, அனைத்துக் கதாபாத்திரங்களிலும் அவரே நடித்து ஆகஸ்ட் 2026-ல் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஒன் மேன்' (One Man).

நான்கு நண்பர்கள் மற்றும் ஒரு கார் டிரைவர் என ஐந்து பேர் ஒரு ஆராய்ச்சி மாநாட்டிற்காக காட்டில் பயணிக்கும் போது கார் பழுதாகிறது. மனிதனின் பேராசையால் ஒட்டுமொத்த உலகையும், மனித இனத்தையும் அழிக்கக்கூடிய ஒரு அபாயகரமான கண்டுபிடிப்பு ("பச்சைக்காற்று") பற்றி அவர்களுக்குத் தெரியவருகிறது. அந்த கண்டுபிடிப்பை வைத்து 10 நாட்கள் உலகையே ஆள வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அதில் ஒருவருக்கு, மனிதர்களே இல்லாத அமைதியான உலகம் பிடித்துப்போக, ஒட்டுமொத்த மனித இனத்தையும் அழித்துவிட்டு தான் மட்டும் தனியாக வாழ துடிக்கிறார். உறவுகளை இழக்க விரும்பாத மற்ற நண்பர்களுக்கும் அவருக்கும் இடையே ஏற்படும் சலசலப்புகளும், மோதல்களுமே படத்தின் மீதிக்கதை.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, விஷூவல் எஃபெக்ட்ஸ், மேக் அப், காஸ்ட்யூம், சண்டைப் பயிற்சி, நடனம், டப்பிங் போன்ற கலைகளோடு ஒரு திரைப்படத்திற்குத் தேவையான அத்தனை தொழில்நுட்பப் பணிகளையும் தனி ஒருவராக செய்து முடித்திருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அத்தனை கதாபாத்திரங்களிலும் அவரே தோற்றங்களை மாற்றிக் கொண்டு நடித்தும் இருக்கிறார். கிராஃபிக்ஸ் காட்சிகளின் உதவியோடு அத்தனையையும் செய்து முடித்திருக்கிறார். அத்தோடு ஒரே காட்சியில் வரும் 500-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களிலும் அவரே வெவ்வேறு ஒப்பனைகளில் நடித்துள்ளார். மேக்கிங்கை பார்க்கும்போது அவற்றுக்கான மெனக்கெடல் தெளிவாக தெரிகிறது.

ஹாலிவுட் திரைப்படம் போல உலகத்தை சுற்றி கதையை நகர்த்தியிருக்கிறார். ஆனாலும் அன்பை மையமாக கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவில் நடக்கும் கார் சேசிங் மற்றும் வானவெளி ஆக்ஷன் காட்சிகள், ட்ரெயினில் நடக்கும் காட்சிகள், காடு மலை என நடக்கும் காட்சிகள் என அத்தனையும் ஒரு பிரமாண்ட படத்திற்கான அனுபவத்தையும், விறுவிறுப்பையும் தருகின்றன.


 


அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மொத ராத்திரி'.

காதல் தோல்வியால் துபாய்க்குச் சென்றுவிட்டு 6 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பும் நாயகன் மருதநாயகம் (ரிஷிகாந்த்). அவருக்கும், அதே நாளில் காதலனுடன் ஓடிப்போகத் திட்டமிடும் நாயகி முத்துசெல்விக்கும் (அனிஷ்மா) தடைகளைத் தாண்டி திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பின் முதலிரவு அறைக்குள் செல்லும் இந்த இரு அந்நியர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களும், குளறுபடிகளுமே படத்தின் கதை.

ரிஷிகாந்த் தனது முகபாவனைகளாலும், உடல்மொழியாலும் எதார்த்தமாக நடித்துள்ளார். நாயகி அனிஷ்மா காதல், குழப்பம், மன அழுத்தம் போன்ற உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.  கோவில் பூசாரியாக வரும் சேத்தன், பகவதி பெருமாள், அப்துல் லீ ஆகியோரின் கூட்டணி படத்தில் நல்ல காமெடி கலாட்டாவை ஏற்படுத்தியுள்ளது.

பரத் சங்கரின் பின்னணி இசை, ஒரு இரவை அழகாகக் காட்டிய சுரேந்திரனின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகியவை படத்திற்குப் பக்கபலம்.

அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி ஒரு யதார்த்த நகைச்சுவை படமாக, எளிய வாழ்வியல் கதையுடன் எளிதில் ரசிகர்களை கவரும் ஒரு படத்தை தந்திருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் கதையில் அடுத்தடுத்த திருப்பங்கள், கலாட்டாக்கள் என நம்மை ரசிக்கவும் வைக்கிறார். ஆச்சர்யமும் ஊட்டுகிறார்.

'மொத ராத்திரி' என்று இருந்தாலும், ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் திரையரங்கிற்குச் சென்று ஜாலியாகப் பார்க்கக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம்.


 

இன்சிடியஸ் (Insidious) என்ற உலகப் புகழ்பெற்ற ஹாரர் திரைப்படத் தொடரின் சமீபத்திய ஆறாவது பாகமான Insidious: Out of the Further (2026) திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


முந்தைய பாகங்களில் வந்த Lambert குடும்பத்தின் கதையைத் தொடராமல், இந்த ஆறாவது பாகம் Gemma என்ற இளம் தாயின் கதையை நோக்கி நகர்கிறது. சிறுவயதில் தன் தாய் தற்கொலை செய்துகொண்ட அதே வீட்டிற்குத் தன் மகள் மாயாவுடன் ஜெம்மா குடிவருகிறார். அங்கு அவருக்குத் தன் தாயைப் போன்றே 'தி ஃபர்தர்' என்ற ஆன்மாக்களின் உலகிற்குச் செல்லும் ஆன்மீக சக்தி  இருப்பது தெரியவருகிறது. அந்தப் பாதாள உலகத்தின் கொடூரமான பேய்களிடம் இருந்து தன் மகளைக் காப்பாற்ற ஜெம்மா போராடுவதே படத்தின் முக்கியக் கதைக்களமாகும். வழக்கம் போல பேய் நிபுணரான எலிஸ் ஆன்மாவாக வந்து இவர்களுக்கு உதவுகிறார்.


முந்தைய பாகங்களை விட ஹாரர் காட்சிகள் மற்றும் 'The Further' உலகத்தை காட்டிய விதம் பயமுறுத்தும் வகையில் உள்ளது. திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பின்னணி இசை தியேட்டரில் மிரட்டலாக அமைந்துள்ளது. 


ஹாரர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கும், குறிப்பாக 'இன்சிடியஸ்' பிரபஞ்சத்தின் ரசிகர்களுக்கும் ஒருமுறை தியேட்டரில் பார்க்கக்கூடிய சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரும்.


Vartika falls in love with Rio, the protagonist, who is struggling to find a bride despite being past the marriageable age. However, she imposes a condition: she will not step out of the house after 6 PM, and therefore, they cannot meet after that time. Smitten by Vartika’s beauty and love, Rio accepts the condition and pursues the relationship. When Vartika's 6 PM rule begins to cause complications, Rio decides he must uncover the secret behind it.

While Rio—and the audience—speculate that she might suffer from night blindness (reminiscent of Goundamani’s character in the movie *Chinna Thambi*), it is revealed that she has a far more unexpected problem. *Ram and Leela* is a comedy that explores what this issue is, whether Rio continues to love Vartika after discovering it, and if the wedding eventually takes place.

Rio plays Ram, a young man yearning for marriage; he attempts to showcase a fresh side of himself through a performance infused with comedy. Portraying an innocent man naive about the world of women, he tries to make the audience laugh through his mannerisms. Many of his antics and playful gestures are reminiscent of Sivakarthikeyan’s early career. Although Rio’s performance—spanning his longing for love, the unexpected crisis, and the struggle to resolve it—strengthens the screenplay, there are moments where his acting feels a bit over-the-top.

Debut actress Vartika, playing the female lead, looks beautiful. the film focuses on presenting her as a vision of beauty. The supporting cast—Chethan (hero's father), Malavika Avinash (mother), Thafiya Abu (sister), Munishkanth (uncle), Balaji Thyagarajan Dayalan (friend), Deepa Venkat (heroine's mother), MaKaPa (uncle), and Kathadi Ramamurthy (grandfather)—are all well-suited for their respective roles.

Cinematographer Mallikarjun has captured the visuals in a vibrant and colorful manner. He has put special effort into presenting the heroine beautifully and strikingly, ensuring the entire film looks bright and visually appealing.

Ankit Menon’s songs, though presented as montages, are catchy enough for repeated listening and are well-suited for Reels videos. The background score flows smoothly in a melodious style, much like the songs.

Editor Y.N.C. Siva moves the first half at a somewhat leisurely pace but picks up the tempo in the second half; he has edited the comedy sequences effectively, keeping the film lively and entertaining.

It is unclear which English movie writer-director Ramachandran Kannan drew inspiration from for this core premise (especially since another film with the same concept was released just three months ago). However, even if the idea was borrowed, he has succeeded in adapting it effectively for the Tamil audience.

The heroine's unique problem—which defies predictable tropes—helps keep the narrative engaging, and the way the backstory behind this issue is explained adds strength to the screenplay.

By focusing on the hurdles the couple faces after the problem is revealed, portraying their enduring love, and handling the wedding sequence with uproarious comedy, director Ramachandran Kannan makes the audience overlook the film's minor flaws and enjoy a fun, laughter-filled experience.

 

இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில், சூர்யாவின் எதார்த்தமான நடிப்பிலும் மமிதா பைஜூவின் துடிப்பான பங்களிப்பிலும் உருவான ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பத் திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons).


ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீரரான சஞ்சய் (சூர்யா), திருமணம் வேண்டாம் என்ற கொள்கையோடு வாழ்கிறார். வாடகைத் தாய் மூலம் அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஒரு அரிய உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது. அந்த இக்கட்டான சூழலில், மருத்துவக் கல்வி பயிலும் 22 வயது இளம்பெண் மேடி (மமிதா பைஜூ) சஞ்சய்யின் வாழ்க்கைக்குள் வருகிறார். சஞ்சய்க்கும் மேடிக்கும் இடையே இருக்கும் 20 வருட வயது வித்தியாசம், குழந்தை மீதான பாசம், மற்றும் அவர்கள் இருவருக்கும் இடையே மலரும் காதல் ஆகியவற்றைச் சுற்றி படத்தின் திரைக்கதை நகர்கிறது.


மாஸ் ஆக்ஷன் காட்சிகளைத் தவிர்த்து, ஒரு தொழிலதிபராகவும், தந்தையாகவும் சூர்யா மிகவும் அடக்கி வாசித்து எதார்த்தமாக நடித்துள்ளார். படத்தின் மிகப்பெரிய பலம் மமிதா பைஜூவின் நடிப்புதான். குறும்புத்தனம், முதிர்ச்சியான காதல், எமோஷனல் காட்சிகள் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் மற்றும் சுனில் ரெட்டி ஆகியோரின் பங்களிப்பு கதைக்கு பலம் சேர்த்துள்ளது.


ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும், நிமிஷ் ரவியின் ரிச்சான ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.


சில குறைகள் தெரிந்தாலும் படம் முடியும் போது ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கிறது. கமர்சியல் மசாலா படங்களை விரும்பாமல், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு ஃபீல்-குட் எமோஷனல் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஒரு அருமையான படம்.

 

நடிகர் விஷால் முதன்முறையாக இயக்கி, தந்தை-மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘மகுடம்’.


மெடிக்கல் ரெப்பாக எளிய நடுத்தர வாழ்க்கை வாழும் கிருபாகரன் (விஷால்) ஒருபுறம், விசாகப்பட்டினம் துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'கிங் பின்' லிங்கா (விஷால்) மற்றொரு புறம், கிருபாகரன் தன் குடும்பத்துடன் கார் பயணம் மேற்கொள்ளும்போது, மர்ம கும்பலால் தாக்கப்பட்டு அவரது மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) கொல்லப்படுகிறார். தன் மகனைப் காப்பாற்றத் துடிக்கும் கிருபாகரனுக்கும் லிங்காவிற்கும் என்ன தொடர்பு, பழிவாங்கும் படலம் எப்படி முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.


தந்தை, மகன் என இரண்டு பாத்திரங்களிலும், குறிப்பாக 'லிங்கா' கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தந்தை விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியும், மகன் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் வருகிறார்கள். விஷாலை மிரட்டி காதல் வாங்கும் இடத்தில் அஞ்சலி கொடி பறக்கிறது. நடுத்தர குடும்பத்தின் அந்த மனைவி போர்ஷன் துஷாரா விஜயனை நமக்குள் நெருக்கமாக்கி விடுகிறது.



நகைச்சுவைக்கென தம்பிராமையா. பதம்குமார்,ஜெயப்பிரகாஷ் சிறப்பு. தாதா விஷாலின் உயிர் நண்பராக ஜான் விஜய் கச்சிதம். ரிச்சர்ட் எம்.நாதன், அபிநந்தன் ஒளிப்பதிவு காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் கேமரா கோணங்கள் பிரமிப்பு.  ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை டபுள் ஓகே. திலீப் சுப்பராயன் அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸில் வரும் மீனவப் பெண்களின் ஆக்ஷன் சீக்வென்ஸ் ரசிகர்களைக் கவர்கிறது. 



கிளைமாக்ஸ் சண்டையின் போது 'முத்துமணி மாலை' போன்ற பழைய ஹிட் பாடலைப் பின்னணியில் பயன்படுத்திய விதம் தியேட்டரில் வரவேற்பைப் பெறுகிறது. போலி ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸுகளால் ஏற்படும் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு மெசேஜ் பாராட்டும் படியாக உள்ளது. நடிகர் விஷால் முதன்முறையாக இயக்கியிருக்கிறார்.சீனாவில் வாகன உதிரிபாகங்கள் வருகின்றன அதைத் தடுக்கவேண்டும் என்றொரு விசயத்தை மையமாக வைத்துக்கொண்டு படத்தைக் கொண்டுபோயிருக்கிறார். 

 

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் உருவான 'வதந்தி' சீசன் 2 (Vadhandhi Season 2: The Mystery of Mani) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


நெடுஞ்சாலை திறப்பு விழாவின் போது சில மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த கொலையைச் செய்தது யார் என்ற விசாரணை தொடங்குகிறது. அந்த கொலைக்கு காரணமானவர் என சிறையில் இருக்கும் மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணி (யஷ்வந்த்) என்பவரைச் சுற்றி வழக்கு நகர்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் இஸ்லாமிய காவல் அதிகாரி மூசா (சசிகுமார்), வதந்திகளுக்கும் உண்மைக்கும் இடையே இருக்கும் முடிச்சுகளை அவிழ்க்கும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் கதையே இந்த 'வதந்தி 2'.


சசிகுமார் முதல்முறையாக முழு நீள போலீஸ் அதிகாரியாக மிக அமைதியான, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தாடி வைத்துக்கொண்டு காவலர் பணியாற்ற அவர் செய்யும் சட்டப்போராட்ட காட்சிகள் கவனம் பெறுகின்றன. சசிகுமாரின் கர்ப்பிணி மனைவியாக நடித்த அபர்ணா தாஸ், மாடுபிடி வீரராக வரும் அறிமுக நடிகர் யஷ்வந்த் மற்றும் அனகா, ரேவதி சர்மா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர். முதல் சீசனில் வந்த எஸ்.ஐ ராமர் கதாபாத்திரத்தை இதிலும் தொடர்ந்து, திருநெல்வேலி ஸ்லாங்கில் நகைச்சுவை கலந்த நடிப்பால் கவர்கிறார் விவேக் பிரசன்னா.


கடைசி இரண்டு எபிசோடுகளில் வரும் அதிரடி திருப்பங்களும், சமூக விழிப்புணர்வு சார்ந்த க்ளைமாக்ஸும் சீரிஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. சரவணன் ராமசாமியின் இருண்ட, மர்மமான ஒளிப்பதிவும், சைமன் கே கிங் பின்னணி இசையும் த்ரில்லர் உணர்வை கச்சிதமாக கடத்துகின்றன.


க்ரைம் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளை விரும்புபவர்கள் தாராளமாக அமேசான் பிரைமில் இந்த 'வதந்தி 2' தொடரைக் கண்டு ரசிக்கலாம்.

Pageviews