மகுடம் திரை விமர்சனம்

 

நடிகர் விஷால் முதன்முறையாக இயக்கி, தந்தை-மகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘மகுடம்’.


மெடிக்கல் ரெப்பாக எளிய நடுத்தர வாழ்க்கை வாழும் கிருபாகரன் (விஷால்) ஒருபுறம், விசாகப்பட்டினம் துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'கிங் பின்' லிங்கா (விஷால்) மற்றொரு புறம், கிருபாகரன் தன் குடும்பத்துடன் கார் பயணம் மேற்கொள்ளும்போது, மர்ம கும்பலால் தாக்கப்பட்டு அவரது மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) கொல்லப்படுகிறார். தன் மகனைப் காப்பாற்றத் துடிக்கும் கிருபாகரனுக்கும் லிங்காவிற்கும் என்ன தொடர்பு, பழிவாங்கும் படலம் எப்படி முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.


தந்தை, மகன் என இரண்டு பாத்திரங்களிலும், குறிப்பாக 'லிங்கா' கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தந்தை விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியும், மகன் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் வருகிறார்கள். விஷாலை மிரட்டி காதல் வாங்கும் இடத்தில் அஞ்சலி கொடி பறக்கிறது. நடுத்தர குடும்பத்தின் அந்த மனைவி போர்ஷன் துஷாரா விஜயனை நமக்குள் நெருக்கமாக்கி விடுகிறது.



நகைச்சுவைக்கென தம்பிராமையா. பதம்குமார்,ஜெயப்பிரகாஷ் சிறப்பு. தாதா விஷாலின் உயிர் நண்பராக ஜான் விஜய் கச்சிதம். ரிச்சர்ட் எம்.நாதன், அபிநந்தன் ஒளிப்பதிவு காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் கேமரா கோணங்கள் பிரமிப்பு.  ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை டபுள் ஓகே. திலீப் சுப்பராயன் அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸில் வரும் மீனவப் பெண்களின் ஆக்ஷன் சீக்வென்ஸ் ரசிகர்களைக் கவர்கிறது. 



கிளைமாக்ஸ் சண்டையின் போது 'முத்துமணி மாலை' போன்ற பழைய ஹிட் பாடலைப் பின்னணியில் பயன்படுத்திய விதம் தியேட்டரில் வரவேற்பைப் பெறுகிறது. போலி ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸுகளால் ஏற்படும் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு மெசேஜ் பாராட்டும் படியாக உள்ளது. நடிகர் விஷால் முதன்முறையாக இயக்கியிருக்கிறார்.சீனாவில் வாகன உதிரிபாகங்கள் வருகின்றன அதைத் தடுக்கவேண்டும் என்றொரு விசயத்தை மையமாக வைத்துக்கொண்டு படத்தைக் கொண்டுபோயிருக்கிறார். 

0 comments:

Pageviews