4 இடியட்ஸ் திரை விமர்சனம்
குக் வித் கோமாளி புகழ், கும்கி அஸ்வின், இந்திரன் இளங்கோவன் மற்றும் திடியன் திருச்செல்வம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஒரு டார்க் காமடி சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் '4 இடியட்ஸ்' (4 Idiots).
பணத் தேவையில் இருக்கும் நான்கு நண்பர்கள், சட்டவிரோதமான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு பெரிய பங்களாவிற்குள் திருட நுழைகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான தாதாவிடம் மற்றும் பாதுகாவலரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான அந்தச் சூழ்நிலையில், அந்த பங்களாவிற்குள் இருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள், அந்தப் பணம் அவர்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
குக் வித் கோமாளி புகழ், கும்கி அஸ்வின், இந்திரன் மற்றும் திடியன் ஆகியோரின் கூட்டணி சிரிக்க வைக்கிறது. வில்லத்தனமான மற்றும் நகைச்சுவையான பாதுகாவலர் பாத்திரத்தில் ரவி மரியா படம் முழுவதும் ரசிக்க வைக்கிறார்.
ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதை என்றாலும், யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. சுபாஷ் முனிரத்னம் இசையில் பாடல்கள், பின்னணி இசையும் ஒகே.
இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் சட்டவிரோதப் பணம் மற்றும் உடல் உறுப்பு திருட்டு போன்ற விஷயங்களால் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது என்ற ஒரு நல்ல விழிப்புணர்வு செய்தியைப் சொல்லியிருக்கிறார்.
'4 இடியட்ஸ்' திரைப்படம் ஒரு எளிமையான கதையமைப்பில், சில நகைச்சுவை காட்சிகளுடன், இறுதியில் ஒரு நல்ல சமூகக் கருத்தைச் சொல்லும் படமாக அமைந்துள்ளது. லாஜிக் பார்க்காமல், வார இறுதியில் குடும்பத்தோடு சென்று திரையரங்கில் ஒரு முறை ரசிக்கலாம்.











0 comments:
Post a Comment