ஒன் மேன் திரை விமர்சனம்

 


சங்ககிரி ராஜ்குமார் இயக்கி, தயாரித்து, அனைத்துக் கதாபாத்திரங்களிலும் அவரே நடித்து ஆகஸ்ட் 2026-ல் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஒன் மேன்' (One Man).

நான்கு நண்பர்கள் மற்றும் ஒரு கார் டிரைவர் என ஐந்து பேர் ஒரு ஆராய்ச்சி மாநாட்டிற்காக காட்டில் பயணிக்கும் போது கார் பழுதாகிறது. மனிதனின் பேராசையால் ஒட்டுமொத்த உலகையும், மனித இனத்தையும் அழிக்கக்கூடிய ஒரு அபாயகரமான கண்டுபிடிப்பு ("பச்சைக்காற்று") பற்றி அவர்களுக்குத் தெரியவருகிறது. அந்த கண்டுபிடிப்பை வைத்து 10 நாட்கள் உலகையே ஆள வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அதில் ஒருவருக்கு, மனிதர்களே இல்லாத அமைதியான உலகம் பிடித்துப்போக, ஒட்டுமொத்த மனித இனத்தையும் அழித்துவிட்டு தான் மட்டும் தனியாக வாழ துடிக்கிறார். உறவுகளை இழக்க விரும்பாத மற்ற நண்பர்களுக்கும் அவருக்கும் இடையே ஏற்படும் சலசலப்புகளும், மோதல்களுமே படத்தின் மீதிக்கதை.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, விஷூவல் எஃபெக்ட்ஸ், மேக் அப், காஸ்ட்யூம், சண்டைப் பயிற்சி, நடனம், டப்பிங் போன்ற கலைகளோடு ஒரு திரைப்படத்திற்குத் தேவையான அத்தனை தொழில்நுட்பப் பணிகளையும் தனி ஒருவராக செய்து முடித்திருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அத்தனை கதாபாத்திரங்களிலும் அவரே தோற்றங்களை மாற்றிக் கொண்டு நடித்தும் இருக்கிறார். கிராஃபிக்ஸ் காட்சிகளின் உதவியோடு அத்தனையையும் செய்து முடித்திருக்கிறார். அத்தோடு ஒரே காட்சியில் வரும் 500-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களிலும் அவரே வெவ்வேறு ஒப்பனைகளில் நடித்துள்ளார். மேக்கிங்கை பார்க்கும்போது அவற்றுக்கான மெனக்கெடல் தெளிவாக தெரிகிறது.

ஹாலிவுட் திரைப்படம் போல உலகத்தை சுற்றி கதையை நகர்த்தியிருக்கிறார். ஆனாலும் அன்பை மையமாக கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவில் நடக்கும் கார் சேசிங் மற்றும் வானவெளி ஆக்ஷன் காட்சிகள், ட்ரெயினில் நடக்கும் காட்சிகள், காடு மலை என நடக்கும் காட்சிகள் என அத்தனையும் ஒரு பிரமாண்ட படத்திற்கான அனுபவத்தையும், விறுவிறுப்பையும் தருகின்றன.


0 comments:

Pageviews