குக் வித் கோமாளி புகழ், கும்கி அஸ்வின், இந்திரன் இளங்கோவன் மற்றும் திடியன் திருச்செல்வம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஒரு டார்க் காமடி சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் '4 இடியட்ஸ்' (4 Idiots).
பணத் தேவையில் இருக்கும் நான்கு நண்பர்கள், சட்டவிரோதமான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு பெரிய பங்களாவிற்குள் திருட நுழைகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான தாதாவிடம் மற்றும் பாதுகாவலரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான அந்தச் சூழ்நிலையில், அந்த பங்களாவிற்குள் இருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள், அந்தப் பணம் அவர்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
குக் வித் கோமாளி புகழ், கும்கி அஸ்வின், இந்திரன் மற்றும் திடியன் ஆகியோரின் கூட்டணி சிரிக்க வைக்கிறது. வில்லத்தனமான மற்றும் நகைச்சுவையான பாதுகாவலர் பாத்திரத்தில் ரவி மரியா படம் முழுவதும் ரசிக்க வைக்கிறார்.
ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதை என்றாலும், யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. சுபாஷ் முனிரத்னம் இசையில் பாடல்கள், பின்னணி இசையும் ஒகே.
இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் சட்டவிரோதப் பணம் மற்றும் உடல் உறுப்பு திருட்டு போன்ற விஷயங்களால் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது என்ற ஒரு நல்ல விழிப்புணர்வு செய்தியைப் சொல்லியிருக்கிறார்.
'4 இடியட்ஸ்' திரைப்படம் ஒரு எளிமையான கதையமைப்பில், சில நகைச்சுவை காட்சிகளுடன், இறுதியில் ஒரு நல்ல சமூகக் கருத்தைச் சொல்லும் படமாக அமைந்துள்ளது. லாஜிக் பார்க்காமல், வார இறுதியில் குடும்பத்தோடு சென்று திரையரங்கில் ஒரு முறை ரசிக்கலாம்.
துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஐ எம் கேம்' (I'm Game).
பணக்கார வீட்டுப் பிள்ளையான டான் ஜான் (துல்கர் சல்மான்), தனது தந்தையின் விருப்பப்படி நிறுவனத்தை நடத்தினாலும், அவனது முழு கவனமும் சூதாட்டத்தின் மீதே இருக்கிறது. இதனால் பெரும் கடனாளியாக மாறும் அவனது வாழ்வில் ஒரு விபரீதம் நடக்கிறது. அதன்பின் அவனுக்கு ஒரு கை மாற்று அறுவை சிகிச்சை (Hand Transplant) செய்யப்படுகிறது. அந்த புதிய கைக்கு என்று ஒரு தனி ஃப்ளாஷ்பேக் மற்றும் நோக்கம் இருக்கிறது. கிரிக்கெட் சூதாட்ட சாம்ராஜ்யத்தை நடத்தும் டேவிட் ஆபிரகாம் (மிஷ்கின்) என்பவனுடன் டான் ஜான் எப்படி மோதுகிறான், அந்த ஆபத்துகளில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே படத்தின் மீதிக்கதை.
நெகட்டிவ் ஷேட்ஸ் கலந்த, சூதாட்ட வெறி பிடித்த ஒரு திமிரான இளைஞன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் தனது ஒற்றை ஆளுமையால் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். விக்கி என்ற கதாபாத்திரத்தில் வரும் ஆண்டனி வர்கீஸ் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். கதாநாயகி காயடு லோஹர். கொஞ்சம் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அவரது அழகால் நம்மை சுண்டி இழுக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் அந்தோணி வர்கீஸ் பெப்பே அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். கதிர் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார். மிரட்டல் வில்லனாக மிஷ்கின் அவரது மிகைப்படுத்தட்ட நடிப்பால் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளார். சம்யுக்தா விஸ்வநாதன் நல்ல நடிப்பை பதிவு செய்துள்ளார்.
ஜெக்ஸ் பிஜாயின் அதிரடியான பின்னணி இசை மற்றும் ஜிம்ஷி காலீதின் நியான் விளக்குகள் நிறைந்த சூதாட்ட அரங்குகளைக் காட்டும் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம்.
இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் கடந்த சில ஆண்டுகளாக தேசத்தையே அடிமையாக்கி வைத்திருந்த சூதாட்டத்தின் பின்னணியில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். கூடவே ஒரு ஃபேண்டசி விஷயத்தை படத்துக்குள் கொண்டு வந்தது அருமை. முதல் பாதி முழுக்க திரில்லர் பாணியில் விறுவிறுப்பாகவும், புதுமையாகவும் கொண்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் எமோஷன் கலந்த ஒரு பழிவாங்கும் ஆக்ஷன் கதையாக மாற்றுகிறார். ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லர் படத்தை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
கருகாட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஜஸ்டின் (நிவின் பாலி), அந்தப் பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து கொண்டு, ஊர் மக்களுக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வரும் ஒரு பொறுப்பான நபர். சமூகத்தின் வழக்கமான திருமண வயதைத் தாண்டியும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில், குடிப் பழக்கம் உள்ள ஒரு பொறுப்பற்ற தந்தையின் மகளான ஆஷ்லி (மமிதா பைஜூ) தன் குடும்பத்துடன் அந்த ஊருக்குக் குடிவருகிறார். தனது குடும்பச் சூழலால் மனவேதனையில் இருக்கும் ஆஷ்லிக்கு, ஜஸ்டினின் அன்பான மற்றும் பொறுப்பான குணத்தைப் பார்த்ததும் அவர் மீது காதல் மலர்கிறது. ஆரம்பத்தில் இந்த வயது வித்தியாசக் காதலை ஜஸ்டின் ஏற்க மறுத்தாலும், ஆஷ்லியின் சுட்டித்தனமும் அன்பும் அவரை மாற்றுகிறது. இவர்களின் காதலைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப் பார்க்கிறது, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடனும் எதார்த்தத்துடனும் விவரிக்கிறது மீதிக்கதை.
காதல் தோல்வி, இளம்பெண்ணின் குறும்புத்தனத்தால் வெட்கப்படுவது, நடுத்தர வயதுக்கேற்ற உடல்மொழி எனப் பல உணர்ச்சிகளைத் தனது தேர்ந்த நடிப்பால் வெளிப்படுத்தி படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளார் நிவின் பாலி. ஆஷ்லி பாத்திரத்தில் வரும் மமிதா பைஜூ, படம் முழுக்கத் தனது வழக்கமான சுட்டித்தனத்தாலும் துருதுருப்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்கிறார். சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, ஷியாம் மோகன், வினய் ஃபோர்ட் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் செவ்வனே செய்துள்ளனர்.
விஷ்ணு விஜய்யின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் கேமரா கோணங்களால் படத்தின் அத்தனை ஃபிரேம்களும் அழகாகியிருக்கிறது.
இயக்குநர் கிரிஷ் ஏ.டி. அன்றாட வாழ்வில் நடக்கும் எளிய மனிதர்களின் இயல்பான நகைச்சுவையைத் திரைக்கதையாக்குவதில் மீண்டும் முத்திரை பதித்துள்ளார். படத்தில் வரும் ஒற்றை வரி வசனங்கள் வெடிச் சிரிப்பை வரவழைக்கின்றன.
பெத்லகேம் குடும்ப யூனிட் எந்தவொரு ஆரவாரமும் இன்றி, எளிய மனிதர்களின் உணர்வுகளையும், ஒரு அழகான காதலையும் மிக நேர்த்தியாகப் பேசும் ஒரு கலகலப்பான ஃபீல்-குட் திரைப்படம்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில், இன்னமும் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அங்கு நடக்கும் சட்டவிரோத அபின் (Opium) வர்த்தகத்தை மொத்தமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு ராயா (யாஷ்) மற்றும் அவரது சகோதரி கங்கா (நயன்தாரா) ஆகியோர் களம் இறங்குகிறார்கள். கோவாவின் டான் சால்வடாரின் மகள் ரெபெக்கா (தாரா சுதாரியா), சர்க்கஸ் கலைஞர் நாடியா (கியாரா அத்வானி) எனப் பல கதாபாத்திரங்களுக்கு இடையே ராயாவின் கேங்க்ஸ்டர் வாழ்க்கையும், அவரது ஆக்ஷன் சாகசங்களும் எப்படி முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
யாஷ் தனது அசாத்தியமான ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் இரட்டை வேட நடிப்பால் (Dual Role) ரசிகர்களைக் கவர்கிறார். அவரது ஸ்டைல், துப்பாக்கிச் சண்டை காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. படத்தில் எங்கு திரும்பினாலும் நாயகிகள் பட்டாளம் தான். அதில் அதீத முக்கியத்துவம் நயன்தாராவுக்கு தான். ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் அக்காவாக வந்து ஓரளவு மனதில் நிற்கிறார். சர்க்கஸ் கலைஞராக வந்து கியாரா அத்வானி அவருடைய கவர்ச்சி மற்றும் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவும், ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் தியேட்டர் அனுபவத்தைக் கூட்டுகின்றன.
சர்க்கஸ் ஃபைட் சீன் மற்றும் இடைவேளைக்குப் பின் வரும் சில ஆக்ஷன் பிளாக்குகள் சிறப்பாகக் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் கிராஃபிக் நாவல் போன்ற உலகத்தை (Stylised Graphic World) இயக்குநர் கீது மோகன்தாஸ் மிக நேர்த்தியாகவும், விஷுவலாகவும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார். ‘டாக்ஸிக்’ யாஷின் மாஸ் அவதாரத்தையும், பிரம்மாண்டமான ஆக்ஷன்காட்சிகளையும், ஹாலிவுட் தர மேக்கிங்கையும் திரையரங்கில் ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து.








.jpg)