Showing posts with label Tamil Movie News. Show all posts
Showing posts with label Tamil Movie News. Show all posts

 


மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் 'ICONZA' என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார்.


எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான நாளின் புகைப்படங்களைப் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் நிலைத்திருக்கும் கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என்றார். 


இந்திய சினிமாவின் முன்னோடியாகப் போற்றப்படும் அல்லு ராமலிங்கய்யா அவர்களின் புகழ்பெற்ற திரைப்பயணம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் உள்ளடக்கியது. தனது தாத்தாவின் பிறந்தநாளில் இந்த புதிய பயணத்தைத் தொடங்கும் அல்லு அர்ஜுன், சினிமா, படைப்பாற்றல் மற்றும் கலைநோக்கில் தனது குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.


கிரியேட்டிவிட்டி, இணைந்து செயல்படுதல் மற்றும் புதிய யோசனைகளுக்கான இடமாக உருவாக்கப்பட்டுள்ள ICONZA, நடிப்பைத் தாண்டி அல்லு அர்ஜுனின் விரிவடைந்து வரும் கலைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.


தற்போது, அட்லி இயக்கும் ‘ராக்கா' திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுன் தயாராகி வருகிறார். இந்த திரைப்படம் சமீபத்தில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘AA23’ திரைப்படத்திலும், அதன் பின்னர் 'புஷ்பா 3: தி ரேம்பேஜ்' திரைப்பத்திலும் நடிக்கிறார்.



இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படமான ‘டோரதி’ அதன் கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசையால் ரசிகர்களின் மனதை வென்று பிரம்மாண்ட வெற்றிப் படமாக உருவாகியுள்ளது. அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனித உறவுகள் ஆகியவற்றை புதிய பார்வையுடனும் மனிதநேயத்துடன் அணுகும் வகையில் புதிய கோணத்தை ‘டோரதி’ திரைப்படம் கொடுத்துள்ளது. 


படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வழக்கமான கமர்ஷியல் விஷயங்களை வலிந்து திணிக்காமல் வலுவான கதையை எடுத்து சொல்லியிருப்பதே இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். படம் பெற்று வரும் வரவேற்பால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை அதிகரித்திருப்பதையும், நேர்மறையான வாய்மொழிப் பாராட்டுகள் பெருகி வருவதையும் காண முடிகிறது.


முன்னணி திரையரங்க உரிமையாளரான திருப்பூர் சுப்ரமணியம், படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “நல்ல திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி பெறுவதைப் பார்ப்பது ஒரு திரையரங்க உரிமையாளராக எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் தனது பத்தாவது திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கோவை ரசிகர்கள் ‘டோரதி’ திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்” என்றார்.


உணர்வுப்பூர்வமான மற்றும் வழக்கத்திற்கு மாறான ஒரு கதையை நேர்மையுடன் சொல்ல வேண்டும் என்ற கார்த்திக் சுப்புராஜின் நம்பிக்கைக்கும் இந்த வெற்றி சான்றாக அமைந்துள்ளது. ‘டோரதி’ மூலம் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோரின் கெமிஸ்ட்ரியும், மிகையில்லாத இயல்பான நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இசைஞானி இளையராஜாவின் ஆத்மார்த்தமான இசை படத்திற்கு உயிரூட்டியுள்ளது. 

படத்தின் தொழில்நுட்பக்குழுவினரும் படத்திற்கு பெரும் பலம். 


‘டோரதி’ திரைப்படத்தை பார்த்த பார்வையாளர்கள் தாங்கள் படத்தைப் பார்த்து ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் நேர்மறையான வாய்மொழிப் பாராட்டுகள், திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையாக மாறியுள்ளது. குடும்பங்கள் மற்றும் பல்வேறு தரப்பு பார்வையாளர்கள் திரையரங்குகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். படம் பல கேள்விகளையும் விவாதங்களையும் உரையாடல்களையும் தொடங்கி வைத்துள்ளது.  


திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலே இன்றைய சூழலில் பெரும்பாலும் கவனிக்கப்படுகிறது. அதைத்தாண்டி, வலிமையான கதை, இயல்பான நடிப்பு மற்றும் உணர்வுகளுடன் ஒன்றிணையும் கதை போன்றவையும் படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை ‘டோரதி’ மீண்டும் நிரூபித்துள்ளது. 


தொடர்ந்து பார்வையாளர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று வரும் ‘டோரதி’, தற்போது ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக மட்டுமல்லாமல், அர்த்தமுள்ள ஒரு சமூக உரையாடலுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய திரைப்படமாகவும் மாறியுள்ளது.

 

ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சாய் பாதானந்தா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில், முதலில் பத்திரிகையாளர்களுக்காக படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் தியாகராஜன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

‘சாய் பாதானந்தா’ திரைப்படம் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கைச் சரிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1906-ம் ஆண்டு திருச்சி அருகே உள்ள பொய்யாமணியில் பிறந்த ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி, தெய்வத்தைத் தேடி அலைந்து, இறுதியில் தன்னுடைய வாழ்க்கையையே ஆன்மிகப் பணிக்கும் மனித சேவைக்கும் அர்ப்பணித்தவர். ‘பொய்யாமணி செல்வர்’ எனப் போற்றப்பட்ட அவர், ஷீரடி சாய் பாபாவின் மீது கொண்ட பக்தியுடன் அவரது வழியில் ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டார்.

பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டரின் Founder – Patron ஆகவும், மதராஸ் அகில இந்திய சாய் சமாஜத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி, நிபந்தனையற்ற அன்பைப் போதித்ததோடு, அதைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழ்ந்தவர். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பெங்களூருவில் மகா சமாதி அடைந்தார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் ஆன்மிகப் பயணத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய ஆவணப் படைப்பாக ‘சாய் பாதானந்தா’ உருவாகியுள்ளது. ஒரு சிறந்த சாய் பக்தரின் வாழ்க்கை வரலாற்றையும், ஒரு மகானின் எளிமையான வாழ்க்கையையும் உலகுக்கு அறிமுகப்படுத்தி, அதை வரலாற்றுப் பதிவாக மாற்ற வேண்டும் என்ற ஆன்மிக நோக்கத்துடன் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வியாபார நோக்கம் எதுவும் இல்லாமல், ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி டிரஸ்ட் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி பிறந்த பொய்யாமணியில், பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டர் மூலமாகக் கட்டப்பட்டுள்ள ஷீரடி சாய் பாபா மந்திரிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அதேபோல், பெங்களூரு தியாகராஜ நகரில் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி நிறுவிய சாய் ஸ்பிரிச்சுவல் சென்டர் மற்றும் சாய் பாபா ஆலயம், ஷீரடி சாய் பாபா ஆலயம் உள்ளிட்ட புனிதத் தலங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் புனிதத் தலங்களை நேரில் தரிசிக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆழமான வசனங்கள், தெய்வீகமான பாடல்கள், மனதை வருடும் இசை, யதார்த்தமான நடிப்பு, கண்கவர் ஒளிப்பதிவு மற்றும் கச்சிதமான படத்தொகுப்பு என கலை நயத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவற்றையும் பயன்படுத்தி சில காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் திரை ஆக்கத்திற்கு வழிகாட்ட, பி. நித்தியானந்தம் இப்படத்தை இயக்கியுள்ளார். அருண் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிஷேக் ராஜு இசையமைத்துள்ளார். சுபாஷ் பகவதியப்பன் படத்தொகுப்பு செய்துள்ளார். பி. நந்த குமார் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். என். மகேந்திரன் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், எஸ். மலர் கண்ணன் தயாரிப்பு நிர்வாகத்தையும் மேற்கொண்டுள்ளனர். வர்ணனையாளராக சாய் சௌமியா அபிஷேக் ராஜு பணியாற்றியுள்ளார். ஆனந்த மௌலி சுவாமிஜி, ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பழம்பெரும் ஆன்மிக நடிகர்களான ரமணி, தம்பி பார்த்தசாரதி, ரங்கமணி, ஜெயம் மணியன், சங்கர நாராயணன், ஸ்ரீதர், ஸ்ரீவத்சன், சாய் கோகுல்நாத், ரவிசங்கர், மாஸ்டர் தரணிதரன், மாஸ்டர் சாலுவேஷ், வருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயந்தி, சாந்தி, ரேவதி, வர்ஷா, ஈஸ்வரி, கலா வரதன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ரசிகா அம்மன் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிகழ்வில் 

முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசியதாவது:

“முதலில் மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக கிருஷ்ணகுமார் சார் பற்றி சொல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். அவரை நான் ஒரு குருவைப் போலத்தான் பார்க்கிறேன். அவரது தொழில் சார்ந்த விஷயங்களில் நானும் ஓரளவு தொடர்பில் இருப்பதால், அவர் எனக்கு பல நல்ல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். தனது குருவைப் பற்றி ஒரு பயோபிக் திரைப்படம் எடுப்பது சாதாரணமான விஷயம் அல்ல. பயோபிக் என்றாலே பல தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள். ஆனால் உண்மையான வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி என்பதால் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

கிருஷ்ணகுமார் சார் இந்தப் படத்தை உருவாக்குவதற்காக இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்திருக்கிறார். அவர் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை எப்படியாவது செய்து முடிப்பது அவரது திறமை. அவரை நான் எனது குருவாகவே பார்க்கிறேன். அவரது தொழில் மற்றும் வாழ்க்கை சார்ந்து அவர் எனக்கு பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகுமார் சாரும் நானும் திருச்சியுடன் தொடர்புடையவர்கள். அவருடைய குடும்பத்துக்கும் எனது குடும்பத்துக்கும் அந்த ஊருடன் தொடர்பு இருக்கிறது. அவர் கட்டியிருக்கும் கோயிலைப் பற்றி எனக்கு முன்பே தெரியாது. ஒரு முறை அவரை நான் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இருந்தபோதும் தொலைபேசியை எடுத்துப் பேசினார். அந்த அளவுக்கு தனது குருவின் மீது பக்தியுடன் இருப்பவர். அந்தக் கோயிலையும், தனது குருவின் வாழ்க்கையையும் உலக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இதை வெறும் ஒரு சாதனையாக மட்டும் நான் பார்க்கவில்லை. தனக்காக எதையும் செய்யாமல், தனது குருவுக்காக அவரது வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். மக்கள் அவரது குருவின் வாழ்க்கையை அறிந்து, அதிலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். இப்படிப்பட்ட ஒரு முயற்சியை மேற்கொண்ட கிருஷ்ணகுமார் சாருக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி டிரஸ்ட் அறங்காவலர் கிருஷ்ணகுமார் பேசியதாவது: 

“ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. இந்தப் படம் உருவானதே ஒரு பெரிய மிராகிள்தான். ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த சில சம்பவங்கள்தான் இந்தப் படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. முதலில் வீரமணி ராஜு சார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட அறிமுகம் இந்தப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. என் குருவைப் பற்றிய செய்தி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த முயற்சியை ஆரம்பித்தேன்.

நான் ஒரு சம்பளம் வாங்கும் தொழிலாளி. என்னிடம் அளவில்லாத நிதி வசதிகள் எதுவும் கிடையாது. ஆனாலும் என் குருவின் வாழ்க்கையையும் அவரது செய்தியையும் எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த எண்ணத்தோடு தியாகு சாரை அணுகினேன். அவர் ‘நீங்கள் குழப்பம் கொள்ள வேண்டாம், நாம் பண்ணலாம்’ என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன்பிறகு நித்யானந்தம் சார் இந்தப் பயணத்தில் இணைந்தார். அவர் பெங்களூரு, பொய்யாமணி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து, ஒரு ஸ்கிரிப்ட்டையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்த ஸ்கிரிப்ட்டைப் படித்தபோது படத்தை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது.

இந்தப் படத்தில் எனக்கு பெரிய பங்களிப்பு எதுவும் கிடையாது. தியாகு சார் மற்றும் நித்யானந்தம் சார் ஆகியோரின் மேற்பார்வையில்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது. தியாகு சார் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார். குறிப்பாக அவர் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் விஷயங்களை விளக்கிய விதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அபிஷேக் எனது குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிட்டார். அவர் இசையமைத்திருக்கிறார். படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.

21 ஆண்டுகளாக நான் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியுடன் இருந்திருக்கிறேன். அதனால் அவரது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நான் ஒரு தனிப்பட்ட பார்வையில் பார்த்திருக்கிறேன். எனவே படத்தில் சில விஷயங்களைப் பார்க்கும்போது எனது குருவையே திரும்பப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்தப் படத்தை உருவாக்க உதவிய வீரமணி ராஜு சார் முதல் சத்யஜோதி ஃபிலிம்ஸ், தியாகு சார், நித்யானந்தம் சார், அபிஷேக் மற்றும் அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை இவ்வளவு சிறப்பாக உருவாக்கி உயிர்ப்பித்த அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

இயக்குநர் சிறுத்தை சிவா பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். சாய்ராம். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து, இந்த சிறந்த படத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கிய கிருஷ்ணகுமார் சாருக்கு முதலில் நன்றி. அவரை நான் முதன்முதலில் சந்தித்தது சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான். ஆனால் முதல் சந்திப்பிலேயே நீண்ட காலமாகப் பழகிய ஒருவரைப் போன்ற நெருக்கமான உணர்வு ஏற்பட்டது. அவருடன் பேசும்போது பெரும்பாலும் சாய்பாபா மற்றும் அவரது குருவைப் பற்றித்தான் பேசுவார். பொய்யாமணியில் ஒரு கோயில் கட்டியிருப்பதாக அவர் கூறியபோது, பக்தியை மட்டும் கொண்டிருப்பதைக் கடந்து, அந்த பக்திக்காக ஒரு கோயிலை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்று நினைத்தேன்.

கிருஷ்ணகுமார் சார் தனது குருவைப் பற்றி இவ்வளவு அற்புதமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பதை மனதாரப் பாராட்டுகிறேன். சாய்பாபாவை நானும் மனதார எனது குருவாக ஏற்றுக்கொண்டு, அவரது இருப்பை ஒவ்வொரு நொடியும் உணர்ந்திருக்கிறேன். குரு என்பவர் நமக்கு நிழலைப் போலவும், இருளில் வெளிச்சத்தைப் போலவும் இருப்பார். அந்த உணர்வை இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னால் முழுமையாக உணர முடிந்தது. ராதாகிருஷ்ண சுவாமிஜியின் கதாபாத்திரத்தில் நடித்த மௌலி சார் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் அது நடிப்பு என்றே தெரியவில்லை; உண்மையிலேயே ஸ்வாமிஜி அங்கே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

படத்தின் இசையமைப்பாளர் அபிஷேக்கின் பங்களிப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் இடம்பெறும் பாடல் காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே கண்கள் கலங்கும் அளவுக்கு இசையும் காட்சியும் ஒன்றாக இணைந்திருந்தன. இயக்குநர் நித்யானந்தம் சார் நீண்ட கால அனுபவத்துடன் இந்தப் படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். வசனகர்த்தா யார் கண்ணன் சாரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. அவரது எழுத்திலும், பாடல் வரிகளிலும் அதே வலிமையும் ஆழமும் இருப்பதை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.

குறிப்பாக இறுதியில் இடம்பெறும் பாடல் முழுமையான ஆன்மிக அனுபவத்தைத் தருகிறது. பாடலைப் பாடிய விதமும், இசையும், காட்சிகளும் இணைந்து அந்த உணர்வை அழகாகக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சாய்பாபாவின் அருள் கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். நன்றி.”

இயக்குநர் நித்யானந்தம் பேசியதாவது: 

வாழ்க்கையில் எல்லாமே விதிக்கப்பட்டதுதான். இந்தப் படத்தைப் பற்றி பேசும்போது, ‘இயக்கம்’ என்ற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், நானும் இந்தப் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருமே ஒவ்வொரு தருணத்திலும் ஒரு கருவியாகத்தான் செயல்பட்டோம். எங்கள் மூலமாக ஏதோ ஒரு சக்தி இந்தப் படத்தை உருவாக்கியதாகவே உணர்கிறோம்.

இதற்கு ஓர் உதாரணமாக, பொய்யாமணி கிராமத்தில் படப்பிடிப்புக்குத் திட்டமிட்டு இரவில் அங்கு சென்றபோது பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. மறுநாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. ட்ரோன் படப்பிடிப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். மழை தொடர்ந்தால் எப்படிப் படப்பிடிப்பை நடத்துவது என்று கவலையாக இருந்தது. ஆனால், மறுநாள் காலையில் ஒரு துளி மழைகூட பெய்யவில்லை. மாலை ஐந்து மணிக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டோம் என்று சொன்ன பிறகுதான் மீண்டும் மழை பெய்தது. இதுபோலப் பல தருணங்களில் எங்களுக்குத் தேவையான அனைத்தும் தடையின்றி கிடைத்தன.

இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்தது உயர்ந்த ஆன்மிக சக்திகளும், ஷீரடியில் சாய்பாபாவின் அருளும், மயிலாப்பூர் சிவகாமி ஆலயத்தில் அருள்பாலிக்கும் நரசிம்ம சுவாமியின் அருளும், பொய்யாமணியில் நிலவும் தெய்வீக அதிர்வுகளும்தான் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் அந்த ஆன்மிக அனுபவத்தைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை உருவாக்கித் தந்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் சாருக்கு எனது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!”

பின்னணி பாடகர் வீரமணி ராஜு பேசியதாவது: 

“இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு மிகப்பெரிய பாக்கியம். குறிப்பாக, ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் குருபக்தியைப் பற்றி சொல்ல வேண்டும். கிருஷ்ணகுமார் சார் எப்போதும் தனது குருவைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். தனது குருவின் செய்தி உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி மிகப்பெரியது. பொய்யாமணி கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்த ஆன்மிகச் சூழலும், ராதாகிருஷ்ண சுவாமிஜி, சாய்பாபா, நரசிம்ம சுவாமி ஆகியோரின் திருவுருவங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. அந்த இடத்தின் ஆன்மிக உணர்வை இந்தப் படத்தின் மூலம் அனைவரும் உணர முடியும்.

இந்தப் படத்தில் எனக்கும் ஒரு பங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக, எனது மகன் இசையமைக்கும் படத்தில் நான் பாடியிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். நான் பல முன்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியிருக்கிறேன். ஆனால் என் மகன் இசையமைக்கும் படத்தில் நான் பாடுவது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சிறப்பான அனுபவம். நான் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பக்திப் பாடல்களையும் ஆல்பங்களையும் பாடியிருக்கிறேன். இந்தப் படத்திலும் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது பாபாவின் ஆசீர்வாதமாகவே நான் பார்க்கிறேன்.

என் மகன் இசையமைத்த பாடல்களில் பொய்யாமணி கோயிலின் பெயரையே பல்லவியில் அழகாக இடம்பெறச் செய்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் ஒரு தெய்வீகமான படைப்பு என்பதால், அதற்கேற்ற வகையில் இசையும் காட்சிகளும் இருக்க வேண்டும் என்று அவனிடம் கூறினேன். இந்தப் படத்தின் இசைப் பணியில் அவன் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறான். அதற்காக கிருஷ்ணகுமார் சாருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் சாயிநாதரின் அருளும், ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கையும் அவருடைய குருவின் செய்தியும் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். குறிப்பாக, சாய்பாபாவின் ஆரத்திப் பாடல்களை இந்தப் படத்துக்காக தமிழில் பாடும் வாய்ப்பு கிடைத்திருப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது எனக்கு கிடைத்த ஒரு பெரிய பாக்கியம். பாபாவின் அருளால் இந்தப் படம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும். கிருஷ்ணகுமார் சார் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்.”

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசியதாவது: 

 “ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் குரு என்பவர் மிகவும் முக்கியமானவர். வழிகாட்டியாகவும், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் துணையாகவும் குரு இருப்பது அவசியம். அந்த வகையில் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. அவரது வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டபோது, இந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

கிருஷ்ணகுமார் சார் என்னை அணுகி, தனது குருவைப் பற்றிய இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியபோது, அவரது எண்ணமும் அர்ப்பணிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி தனது ஆன்மிகப் பயணத்தில் மேற்கொண்ட பணிகள், பெங்களூருவில் சாய் சென்டரை உருவாக்கிய விதம் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி தெரிந்துகொண்டபோது, இந்தப் படத்திற்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

கிருஷ்ணகுமார் சார் தனது வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைச் செய்திருந்தாலும், தனது குருவின் வாழ்க்கை மற்றும் செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. குருவின் மீது ஒருவர் கொண்டிருக்கும் நன்றியும் பக்தியும் அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு இந்த முயற்சியும் ஒரு சிறந்த உதாரணம். இதுபோன்ற மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் பயணத்தையும் மையமாகக் கொண்டு இன்னும் பல திரைப்படங்கள் உருவாக வேண்டும்.

இந்தப் படத்தை உருவாக்கிய கிருஷ்ணகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். சாய்பாபாவின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

சத்யன் பட் பேசியதாவது:

“இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெறும் திரைப்படம் மட்டுமல்ல; இதயத்திலிருந்து உருவான ஒரு படைப்பு. கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குழுவினரின் முயற்சியால்தான் இந்தக் கனவு நனவாகியிருக்கிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென அழைக்கப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களில் சிலரால் வர இயலவில்லை. இங்கு வருகை தந்து படத்தைப் பார்த்து ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, இந்தப் படத்தின் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய சக்தி கிருஷ்ணகுமார்தான் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவருடைய இடைவிடாத முயற்சியும், ஆர்வமும், குருவின் மீதான அளவற்ற பக்தியும்தான் இந்தப் படத்தைச் சாத்தியமாக்கியுள்ளன. பணம் என்பது இரண்டாம் பட்சம்தான்; இந்த முயற்சியின் மீதான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும்தான் முக்கியம்.

இந்தப் படம் உருவாக முக்கியப் பங்காற்றிய இரண்டு பெண்களையும் இங்கே குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டும். தயாரிப்பாளர் சுஜாதா கிருஷ்ணகுமார் இந்தப் பயணத்தில் மிகுந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளார். அதேபோல், என் மகள் இந்தப் படத்திற்காகப் பல வகைகளில் துணை நின்றுள்ளார். வீட்டையே சாய்பாபா கோயிலாக மாற்றிவிட்டீர்கள் என்று அவர் என்னிடம் கேட்கும் அளவுக்கு, இந்தப் படத்தின் பணிகள் எங்கள் குடும்ப வாழ்க்கையிலும் ஒரு பகுதியாகிவிட்டன. அவர்கள் இருவரின் பங்களிப்பும் இல்லாமல் இந்தப் படம் உருவாகியிருக்காது.

இயக்குநர் நித்யானந்தமும் அவரது குழுவினரும், படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்தைத் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் ஊடக நண்பர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. நீண்ட நேரம் பொறுமையாக இருந்து எங்களுக்குத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. சாய்பாபா அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.”

திருமதி விஜயா அருண் பேசியதாவது:

 “அனைவருக்கும் வணக்கம். கிருஷ்ணகுமார் சாரின் மனைவி, நண்பர்கள் உள்ளிட்ட அனைவரின் சார்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிருஷ்ணகுமார் சார் என்னிடம் தனது குருவைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஆனால் இன்று இந்தப் படத்தைப் பார்த்தபோதுதான், தனது குருவின் கருணையையும், அவரது வாழ்க்கையில் குரு ஏற்படுத்திய தாக்கத்தையும் அவர் எந்த அளவுக்கு அனுபவித்திருக்கிறார் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

கிருஷ்ணகுமார் சார் தனது குருவின் சீடராக இருந்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை இப்போது என்னால் முழுமையாக உணர முடிகிறது. அந்த அனுபவத்தையும், தனது குருவின் பெருமையையும் இந்தப் படத்தின் மூலம் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்வாமிஜியின் அருளும், பாபாவின் ஆசீர்வாதமும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். அவரது கிராமத்திற்கும் அங்குள்ள கோயிலுக்கும் செல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்தக் கோயில் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு இருந்த ஆன்மிகச் சூழலும், நேர்மறையான அதிர்வுகளும் மிகவும் சிறப்பாக இருந்தன.

இவ்வளவு நிறைவான ஒரு அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்ட கிருஷ்ணகுமார் சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அவரது குருவின் பெருமையும், அருளும் இன்னும் பலரிடம் சென்றடைய வேண்டும்.”

பத்திரிகையாளர், மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது: 

“சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா மற்றும் கலைத் துறையுடன் தொடர்புடைய பலரை பார்த்திருக்கிறேன். இன்று கிருஷ்ணகுமார் சாரின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை ஒரு பார்வையாளராக பார்த்தேன்; ஆனால் பார்த்த பிறகு பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனது குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி சொல்லும் ‘எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது; எதுவும் புதிதாக எழுதப்படுவதில்லை’ என்ற கருத்து எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த வகையில், இன்று இந்தப் படத்தின் நிகழ்வில் நான் வந்து நிற்பதும் ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

கிருஷ்ணகுமார் சாரின் வாழ்க்கைப் பயணத்தைப் பார்க்கும்போது குருவின் அருள் ஒருவரை எப்படி வழிநடத்துகிறது என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர் என்று அவர் தன்னைப் பற்றிக் கூறினாலும், பின்னர் தனது உழைப்பாலும் குருவின் அருளாலும் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். ‘விடியும் என்று விண்ணை நம்புகிற நீ, முடியும் என்று உன்னை நம்பு’ என்ற வரியைப் போல, தன்னால் முடியும் என்று நம்பி உழைத்திருக்கிறார். இன்று அவர் நினைத்ததை நிறைவேற்றி நிற்கிறார். குருவை நம்பினால், குரு நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்பதற்கு அவரது வாழ்க்கையே ஒரு உதாரணம்.

சாய்பாபாவின் போதனைகளில் முக்கியமானது நம்பிக்கையும் பொறுமையும். அந்த நம்பிக்கையையும் சரணாகதியையும் இந்தப் படத்தில் உணர முடிகிறது. குருவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆன்மிகப் பயோபிக், பலருக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இந்தப் படத்தை உருவாக்கிய கிருஷ்ணகுமார் சார், இயக்குநர் நித்யானந்தம் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், ஒரு சிறிய வருத்தத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். குருவின் குரு என்று சொல்லப்படும் கதாபாத்திரத்திற்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் திரையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆன்மிகத்தில் குருவுக்கும், குருவின் குருவுக்கும் இருக்கும் இடம் மிகவும் உயர்ந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு மூத்த சீடர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்தப் படம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் இந்த ஆன்மிகப் பயணத்தையும் குருவின் செய்தியையும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நன்றி, வணக்கம்.”இயக்குநர் சிறுத்தை சிவா பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். சாய்ராம். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து, இந்த சிறந்த படத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கிய கிருஷ்ணகுமார் சாருக்கு முதலில் நன்றி. அவரை நான் முதன்முதலில் சந்தித்தது சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான். ஆனால் முதல் சந்திப்பிலேயே நீண்ட காலமாகப் பழகிய ஒருவரைப் போன்ற நெருக்கமான உணர்வு ஏற்பட்டது. அவருடன் பேசும்போது பெரும்பாலும் சாய்பாபா மற்றும் அவரது குருவைப் பற்றித்தான் பேசுவார். பொய்யாமணியில் ஒரு கோயில் கட்டியிருப்பதாக அவர் கூறியபோது, பக்தியை மட்டும் கொண்டிருப்பதைக் கடந்து, அந்த பக்திக்காக ஒரு கோயிலை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்று நினைத்தேன்.

கிருஷ்ணகுமார் சார் தனது குருவைப் பற்றி இவ்வளவு அற்புதமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பதை மனதாரப் பாராட்டுகிறேன். சாய்பாபாவை நானும் மனதார எனது குருவாக ஏற்றுக்கொண்டு, அவரது இருப்பை ஒவ்வொரு நொடியும் உணர்ந்திருக்கிறேன். குரு என்பவர் நமக்கு நிழலைப் போலவும், இருளில் வெளிச்சத்தைப் போலவும் இருப்பார். அந்த உணர்வை இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னால் முழுமையாக உணர முடிந்தது. ராதாகிருஷ்ண சுவாமிஜியின் கதாபாத்திரத்தில் நடித்த மௌலி சார் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் அது நடிப்பு என்றே தெரியவில்லை; உண்மையிலேயே ஸ்வாமிஜி அங்கே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

படத்தின் இசையமைப்பாளர் அபிஷேக்கின் பங்களிப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் இடம்பெறும் பாடல் காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே கண்கள் கலங்கும் அளவுக்கு இசையும் காட்சியும் ஒன்றாக இணைந்திருந்தன. இயக்குநர் நித்யானந்தம் சார் நீண்ட கால அனுபவத்துடன் இந்தப் படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். வசனகர்த்தா யார் கண்ணன் சாரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. அவரது எழுத்திலும், பாடல் வரிகளிலும் அதே வலிமையும் ஆழமும் இருப்பதை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.

குறிப்பாக இறுதியில் இடம்பெறும் பாடல் முழுமையான ஆன்மிக அனுபவத்தைத் தருகிறது. பாடலைப் பாடிய விதமும், இசையும், காட்சிகளும் இணைந்து அந்த உணர்வை அழகாகக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சாய்பாபாவின் அருள் கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். நன்றி.”

பின்னணி பாடகர் வீரமணி ராஜு பேசியதாவது: 

“இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு மிகப்பெரிய பாக்கியம். குறிப்பாக, ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் குருபக்தியைப் பற்றி சொல்ல வேண்டும். கிருஷ்ணகுமார் சார் எப்போதும் தனது குருவைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். தனது குருவின் செய்தி உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி மிகப்பெரியது. பொய்யாமணி கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்த ஆன்மிகச் சூழலும், ராதாகிருஷ்ண சுவாமிஜி, சாய்பாபா, நரசிம்ம சுவாமி ஆகியோரின் திருவுருவங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. அந்த இடத்தின் ஆன்மிக உணர்வை இந்தப் படத்தின் மூலம் அனைவரும் உணர முடியும்.

இந்தப் படத்தில் எனக்கும் ஒரு பங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக, எனது மகன் இசையமைக்கும் படத்தில் நான் பாடியிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். நான் பல முன்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியிருக்கிறேன். ஆனால் என் மகன் இசையமைக்கும் படத்தில் நான் பாடுவது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சிறப்பான அனுபவம். நான் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பக்திப் பாடல்களையும் ஆல்பங்களையும் பாடியிருக்கிறேன். இந்தப் படத்திலும் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது பாபாவின் ஆசீர்வாதமாகவே நான் பார்க்கிறேன்.

என் மகன் இசையமைத்த பாடல்களில் பொய்யாமணி கோயிலின் பெயரையே பல்லவியில் அழகாக இடம்பெறச் செய்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் ஒரு தெய்வீகமான படைப்பு என்பதால், அதற்கேற்ற வகையில் இசையும் காட்சிகளும் இருக்க வேண்டும் என்று அவனிடம் கூறினேன். இந்தப் படத்தின் இசைப் பணியில் அவன் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறான். அதற்காக கிருஷ்ணகுமார் சாருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் சாயிநாதரின் அருளும், ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கையும் அவருடைய குருவின் செய்தியும் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். குறிப்பாக, சாய்பாபாவின் ஆரத்திப் பாடல்களை இந்தப் படத்துக்காக தமிழில் பாடும் வாய்ப்பு கிடைத்திருப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது எனக்கு கிடைத்த ஒரு பெரிய பாக்கியம். பாபாவின் அருளால் இந்தப் படம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும். கிருஷ்ணகுமார் சார் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்.”

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசியதாவது: 

 “ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் குரு என்பவர் மிகவும் முக்கியமானவர். வழிகாட்டியாகவும், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் துணையாகவும் குரு இருப்பது அவசியம். அந்த வகையில் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. அவரது வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டபோது, இந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

கிருஷ்ணகுமார் சார் என்னை அணுகி, தனது குருவைப் பற்றிய இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியபோது, அவரது எண்ணமும் அர்ப்பணிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி தனது ஆன்மிகப் பயணத்தில் மேற்கொண்ட பணிகள், பெங்களூருவில் சாய் சென்டரை உருவாக்கிய விதம் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி தெரிந்துகொண்டபோது, இந்தப் படத்திற்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

கிருஷ்ணகுமார் சார் தனது வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைச் செய்திருந்தாலும், தனது குருவின் வாழ்க்கை மற்றும் செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. குருவின் மீது ஒருவர் கொண்டிருக்கும் நன்றியும் பக்தியும் அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு இந்த முயற்சியும் ஒரு சிறந்த உதாரணம். இதுபோன்ற மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் பயணத்தையும் மையமாகக் கொண்டு இன்னும் பல திரைப்படங்கள் உருவாக வேண்டும்.

இந்தப் படத்தை உருவாக்கிய கிருஷ்ணகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். சாய்பாபாவின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

திருமதி விஜயா அருண் பேசியதாவது:

 “அனைவருக்கும் வணக்கம். கிருஷ்ணகுமார் சாரின் மனைவி, நண்பர்கள் உள்ளிட்ட அனைவரின் சார்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிருஷ்ணகுமார் சார் என்னிடம் தனது குருவைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஆனால் இன்று இந்தப் படத்தைப் பார்த்தபோதுதான், தனது குருவின் கருணையையும், அவரது வாழ்க்கையில் குரு ஏற்படுத்திய தாக்கத்தையும் அவர் எந்த அளவுக்கு அனுபவித்திருக்கிறார் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

கிருஷ்ணகுமார் சார் தனது குருவின் சீடராக இருந்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை இப்போது என்னால் முழுமையாக உணர முடிகிறது. அந்த அனுபவத்தையும், தனது குருவின் பெருமையையும் இந்தப் படத்தின் மூலம் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்வாமிஜியின் அருளும், பாபாவின் ஆசீர்வாதமும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். அவரது கிராமத்திற்கும் அங்குள்ள கோயிலுக்கும் செல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்தக் கோயில் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு இருந்த ஆன்மிகச் சூழலும், நேர்மறையான அதிர்வுகளும் மிகவும் சிறப்பாக இருந்தன.

இவ்வளவு நிறைவான ஒரு அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்ட கிருஷ்ணகுமார் சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அவரது குருவின் பெருமையும், அருளும் இன்னும் பலரிடம் சென்றடைய வேண்டும்.”

பத்திரிகையாளர், மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது: 

“சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா மற்றும் கலைத் துறையுடன் தொடர்புடைய பலரை பார்த்திருக்கிறேன். இன்று கிருஷ்ணகுமார் சாரின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை ஒரு பார்வையாளராக பார்த்தேன்; ஆனால் பார்த்த பிறகு பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனது குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி சொல்லும் ‘எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது; எதுவும் புதிதாக எழுதப்படுவதில்லை’ என்ற கருத்து எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த வகையில், இன்று இந்தப் படத்தின் நிகழ்வில் நான் வந்து நிற்பதும் ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

கிருஷ்ணகுமார் சாரின் வாழ்க்கைப் பயணத்தைப் பார்க்கும்போது குருவின் அருள் ஒருவரை எப்படி வழிநடத்துகிறது என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர் என்று அவர் தன்னைப் பற்றிக் கூறினாலும், பின்னர் தனது உழைப்பாலும் குருவின் அருளாலும் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். ‘விடியும் என்று விண்ணை நம்புகிற நீ, முடியும் என்று உன்னை நம்பு’ என்ற வரியைப் போல, தன்னால் முடியும் என்று நம்பி உழைத்திருக்கிறார். இன்று அவர் நினைத்ததை நிறைவேற்றி நிற்கிறார். குருவை நம்பினால், குரு நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்பதற்கு அவரது வாழ்க்கையே ஒரு உதாரணம்.

சாய்பாபாவின் போதனைகளில் முக்கியமானது நம்பிக்கையும் பொறுமையும். அந்த நம்பிக்கையையும் சரணாகதியையும் இந்தப் படத்தில் உணர முடிகிறது. குருவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆன்மிகப் பயோபிக், பலருக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இந்தப் படத்தை உருவாக்கிய கிருஷ்ணகுமார் சார், இயக்குநர் நித்யானந்தம் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், ஒரு சிறிய வருத்தத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். குருவின் குரு என்று சொல்லப்படும் கதாபாத்திரத்திற்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் திரையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆன்மிகத்தில் குருவுக்கும், குருவின் குருவுக்கும் இருக்கும் இடம் மிகவும் உயர்ந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு மூத்த சீடர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்தப் படம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் இந்த ஆன்மிகப் பயணத்தையும் குருவின் செய்தியையும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நன்றி, வணக்கம்.”

ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி தாமரைக்கண்ணன்  பேசியதாவது: 

“கிருஷ்ணகுமார் சார் என்னை இந்தப் படத்தைப் பார்க்க அழைத்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில், ஒவ்வொருவரின் மனதையும் ஏதாவது ஒரு சம்பவம் நிச்சயம் தொட்டுச் செல்லும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமார் சார் அளித்த தகவல்களுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பங்கும், அவர்களின் உழைப்பும் திரையில் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் என்னை மிகவும் பாதித்த மூன்று விஷயங்கள் இருக்கின்றன. முதலில், ‘யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம், அதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை’ என்று ஸ்வாமிஜி கூறும் இடம் மிகச் சிறப்பான செய்தியைச் சொல்கிறது. இரண்டாவதாக, ஒரு பெண் தன்னை விதவை என்று கூறி பாதபூஜை செய்ய அனுமதி கேட்கும்போது, ‘நீங்கள் எனக்கு உணவு கொடுத்தபோதே என்னுடைய தாயாகிவிட்டீர்கள்’ என்று ஸ்வாமிஜி கூறும் காட்சி மிகவும் வலிமையானது. இது மிக ஆழமான மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது.

மூன்றாவதாக, ஸ்வாமிஜியின் குருவுக்கும் அவருக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஒரு விஷயம் தனக்கு முன்கூட்டியே எப்படி தெரிந்தது என்று கேட்கப்படும்போது, அவர் அளிக்கும் பதில் ஒரு குருவுக்கும் சீடனுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்பதை மிக அழகாகச் சொல்கிறது. அந்த உறவுதான் கிருஷ்ணகுமார் சாருக்கும் அவரது குருவுக்கும் இருந்திருக்கிறது என்று நான் உணர்கிறேன்.

இந்தப் படத்தின் இசை, பாடல்கள், பாடல் வரிகள் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளன. இறுதியாக நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ‘இறை அருள்’ என்பதற்கு ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அது ‘பொய்யாமணி’. அதேபோல் கிருஷ்ணகுமார் சாரைப் பற்றியும் சொல்லலாம். அவர் ஒருபோதும் பொய் பேசுவதில்லை. நன்றி.”

யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சுபாஷ் பேசியதாவது: 

“படம் முடிந்து பல மணி நேரம் ஆன பிறகும், அதில் இடம்பெற்ற இசை, வசனங்கள், காட்சிகள் இன்னும் மனதில் நிற்கின்றன. ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்று சொல்வதன் அர்த்தத்தை இந்தப் படம் இன்னும் ஆழமாக உணர வைத்திருக்கிறது. தாய் தந்தையை அடையாளம் காட்டுகிறார், தந்தை குருவிடம் அழைத்துச் செல்கிறார், குரு நம்மை இறைவனிடம் கொண்டு செல்கிறார். அந்த வகையில் குருவின் முக்கியத்துவத்தையும், குரு - சீடன் உறவையும் இந்தப் படம் மிகவும் அழகாகப் பதிவு செய்திருக்கிறது.

குறிப்பாக விதவைப் பெண் ஒருவர் ஸ்வாமிஜிக்கு பாதபூஜை செய்யலாமா என்று கேட்கும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. ‘நீங்கள் எனக்கு உணவு அளித்தபோதே எனக்குத் தாயாகிவிட்டீர்கள்’ என்று அவர் கூறுவது சாதாரண வசனம் அல்ல. சமூகத்தில் இருந்த சில கட்டுப்பாடுகளைத் தாண்டி மனிதநேயத்தை முன்னிறுத்திய ஒரு ஆன்மிகப் புரட்சியாளராக ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியை அந்தக் காட்சி நமக்கு அடையாளப்படுத்துகிறது. இதுபோன்று படத்தில் பல வசனங்களும் காட்சிகளும் ஆழமான கருத்துகளைச் சொல்கின்றன.

இசையைப் பொறுத்தவரை பாடல் வரிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு இசைக்கருவியையும் பயன்படுத்திய விதத்திலும் தெய்வீக உணர்வு இருக்கிறது. வீரமணி ராஜு சாரின் இசைக் குடும்பத்தின் பங்களிப்பையும் பாராட்ட வேண்டும். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இதை ஒரு சாதாரண வாழ்க்கை வரலாற்றுப் படமாகவோ, ஆவணப்படமாகவோ அணுகாமல், குருவின் வாழ்க்கையையும் அவரது கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கியிருப்பது திரையில் தெரிகிறது.

இயக்குநர் நித்யானந்தம் சாரைப் பற்றி குறிப்பாகச் சொல்ல வேண்டும். கடந்த 30, 35 ஆண்டுகளாக சினிமா துறையைப் பார்த்து வருகிறேன். ஒரு தயாரிப்பாளரின் நம்பிக்கையைப் புரிந்துகொண்டு, அவருக்கான இயக்குநராகச் செயல்படுவது மிகவும் முக்கியம். தியாகு சார் இந்தப் படத்திற்கு நித்யானந்தம் சாரைத் தேர்வு செய்திருப்பதே அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. குறிப்பிட்ட நாட்கள், பட்ஜெட் மற்றும் வசதிகளுக்குள் இவ்வளவு தரமான படைப்பை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. பெரிய பட்ஜெட் படங்களில்கூட சில நேரங்களில் கிடைக்காத நேர்த்தியை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. அதற்காக இயக்குநர் நித்யானந்தம் சார் மற்றும் அவருக்குத் துணையாகப் பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுகள்.”

வசனகர்த்தா யார் கண்ணன் பேசியதாவது: 

“விரட்டினார்கள், இடம் கிடைத்தது; கல்லெறிந்தார்கள், வீடானது; தீ வைத்தார்கள், விளக்கானது என்று எதிர்மறையான விஷயங்களைக்கூட நேர்மறையாக மாற்றுவதுதான் ஆன்மிகம். அந்த வகையில் ‘சத்யஜோதி’ என்ற பெயரிலேயே ஒரு நல்ல அர்த்தம் இருக்கிறது. சத்யஜோதி நிறுவனத்தில் சில ஆண்டுகள் கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றியவன் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. அங்கு பணியாற்றுபவர்கள் எந்தச் சூழ்நிலை வந்தாலும் தைரியமாக எதிர்கொண்டு செயல்படக்கூடியவர்கள்.

இந்தப் படத்துக்கு நித்யானந்தம் இயக்குநராக இருக்க வேண்டும் என்று ஜி.டி. முடிவு செய்தபோது, அவர் என்னை வசனகர்த்தாவாகத் தேர்ந்தெடுத்தார். அதன் பிறகு அவர் இந்தப் படத்திற்காக ஆய்வு செய்து, திரைக்கதையை உருவாக்கினார். படத்தின் இசை ஒரு முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தப்பட்டது. அபிஷேக்கிடம் கொடுத்த பிறகு, படத்தின் காட்சிகளுக்கும் கதைக்கும் ஏற்ற வகையில் இசை உருவானது. ‘தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு’ உள்ளிட்ட பாடல்களின் வரிகளும், இசையும் படத்தின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகின்றன.

சாய்பாபாவின் வாழ்க்கையில் அவரது குரு வழங்கிய செங்கல்லை நினைவாகச் சுமந்து சென்ற சம்பவமும், அதிலிருந்து உருவான பாடலும் மிகவும் முக்கியமானவை. படத்தின் கிளைமாக்ஸில் வசனங்களைவிட பாடல் வழியாக அந்த உணர்வை வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று நித்யானந்தத்திடம் கூறினேன். அவர் அதற்கு சம்மதித்தார். அப்போது ‘வானருவி’ என்ற வார்த்தை இயல்பாக வந்தது. அந்த வானருவி நதியாக மாறுவது போல, பாடலும் காட்சிகளோடு இணைந்து படத்தின் உணர்வை எடுத்துச் செல்கிறது.

வாழ்க்கையில் வெற்றி, பணம், சாதனை மட்டும் போதாது; அதற்கு அப்பாற்பட்ட மனநிம்மதியும் திருப்தியும் இருக்கிறது. அந்த மனநிம்மதியை இந்தப் படம் எனக்குக் கொடுத்திருக்கிறது. எந்த மதம், சாதி, சமூகப் பின்னணி என்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை அமைதிப்படுத்தவும், அன்பையும் ஆன்மிகத்தையும் பேசவும் இதுபோன்ற படைப்புகள் தேவை. தனது குருவின் நினைவுக்காக கிருஷ்ணகுமார் சார் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. சாய்பாபா ஒரு செங்கல்லை தனது குருவின் நினைவாகச் சுமந்தது போல, கிருஷ்ணகுமார் சார் தனது குருவின் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டிருக்கிறார்.”

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கை, ஆன்மிகப் பாதை மற்றும் சேவைப் பணிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், அவரது வாழ்க்கை வரலாற்றைத் திரை வழியாகப் பதிவு செய்யும் முயற்சியாக அமைந்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் இடம்பெற்ற உரைகளும், திரையிடப்பட்ட படத்தின் காட்சிகளும் இப்படம் ஆன்மிகம், பக்தி மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியிருப்பதை வெளிப்படுத்தின.

 


*என் கணவர் திரு. செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய "காகிதமலர்" என்னும் திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் "Asian Future" பிரிவில் 'World Premiere' ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.*


World Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். இந்தச் செய்தி மூலம் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் பெருமையுடனும், நன்றியுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


இந்தப் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசை தபஸ் நாயக் அவர்களுக்கும் செழியன் சாரின் உதவியாளர்கள் மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், R.P. ராஜா, பேச்சியப்பன் அவர்களுக்கும், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன், அறிமுக நடிகை ஜனனி செண்பகா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இத்திரைப்படத்தை அனுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், தமது பிஸியான நேரத்திலும் செய்து கொடுத்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும், எப்போது தொடர்புகொண்டாலும் எனது கோப்புகளைப் (Files) பற்றித் கேட்டு உடனே அனுப்பி வைத்த தபஸ் நாயக் அவர்களுக்கும், D Studioவின் A.L.விஜய் அவர்களின் பங்களிப்பிற்கும், தபாலில் அனுப்புவது தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்த இயக்குநர் லீனா மணிமேகலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."


எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் உதவியாளர்கள் சங்கத் தமிழன், ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், D Studio கலரிஸ்ட் ராஜசேகர், மேனேஜர் சரவணன், எப்போது என்ன கேள்விகள் அனுப்பினாலும் பூர்த்தி செய்து அனுப்பும் கிருஷ்ணசுவாமி அவர்களுக்கும், என் அன்பான, திறமையான மாணவன் செழியன் என்று எப்போதும் பெருமைப்படும் ஆசான், ஒளிப்பதிவாளர் P. C. ஸ்ரீராம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



அன்புடன்,

திருமதி பிரேமா செழியன்

தயாரிப்பாளர்

 


நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர் நடித்திருக்கும் ‘டோரதி’ திரைப்படமும் இணைந்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஏற்றுள்ள கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. பார்வையாளர்களின் நேர்மறையான விமர்சனங்களின் காரணமாக, ‘டோரதி’ திரைப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் படத்திற்கான திரையரங்குகள் மற்றும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


“விவாதத்திற்குரிய விஷயத்தை திரைப்படமாக்கி அதை வணிக ரீதியாகவும் வெற்றி பெற செய்வது மிகவும் கடினம். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தனது எழுத்தின் மூலம் அதைச் சாத்தியமாக்கியுள்ளார். இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அந்தக் கதாபாத்திரத்தில் பல அடுக்குகள் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி இயக்குநர் உணர்வுப்பூர்வமாக இந்த கதையில் பேசியுள்ளார். 


பெண்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படையாகப் பேசுவதற்கு தடையாக இருக்கும் ஆணாதிக்கம், சமத்துவத்திற்கான அவர்களின் மனவேதனை, தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான உரிமை ஆகிய அனைத்தும் உணர்வுப்பூர்வமாக படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புறசூழல் அழுத்தம் காரணமாகத் திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலியும் இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


தனது சக நடிகர்களான ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோரின் நடிப்பையும் கீர்த்தி சுரேஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். “என்னுடன் நடித்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகிய இருவரும் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் முழு கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர். ஒரு நடிகர் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கும்போதுதான் அத்தகைய திறமையான நடிப்பு வெளிப்படும். அவர்களுக்கு கிடைத்து வரும் அனைத்து பாராட்டுகளுக்கும் அவர்கள் முழுமையாகத் தகுதியானவர்கள் என்று நான் மனதார நம்புகிறேன். நிச்சயம் பெரிய உயரம் அடைவார்கள். இந்தக் கதையை தயாரிக்க துணிச்சலுடன் முன்வந்த தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி” என்றார்.


கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கியுள்ளன. சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சரவணன் சந்திரன் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பவன் நரேந்திரா நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 


வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட். விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த ஷிவ் பண்டிட், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியான ‘சிக்மா’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வின்சென்ட் என்ற கிரே ஷேட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிவ் பண்டிட், ஆக்‌ஷன்–அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் த்ரில்லருக்கு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளார். 


இதுகுறித்து ஷிவ் பண்டிட் பகிர்ந்து கொண்டதாவது, “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். 2002 ஆம் ஆண்டு முதன்முதலில் கேமரா முன்பு நின்றேன். ஆனால் நடிப்பு மீதான எனது பயணம் உண்மையில் நான் ஒன்பது வயதாக இருந்தபோதே தொடங்கிவிட்டது. நாடகம், நாடகப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் நடிப்பைக் கற்றுக்கொண்டேன். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றினே. அந்த அனுபவம்தான் குரல் ஏற்ற இறக்கம் மற்றும் தகவல் தொடர்பு குறித்து எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. நான் ஒருபோதும் மெயின்ஸ்ட்ரீம் நடிகராக வருவேன் என்று நினைத்ததில்லை. ஆனால், பிஜாய் நம்பியார் இயக்கத்தில், அனுராக் காஷ்யப் தயாரித்த ‘ஷைத்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். அந்தப் படத்திற்காக ஃபிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டேன்.


அதன்பிறகு பல திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்தேன். ‘லீலை’தான் எனது முதல் தமிழ் திரைப்படம். அந்தப் படம் வெளியான நேரத்தில் பெரிய அளவில் திரையரங்க வெளியீடு கிடைக்கவில்லை என்றாலும், எனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் அந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்கள் அந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையைப் பாராட்டினர். இன்றும் ‘லீலை’ திரைப்படத்திற்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால், தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பது உற்சாகமாக உள்ளது” என்றார்.


மேலும் அவர் கூறுகையில், “சமூக வலைதளங்களில், குறிப்பாக ‘லீலை’ மற்றும் நான் நடித்த மற்ற படங்கள் தொடர்பாக என்னைப் பற்றி உருவாகியிருந்த கவனத்தை ஜேசன் சஞ்சய் கவனித்திருக்கிறார். ‘சிக்மா’ படத்தில் என்னை நடிக்க வைப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவர் நினைத்துள்ளார். அப்படித்தான் கிரே ஷேட் கொண்ட வின்சென்ட் கதாபாத்திரம் என்னிடம் வந்தது. ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருபவன் வின்செண்ட். தனது நண்பர் எழில் மூலமாக சில சட்டவிரோத நடவடிக்கைகளில் அவன் ஈடுபடுகிறான். இந்த சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் மிகவும் விரும்பி நடித்தேன். ‘சிக்மா’ விறுவிறுப்பான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் திரைப்படம். இதில் நடித்ததில் எனக்கு பெருமை. ஜேசன் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை இந்தப் படத்திற்காக கொடு்த்திருக்கிறார். அவர் ஒரு மிகச் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட! ஜேசன் இப்போது எனக்கு குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிட்டார். வின்சென்ட் கதாபாத்திரத்தில் என்னை நம்பி நடிக்க வைத்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சந்தீப் கிஷன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் பணியாற்றியது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார். 


அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் திரைப்படமான ‘சிக்மா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் மற்றும் கிரண் கொண்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சஞ்சீவ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

 



மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது.


தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.


படக்குழுவினரின் ஏற்பாட்டில் நடுக்கடலுக்குச் சென்ற மீனவர்கள், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். கடலின் நடுவே மீனவர்களின் கைகளில் படத்தின் போஸ்டர் வெளியான இந்த நிகழ்வு,வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது.


இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, அமுதவாணன், அப்புகுட்டி, திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தை சீயோன் ராஜா இயக்கியுள்ளார். ராஜா மற்றும் பாலா இசையமைத்துள்ளனர்.


‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.


 


இன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் திரு. சேரன், பொதுச்செயலாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு. R. சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு. சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் இயக்குநர் திரு. KBB நவீன் ஆகியோர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்தனர்.


அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், ரூபாய் ஒரு லட்சம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார்.

 



Actor Suriya has sent heartfelt congratulatory notes to Mandaadi director Mathimaaran Pugazhendhi and producer Elred Kumar, appreciating the film and its success.


In his note to Elred Kumar, Suriya expressed his respect and admiration for the producer’s belief in Mandaadi. He acknowledged the vision and courage it takes to back a project like the film, adding that its success was truly well deserved. He also extended his warm congratulations to Elred Kumar and the entire team.


Writing to director Mathimaaran, Suriya praised Mandaadi as an amazing entertainer. Though he watched the film later in its theatrical run, he enjoyed experiencing it in theatres with the audience on its 23rd day, amid whistles and applause. He appreciated the film’s writing and the craft behind it, and said he was very happy for the director.


Mandaadi continues to draw audiences to theatres. On its 253rd day, the film is playing to house-full shows, extending its successful theatrical run. Suriya’s personal notes offer a special recognition of the film’s creative team and the audience response.


Directed by Mathimaaran Pugazhendhi and produced by Elred Kumar under the RS Infotainment banner, Mandaadi stars Soori in the lead role, alongside Sathyaraj, Suhas, Ravindra, Mahina, Mithun and Kirthika.



தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும்..... தொடர்ந்து வெற்றி படங்களை தமிழிலும் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.‌


'சில நேரங்களில் சில மனிதர்கள்' 'பாம்- Bomb' படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நாசர்- ரெஜினா கசாண்ட்ரா - ரமேஷ் திலக்- ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். ஹரிஹரன் ராஜூ கதை எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு *ஹெஷாம் அப்துல் வஹாப்* இசையமைக்கிறார். கலை இயக்கத்தை கே. மனோஜ் குமார் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்கிறார்.

 

ட்ராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ்- நவீன் யெர்னேனி & ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழு பிரத்யேக காணொளியாக வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌


லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் 'குட் பேட் அக்லி', 'டியூட்', 'மொத ராத்திரி' ஆகிய வெற்றி பெற்ற படங்களை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் புதிய கூட்டணி - இயக்குநர் விஷால் வெங்கட் - நாசர் - ரெஜினா கசாண்ட்ரா- ரமேஷ் திலக் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால்..... இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் அதிகரித்திருக்கிறது. மேலும் படத்தின் டைட்டில் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 


காமராஜ்' திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில்,தியாகச்சுடர், பெருந்தலைவர் காமராஜரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாளை  முன்னிட்டு  காமராஜ் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான A.J.பாலகிருஷ்ணன் சார்பில் தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது நினைவு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இவ்விழாவினில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் கலந்துகொண்டு பெருந்தலைவர் காமராஜர் 'பொற்கால ஆட்சியின் சாதனைகள்' மற்றும் காமராஜரின் உதவியாளர் திரு. C.P.S.வைரவன் எழுதிய 'காமராஜருடன் கால் நூற்றாண்டு' ஆகிய நூல்கள் இணைந்த புத்தகத்தை வெளியிட்டார்.


 இவ்விழாவினில் பேசிய இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன்...


இன்றைக்கு பெருந்தலைவரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாள். இது ஒரு வேதனையான நாள் அவர் இறந்தது. இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் அவர் வாழ்ந்த இந்த வீடு சிதைக்கப்பட்டுள்ளது, சொல்லப்போனால் அவருடைய அடையாளங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு, அவர் காலத்தில் இருந்த விளக்குகள் அனைத்தும் எடுத்து வீசப்பட்டு, இது ஒரு ஆடம்பரமான ஜமீன்தாரின் பங்களா போன்று உருவாக்கப்பட்டுள்ளது, இனி வரும் சமுதாயம் இந்த வீட்டை பார்க்கும் போது காமராஜர் ஏதோ பண்ணையார் ஜமீன்தார் என்று நினைக்கின்ற வகையில் இதனுடைய தலங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. இது சரியான நிபுணர்கள் துணை கொண்டு மீண்டும் பெருந்தலைவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்ததைப் போன்று சீரமைக்கப்பட வேண்டும் இப்படி சீரமைக்கப்பட்டால் தான் இதனுடைய மாண்பு சிறக்கும், இல்லையெனில் வருங்கால தலைமுறையினர் இதனை கண்டு அவர்கள் மிஸ்லீடு செய்யப்படுவார்கள் இன்று வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் இது குறித்து அவரிடம் வலியுறுத்த இருக்கிறோம் என்றார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்.


நிகழ்ச்சியை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2026" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) இன்று (அக்டோபர் 03, 2026) துவங்கியது.

இப்போட்டியை சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திரு K.சுரேஷ், பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது

சிறப்பு விருந்தினர்கள் நடிகர் சூரி, நடிகர் விஜய் ஆண்டனி, A.மயில்வாகனன் IPS (Joint Cheif Executive Oficer, SDAT Special Officer - Mission Olympic 2036), சுர்ய பிரகாஷ் M.P (Executive Director, Fon Fore Cahemlels Group), தொழிலதிபர் S.N.ஜெயமுருகன் (SNJ Group of Companies) ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

 


ஷஷாங் எலெட்டி (Shashank Yeleti) இயக்கத்தில், ஃபகத் பாசில் (Fahadh Faasil) நேரடி தெலுங்குத் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, தமிழிலும் வெளியாகியுள்ள ஒரு ஃபேண்டஸி காமெடி-டிராமா திரைப்படம் 'Don't Trouble The Trouble'

மந்திரவாதியான சூரி (ஃபகத் பாசில்), எதிர்பாராதவிதமாக ஒரு மந்திரக் கட்டளையைப் பயன்படுத்தி திவ்யா (சாரா பலேகர்) என்ற சிறுமியை மறையச் செய்கிறார். ஆனால், அந்தச் சிறுமி உண்மையில் ஒரு மேஜிக் தேவதை (Genie) ஆவாள். அதன் பிறகு அவளது அசாத்தியமான சக்திகளால் ஏற்படும் விசித்திரமான நிகழ்வுகளும், அவர்களுக்கிடையே மலரும் அழகான நட்புமே படத்தின் கதை.


எப்போதுமே தனது தனித்துவமான நடிப்பால் கவரும் ஃபகத் பாசில், இந்த ஃபேண்டஸி கதையிலும் தனது அசாத்தியமான நகைச்சுவை மற்றும் எமோஷனல் நடிப்பால் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். சிறுமியாக வரும் சாரா பலேகர் (Ssara Palekar) மிகவும் எதார்த்தமான மற்றும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளார்.



படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாக, சுவாரசியமான ஃபேண்டஸி காட்சிகளுடனும், சிறந்த நகைச்சுவையுடனும் நகர்கிறது.



கீரவாணியின் மகன் கால பைரவாவின் (Kaala Bhairava) பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு நல்ல பலம்.



'Don't Trouble The Trouble' என்பது குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கக்கூடிய ஒரு அழகான ஃபேண்டஸி டிராமா.  ஃபகத் பாசிலின் நடிப்புக்காகவும், அழகான மேஜிக் காட்சிகளுக்காகவும் கண்டிப்பாக திரையரங்குகளில்  பார்க்கலாம்.

 


நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழு இன்று டைட்டில் வெளியீட்டு கிளிம்ப்ஸை வெளியிட்டது. இந்தப் படம் முற்றிலும் தனித்துவமான கருத்துருவை தாங்கி வருகிறது.


இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் ‘ Telumil ’ படைப்பு.


கிளிம்ப்ஸ் ஒரு நகைச்சுவையான குறிப்புடன் தொடங்குகிறது, அதில் ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை ரசிக்கிறது, அதே நேரத்தில் தமிழ் கதாபாத்திரம் சாம்பாருடன் இட்லியை ரசிக்கிறது. 


எந்த உணவு சிறந்தது என இரண்டு கதாபாத்திரங்களும் வாக்குவாதத்துக்குள் செல்ல, இன்னொரு நபர் குறுக்கிட்டு இருவர் ருசிப்பதைக் காட்டிலும், அதிசுவை  காம்பினேஷன் ஒன்று காத்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் போது காட்சியும், கொண்டாட்டமும் வேறு நிலைக்குச் செல்கிறது.


யோகி பாபு மற்றும் சத்யாவின் அறிமுகம் அதைத் தொடர்ந்து வருகிறது. இருவரும்  வெள்ளை நிற உடையில் தோன்றுகின்றனர். பின்னர் இயக்குநர் அவர்களின் கதையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளிக்கிறார். அது காதலுடன் க்ரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை என்று வெளிப்படுத்துகிறார். அத்துடன், ‘கோல்டன் பாக்கியம்’ கிளிம்ப்ஸ் டைட்டில் வெளியீடு நிறைவடைகிறது .


இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு காமெடி நடிகர்களை ஒரு பைலிங்குவல் கிராஸ்ஓவர் என்டர்டெய்னருக்காக ஒன்றிணைத்து இயக்குநர் பவன் பாசம்செட்டி தனித்துவமான ஒன்றை முயற்சித்துள்ளார். கூடுதல் சுவாரஸ்யமாக, தெலுங்கு நடிகர் சத்யா தமிழ் பேசுவதையும், தமிழ் நட்சத்திரம் யோகி பாபு தெலுங்கு பேசுவதையும் காண முடிகிறது. கிளிம்ப்ஸில், காட்சிகளின் பின்னணியில் பிரம்மாண்டமான மல்டி-ஸ்டாரர் கட்அவுட்களுடன், அவர்களை ஒரு மிகப்பெரிய தெலுங்கு - தமிழ் காம்பினேஷனாக முன்னிறுத்துகிறது. 


கிளிம்ப்ஸைப் பார்க்கும்போது, படம் முன்னணி நடிகர்களின் தனித்துவமான கெமிஸ்ட்ரியை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான என்டர்டெய்னராக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.


யோகி பாபு  மற்றும்  சத்யா  இருவரும் படத்தின் மிகப்பெரிய நகைச்சுவை பலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் தனித்துவமான காமெடி ஸ்டைல் மற்றும் அபாரமான டைமிங் முதல் முறையாக இந்த படத்தில் ஒன்றிணைகிறது. 


ஜெயஸ்ரீ (Jayashree) மற்றும் அதிராஜ் (Athiraj) கதாநாயகிகளாக நடிக்க, வென்னேல கிஷோர் (Vennela Kishore), சுதர்சன் (Sudharshan), கிஷோர் திருமலா(Kishore Tirumala), ரோகிணி(Rohini), தனிகெள்ளா பரணி (Tanikella Bharani) மற்றும் சுனில் ரெட்டி (Sunil Reddy)  ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் திறமையான தொழில்நுட்பக் குழுவும் இடம் பெற்றுள்ளது. மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் பப்லு அஜு (Bablu Aju)  ஒளிப்பதிவை கையாள, பவன் CH (Pawan CH) இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சிவா காமேஷ் D (Siva Kamesh D) கவனிக்க, எடிட்டிங்கை ரவி தேஜா கிரிஜாலா (Ravi Teja Girijala) மேற்பார்வையிடுகிறார்.


அறிவிப்புக்கு மற்றொரு நகைச்சுவைத் தொடுதலைச் சேர்க்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் படத்தை சங்கராந்தி வெளியீடாக அறிவித்து, பின்னர் சங்கராந்தியை அடித்துவிட்டு, இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். 


படத்தின் நடிகர்கள்: யோகி பாபு,சத்யா,ஜெயஸ்ரீ, அதிராஜ், வென்னேல கிஷோர், சுதர்சன், கிஷோர் திருமலா, ரோகிணி, தனிகெள்ளா பரணி மற்றும் சுனில் ரெட்டி


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம்: பவன் பாசம்செட்டி

தயாரிப்பாளர்கள்: நாகார்ஜுனா ரெட்டி & பவன் பாசம்செட்டி

பேனர்கள்: ட்ரீம் மூவி மேக்கர்ஸ், நயவாயு சித்ராலு

இசை: பவன் CH,நிதிஷ் ஜான்

ஒளிப்பதிவு: பப்லு அஜு

எடிட்டர்: ரவிதேஜா கிரிஜாலா

தயாரிப்பு வடிவமைப்பு : சிவா காமேஷ் D

மக்கள் தொடர்பு: யுவராஜ்


*Yogi Babu, Satya ,Pawan Basamsetti, Nagarjuna Reddy, Dream Movie Makers, Nayavayu Chitralu’s Telumil Film Titled Golden Bhagyam, Title Glimpse Promises A Fun-Filled Ride*


Comical powerhouses Yogi Babu and Satya are coming together for a new comedy entertainer, with Rangabali fame Pawan Basamsetti directing the film. Nagarjuna Reddy and Pawan Basamsetti are jointly producing the project under the banners of Dream Movie Makers and Nayavayu Chitralu. The film marks the maiden production venture of both banners. The team today unveiled the title reveal glimpse, offering a glimpse into the unique concept.

 

Interestingly, this is not a conventional Telugu or Tamil film, but a ‘Telumil’ project that brings together Telugu and Tamil languages along with popular actors from both industries. The glimpse begins on a humorous note, with a Telugu man and a Tamil man enjoying their respective favourite foods while proudly claiming that their cuisine is the best. The Telugu character relishes biryani with a cool drink, while the Tamil character enjoys idli with sambar. Their light-hearted argument takes a fun turn when another person interrupts them and points out that there is a much bigger combination in store.

 

That leads to the stylish introduction of Yogi Babu and Satya who appear in traditional white-and-white attire. The director then gives them an intriguing description of their story, revealing that it blends love with crime and action elements. The glimpse concludes with the title reveal, Golden Bhagyam.

 

Director Pawan Basamsetti attempts something distinctive by bringing together two of the most popular comedy actors from Telugu and Tamil cinema for a bilingual crossover entertainer. Adding to the fun, Telugu actor Satya is seen speaking Tamil, while Tamil star Yogi Babu speaks Telugu. The glimpse also playfully presents them as a major Telugu-Tamil combination, with massive multi-starrer cutouts featured in the backdrop. Going by the glimpse, the film promises to be an out-and-out entertainer built around the unique chemistry of its lead actors.

 

Yogi Babu and Satya are expected to be the film’s biggest source of humour, with their individual comic styles and impeccable timing coming together for the first time in this setting. Jayashree and Athiraj play the female leads, while Vennela Kishore, Sudharshan, Kishore Tirumala, Rohini, Tanikella Bharani and Sunil Reddy are part of the prominent supporting cast.

 

The film also features an accomplished technical crew. Malayalam cinema cinematographer Bablu Aju is handling the visuals, while Pawan CH is composing the music. Kamesh is in charge of the production design, with Ravi Teja Girijala overseeing the editing.

 

Adding another humorous touch to the announcement, the makers initially announced the film for a Sankranthi release, only to move it beyond Sankranthi and eventually announce its arrival simply within the year. The playful announcement perfectly matches the fun spirit of the project.

 

Cast: Yogi Babu,Satya,Jayashree, Athiraj, Vennela Kishore, Sudharshan, Kishore Tirumala, Rohini, Tanikella Bharani, and Sunil Reddy

 

Technical Crew:


Writer, Director: Pawan Basamsetti

Producers: Nagarjuna Reddy & Pawan Basamsetti

Banners: Dream Movie Makers, Nayavayu Chitralu

Music: Pawan CH,Nitish John

DOP: Bablu Aju

Editor: Raviteja Girijala

Art director: Siva Kamesh D

PRO: Yuvraaj


https://www.youtube.com/watch?v=GPNUnX1Pzew

 


அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் அன்பில் அவன்.

சூர்யா மற்றும் இயல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு முன்பு இருந்த கனவுகளையும், திருமணத்திற்குப் பிறகு வந்த பொறுப்புகளையும் சமாளிக்க முடியாமல் இருவருக்கும் இடையே சில இடைவெளிகள் உருவாகின்றன. இருந்தாலும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற சூர்யாவின் எண்ணம் கதையை முன்னோக்கி நகர்த்துகிறது. இருவரும் அமைதியான இடத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்க நினைக்கும் தருணங்களில் படம் ஒரு அழகான குடும்பக் கதையாகவே தெரிகிறது. கணவன்–மனைவிக்குள் நடக்கும் சிறிய சண்டைகள், அன்பு, புரிதல் ஆகியவை இயல்பாக எழுதப்பட்டுள்ளன.


அசோக் செல்வன் இந்தக் கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாகப் பொருந்துகிறார். மனைவியிடம் அன்பாக இருப்பது, சில விஷயங்களில் தடுமாறுவது, வாழ்க்கையை சரி செய்ய முயற்சிப்பது என ஒரு சாதாரண இளைஞனின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்துகிறார். பிரீத்தி முகுந்தனும் இயல் கதாபாத்திரத்திற்கு தேவையான மென்மையையும் பிடிவாதத்தையும் கலந்து நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படத்தின் முதல் பகுதியில் நன்றாக வேலை செய்கிறது. குறிப்பாக திருமண வாழ்க்கையில் வரும் சின்னச் சின்ன பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் காட்டியிருப்பது படத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.


ஆனால் கதையின் இரண்டாம் பகுதி  கதாபாத்திரங்கள் எதிர்பாராத ஆபத்தில் சிக்கிக் கொள்ள, படம் திடீரென ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் பக்கம் நகர்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக படம் ஓரளவு சிறப்பாக இருக்கிறது. மலைப்பகுதி மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள காட்சிகள் கதைக்கு தேவையான சூழலை உருவாக்குகின்றன. ஒளிப்பதிவு குறிப்பாக காதல் காட்சிகளில் அழகாக இருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசை படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு துணையாக அமைந்துள்ளது. பின்னணி இசை பதற்றமான காட்சிகளிலும் தேவையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 


இயக்குநர் சொல்ல நினைத்திருக்கும் மையக் கருத்து மிகவும் எளிமையானது நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்காக நாம் எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறோம்? இந்த எண்ணம் படத்தின் முதல் பாதியில் நன்றாக வெளிப்படுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் எதிரிகளை சமாளிப்பது மற்றும் உயிர் தப்புவது என்ற த்ரில்லர் அம்சத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  


மொத்தத்தில், அன்பில் அவன் ஒரு நல்ல காதல் மற்றும் திருமண வாழ்க்கைக் கதையாகத் தொடங்கி, பின்னர் ஆக்‌ஷன் த்ரில்லராக மாறும் திரைப்படம். காதல், உறவு மற்றும் குடும்ப உணர்வுகளுக்காக பார்க்க நினைப்பவர்களுக்கு படத்தின் முதல் பகுதி நெருக்கமாக இருக்கும்; ஆக்‌ஷன் அம்சத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இரண்டாம் பகுதி சில சுவாரஸ்யமான தருணங்களை வழங்குகிறது.


 


வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று, திறமையான நடிப்பை திரையில் கொடுப்பவர்களே சிறந்த கலைஞர்களாக உருவாகிறார்கள். அந்த வகையில் சவாலான பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் அவரது நடிப்பை ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.


இது குறித்து ரிஷிகாந்த் பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கு அன்பும் ஆதரவு நான் எதிர்பார்க்காத ஆசீர்வாதம். உலகளவில் பார்வையாளர்கள் இந்தப் படத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் நாங்கள் அனைவரும் இப்படத்தை உருவாக்கினோம். அதே நேரத்தில், பாராட்டுகளை எதிர்பார்க்கும்போது விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, பரிசோதனை முயற்சிகளைக் கொண்ட திரைப்படங்களுக்கு இது மிகவும் பொருந்தும்.


ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தனது சிறப்பான திரைக்கதை மூலம் படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் எழுதப்பட்டிருந்தது. அதுவே பார்வையாளர்கள் படத்துடன் தங்களை உடனடியாக தொடர்புப்படுத்திக் கொள்ள முக்கிய காரணம் எனக் கருதுகிறேன். அனைத்து தரப்பினரும் படத்தை விரும்பியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெண்கள் என்னைப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.


படத்தில் சகநடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்து அவர் மேலும் பேசியதாவது, “உண்மையைச் சொன்னால், இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல. சனந்த் ஏற்ற கதாபாத்திரமும், அவரது சிறப்பான நடிப்பும்தான் என்னுடைய கதாபாத்திரத்தை மேலும் உயர்த்தியது. கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் இந்தப் படத்தின் மையம். அவரது கதாபாத்திரம் தீர்க்கப்படாத வலி, பாசம் மற்றும் ஏக்கத்தைப் பற்றி ஆழமாகப் பேசுகிறது. அவருக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் அவர் முழுமையாகத் தகுதியானவர். எனவே, எனக்குக் கிடைத்து வரும் அனைத்து பாராட்டுகளையும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கே நான் சமர்ப்பிக்கிறேன்.


இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு அவர்களின் பங்களிப்பு இந்தப் படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. அவரது காட்சியமைப்புகள், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.‘டோரதி’ ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டி என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வாழ்க்கையை மாற்றக்கூடிய அனுபவம் மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் கண்ணோட்டத்தையும் மாற்றும்” என்றார்.


கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கியுள்ளன. சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சரவணன் சந்திரன் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பவன் நரேந்திரா நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 


லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. 


நடிகை மகாலக்‌ஷ்மி, " இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை".


கலை இயக்குநர் பெஞ்சமின், "சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ அதை தான் படமாக்கியிருக்கிறார். நானும் என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய அணியினருக்கு நன்றி". 


நடிகர் அன்புதாசன், " இந்தப் படத்தில் கேஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி".


நடிகர் ஷிவ் பண்டிட், "கடந்த ஒன்றரை வருடமாக எங்களுடைய உழைப்பிற்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனத்திற்கு நன்றி". 


நடிகை ஃபரியா அப்துல்லா, "ரசிகர்களுடன் படம் பார்த்தது நல்ல அனுபவம். உங்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்". 


லைகா புரொடக்சன்ஸ், தமிழ்குமரன், "மிகவும் கஷ்டப்பட்டு சஞ்சய் இந்தப் படம் எடுத்துருக்கிறார். இனி, இது உங்களுடைய படம். குடும்பமாக இணைந்து நல்ல படம் கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவு இருக்கிறது. லைகா நிறுவனம் மூலம் சஞ்சயை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்". 


இயக்குநர் சஞ்சய், " கடந்த மூன்று வருடங்களாக என்னுடன் பயணம் செய்த லைகா நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிக்மா படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர்".



பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘மரகத நாணயம்’ வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் இணைந்திருக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய வெற்றி திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், ‘மரகத நாணயம்’ திரைப்படமும் ஒன்று. படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆக இருக்கும் நிலையில், ’மரகத நாணயம்2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. தற்போது, இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.


கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்றது. தனது கதாபாத்திர தேர்வின் மூலம் பல மொழிகளில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆதிக்கும், இப்படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே, ரசிகர்களும் திரையுலக வட்டாரமும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன், இந்த இரண்டாம் பாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றியுள்ளார்.


பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணிஷ் சிங்கால், துர்காராம் செளத்ரி, தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இசையமைப்பாளர் – திபு நினன் தாமஸ், 

ஒளிப்பதிவாளர்கள் – தீபக் மேனன் மற்றும் பி.வி. சங்கர், 

கலை இயக்குநர் – என்.கே. ராகுல், 

படத்தொகுப்பாளர் – திருமலை ராஜன் ஆர்., 

வசனகர்த்தா – ராஜேஷ் கண்ணன், 

சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்

 


லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'மிஸ்டர் பாரத்' திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் எதிர்பார்ப்புக்குரிய பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உரிய இடமும் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

சிரிப்பு, மகிழ்ச்சி என நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக 'மிஸ்டர் பாரத்' உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு ஆவலுடன் காத்திருக்கிறது.


லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து ஜேசன் சஞ்சய் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். 

ஜேசன் சஞ்சய பகிர்ந்து கொண்டதாவது, ”’சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு குழுவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்.

அறிமுக இயக்குநராக என் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்களை முன்னின்று வழிநடத்திய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள தமிழ்குமரன் அவர்களுக்கும் எனது நன்றி. என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து அர்ப்பணிப்புடன் நடித்த சந்தீப் ப்ரோ மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகிய இருவருக்கும் நன்றி. நடிகர்கள் சம்பத், ராஜு மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. 

எந்தவொரு இயக்குநருக்கும், குறிப்பாக அறிமுக இயக்குநருக்கு அவரது சிந்தனையுடன் ஒத்துப்போகும் ஒளிப்பதிவாளர் அமைவது மிகப்பெரிய வரம். அந்த வகையில் கிருஷ்ணன் வசந்த் அவர்களுடன் பணியாற்றியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவரது காட்சிப் பார்வையும் புரிதலும் சிக்மா திரைப்படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. அதேபோல், எங்கள் படத்தின் எடிட்டராக அனுபவமும் புரிதலும் கொண்ட பிரவீன் கே.எல். அமைந்ததும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம். இசையமைப்பாளர் தமனின் இசையும், அதிரடியான பீட்டும் திரைப்படத்திற்கு மேலும் உற்சாகமளித்துள்ளது. 

ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் சிக்மா திரைப்படம் சாத்தியமாகியிருக்காது. குறிப்பாக, எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுப்ரமணியன் நாராயணன் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் சஞ்சீவ் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. எங்களது ஆக்‌ஷன் இயக்குநர்களான வெங்கட் மற்றும் சில்வா சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்தின் மையக் கதைக்களத்திற்கு மிகப்பெரிய ஆற்றலையும், சுவாரஸ்யத்தையும் சேர்த்துள்ளனர். திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் தோற்றத்திற்கும் உணர்வுக்கும் ஏற்ற வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சினிமா என்பது பொழுதுபோக்குக்கான ஒரு ஊடகம். அந்த வகையில், சிக்மா திரைப்படத்தை சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவமாக உருவாக்குவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். பிராந்திய மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து, பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களையும் சென்றடையும் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றியுள்ளோம். ஒரு படைப்பின் மீதான நம்பிக்கை எப்போதும் பணிவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடனும், பணிவுடனும், அக்டோபர் 2 ஆம் தேதி சிக்மா திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு, எங்களுடன் இந்தப் பயணத்தை அனுபவிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சினிமா எனும் பிரம்மாண்டமான திறமைக் கடலில், மற்றொரு அறிமுக இயக்குநராக நான் எனது பயணத்தைத் தொடங்குகிறேன். இந்தப் பயணத்தில், ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பும் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானவை. ’சிக்மா’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.

 

Pageviews