Sigma திரை விமர்சனம்

 


தமிழ்நாட்டின் முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'சிக்மா' (Sigma).


நாயகன் குரு (சந்தீப் கிஷன்) தன் தாயின் நினைவாக இருக்கும் ஒரு பழைய நூலகத்தை நடத்தி வருகிறார். ஆனால், ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் கடன் சுமையால் அதை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதே நேரத்தில், ஆந்திரா மாஃபியா தாதாவான சம்பத்தின் வெளிநாட்டு லாக்கரில் இருக்கும் 1,000 கோடி பணத்தைத் திறக்கும் வினோதமான சாவியும், சில வீடியோ ஆதாரங்கள் அடங்கிய பென்-டிரைவும் தற்செயலாக குருவின் கைகளில் கிடைக்கிறது. இதை வைத்து குருவும் அவரது நண்பர்களும் மாஃபியா கும்பலிடம் இருந்து பணத்தைக் கைப்பற்றத் திட்டம் போடுகிறார்கள். இறுதியில் ஆபத்துகளில் இருந்து தப்பித்து அவர்கள் பணத்தை அடைந்தார்களா இல்லையா என்பதே கதை.


சந்தீப் கிஷன் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனாகவும், ஆக்ஷன் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஃபரியா அப்துல்லா தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். ராஜு சுந்தரம் அவ்வப்போது ஆறுதல் அளிக்கிறார். அன்புதாசன் கேரக்டர் நன்றாக வொர்க்காகியுள்ளது. சம்பத் வழக்கமான வில்லத்தனத்தைக் காட்டியுள்ளார்.ஏனைய கேரக்டர்களில் வரும் ஷிவ் பண்டிட், உள்ளிட்ட யாவரும் ஒகே மார்க் வாங்குகிறார்கள்


கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பிரம்மாண்டமான மற்றும் ரிச்சான தோற்றத்தைத் தருகிறது. தமனின் பின்னணி படத்திற்கு பலம். கே. எல். பிரவீனின் படத்தொகுப்பு (Editing) விறுவிறுப்பைக் கூட்ட உதவுகிறது. மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் நடக்கும் சண்டைக் காட்சி போன்ற சில ஆக்ஷன் பிளாக்குகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய், ஒரு பெரிய பட்ஜெட் படத்தை நேர்த்தியாகக் கையாண்டு, காட்சிகளை ஃபிரேம் செய்ததில் தனது திறமையை நிரூபித்துள்ளார். எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஒரு வழக்கமான ஆக்ஷன் த்ரில்லர் படத்தை பார்க்க விரும்புபவர்கள் தியேட்டரில் கண்டிப்பாக பார்க்கலாம்.


0 comments:

Pageviews