Breakfast திரை விமர்சனம்

கிருத்திக் மோகன், அமிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 3 மாதங்கள் கடந்த நிலையில் இருவரும் விவாகத்து கேட்டு நீதிமன்றம் செல்கிறார்கள். நீதிபதி இவர்களை ஆலோசனைக்காக மருத்துவரிடம் அனுப்பி வைக்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் கஸ்தூரி இவர்களிடம் பேச இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இதனையடுத்து தொழிலதிபர் மகளுடைய கதையை சொல்ல கஸ்தூரி தொடங்குகிறார்.

பிரபல பிஸ்கட் கம்பெனியின் நிறுவனர் சம்பத் ராஜின் மகள் நாயகி ரோஸ்மின், கம்பெனியை திறமையாக நிர்வகித்து வருகிறார். நாயகன் ராணவ் வேலையில்லாமல் இருக்க நாயகி தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார்.

இதனையடுத்து இருவரும் காதலிக்க, இவர்களது காதலுக்கு நாயகியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவை திருமணம் செய்து கொள்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ் அறிமுக படம் போல் இல்லாமல் நடிப்பில் மிரட்டிருக்கிறார். நடிகை ரோஸ்மின் அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார். 

நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சம்பத் ராஜ், மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா, நண்பராக வரும் ரவி மரியான் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கதற்கு இனிமை. எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பதை மையக்கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா , இன்றைய சோசியல் மீடியா காலகட்டத்தில் அவசர காதல், கல்யாணம் , விவாகரத்து என்று வாழ்க்கை ஓடி கொண்டு இருக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். 

0 comments:

Pageviews