உண்மையை உடைத்த ரீனா! ரதியின் பதில் என்ன? விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஹார்ட் பீட் சீரிஸ்


ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் 4 புதிய எபிசோடுகள்!

‘ஹார்ட் பீட்’ சீரிஸ் ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கி வருகிறது. 

மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்கு கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தாந்தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள்.

இந்த சூழ் நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன? 

ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள்
காப்பகத்தில் விட்டுச் சென்றாள்?

ரீனாவை மகளாக ஏற்றுகொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா?

மேலான கேள்விகளுக்கு ரீனாவைப் போன்று ரசிகர்களும் பதிலை எதிர்பார்த்துள்ளனர். இந்த ஆச்சரியமான டிவிஸ்ட், அடுத்த வார எபிஸோடை நோக்கி, ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

மேலும் பல திருப்பங்களுடன் , ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று " ஹார்ட் பீட்" சீரிஸின் 4 புதிய எபிசோட்களை , டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தளத்தில் தவறாமல் பாருங்கள்

0 comments:

Pageviews