அழகிய கண்ணே படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் பிரபு சாலமன் !

 


பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.


அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இயக்குனர் விஜயகுமார் பிரபுசாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு பிரபு சாலமனுக்கு கதையும் , கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப்போய் இந்த படத்தில் நடிகராக முதன் முதலாக நடிக்கிறார் .  


நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன் நடிக்கிறார் .


தொழில்நுட்பக்குழு :

இயக்கம்  - R.விஜயகுமார்

தயாரிப்பு - சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)

பாடல்கள் - வைரமுத்து

இசை - N.R.ரகுநந்தன்

ஒளிப்பதிவு - A.R.அசோக் குமார்

படத்தொகுப்பு - சங்கத் தமிழன்

நடனம் - ராதிகா


சண்டை பயிற்சி : மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா .

தயாரிப்பு மேற்பார்வை - இளையராஜா செல்வம்

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்

0 comments:

Pageviews