ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும் இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ்..!

 


ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார்.

கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்பட மாக உருவாகும் இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சரண் சண்முகம்  மேற்கொள்கிறார். இவர் கிஷோர் மற்றும் லெனின் அவர்களிடம் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் துவங்குகிறது ..

1 comments:

Lovely blog you havee here

24 May 2023 at 19:41 comment-delete

Pageviews