Nalla Padam திரை விமர்சனம்

 

பிரபுராம் சி இயக்கத்தில், டாக்டர் ஏ. ஹரீஷ், தனலட்சுமி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு சமூகப் பொறுப்புள்ள நகைச்சுவை  திரைப்படம் 'நல்ல படம்' (Nalla Padam).


மதுக்கூட உரிமையாளரான குமரன் (டாக்டர் ஏ. ஹரீஷ்) தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். நண்பர்களுடன் சேர்ந்து 'மதுபிரியர் மறுமலர்ச்சி சங்கம்' என்ற பெயரில் ஒரு குழுவை வைத்துக்கொண்டு எப்போதும் குடி, கும்மாளம் என பொழுதைக் கழிக்கிறார். அவனது தாய், தங்கை அமுதா மற்றும் காதலி (தனலட்சுமி) ஆகியோர் எவ்வளவோ முயன்றும் குமரனைத் திருத்த முடிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், எதிர்பாராதவிதமாக இந்தியாவில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மது கிடைக்காததால் குமரனின் வாழ்க்கையிலும், அவன் சார்ந்த சமூகத்திலும் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் என்ன? அதன் பிறகு மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் சூழல் வரும்போது, குமரன் பழையபடி மாறினாரா அல்லது திருந்தி நல்வாழ்வை வாழ்ந்தாரா என்பதை நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்துக்களுடன் விவரிக்கிறது மீதிக்கதை.


மொட்டை ராஜேந்திரன் மற்றும் நண்பர்களின் பங்களிப்புடன் நகரும் முதல் பாதியின் பல காட்சிகள் நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் அமைந்துள்ளன. இனியன் ஜே. ஹரீஷின் ஒளிப்பதிவு, முதல் பாதியின் கொண்டாட்டக் காட்சிகளையும், இரண்டாம் பாதியின் தீவிரத்தன்மையையும் கதையின் உணர்வுக்கு ஏற்பக் காட்சிப்படுத்தியுள்ளது


மதுப்பழக்கத்தின் தீமைகளையும், அது ஒரு மனிதனின் குடும்பத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் வணிக ரீதியான சினிமாவில் சொல்ல முயற்சித்த இயக்குநர் பிரபுராம் சி சமூக அக்கறை பாராட்டத்தக்கது. சமூகத்திற்குத் தேவையான ஒரு நல்ல மெசேஜை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பதால், குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கக்கூடிய 'நல்ல படமாகவே' இது அமைந்துள்ளது.

0 comments:

Pageviews