Titanic திரை விமர்சனம்

 

கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், காயத்ரி, ராகவ் விஜய் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் எம். ஜானகிராமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'டைட்டானிக்' 


படத்தின் கதைப்படி, ராகவ் விஜய் மாலை நடக்கும் தனது திருமணத்துக்காக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ரயிலில் செல்கிறார். அந்த பயணத்தில் கலையரசன், காளி வெங்கட் ஆகிய இருவரையும் சந்திக்க, மூன்று பேரும் பேசிப் பேசி நண்பர்களாக மாறுகிறார்கள். அவர்களின் காதல் வாழக்கையை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு தயாராக இருக்கும் ராகவ் விஜய், காதல் தோல்வியின் நினைவுகளுடன் வாழும் கலையரசன், காதலில் ஏமாற்றங்களை சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டு செட்டிலான காளி வெங்கட் ஆகிய இந்த மூவரின் நட்பும், அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுமே மீதிக்கதை.


கலையரசன், ஆனந்தி மற்றும் காளி வெங்கட் ஆகியோரின் இயல்பான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக காளி வெங்கட்டின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. ராகவ் விஜய் இந்த இரண்டு அனுபவ நடிகர்களுக்கு இணையாக ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். கெஸ்ட் ரோலில் ஆஷ்னா சவேரி, காயத்ரி, பாலாஜி மோகன் ஆகியோரும் ரசிக்க வைக்கிறார்கள். மதுமிதா, தேவதர்ஷினி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் படத்திற்கு வலு சேர்க்கின்றனர்.


நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதல் காட்சிகளுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. பாலு ஒளிப்பதிவில் ரயில் பயண காட்சிகளும், ஊட்டி, கோயமுத்தூர் காட்சிகளும் கலர்ஃபுல்லாக ரசிக்க வைக்கிறது. 


இயக்குநர் எம். ஜானகிராமன், முதல் படத்திலேயே மூன்று வெவ்வேறு காதல் அனுபவங்களை ஒரே பயணத்தின் வழியாக இணைக்க முயற்சி செய்திருக்கிறார். அதை ரொமாண்டி காமெடி படமாக சொல்லியிருப்பது இன்னும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் போய் பார்க்கலாம்.


0 comments:

Pageviews