ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புதிய ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது Hip Pop Tamizha New Album Song Release On February 14 Lovers Day

ஹிப் ஹாப்  தமிழா ஆதியின் “பொய் பொய் பொய்” ஆல்பம் பாடல் !!! 

நடிகர்,இசையமைப்பாளர்,இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில்,  சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. 

ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்”  எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றிச் செல்லும் பெண்ணின்  துரோகம், வலி, ஏமாற்றம்  என  காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல்.   துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளது. 

ராப் பாடகராக அறிமுகமாகி, இயக்குநர் நடிகராக வளர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து சுயாதீன ஆல்பம் பாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி  வருகிறார். “பொய் பொய் பொய்” பாடலை தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாக குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புதிய ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது 

0 comments:

Pageviews