Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ (HELLO) இசை ஆல்பத்தில் தெருக்குறல் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் கூல் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல், அறிவின் இசைப் பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது!


சமூக அக்கறை கொண்ட கருத்தாழமிக்க பாடல்கள், வலிமையான வரிகள் மற்றும் தனித்துவமான இசைப் படைப்புகள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள சுயாதீன தமிழ் இசைக் கலைஞர் தெருக்குறல் அறிவு, தனது புதிய இசை ஆல்பமான ‘ஹலோ’ (HELLO)  மூலம் முற்றிலும் மாறுபட்டதொரு களத்தில் பயணித்துள்ளார்.


‘HELLO’ பாடலை தெருக்குறள் அறிவு எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். ஒருவரை முதன்முதலில் சந்திக்கும் தருணத்தில் ஏற்படும் உற்சாகம், மெல்ல மலரும் காதல் உணர்வுகள், மனதுக்கு நெருக்கமான ஒருவரைக் கண்டறிவதால் ஏற்படும் மகிழ்ச்சி என காதலின் அழகான உணர்வுகளை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.


வாழ்க்கையில் மறக்க முடியாத பல உறவுகள் மிகவும் எளிமையான தருணங்களிலிருந்தே தொடங்குகின்றன. ஒரு சாதாரண வணக்கம், எதிர்பாராத சந்திப்பு அல்லது சில நிமிட உரையாடல் கூட அழகான காதல் கதையின் தொடக்கமாக மாறலாம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு ‘ஹலோ’ (HELLO) உருவாக்கப்பட்டுள்ளது.


‘HELLO’ பாடல் உருவான விதம் குறித்து தெருக்குறல் அறிவு கூறியதாவது:


“காதல் என்பது மனிதர்களை இணைக்கும் மிக அழகான உணர்வு. அவர்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும் காதல் அனைவரையும் இணைக்கிறது. ஒரு கலைஞனாக, வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளையும் அனுபவங்களையும் இசை பிரதிபலிக்க வேண்டும் என்று எப்போதும் நம்புகிறேன். என்னுடைய பல பாடல்கள் சமூகச் சிந்தனைகளையும், வாழ்க்கையின் யதார்த்தங்களையும் பேசியிருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு, அனைவருக்கும் நெருக்கமான ஒரு எளிமையான உணர்வை ‘ஹலோ’ (HELLO)  மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். சில நேரங்களில் ஒரு சிறிய வணக்கம் கூட அழகான உறவின் தொடக்கமாக மாறிவிடும். காதலில் விழும் தருணங்கள், அதனால் ஏற்படும் மகிழ்ச்சி, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகள் என அனைத்தையும் இந்தப் பாடல் கொண்டாடுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய காதல் கதையின் ஒரு சிறிய பகுதியையாவது இதில் கண்டடைவார்கள் என்று நம்புகிறேன்.”


இந்த இசை ஆல்பத்தில் தெருக்குறல் அறிவுடன் இணைந்து அஸ்வதி நடித்துள்ளார். இருவரின் திரைத் தோற்றமும், இயல்பான நடிப்பும் காதல் கதையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகின்றன.


இசையின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் காட்சிகளை வடிவமைத்து, அருள் கூல் இந்த ஆல்பத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். இயல்பான நடிப்பு, நெருக்கமான தருணங்கள் மற்றும் அழகான காட்சியமைப்புகள் மூலம் பாடலின் உணர்வுகளை மேலும் மெருகேற்றியுள்ளார்.





இசை வீடியோவின் உருவாக்கம் குறித்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் அருள் கூல் கூறியதாவது:


“அறிவின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அழகான காட்சி அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு விதமாக அனுபவித்தாலும், காதலில் ஏற்படும் உற்சாகம், வெகுளித்தனம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை அனைவருக்கும் பொதுவானவை. அதனால் அதிகப்படியான நாடகத்தன்மை இல்லாமல், இயல்பான மற்றும் மனதுக்கு நெருக்கமான காட்சிகளை உருவாக்க விரும்பினோம். அறிவும் அஸ்வதியும் தங்களுடைய நடிப்பின் மூலம் பாடலின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். அறிவுடன் இணைந்து இந்த ரொமான்டிக் மியூசிக்கலில் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. இந்தப் பாடலின் எளிமையும் அழகும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம்.”



பாடலின் இசைத் தயாரிப்புப் பணிகளை ஹாஸ்பேஸ் ( Hashbass ) மேற்கொண்டுள்ளார். பாடலின் காதல் உணர்வுகளுக்கும், அறிவின் குரலுக்கும் பொருந்தும் வகையில் இசை அமைப்புகளை உருவாக்கியுள்ளார். இப்பாடலை ஹரி  20db Sound Studios-ல்  பதிவு செய்துள்ளார். பாலு தஙகச்சன் பாடலின் மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் பணிகளையும், ஆண்டோ ஃப்ராங்ளின் சவுண்ட் டிசைன் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.


Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படைப்பில் பல்வேறு சுயாதீன இசைக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.


கௌதம் கிருஷ்ணான் கிரியேட்டிவ் புரொடியூசராகவும், சங்கீத் கிரியேட்டிவ் டைரக்டராகவும், கல்பனா அம்பேத்கர் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.


விக்ரம் படத்தொகுப்புப் பணிகளையும், கணேஷ் கலர் கிரேடிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். பிபாய் பிளாக் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அருண் S.K. போஸ்டர் வடிவமைப்பையும், ராஜசேகர் கோவிந்தராஜ்  உதவி இயக்குநர் பணியையும் கவனித்துள்ளனர். வெற்றி மற்றும் அதுல் நிறக்கூடு உதவி ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.


சென்னை 20db Studios மற்றும் வர்கலாவில் உள்ள முருகன் சலூன் ஆகியவை படப்பிடிப்பிற்கான இடவசதியை வழங்கியுள்ளன.


சமூக அக்கறை கொண்ட பாடல்கள் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ள தெருக்குறள் அறிவு, ‘ஹலோ’ (HELLO) மூலம் தனது இசைப் பயணத்தில் மற்றுமொரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். சுயாதீன தமிழ் இசை உலகில் கலைஞர்கள் வெவ்வேறு இசை வகைகளில் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு, புதிய படைப்பாளர்களுடன் இணைந்து, இசை மற்றும் காட்சிகளின் வழியாகப் பல்வேறு கதைகளைச் சொல்லி வரும் சூழலில், ‘ஹலோ’ (HELLO) ஒரு சுவாரஸ்யமான முயற்சியாக அமைந்துள்ளது.


காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை, இயல்பான நடிப்பு மற்றும் அழகான காட்சியமைப்புகளுடன் உருவாகியுள்ள ‘ஹலோ’ (HELLO). தெருக்குறல் அறிவின் இசைப் பயணத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத மற்றொரு பக்கத்தை அறிமுகப்படுத்துகிறது.


‘ஹலோ’ (HELLO) – அதிகாரப்பூர்வ பாடல் மற்றும் இசை வீடியோ விவரங்கள்


பாடல் விவரங்கள் (Audio Credits)


* பாடல்: ‘ஹலோ’ (HELLO) 

* எழுதி, இசையமைத்துப் பாடியவர்: தெருக்குரல் (அறிவு )

* இசைத் தயாரிப்பு: ஹாஸ்பேஸ்

* பாடல் பதிவு: ஹரி 

* பதிவு மையம்: 20db Sound Studios

* மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங்: பாலு தங்கச்சன்

* சவுண்ட் டிசைன்: ஆண்டோ ஃப்ராங்ளின்


இசை வீடியோ விவரங்கள் (Video Credits)


* தயாரிப்பு: Bigson Records

* இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு: அருள் கூல்

* நடிப்பு: தெருக்குரல் அறிவு  & அஸ்வதி

* கிரியேட்டிவ் புரொடியூசர்: கௌதம் கிருஷ்ணன் 

* கிரியேட்டிவ் டைரக்டர்: சங்கீத் 

* எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கல்பனா அம்பேத்கர் 

* படத்தொகுப்பு: விக்ரம் 

* கலர் கிரேடிங்: கணேஷ்

* நடன இயக்கம்: பிளாய் பிளாக்

* போஸ்டர் வடிவமைப்பு: அருண் S.K.

* உதவி இயக்குநர்: ராஜசேகர் கோவிந்தராஜ் Govindaraj

* உதவி ஒளிப்பதிவாளர்கள்: வெற்றி & அதுல் நிறக்கூடு


இடவசதி உதவி:


* 20db Studios, சென்னை

* முருகன் சலூன், வர்கலா

 

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையான ‘கோந்தல்’ திரைப்படம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் நாளை (நவம்பர் 13) திரையரங்குகளில் வெளியாகிறது.


இந்தியாவின் 99 ஆவது ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் படமான சந்தோஷ் தாவகார் இயக்கிய ‘கோந்தல்’ திரைப்படத்தின் சர்வதேச டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். உளவியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், மர்மம் நிறைந்த காட்சிகள் மற்றும் மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரப் பின்னணியை டிரெய்லர் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


ஒரு மராத்தி திரைப்படம் ஏழு மொழிகளில் மறுவெளியீடு செய்யப்பட்டு, உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பது இதுவே முதல்முறை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படம் வெளியாகிறது.


மகாராஷ்டிராவின் கலாச்சாரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், புதுமணத் தம்பதிகளான சுமன் மற்றும் ஆனந்த்ராவை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஆசை, கடமை, பக்தி ஆகியவை ஒன்றோடொன்று மோதும்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களே கதையின் மையம். 


மணமகளின் ஏக்கம், கணவனின் கடமைகள் மற்றும் அடுத்தடுத்து நிகழும் மர்மமான சம்பவங்கள் என இருவரும் புரியாத புதிர்கள் நிறைந்த சுழலுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். வெளிப்படையாகத் தெரிவது உண்மையாக இருக்குமா என்ற கேள்வியையும், உண்மையின் மற்றொரு முகத்தையும் படம் ஆராய்கிறது.


பதற்றமான காட்சிகள், மர்மம் நிறைந்த பின்னணி மற்றும் தனிப்பட்ட ஆசைகளுக்கும் சமூகக் கடமைகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் உறவு என டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் உளவியல் கதையம்சத்தையும் இயக்குநர் சந்தோஷ் தாவகார் இணைத்துள்ளார்.


படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் தாவகார் பகிர்ந்து கொண்டதாவது,  “இந்தியத் திரைப்படங்கள் குறித்த உலகளாவிய பார்வை பெரும்பாலும் வறுமை மற்றும் சாதிய மோதல்கள் சார்ந்த கதைகளால் உருவாக்கப்படுகிறது. அவைதான் கள யதார்த்தம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவை மட்டுமே இந்தியாவின் முழுமையான அடையாளம் அல்ல.


‘கோந்தல்’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல! தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமம். இந்தப் பாரம்பரியத்தை உலகம் அறிந்துகொள்ளச் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்கர் விருதுகள் போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்கள், நமது கலாச்சாரத்தை இந்தியாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லத் திரைப்பட இயக்குநர்களுக்கு உதவுகின்றன" என்றார்.


99 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான பயணத்தில் முன்னேறி வரும் ‘கோந்தல்’, சிறந்த சர்வதேசத் திரைப்படம் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக இடம்பெற்றுள்ளது. மேலும், பல்வேறு பிரிவுகளிலும் இப்படம் பரிசீலிக்கப்பட்டு வருவது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கிய அதன் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.


56 aaவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான Silver Peacock விருதை சந்தோஷ் தாவகார் வென்றுள்ளார். இப்படத்தைப் பார்த்த நடுவர் குழுவினர் நிஜ உலகத்தில் அமைந்த ஷேக்ஸ்பியரின் கதை போல உள்ளது என்று பாராட்டியுள்ளனர்.


இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி மற்றும் நிஷாத் போயர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சந்தோஷ் தாவகார், தனது தயாரிப்பு நிறுவனமான தாவகார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீக்ஷா தாவகாருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். பிராந்தியக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, இசை மற்றும் நடிப்பு என அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களிலும் உயர்தரமான படைப்புகளை வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


அமலேந்து சௌத்ரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே 25 நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


99 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்வானதைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள சர்வதேச டிரெய்லர், உளவியல் மர்மங்கள் மற்றும் கலாசாரச் சிக்கல்கள் நிறைந்த ‘கோந்தல்’ திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இஞ்சி வெல்லம்' திரைப்படம் ஜனவரி 29, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மணி ரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம்,  அடுத்த வருடம் ஜனவரி 29 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணி இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்தனர். இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இந்த முறை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் மனதை வருடும் காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படமாக 'இஞ்சி வெல்லம்' உருவாகியுள்ளது.


தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியாலும், நேர்த்தியான திரைப்பட உருவாக்கத்தாலும் ஏராளமான வளரும் இயக்குநர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருபவர் இயக்குநர் மணிரத்னம். ஒவ்வொரு புதிய படைப்பின் மீதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அவரது இயக்கத்தில் உருவாகும் இப்படமும் கவனம் ஈர்த்துள்ளது. அதேபோல், திட்டமிட்ட கால அட்டவணைப்படி படப்பிடிப்பை நிறைவு செய்யும் அவரது பணித்திறனும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன


இப்படத்தில் கன்னட நடிகை சைத்ரா ஆச்சாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல மொழித் திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் இவர், 'சப்த சாகரதாச்சே எல்லோ சைடு பி' உள்ளிட்ட திரைப்படம் மற்றும் 'மீசைய முறுக்கு 2', '3BHK', 'ரூம் நம்பர் 418' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட பிட் டிராக் பாடலுடன் கூடிய கிளிம்ப்ஸ் வீடியோ, கொல்கத்தாவின் அழகையும், படத்தின் தனித்துவமான காட்சியமைப்பையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் காட்சியமைப்பும் இசையும் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளன. இதனால், படத்தின் முழுமையான இசை ஆல்பத்தைக் கேட்கும் ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


படத்தின் முதல் பாடல் வெளியீடு, இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் குறித்த கூடுதல் அறிவிப்புகளைப் படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

*திரைப்பட பாணியில் உருவான அழகான காதல் பயணம் – இயக்குநர் சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் கூட்டணியில் ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம்!*


நடுவன் பட இயக்குநர் ஷாரி இயக்கத்தில், சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் இணைந்து உருவாக்கியுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.


Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) மியூசிக்கல் ஆல்பம், ஒரு அழகான காதல் கதையைத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்துடன் ரசிகர்களுக்குக் கடத்தும் வகையில் உருவாகியுள்ளது.


இன்டி மியூசிக் தளத்தில் முதல் முறையாக, ஷாரி மற்றும் ஹரிசங்கர் நாராயணன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த இருமொழி காதல் இசைப் பயணம், தமிழில் ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) என்றும், மலையாளத்தில் ‘ഞാനും’ (Njyaanum) என்றும் வெளியாகியுள்ளது. Saregama Music நிறுவனம் மூலம் வெளியாகியுள்ள இந்த ஆல்பம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் காதலின் அழகையும் பயணத்தின் அனுபவங்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.


‘நடுவன்’ படத்தின் இயக்குநரும், ‘இனிது இனிது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவருமான சரண் என்கிற ஷாரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார். ‘லேபிள்’, ‘கட்டாளன்’, ‘டோரதி’, ‘சிறை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹரிசங்கர் நாயகனாகவும், சுஜா சுகுமார் நாயகியாகவும் நடித்துள்ளனர்.


சரண் மற்றும் ஹரிசங்கர் இருவரும் தங்களது பயணத்தின்போது சந்தித்த காதலர்களின் நினைவுகளையும், அந்தப் பயணத்தில் தாங்கள் கண்ட காதல் உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். பயணத்தில் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளையும், காதலின் அழகிய தருணங்களையும் ஒரு இசைக் கதையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே இந்த ஆல்பம். இதனால் ஒரு கற்பனைக் காதல் கதையாக மட்டுமின்றி, பயண அனுபவங்களின் நினைவுகளையும் உணர்வுகளையும் சுமந்து நிற்கும் படைப்பாக இது அமைந்துள்ளது.


இசையமைப்பாளர் யுதிஷ்டரன் (Yuthishtran E) இசையமைத்துள்ள இப்பாடலை ஹனன் ஷா (Hanan Shaah), நிஹால் சாதிக் (Nihal Sadiq) ஆகியோர் பாடியுள்ளனர்.


பேசவும், கேட்கவும் முடியாத ஓர் இளைஞன், தனது காதலியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அவள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் அவளுடன் பயணம் மேற்கொள்கிறான். அந்த அழகான காதல் பயணத்தையும், இருவருக்கும் இடையிலான அன்பு, ஆசை, காதல் மற்றும் மென்மையான உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.


சென்னை, பெங்களூரு, கோவா, விமான நிலையம், ஜெய்ப்பூர், சண்டிகர், சிம்லா, சாங்லா, சிட்குல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல அழகான பகுதிகளுக்குப் பயணித்து, ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கான காட்சியமைப்புகளுடன் இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.


குறிப்பாக, இதுவரை பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஹரிசங்கர், இந்த ஆல்பத்தில் முற்றிலும் மாறுபட்ட காதல் நாயகனாகத் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் உணர்வுகள், காதலியின் மீதான அன்பு, அவளது ஆசைகளை நிறைவேற்றும் தருணங்கள் என ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்புத் திறமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இணையாக நாயகி சுஜா சுகுமாரும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.


ஒரு சாதாரண மியூசிக் வீடியோவாக இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வைத் தரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகான காதல் தருணங்களுடன் நகரும் இந்தப் பாடலின் இறுதியில் இடம்பெறும் எதிர்பாராத திருப்பமும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


காதலின் மென்மையான உணர்வுகள், பயணம், இசை, அழகான காட்சிகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.


Tamil 🔗https://youtu.be/tx0XK76S-fw?si=yqbZC3jNqDEApb6r


Malayalam 🔗 https://youtu.be/EZ5kEv4OisA?si=6bNi-MzTpu8BwZBt

ஆறு நாட்களில் ரூ.205 கோடி உலகளாவிய வசூல்… தொடர்ச்சியாக மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்து சாதனை படைக்கும் சூர்யா!


நடிகர் சூர்யாவுக்கு 2026-ம் ஆண்டு திரையுலகில் வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான அவரது ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தன. அந்த வரிசையில் தற்போது தீபாவளி வெளியீடாக வந்துள்ள ‘சீன்’ திரைப்படமும் ரூ.200 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது.


ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படம் கடந்த நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. 2D Entertainment மற்றும் Zhagaram Studios நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.


வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து கூட்டத்தைக் குவித்து வருகிறது. குறிப்பாக, வித்தியாசமான கதைக்களம், அதிரடியான திரைக்கதை, நகைச்சுவை கலந்த கிரைம் த்ரில்லர் பாணி என வழக்கமான திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.


இதில் சூர்யா ஏற்றுள்ள காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. அவரது வழக்கத்திற்கு மாறான நடிப்பு, நகைச்சுவை கலந்த உடல்மொழி, அதிரடியான அணுகுமுறை என ஒரு புதிய கோணத்தில் சூர்யாவை இயக்குநர் ஜித்து மாதவன் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் நஸ்ரியா மற்றும் நஸ்லெனின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.


இந்நிலையில், ‘சீன்’ திரைப்படம் வெளியான ஆறாவது நாளில் உலகளவில் ரூ.205 கோடி வசூலைக் கடந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ‘205 CRORES+ – 6 DAYS WORLDWIDE GROSS’ என்ற வாசகத்துடன் சூர்யாவின் மாஸ் தோற்றம் இடம்பெற்றுள்ள புதிய வசூல் போஸ்டரையும் தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளது.


இதன் மூலம் ஒரே ஆண்டில் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’, ‘சீன்’ எனத் தொடர்ந்து மூன்று திரைப்படங்களை ரூ.200 கோடி வசூல் சாதனைக்குக் கொண்டு சென்ற நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். மூன்று திரைப்படங்களும் வெவ்வேறு கதைக்களம், மாறுபட்ட இயக்குநர்களின் அணுகுமுறை என அமைந்திருந்தாலும், அவை அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களின் வெற்றியால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா, தனது நடிப்புத் திறனையும் வணிக ரீதியான வெற்றியையும் ஒருசேர நிரூபித்து வருகிறார்.


தற்போதும் திரையரங்குகளில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டை சூர்யாவின் வெற்றிகரமான ஆண்டாக மாற்றியுள்ள ‘சீன்’, அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான வசூல் சாதனையாக அமைந்துள்ளது.

 

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘ரூஹ்’ (ROOH) என்ற இசையை மையமாகக் கொண்ட ஹாரர் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.


ஹாரர் மற்றும் காதல் ஆகிய இரு அம்சங்களையும் இசையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது. ‘ரூஹ்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.


இந்தி திரையுலகின் மறக்க முடியாத பல ஹாரர் திரைப்படங்களில் நடித்துள்ள இம்ரான் ஹாஷ்மி, மீண்டும் இவ்வகைத் திரைப்படத்தில் நடிக்கிறார். காதல், பிரிவு மற்றும் ஏக்கம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திரைப்படப் பாடல்கள் ஒரு தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. அந்த இசைப் பாரம்பரியத்தையும், குமார் தௌரானியின் இசை அனுபவத்தையும் டிப்ஸ் ஃபிலிம்ஸின் தயாரிப்புத் திறனையும் ஒன்றிணைக்கும் வகையில் ‘ரூஹ்’ திரைப்படம் உருவாகிறது.


இப்படம் குறித்து குமார் தௌரானி கூறுகையில்,


“இம்ரானுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம். ஏனெனில், அவர் அறிமுகமான ‘ஃபுட்பாத்’ திரைப்படத்தையும் நாங்கள்தான் தயாரித்திருந்தோம். கடந்த பல ஆண்டுகளாகப் பல திரைப்படங்களில் இணைந்து மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். தற்போது ‘ரூஹ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் அந்த வெற்றி மாயாஜாலத்தை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தில் சன்னி கன்னா மற்றும் விக்ரம் கக்கருடன் இணைந்து பணியாற்றுவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.”


விக்ட் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் விக்ரம் கக்கர் கூறுகையில்,


“‘ரூஹ்’ திரைப்படம் எங்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு படைப்பு. டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் எங்களுடன் இணைந்திருப்பது எங்களுக்கு ஒரு முக்கியமான மைல்கல். அனைவரும் இணைந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத, பிரம்மாண்டமான ஹாரர் திரைப்பட அனுபவத்தை 2027 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வழங்குவதில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்.”


தயாரிப்பாளர் சன்னி கன்னா கூறுகையில்,


“குமார் தௌரானி மற்றும் கிரிஷ் குமார் ஆகியோர் ‘ரூஹ்’ திரைப்படத்தில் எங்களுடன் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. திரைப்படம் மற்றும் இசைத் துறைகளில் அவர்கள் உருவாக்கியுள்ள சாதனைகளும் பாரம்பரியமும் இந்தக் கூட்டணியை மேலும் சிறப்பாக்குகின்றன. குறிப்பாக, இசை முக்கியப் பங்கு வகிக்கும் இப்படத்தில் அவர்களுடன் இணைந்திருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இந்தக் கூட்டணியின் மூலம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களிடம் இப்படத்தைக் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம்.”


இப்படத்தின் இசை குறித்துப் பேசிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி கூறுகையில்,


“இந்தப் படத்தில் குமார் ஜியுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வாகவே கருதுகிறேன். எனது திரைப்படங்களுடன் ரசிகர்கள் உணர்வுபூர்வமாக இணைவதில் இசை எப்போதுமே முக்கியப் பங்கு வகித்துள்ளது. ‘ரூஹ்’ திரைப்படத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் வகையில், காதல், மர்மம் மற்றும் ஆழமான உணர்வுகள் நிறைந்த இசையை உருவாக்க விரும்புகிறோம்.”


டிப்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் இப்படம், விக்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. மயங்க் ஷர்மா இயக்கும் இப்படத்தை குமார் தௌரானி, கிரிஷ் குமார், விக்ரம் கக்கர் மற்றும் சன்னி கன்னா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா திரைக்கதை எழுதியுள்ளனர். விகாஸ் சாஹ்னி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் இசையை டிப்ஸ் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

 

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக, அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.


பி நாகிரெட்டியார் அவர்களின் பிரம்மாண்ட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.


இயக்குநர் பரதன், இதற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’, ‘தூள்’, விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’, ‘மதுர’ மற்றும் “ வீரம்” உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர். மேலும், விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் விஜய்யுடன் இணைந்து அவர் இயக்கிய திரைப்படம் ‘பைரவா’.


இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தின் ‘பட்டைய கெளப்பு’, ‘நிலாயோ’, ‘பா பா’, ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக உள்ளன.


2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வந்த ‘பைரவா’, வெளியான ஐந்து முதல் ஆறு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. இதன் மூலம் விஜய்யின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக ‘பைரவா’ இடம்பெற்றது.


திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து வருகிறது. தொலைக்காட்சிகளில் ‘பைரவா’ ஒளிபரப்பாகும்போதெல்லாம் கிடைக்கும் அதிகப்படியான பார்வையாளர் வரவேற்பும், டிஆர்பி எண்ணிக்கையும் இதற்குச் சான்றாக இருப்பதாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இப்படம் ரசிகர்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரவேற்பு மீண்டும் நிரூபணமாகியுள்ளது.


குறிப்பாக, 2017-ல் இப்படம் வெளியானபோது குழந்தைகளாக இருந்த விஜய் ரசிகர்கள், தற்போது வளர்ந்து இளைஞர்களாகியுள்ள நிலையில், தங்களுக்குப் பிடித்தமான ‘பைரவா’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இந்த மறுவெளியீடு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதேபோல், அப்போது திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக அமையும்.


இப்படத்தினை SIM Cine International நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.


2027 புத்தாண்டின் முதல் நாளை விஜய்யின் ‘பைரவா’ திரைப்படத்துடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்!


2027 புத்தாண்டு கொண்டாட்டம் விஜய்யின் ‘பைரவா’வுடன் தொடங்குகிறது!

AURA TALE STUDIOS presents ‘F6 Building Ivory Street’, a horror thriller directed by debutant filmmaker Abhay Sankar, being made simultaneously in Tamil and Malayalam.

‘F6 Building Ivory Street’ is written and directed by Abhay Sankar, who has handled the story, screenplay and dialogues as well. Produced under the banner of AURA TALE STUDIOS, the film is being crafted as a distinctive horror experience, blending horror and thriller elements with family emotions, comedy and romance. Making his directorial debut, Abhay Sankar steps into the industry with an intriguing storyline. The film is being made simultaneously in Tamil and Malayalam.

The first-look poster of the film has been released and is receiving a positive response from audiences. Set against a dark and mysterious building, the poster features a mother and son looking upwards with expressions of fear and shock. The striking visual captures the film’s eerie atmosphere and the mystery surrounding its storyline. The intriguing composition and the emotions reflected through the characters have further heightened expectations for the film.

The story revolves around a middle-aged aspiring filmmaker who moves from Kerala to Chennai with his mother in search of a new beginning. However, their life takes a terrifying turn when they encounter mysterious and supernatural occurrences inside their new home. The film explores the chilling incidents that unfold within the house and the mystery surrounding them.

Kalesh Ramanand plays the Hero, while Shraddha Gokul plays the Heroine. Veteran South Indian actress Urvashi’s elder sister, Kalaranjini, plays the Hero’s mother in an important role. The film also features Ramesh Thilak, Thalaivasal Vijay, Charmila, TSR Srinivasan, Kumki Aswin, Dr Amar Ramachandran and Prathibha Prathap in important roles.

The music and background score are composed by Sreejith Edavana. Cinematography is handled by Prasanth Pranavam, while editing is by Aiyappan Nair M S. Jackie Johnson is the Project Designer, and Deepu Chandran is in charge of VFX.

The songs are sung by Hesham Abdul Wahab, Vineeth Srinivasan and Anila Rajeev, with lyrics penned by Navin Kannan, Bhim Ji, Naveen Maarar and Renjith. C M Sadiq handles Sound Design and Mixing, while Charan Vinayak takes care of Sound Editing. S P Nagaraj is the Art Director, K Mahendran is the Production Manager, K Ramu is the Costume Designer, and Rohini K S is the Makeup Artist.

The film was shot across Chennai and Thiruvananthapuram and features a total of four songs. The post-production work is currently progressing at a brisk pace. The team is planning to complete the final stages of production and release the film in theatres in January 2027.

Being made in both Tamil and Malayalam, ‘F6 Building Ivory Street’ has already garnered attention with its intriguing first look. Expectations are building among horror enthusiasts to witness the film’s unique blend of suspense, horror, comedy and emotions on the big screen.

Pageviews