**தீபாவளி வெளியீடாக ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சீன்’ – அதிகாரப்பூர்வமாக அறிவித்த 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம்!**


சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ‘சீன்’ திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், தற்போது வசூலிலும் மிகப்பெரிய சாதனையைப் படைத்து வருகிறது.


சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு, ஜித்து மாதவனின் வித்தியாசமான திரைக்கதை, நஸ்ரியா நசிம் மற்றும் நஸ்லென் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பு, சுஷின் ஷியாமின் இசை எனப் பல அம்சங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. குறிப்பாக, படத்தின் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றன.


இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘சீன்’ திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு ‘145+ கோடி வசூல்… மெகா பிளாக்பஸ்டர்’ என்ற வாசகத்துடன் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளிலும் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு படத்தின் வசூல் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் இப்படம் வரவேற்பைப் பெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.


தீபாவளி வெளியீடுகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘சீன்’, மூன்றே நாட்களில் ரூ.145 கோடி வசூல் என்ற மைல்கல்லைக் கடந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் உருவாகியுள்ளது.

 



விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.



இந்நிகழ்வினில்.., 


கலை இயக்குநர் ராஜா பேசியதாவது.. ,

“இந்தப் படத்தைத் திட்டமிடும்போதே இயக்குநர் சார் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கேற்ப படத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டோம். என்னுடைய பணியிலும் மூன்று, நான்கு விதமான மாற்றங்களைச் செய்திருக்கிறோம். குறிப்பாக, இரண்டு காலகட்டங்களில் காட்சிகளின் தோற்றம், வண்ணங்கள் மற்றும் அதற்கான அம்சங்களில் நிறைய புதுமைகளைச் சேர்த்திருக்கிறோம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.”



ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன் பேசியதாவது.. ,


“இந்தப் படத்தின் விஷுவல் டிபார்ட்மென்ட் எனக்கு அளித்ததற்கு நன்றி. எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவருடனும் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இயக்குநர் எனக்கு மிகவும் இனிமையான மனிதராகத் தெரிந்தார். ஒரு அழகான, மனதுக்கு நெருக்கமான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் இருந்த நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் பணியை மிகவும் சுவாரஸ்யமாக்கியது.


காஸ்ட்யூம் டிசைனிங் உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இந்தக் கதையின் முக்கியமான பகுதி ஊட்டியில் நடைபெறுகிறது. ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவதற்கு ஊட்டி போன்ற இடம் பல்வேறு விஷுவல் வாய்ப்புகளை வழங்கக்கூடியது. அந்த இடத்தை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட விஷுவல்களைத் திரையில் பார்க்கும்போது நிச்சயம் ரசிப்பீர்கள். நன்றி.”




பாடலாசிரியர் ஏகாதசி பேசியதாவது.., 


“இயக்குநர் சாருடன் நான் முதன்முதலில் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் பணியாற்றினேன். அந்தப் படத்தில் ஐந்து, ஆறு பாடல்கள் எழுதினேன். அப்போது நண்பர் தமிழரசன் மூலம் மீரா கதிரவன் சாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் எழுதிய ஒரு பாடல் விஜய் ஆண்டனி சாருக்கும் தனஞ்செயன் சாருக்கும் பிடித்துப்போனதால், அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் அவர்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றியும், மகளைப் பற்றியும் இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன். குறிப்பாக, ‘திருவிழா தேர்த்திண்ணையில் உறங்கும்… அது உறக்கத்தில்கூட என் பேரை உளறும்’ என்ற வரிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கின்றன. இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு பலரும் எனக்குத் தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.


இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றியும், மகளைப் பற்றியும் இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன். குறிப்பாக, ‘திருவிழா தேர்த்திண்ணையில் உறங்கும்… அது உறக்கத்தில்கூட என் பேரை உளறும்’ என்ற வரிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கின்றன. இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு பலரும் எனக்குத் தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.


என்னுடைய பாடல்களில் ஏற்கெனவே அம்மாவைப் பற்றிய பாடல் மிகவும் பிரபலமானது. அதேபோல் அப்பாவைப் பற்றிய ஒரு பாடலும் இந்தப் படத்தில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. குறிப்பாக, அப்பாவைப் பற்றிய பாடலை எழுதும்போது என்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களும் அதில் கலந்திருந்தன. சிறு வயதிலேயே அப்பா வேறொரு திருமணம் செய்துகொண்டதால், அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் நான் அனுபவித்ததில்லை. அப்பா என்ற உறவு எனக்கு எப்படி இருக்கும் என்பதுகூடத் தெரியாது. ஆனால், ஒரு எழுத்தாளராக இந்தப் படத்தின் அப்பா கதாபாத்திரத்தின் வலியை உணர்ந்து எழுத முடிந்தது.


அந்த உணர்வுகளைப் பாடல் வரிகளாக வெளிப்படுத்த வாய்ப்பளித்த விஜய் ஆண்டனி சார் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 




பாடலாசிரியர் அருண் பாரதி பேசியதாவது.., 


‘என்னை அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி சார். அதன்பிறகு பல பாடல்களில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் எனக்கு ஓர் அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, அந்தப் பாடலின் வரிகளும் அதன் உணர்வும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் பார்த்து’ பாடலைப் போல, இந்தப் படத்திலும் அப்பா – மகள் உறவைப் பேசும் பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை.


ஏகாதசி எழுதியுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. எனக்கு அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், நான் பிளஸ் டூ படிக்கும்போது மண் சரிந்து விழுந்த விபத்தில் என் அப்பா உயிரிழந்தார். அப்போது அவரைப் பற்றிக் கவிதை ஒன்றை எழுதினேன். அந்த நினைவுகள் இன்றும் என் மனதில் இருக்கின்றன. அப்பா – மகள் உறவு எவ்வளவு ஆழமானது என்பதை இந்தப் படத்தின் டிரைலரிலேயே உணர முடிகிறது. குழந்தை சொல்லும், ‘நீ சாமியைப் பார்த்ததில்லை, ஆனாலும் சாமியை நம்புகிறாய்’ என்ற கருத்தைப் போலவே, பார்க்காமலேயே அன்பையும் உறவையும் உணர முடியும் என்பதை இந்தப் படம் அழகாகச் சொல்லும் என நம்புகிறேன்.


இயக்குநர் மு. மாறன் சாருக்கு இந்த அழகான வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி. விஜய் ஆண்டனி சார் பாடல் வரிகளை மிகவும் அக்கறையுடன் அணுகி, தேவையான திருத்தங்களையும் கவனமாகச் செய்தார். பாடலைப் பாடிய குஷ்யா, கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் படத்தில் நடித்த சிறுமி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். படம் அனைவரையும் சென்றடையும் என நம்புகிறேன்.”



நடிகை ஹரிப்ரியா பேசியதாவது,


“‘அப்பா குட்டி’ திரைப்படம் என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய விஜய் ஆண்டனி சாருக்கும், அழகான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மு. மாறன் சாருக்கும் மனமார்ந்த நன்றி. அனுபவம் வாய்ந்த பல கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார், இயக்குநர் குழு, ஒளிப்பதிவுக் குழு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. அனைவரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.”





நடிகை ஹரிதா பேசியதாவது,

“‘அப்பா குட்டி’ படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி சார் மிகவும் அன்பான மனிதர். தயாரிப்பாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் எனப் பல பொறுப்புகளில் இருக்கும் அவர், கலைஞர்கள் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வது மிகவும் சிறப்பானது. அந்த அன்பான அணுகுமுறைக்கு அவருக்கு மனமார்ந்த நன்றி. இயக்குநர் மு. மாறன் சார், ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார், கலை இயக்குநர் ராஜா சார் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.


என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் தந்தையின் அன்பு, குழந்தைப் பருவ உணர்வுகள் எனப் பல ஆழமான உணர்வுகளையும் உறவுகளையும் அழகாகப் பேசியிருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரிக்க வேண்டும். திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”





நடிகர் மூணாறு ரமேஷ் பேசியதாவது,


“‘அப்பா குட்டி’ திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் மு. மாறன் சார் அனைவரின் மனதையும் தொடும் வகையில் ஆழமான உணர்வுகளைக் கொண்ட கதையை உருவாக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி சார் எப்போதுமே வித்தியாசமான கதைகளையும் முயற்சிகளையும் தேர்ந்தெடுப்பவர். இந்தப் படத்தின் தலைப்பு முதல் பத்திரிகையாளர் சந்திப்பின் மேடை அமைப்பு வரை அனைத்திலும் அவரது தனித்துவம் தெரிகிறது.

படத்தின் இரண்டு பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கின்றன. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ‘அப்பா குட்டி’ திரைப்படம் நிச்சயம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்து வெற்றிபெறும் என்று நம்புகிறேன். நன்றி.”




நடிகை லிஸ்ஸி ஆண்டனி பேசியதாவது,


“விஜய் ஆண்டனி சாரின் இசைக்கும், அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவருடைய ஒவ்வொரு படத்திலும் கதை தேர்வு வித்தியாசமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதையில் எனக்கும் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் மு. மாறன் சாருக்கு நன்றி. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

அம்மாவைப் பற்றிப் பல பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பாவுக்காகவும் ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. நானும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும். நன்றி.”




நடிகை ஹரிப்ரியா விஸ்வநாதன் பேசியதாவது,


“இயக்குநர் மு. மாறன் சாருடன் எனக்கு இது இரண்டாவது படம். இதற்கு முன்பு அவர் இயக்கிய படத்திலும், இந்தப் படத்திலும் எனக்கு வித்தியாசமான, சவாலான கதாபாத்திரங்களைக் கொடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் முழுக் கதையையும் கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக, இதில் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பல்வேறு பரிமாணங்கள் இருப்பதால் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி.


விஜய் ஆண்டனி சார் மிகவும் எளிமையான மனிதர். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம். ப்ரீத்தி அஸ்ராணி மிகவும் அழகாகத் தமிழ் பேசுவார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகவும் நட்பாகவும் ஜாலியாகவும் இருந்தார்கள். அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நவம்பர் 20-ம் தேதி படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”



விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது,


“அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அழகான பாசத்தை இயக்குநர் மு. மாறன் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அப்பா குட்டியாக நடித்த சிறுமியும் தனது கதாபாத்திரத்தை அருமையாகச் செய்திருக்கிறார். மற்ற நடிகர்களும் சிறப்பாகப் பங்களித்துள்ளனர்.


நான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. நன்றி.”




இயக்குநர் மு மாறன் பேசியதாவது, 


“‘அப்பா குட்டி’ என்னுடைய நான்காவது படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன. தொடர்ந்து அதே ஜானரில் ஏன் படங்கள் இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால், இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தில் முயற்சி செய்திருக்கிறேன். இந்தக் கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது அனைவருக்கும் பிடித்திருந்தது. சில காரணங்களால் உடனடியாகப் படமாக்க முடியாமல் இருந்தது. பின்னர் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் கதையைச் சொன்னபோது அவர்களுக்கும் பிடித்துப்போனது. அப்போது இந்தக் கதையில் விஜய் ஆண்டனி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தேன்.


விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்து கதையின் முதல் பாதியைச் சொன்னதுமே இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். நல்ல கதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். ‘கன்டென்ட்தான் கிங்’ என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறீர்கள். அப்படிப்பட்ட நல்ல கதையுடன் நாங்கள் வருகிறோம்.


இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வைஜெயந்தி மேமுக்கு நன்றி. படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய செந்தில் சார், தனஞ்செயன் சார், சசி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நவம்பர் 28-ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.”




இயக்குநர் மந்திரமூர்த்தி பேசியதாவது,


“விஜய் ஆண்டனி சாரைப் பற்றி நிறைய பேச வேண்டும். அவருடன் கடந்த 15 ஆண்டுகளாகப் பழகி வருகிறேன். கடின உழைப்பாளியான அவர், கொடுத்த வாக்கைக் காப்பாற்றக்கூடிய மனிதர். ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதைச் சரியாகச் செய்து முடிப்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர். அவரைப் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டும்.


இந்தப் படத்தின் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி தமிழ் சினிமாவில் என் அறிமுகத்தில் எனக்குப் பெருமை தரக்கூடிய ஒரு கலைஞர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகவும், எதிர்பார்ப்புகளைத் தாண்டியும் நடிக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. அவர் இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும், நடிகர் தேர்வுப் பொறுப்பைக் கவனித்த என் தம்பி சுகுமார் சண்முகத்துக்கும் வாழ்த்துகள். அனைவரும் சிறப்பான வளர்ச்சியைப் பெற வேண்டும். நன்றி.”




நடிகர் ஜென்சன் திவாகர் பேசியதாவது,


“‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இயக்குநர் மு. மாறன் சார் கொடுத்த ஸ்கிரிப்டைப் படிக்கும்போது முதல் 15 பக்கங்களிலேயே கதை என்னை ஈர்த்துவிட்டது. கிரைம் த்ரில்லராகத் தொடங்கும் கதை, தொடர்ந்து உணர்வுபூர்வமான அனுபவமாக மாறி, முதல் பாதி முடியும் வரை விறுவிறுப்பைக் குறைக்கவில்லை. ஸ்கிரிப்டில் இருந்த உணர்வுகளைத் திரையில் அப்படியே கொண்டுவந்ததற்கு முக்கியக் காரணம் படத்தின் நடிகர் தேர்வு. அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.


இந்தப் படத்தில் பல திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக முருகானந்தம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். நகைச்சுவைக் காட்சிகளில் இருவரும் இணைந்து பணியாற்றியது மிகவும் ஜாலியாக இருந்தது. விஜய் ஆண்டனி சாருடன் எனக்கு நல்ல காம்பினேஷன் காட்சிகள் அமைந்துள்ளன. தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும், எடிட்டராகவும் அவர் காட்டும் ஈடுபாடு வியக்க வைக்கிறது. படத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையும், நல்ல காட்சிகளைப் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற அவரது அணுகுமுறையும் பாராட்டுக்குரியது.


இயக்குநர் மு. மாறன் சாருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். அவர் அமைதியாக இருந்தாலும், தனக்குத் தேவையானதைத் தெளிவாகச் செய்து முடிப்பார். ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக ஊட்டியின் குளிருக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்து கொடுத்த ஆடை வடிவமைப்புக் குழுவுக்கு நன்றி.


ப்ரீத்தி அஸ்ராணி யூடியூப் மூலம் தமிழைக் கற்றுக்கொண்டு மிக அழகாகப் பேசுகிறார். தனது வசனங்களை மனப்பாடம் செய்து சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் இன்னும் பல உயரங்களை அடைவார் என்று நம்புகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், படக்குழுவினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி.”




தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,


“சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே ‘அப்பா குட்டி’ படத்தைப் பார்த்தேன். விஜய் ஆண்டனி சார் தனது படத்தின் எடிட்டிங் முடிந்தவுடன் என்னை அழைத்து, தனிப்பட்ட முறையில் படத்தைப் பார்த்து கருத்துச் சொல்லச் சொல்வார். அப்படித்தான் நானும் என் மனைவியும் இந்தப் படத்தைப் பார்த்தோம். படம் முடிந்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. என் மனைவியும் அழுதுவிட்டார். அந்த அளவுக்கு படம் எங்களை உணர்வுபூர்வமாகப் பாதித்தது. விஜய் ஆண்டனி சாரிடம் படத்தைப் பார்த்து உண்மையிலேயே நெகிழ்ந்துவிட்டதாகத் தெரிவித்தேன். இதற்கு முன்பு எங்கள் தயாரிப்பில் வெளியான ‘தெய்வத்திருமகள்’ படத்தில் விக்ரம் சார் தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார். அந்தப் படத்தைப் போலவே ஒரு தந்தை மகளுக்காக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சார் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.


இயக்குநர் மு. மாறன் மிகக் குறுகிய காலத்தில், ஒரே ஷெட்யூலில் சுமார் 60 நாட்களில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். மிகவும் அழுத்தமான உணர்வுகளைக் கொண்ட கதையைச் சிறப்பாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்தில் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம் மிகவும் சவாலானது. ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்க அவர் முன்வந்ததும், அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருப்பதும் பாராட்டுக்குரியது. இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல் பேபி லிதன்யாவின் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் விஜய் ஆண்டனியுடன் அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் மிகவும் அருமையாக இருக்கின்றன


இந்தப் படத்தைத் தமிழ் தெரியாத ஒரு சர்வதேச ஓடிடி நிறுவனப் பிரதிநிதிகளுக்குத் திரையிட்டபோது, அவர்கள் மொழி புரியாமலேயே கதையுடன் உணர்வுபூர்வமாகப் பயணித்தனர். இடைவேளையின்போது கூட படத்தை நிறுத்த வேண்டாம், தொடர்ந்து பார்க்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். படம் முடிந்ததும் நெகிழ்ச்சியுடன் பாராட்டியதோடு, உடனடியாகப் படத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையையும் தொடங்கினர். பின்னர் Zee தொலைக்காட்சி நிறுவனமும் படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது. விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் தனது குடும்பத்துடன் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இந்தப் படம் எனக்குத்தான் வேண்டும்’ என்று உடனடியாக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார். படம் வெளியாகும் முன்பே கிடைத்த இந்த அங்கீகாரம், அதன் உள்ளடக்கத்திற்குக் கிடைத்த மரியாதையாக நான் பார்க்கிறேன்.


விஜய் ஆண்டனி சாரின் உழைப்புக்கும், படத்தின் மீதான நம்பிக்கைக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா ஆகியோரின் நடிப்பும், மு. மாறனின் இயக்கமும் நிச்சயம் பேசப்படும். படம் முடிந்து வெளியே வரும்போது உங்கள் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’ படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். இந்தப் படத்திற்குத் தங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”





நடிகர் முருகானந்தம் பேசியதாவது,


“இயக்குநர் மு. மாறன் இதற்கு முன்பு இயக்கிய படங்களிலிருந்து ‘அப்பா குட்டி’ முற்றிலும் வித்தியாசமான படம். மணிரத்னம் சார் பல்வேறு ஜானர்களில் படங்களை இயக்குவதுபோல, மாறனிடமும் பல்வேறு கதைக்களங்களில் படம் இயக்கும் திறமை இருக்கிறது. படப்பிடிப்பில் ஒரு நடிகர் தனது குடும்பப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுகூட, அவரிடம் கோபப்படாமல் பொறுமையாகப் பேசிய மாறனின் குணம் என்னை மிகவும் கவர்ந்தது. மற்றவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்ற அவரது அணுகுமுறையே அவரை உயரத்துக்குக் கொண்டு செல்லும். நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார்.


விஜய் ஆண்டனி சாருடன் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சி. அவரை ஒரு நதியுடன் ஒப்பிடுவேன். எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பவர். பல்வேறு துறைகளில் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். அவருடன் பணியாற்றும் கலைஞர்களைத் தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்பளித்து ஊக்குவிப்பதும் சிறப்பானது. அவரது உழைப்பும் பயணமும் என்றும் தொடர வேண்டும். அவருக்கு மனமார்ந்த நன்றி.


இந்தப் படத்தில் நடித்த சிறுமி மிகவும் சுறுசுறுப்பாகவும், அனைவருடனும் அன்பாகவும் பழகினார். ப்ரீத்தி அஸ்ராணியுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இயக்குநராகவும் உருவாகும் திறமையும் இருக்கிறது. படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலப் பழகினோம்.

ஏகாதசி எழுதிய அப்பாவைப் பற்றிய பாடலும், மற்றொரு பாடலின் வரிகளும் மிகவும் அருமையாக அமைந்துள்ளன. குறிப்பாக அப்பா பாடல் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்று நம்புகிறேன். அந்த ஒரு துளி கண்ணீர்தான் இந்தப் படத்திற்கும் பாடலுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இரு பாடலாசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றி.”




விநியோகஸ்தர் பிரவீன் லால்வானி பேசியதாவது,


“எங்களை வாழவைக்கும் ரசிகர் பெருமக்களுக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அப்பா இல்லாத வாழ்க்கையின் வலியும், அப்பாவின் அருமையும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும். அந்த உணர்வை மையமாகக் கொண்ட ‘அப்பா குட்டி’ படத்திற்கு விஜய் ஆண்டனி மிகவும் பொருத்தமான கதாநாயகன். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவர், தனது உழைப்பால் பல்வேறு தடைகளைக் கடந்து இன்று மிகப்பெரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார். விளம்பர இசையில் தொடங்கி இசையமைப்பாளர், நடிகர் எனப் பல உயரங்களை அடைந்துள்ள அவரைப் பாராட்டுகிறேன்.


இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் உணர்வுபூர்வமாகப் பாதிக்கும் என்று நம்புகிறேன். தனஞ்செயன் சார் கூறியதுபோல, படம் பார்த்து உங்கள் கண்களில் கண்ணீர் வந்தால் அதன் பின்னால் இருக்கும் உணர்வை நினைத்துப் பாருங்கள். ‘அப்பா குட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். நன்றி.” 



நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசியதாவது,


“‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் நெருக்கமான படம். இயக்குநர் மு. மாறன் ஒவ்வொரு காட்சியையும் மிகத் தெளிவான பார்வையுடன் உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக, ஒரு மகளாக அப்பாவின் அன்பையும் தியாகத்தையும் உணரக்கூடிய பல தருணங்கள் படத்தில் இருக்கின்றன. அம்மாவின் அன்பைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் அப்பாக்கள் தங்களுடைய அன்பையும் உணர்வுகளையும் அதிகம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களையும் முயற்சிகளையும் நாம் பல நேரங்களில் கவனிப்பதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய அப்பாவுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள் என்று நம்புகிறேன்.


என்னுடைய கதாபாத்திரம் வயதில் இளமையாக இருந்தாலும், மிகவும் முதிர்ச்சியான சிந்தனைகளைக் கொண்டது. அதை என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்று இயக்குநரிடம் கேட்டபோது, அவர் எனக்கு நம்பிக்கையளித்தார். விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நடிகர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் எனப் பல பொறுப்புகளை ஏற்றிருந்தாலும், மிகவும் எளிமையாகவும் சக நடிகர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுத்தும் பணியாற்றினார். அவரது கதைத்தேர்வு, தொழில்முறை அணுகுமுறை மற்றும் பணிவு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.


ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். ஊட்டி மற்றும் சென்னையில் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிப்பது சவாலானது. ஆனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். விநியோகஸ்தர்கள் செந்தில் சார், பிரவீன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.


இந்தப் படம் அப்பா – மகள் உறவை மட்டும் பேசும் வழக்கமான உணர்வுபூர்வமான படமாக இருக்காது. இதில் வித்தியாசமான கதைக்களம், வணிக அம்சங்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என அனைத்

 

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற 'பொலிமேரா' திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகமான 'பொலிமேரா 3' விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் வீராவி எனும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.


வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் வெற்றிப்பட தயாரிப்பாளர் வம்சி நந்திபாடி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் (ஏசியன் குழுமம்) பரத் நரங்குடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.


டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகும் இப்படம், ‘பொலிமேரா’ திரை அனுபவத்தை இன்னும் பிரம்மாண்டமாக விரிவுபடுத்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரசிகர்களுக்கு வழங்க உள்ளது.


தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதுவரை நடித்திராத வேடத்தில் 'பொலிமேரா 3' திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 


முதல் பார்வை க்ளிம்ப்ஸ் தொடங்கும் விதமே பார்வையாளர்களை மர்ம உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. இருள் சூழ்ந்த கோயிலின் பின்னணியில் தொடங்கும் காட்சிகள், படிப்படியாக அமாவாசையின் மர்மமான சூழலை வெளிப்படுத்துகின்றன. மகாவிஷ்ணு, சிவபெருமான்,  அனந்த பத்மநாப சுவாமி என்று ஆன்மிக தரிசனங்களும் கிடைக்கின்றன. இவ்வாறு ஆன்மிகம், மர்மம் மற்றும் அமானுஷ்யம் உள்ளிட்ட அம்சங்கள் ஒன்றிணைந்த தனித்துவமான உலகத்தை இந்தக் காட்சிகள் அழுத்தமாக நிறுவுகின்றன.


சத்யம் ராஜேஷ், கொமரையாவாக மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபடும் காட்சிகள், படத்தின் மர்மத்தையும் பதற்றத்தையும் மேலும் அதிகரிக்கின்றன. பரபரப்பான காட்சியமைப்பும், பின்னணி சூழலும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலைத் தூண்டுகின்றன.


இத்தகைய விறுவிறுப்பான தருணங்களுக்குப் பிறகு, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பிரம்மாண்டமான அறிமுகம் நிகழ்கிறது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா, ‘வீராவி’ என்ற கதாபாத்திரத்தில் கம்பீரமாகத் தோன்றுகிறார். கையில் வாளேந்திய மிடுக்கான அவரது அனல் பார்வை மற்றும் கம்பீரமான உடல்மொழி என ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைந்துள்ளன. இந்தக் கதாபாத்திர அறிமுகம் க்ளிம்ப்ஸின் மிகப்பெரிய சிறப்பம்சமாகத் திகழ்கிறது.


காமாட்சி பாஸ்கர்லா, பாலாதித்யா, கெட்டப் ஸ்ரீனு, ராகேந்து மௌலி உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. (ஏசியன் குழுமம்) நிறுவனங்கள் சார்பில் வம்சி நந்திபாடி மற்றும் பரத் நரங் தயாரிக்கும் 'பொலிமேரா 3' திரைப்படத்தை டாக்டர் அனில் விஸ்வநாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய கிருஷ்ண பிரசாத் இசையமைக்கிறார்.

 

National Award-winning director and poet Seenu Ramasamy’s insightful work on children's film appreciation, 'Cinemaavin Aanma', has been officially released worldwide in English. 


Titled 'Soul of Cinema: A Handbook for Children’s Film Appreciation', the English translation has been skillfully crafted by translator Abinaya and published globally by Notion Press. 


Serving as an essential guide for students, educators, parents, and film enthusiasts, the book explores the core aesthetics of cinema and guides young minds on how to meaningfully engage with the medium. 


The global edition is now available on major online platforms:

- Amazon: https://www.amazon.in/dp/B0HQNGC331

- Flipkart: https://www.flipkart.com/soul-cinema-handbook-children-s-film-appreciation/p/itm9321ebd4f6d25?pid=9798908561914&affid=editornoti


Heartiest congratulations to Director Seenu Ramasamy and translator Abinaya on this global milestone!

 

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன.


இந்த உலகத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளரான திருமதி பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயிலும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால்  (Housefull)நிரம்பி வழிந்தன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். படம் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்கள் ஒலித்தன.


திரையிடலுக்குப் பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குத் தமிழில் பிரேமா செழியனும், ஆங்கிலத்தில் அதிதா செழியனும் பதிலளித்தனர். நிகழ்ச்சியின் போது அவர்களின் பதில்கள் ஜப்பானிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டன.


‘காகித மலர்’ திரைப்படம் குறித்து விழாவின் தேர்வுக் குழு உறுப்பினர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தெரிவித்த பாராட்டுகளும் கருத்துகளும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.


டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவின் தேர்வுக் குழு உறுப்பினர் (Jury) கென்ஜி இஷிசாகா (Kenji Ishizaha) கூறியதாவது:


“டிஜிட்டல் யுகத்தில் குறைந்த பட்ஜெட்டில்கூட மிகச் சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும். திரைப்பட உலகில் ரத்தினங்களைப் போன்ற அருமையான படைப்புகளை நாங்கள் கண்டிருக்கிறோம். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் செழியனின் ‘காகித மலர்’. இந்தத் திரைப்படம் உலகத் தரத்தைக் கொண்ட படைப்பாக அமைந்துள்ளது.


பொதுவாக இந்தியத் திரைப்படங்கள் என்றாலே பலரும் பாலிவுட் திரைப்படங்களைத்தான் நினைக்கிறார்கள். ஆனால், பாலிவுட்டைத் தாண்டியும் இந்தியாவில் பல்வேறு வகையான தனித்துவமான திரைப்படங்கள் உருவாகின்றன என்பதை உலக ரசிகர்களுக்குக் காட்டவே இந்தப் படத்தைத் தேர்வு செய்தோம்.


நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே, இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்ததுடன், மிகவும் பாராட்டி ரசித்தனர்.


திரைப்பட விமர்சகர் கேட்டி ரைஃப்(Katie Rife), 


டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இனிமையான(Sweet) , இலக்கிய நயம் மிக்க (Bookish),தமிழ் திரைப்படமான "காகித மலர்" (The Paper Flower) மற்ற திரைப்படங்களிலிருந்து தனித்துவமாகத் தெரிந்து(Stood out) எங்களது கவனத்தை ஈர்த்தது, என்று  பாராட்டியுள்ளார்.


மேலும், ‘காகித மலர்’ திரைப்படத்தை ஜப்பான் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.


இந்தத் திரைப்படத்தில்  பணி புரிந்த எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத், ஒலி அமைப்பாளர் தபஸ் நாயக், செழியனின் உதவியாளர்கள் பிச்சுமணி, ஆர்.பி. ராஜா, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், பேச்சியப்பன், நடிகர் பராந்தக சோழன், நடிகை ஜனனி செண்பகா உள்ளிட்ட அனைவருக்கும், மற்றும் உயிரெழுத்து பதிப்பகம் சுதிர், அன்னம் பதிப்பகம் கதிர் மற்றும் பபாசி அமைப்பிற்க்கும் தயாரிப்பாளர் பிரேமா செழியன் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த வெற்றியும், அங்கீகாரமும், பாராட்டுகளும், அனைத்துமே "எங்கள் அன்பிற்குரிய செழியன் அவர்களின் திரைப்பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்"

என்றும் தெரிவித்துள்ளார். 


செழியனின் ‘காகித மலர்’ திரைப்படம் இனி பல்வேறு உலக நாடுகளிலும் தனது பயணத்தைத் தொடரவுள்ளது.


அவரது கலைப்பயணம் உலகெங்கும் தொடர்ந்து ஒலிக்கட்டும்!

 

இந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், இந்திய திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் முதன்முறையாக இணைந்து தமிழில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆர் எக்ஸ் - RX' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.


சில நேரங்களில் சில மனிதர்கள்', 'பாம் - Bomb' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'ஆர். எக்ஸ் - RX' . இதில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் கதையை ஹரிஹரன் ராஜு எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, ஜி. கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கே. மனோஜ் குமார் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். 


ட்ராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ் - நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இப்படத்திற்கு 'ஆர் எக்ஸ் - RX' என்ற டைட்டிலும், அதற்கான ஃபர்ஸ்ட் லுக் - செகண்ட் லுக் போஸ்டர்களையும் தீபாவளி திருநாளை முன்னிட்டு படக்குழுவினர் வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளனர். 


இதில் கதையின் நாயகியான ரெஜினா கசாண்ட்ரா - முக கவசத்தை அணிந்து தீர்க்கமான பார்வையுடன் தோன்றுவதும்... செகண்ட் லுக்கில் ரயிலில் பயத்துடன் பயணிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதும் ... படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. மேலும் 'ஆர் எக்ஸ்- RX' என்ற டைட்டில்-  நோயாளிகளை பரிசோதித்த பின் மருத்துவர்கள்.. அவர்களின் நோயை குணப்படுத்துவதற்காக பரிந்துரைக்கும்  பிரிஸ்கிரிப்ஷனில்.. இந்த ' RX' இடம் பிடித்திருக்கும் என்பதால்.. மெடிக்கல் மாஃபியாவை பற்றிய திரில்லர் படைப்பாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது. 


ஆர் எக்ஸ் - RX' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் தொடர்ச்சியாக வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு... திரை ஆர்வலர்களிடத்திலும் , இணையவாசிகளிடமும் ஏற்பட்டிருக்கிறது.


——————————————————-


நடிகர்கள்: - நாசர், ரெஜினா கசாண்ட்ரா , ரமேஷ் திலக் , ஸ்ரீஜா ரவி .. 


தொழில்நுட்பக் குழு


இயக்கம்: விஷால் வெங்கட்


எழுத்து : ஹரிஹரன் ராஜு 


வசனம் : ஆஷாமீரா ஐயப்பான் 


ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K 


இசை: ஹேஷம் அப்துல் வஹாப்


படத்தொகுப்பு: பிரசன்னா G.K


தயாரிப்பு வடிவமைப்பு: மனோஜ் குமார் R.K


ஆடை வடிவமைப்பு: ஜீவா காருண்யா


பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா, விஷ்ணு எடவன்.

 


ஒலி வடிவமைப்பு: அருண் S. மணி 

(Oli Sound Labs)


ஒலி கலவை: M.R. ராஜகிருஷ்ணன் (RK Studios)


ஒப்பனை: விஜய் ராஜ்


VFX மேற்பார்வையாளர்  :-  

G.E. அசோக் குமார்


DI :- Mango post 


வண்ணத் திருத்தம் :- ஃபிராங்க்ளின் (Mango Post)


விளம்பர வடிவமைப்பு:-  வியாகி


தயாரிப்பு நிறுவனங்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் & ஜீ ஸ்குவாட்.


தயாரிப்பு :- ஒய். ரவி சங்கர், நவீன் யெர்னேனி, லோகேஷ் கனகராஜ். 


இணைத் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி


தலைமைச் செயல் தயாரிப்பாளர்: 

ஏ. ஜெய்சம்பத்


தயாரிப்பு நிர்வாகி: பி. எல். பாலாஜி


தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: 

எம். கோவிந்தராஜ்


மக்கள் தொடர்பு :- சுரேஷ்சந்திரா, திரு

 

சென்டர் சீட் சினிமாஸ் (Center Seat Cinemas) விஜயராகவன் தயாரிப்பில், ஞானம் சுப்பரமணியனின் நிர்வாக மேலாண்மையில் உருவாகும் படம் ‘வன மடி’.


‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘புகைப்படம்’ உள்ளிட்ட அழகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


கால மாற்றங்கள் நம்மையும், நம் சந்ததிகளையும் ஒரு வலிமையான சுழிக்குள் இழுத்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.


இயல்பான மனிதர்கள் தங்களுக்குள் அன்பும், தேடுதலும் இயந்திரகதிக்குள் ஒளிந்துகொண்டுவிட்டன என்பதைத் தனது எளிய மொழியில் விஜய் ஆம்ஸ்ட்ராங் சொல்லியிருப்பதே ‘வன மடி’ படத்தின் கரு.


முற்றிலும் புதியவர்கள் நடித்துள்ள ‘வன மடி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளதுடன் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் விஜய் ஆம்ஸ்ட்ராங்.


அமெரிக்காவில் வசிக்கும் ராலே ராஜன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.


ராலே ராஜன் அமெரிக்காவில் நமது தமிழ்ச் செய்யுள்கள் பலவற்றை இசை வடிவமாக மாற்றும் வேலையைச் செய்து வருகிறார்.


இவரது இசையில் வன மடி படத்தில் மால்குடி சுபா ஒரு பாடல் பாடியிருக்கிறார்.


அதேபோல சூப்பர் சிங்கர் ஜூனியர் வெற்றியாளர் கிரிஷாங், சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons) திரைப்படத்தின் உணர்ச்சிப்பூர்வமான “ஆரிராரோ ஆரிரோ” பாடலைப் பாடியவர்… இந்தப் படத்திலும் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.


பாடல்களை ரமேஷ் வைத்யா எழுதியுள்ளார். ‘அழகு குட்டி செல்லம்’, ‘லால் சலாம்’ படங்களில் பணியாற்றிய பிரவீன் பாஸ்கர் இந்தப் படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.


படம் முழுமையாகத் தயாராகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 35 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அதில் 7 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, அவற்றில் 4 திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளையும் வென்றுள்ளது.


மீதமிருப்பவை விருதுகளின் அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கின்றன. அடுத்ததாக கோவாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இந்தியன் பனோரமாவிலும் இந்தப் படம் கலந்து கொள்ள உள்ளது.


இயக்குநர் விஜய் ஆம்ஸ்ட்ராங் படம் பற்றிக் கூறும்போது, “இப்படம் இயற்கை சம்பந்தப்பட்டது. தாய் மடி என்பது போல வன மடி என்ற பெயரை வைத்துள்ளோம். இந்தப் படம் எதிர்காலத் தலைமுறைக்கான படம் மட்டுமல்ல, குறிப்பாக அனைத்துப் பெற்றோர்களுக்குமான படமும் கூட.


திரைப்பட விழாக்களில் இப்படம் முக்கிய கவனம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.


இந்தப் படத்தை 6 முறை தேசிய விருது பெற்ற எடிட்டர் B. லெனின் பார்த்தார். படம் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட, அவர் தன்னுடைய தந்தை, இயக்குநர் பீம்சிங்கின் புத்தா பிக்சர்ஸ் என்கிற பேனரில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். அதுவே இப்படத்திற்குக் கிடைத்த சிறந்த விருதாகக் கருதுகிறேன்.


‘வன மடி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது” என்றார் இயக்குநர், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

 

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு RX எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, தெலுங்குத் திரையுலகில் ஸ்ரீமந்துடு, ரங்கஸ்தலம், உபென்னா மற்றும் மாபெரும் வெற்றிபெற்ற புஷ்பா உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம், பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்கத்திற்கும், வலுவான கதைக்களங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.


தெலுங்கு மட்டுமல்லாது, பிற மொழித்திரைப்படங்களையும் மைத்ரி நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் அஜித் குமார் நடித்த ’குட் பேட் அக்லி’ மற்றும் ’மொத ராத்திரி’ உள்ளிட்ட திரைப்படங்கள் தயாரித்து தமிழ் திரையுலகிலும் முத்திரை பதித்துள்ளது. தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து RX திரைப்படத்தை தயாரிக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.


முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், புதிய திறமையாளர்களுக்கும், புதுமையான கதைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். படைப்புச் சுதந்திரம், தயாரிப்பு அனுபவம், நிதி வலிமை மற்றும் விரிவான சந்தை வாய்ப்புகள் ஆகியவை ஒன்றிணைவதன் மூலம், வழக்கமான வணிகத் திரைப்படங்களின் எல்லைகளைக் கடந்து தனித்துவமான கதைகளை உருவாக்க இதுபோன்ற கூட்டணி உதவும். 


RX திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அவருடன் நடிகர் நாசர் இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். 'Truth Always Demands a Voice!' என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் கதைக்களத்தை வெளிப்படுத்தாமல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் பாம் ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு ஆஷாமீரா ஐயப்பன் வசனங்கள் எழுதியுள்ளார். ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் சென்னையில் நிறைவடைந்துள்ளது.


தொழில்நுட்பக் குழுவில் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பாளராகவும், எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவாளராகவும், ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பாளராகவும், கே. மனோஜ் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கும் இப்படம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. பிரதீப் பூபதி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.


RX திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Pageviews