இந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், இந்திய திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் முதன்முறையாக இணைந்து தமிழில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆர் எக்ஸ் - RX' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.


சில நேரங்களில் சில மனிதர்கள்', 'பாம் - Bomb' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'ஆர். எக்ஸ் - RX' . இதில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் கதையை ஹரிஹரன் ராஜு எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, ஜி. கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கே. மனோஜ் குமார் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். 


ட்ராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ் - நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இப்படத்திற்கு 'ஆர் எக்ஸ் - RX' என்ற டைட்டிலும், அதற்கான ஃபர்ஸ்ட் லுக் - செகண்ட் லுக் போஸ்டர்களையும் தீபாவளி திருநாளை முன்னிட்டு படக்குழுவினர் வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளனர். 


இதில் கதையின் நாயகியான ரெஜினா கசாண்ட்ரா - முக கவசத்தை அணிந்து தீர்க்கமான பார்வையுடன் தோன்றுவதும்... செகண்ட் லுக்கில் ரயிலில் பயத்துடன் பயணிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதும் ... படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. மேலும் 'ஆர் எக்ஸ்- RX' என்ற டைட்டில்-  நோயாளிகளை பரிசோதித்த பின் மருத்துவர்கள்.. அவர்களின் நோயை குணப்படுத்துவதற்காக பரிந்துரைக்கும்  பிரிஸ்கிரிப்ஷனில்.. இந்த ' RX' இடம் பிடித்திருக்கும் என்பதால்.. மெடிக்கல் மாஃபியாவை பற்றிய திரில்லர் படைப்பாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது. 


ஆர் எக்ஸ் - RX' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் தொடர்ச்சியாக வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு... திரை ஆர்வலர்களிடத்திலும் , இணையவாசிகளிடமும் ஏற்பட்டிருக்கிறது.


——————————————————-


நடிகர்கள்: - நாசர், ரெஜினா கசாண்ட்ரா , ரமேஷ் திலக் , ஸ்ரீஜா ரவி .. 


தொழில்நுட்பக் குழு


இயக்கம்: விஷால் வெங்கட்


எழுத்து : ஹரிஹரன் ராஜு 


வசனம் : ஆஷாமீரா ஐயப்பான் 


ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K 


இசை: ஹேஷம் அப்துல் வஹாப்


படத்தொகுப்பு: பிரசன்னா G.K


தயாரிப்பு வடிவமைப்பு: மனோஜ் குமார் R.K


ஆடை வடிவமைப்பு: ஜீவா காருண்யா


பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா, விஷ்ணு எடவன்.

 


ஒலி வடிவமைப்பு: அருண் S. மணி 

(Oli Sound Labs)


ஒலி கலவை: M.R. ராஜகிருஷ்ணன் (RK Studios)


ஒப்பனை: விஜய் ராஜ்


VFX மேற்பார்வையாளர்  :-  

G.E. அசோக் குமார்


DI :- Mango post 


வண்ணத் திருத்தம் :- ஃபிராங்க்ளின் (Mango Post)


விளம்பர வடிவமைப்பு:-  வியாகி


தயாரிப்பு நிறுவனங்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் & ஜீ ஸ்குவாட்.


தயாரிப்பு :- ஒய். ரவி சங்கர், நவீன் யெர்னேனி, லோகேஷ் கனகராஜ். 


இணைத் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி


தலைமைச் செயல் தயாரிப்பாளர்: 

ஏ. ஜெய்சம்பத்


தயாரிப்பு நிர்வாகி: பி. எல். பாலாஜி


தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: 

எம். கோவிந்தராஜ்


மக்கள் தொடர்பு :- சுரேஷ்சந்திரா, திரு

 

சென்டர் சீட் சினிமாஸ் (Center Seat Cinemas) விஜயராகவன் தயாரிப்பில், ஞானம் சுப்பரமணியனின் நிர்வாக மேலாண்மையில் உருவாகும் படம் ‘வன மடி’.


‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘புகைப்படம்’ உள்ளிட்ட அழகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


கால மாற்றங்கள் நம்மையும், நம் சந்ததிகளையும் ஒரு வலிமையான சுழிக்குள் இழுத்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.


இயல்பான மனிதர்கள் தங்களுக்குள் அன்பும், தேடுதலும் இயந்திரகதிக்குள் ஒளிந்துகொண்டுவிட்டன என்பதைத் தனது எளிய மொழியில் விஜய் ஆம்ஸ்ட்ராங் சொல்லியிருப்பதே ‘வன மடி’ படத்தின் கரு.


முற்றிலும் புதியவர்கள் நடித்துள்ள ‘வன மடி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளதுடன் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் விஜய் ஆம்ஸ்ட்ராங்.


அமெரிக்காவில் வசிக்கும் ராலே ராஜன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.


ராலே ராஜன் அமெரிக்காவில் நமது தமிழ்ச் செய்யுள்கள் பலவற்றை இசை வடிவமாக மாற்றும் வேலையைச் செய்து வருகிறார்.


இவரது இசையில் வன மடி படத்தில் மால்குடி சுபா ஒரு பாடல் பாடியிருக்கிறார்.


அதேபோல சூப்பர் சிங்கர் ஜூனியர் வெற்றியாளர் கிரிஷாங், சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons) திரைப்படத்தின் உணர்ச்சிப்பூர்வமான “ஆரிராரோ ஆரிரோ” பாடலைப் பாடியவர்… இந்தப் படத்திலும் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.


பாடல்களை ரமேஷ் வைத்யா எழுதியுள்ளார். ‘அழகு குட்டி செல்லம்’, ‘லால் சலாம்’ படங்களில் பணியாற்றிய பிரவீன் பாஸ்கர் இந்தப் படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.


படம் முழுமையாகத் தயாராகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 35 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அதில் 7 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, அவற்றில் 4 திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளையும் வென்றுள்ளது.


மீதமிருப்பவை விருதுகளின் அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கின்றன. அடுத்ததாக கோவாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இந்தியன் பனோரமாவிலும் இந்தப் படம் கலந்து கொள்ள உள்ளது.


இயக்குநர் விஜய் ஆம்ஸ்ட்ராங் படம் பற்றிக் கூறும்போது, “இப்படம் இயற்கை சம்பந்தப்பட்டது. தாய் மடி என்பது போல வன மடி என்ற பெயரை வைத்துள்ளோம். இந்தப் படம் எதிர்காலத் தலைமுறைக்கான படம் மட்டுமல்ல, குறிப்பாக அனைத்துப் பெற்றோர்களுக்குமான படமும் கூட.


திரைப்பட விழாக்களில் இப்படம் முக்கிய கவனம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.


இந்தப் படத்தை 6 முறை தேசிய விருது பெற்ற எடிட்டர் B. லெனின் பார்த்தார். படம் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட, அவர் தன்னுடைய தந்தை, இயக்குநர் பீம்சிங்கின் புத்தா பிக்சர்ஸ் என்கிற பேனரில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். அதுவே இப்படத்திற்குக் கிடைத்த சிறந்த விருதாகக் கருதுகிறேன்.


‘வன மடி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது” என்றார் இயக்குநர், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

 

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு RX எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, தெலுங்குத் திரையுலகில் ஸ்ரீமந்துடு, ரங்கஸ்தலம், உபென்னா மற்றும் மாபெரும் வெற்றிபெற்ற புஷ்பா உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம், பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்கத்திற்கும், வலுவான கதைக்களங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.


தெலுங்கு மட்டுமல்லாது, பிற மொழித்திரைப்படங்களையும் மைத்ரி நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் அஜித் குமார் நடித்த ’குட் பேட் அக்லி’ மற்றும் ’மொத ராத்திரி’ உள்ளிட்ட திரைப்படங்கள் தயாரித்து தமிழ் திரையுலகிலும் முத்திரை பதித்துள்ளது. தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து RX திரைப்படத்தை தயாரிக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.


முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், புதிய திறமையாளர்களுக்கும், புதுமையான கதைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். படைப்புச் சுதந்திரம், தயாரிப்பு அனுபவம், நிதி வலிமை மற்றும் விரிவான சந்தை வாய்ப்புகள் ஆகியவை ஒன்றிணைவதன் மூலம், வழக்கமான வணிகத் திரைப்படங்களின் எல்லைகளைக் கடந்து தனித்துவமான கதைகளை உருவாக்க இதுபோன்ற கூட்டணி உதவும். 


RX திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அவருடன் நடிகர் நாசர் இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். 'Truth Always Demands a Voice!' என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் கதைக்களத்தை வெளிப்படுத்தாமல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் பாம் ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு ஆஷாமீரா ஐயப்பன் வசனங்கள் எழுதியுள்ளார். ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் சென்னையில் நிறைவடைந்துள்ளது.


தொழில்நுட்பக் குழுவில் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பாளராகவும், எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவாளராகவும், ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பாளராகவும், கே. மனோஜ் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கும் இப்படம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. பிரதீப் பூபதி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.


RX திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் விரைவில் வெளியாகும்.

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் மூலம் ARK சரவன் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, வெளியீட்டிற்கு தயாராகி வரும் இதன் இரண்டாம் பாகத்தையும் இவரே எழுதி இயக்கியுள்ளார்.


சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.


படத்தின் இயக்குநர் ARK சரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும்  கிட்டத்தட்ட மீண்டும் இடம்பெற்றுள்ளனர். ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனே போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் மற்றும் முருகானந்தம் சார் எனப் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.


இவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கதையில் எப்படி கனெக்ட் ஆகிறார்கள், எந்த இடத்தில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும்போது சர்ப்ரைஸாக இருக்கும். முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அதே நகைச்சுவை, சாகசம், ஆக்‌ஷன் என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் அப்படியே இருக்கும். மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளது. 


டிரெய்லரில் படத்தின் சிறிய முன்னோட்டம் வெளியாகும். அதன்பிறகு, படம் பார்க்கும்போது இன்னும் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்காகக் காத்திருக்கின்றன. முதல் பாகத்தில் நிக்கியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. அதேபோல், இந்தப் பாகத்திலும் அவருடைய கதாபாத்திரம் வலுவானதாகவும் ஸ்பெஷலாகவும் இருக்கும். படம் வெளியாகும்போது அதை ரசிகர்கள் தெரிந்துகொள்வார்கள்” என்றார்.


‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள் மற்றும் துர்கம் சௌத்ரி ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.


நடிகர்கள்: ஆதி மற்றும் பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


எழுத்து, இயக்கம்: ARK சரவன்.

தயாரிப்பாளர்கள்: சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள், துர்கம் சௌத்ரி,

தயாரிப்பு நிறுவனங்கள்: பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா,

இசை: திபு நினன் தாமஸ்,

ஒளிப்பதிவு: தீபக் டி. மேனன், பி.வி. சங்கர்,

கலை இயக்கம்: என்.கே. ராகுல்,

படத்தொகுப்பு: திருமலை ராஜன் ஆர்,

வசனம்: ராஜேஷ் கண்ணன்,

சண்டைப் பயிற்சி: பிசி ஸ்டன்ட்ஸ்,

நடன அமைப்பு: ரகு தாபா,

ஆடை வடிவமைப்பு: ஏ. கீர்த்திவாசன்

தயாரிப்பு நிர்வாகி: எஸ்.எஸ். ஸ்ரீதர்,

செயல் தயாரிப்பாளர்: பி. மோகன்

 

குழந்தைகள் தினத்தில் வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள், முதியோர் மற்றும் சிறப்புத் தேவையுடையோருக்கு முதல் விமானப் பயண அனுபவத்தை வழங்கும் ரெயின்டிராப்ஸ் – வானமே எல்லை!

வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கனவுகளுக்கு சிறகுகள் அளிக்கும் வகையில், ரெயின்டிராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷன் சார்பில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ‘ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை’ என்ற சிறப்பான முன்னெடுப்பு நடைபெற உள்ளது.


இதன் ஒரு பகுதியாக, வரும் நவம்பர் 14, 2026, சனிக்கிழமை, சென்னையிலிருந்து திருச்சிக்கு 50 பயனாளிகள் விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்களில் பலருக்கு இதுவே முதல் விமானப் பயணமாக அமைய உள்ளது. பொருளாதாரச் சூழல் காரணமாக இதுவரை எட்ட முடியாத கனவாக இருந்த விமானப் பயணம், இந்த முன்னெடுப்பின் மூலம் நனவாக உள்ளது.


பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் மகிழ்ச்சிப் பயணம்!

இந்தப் பயணத்தில் ஆனந்தம் கல்வி மையம், ஆனந்தம் சிறப்புப் பள்ளி, சேவாலயா, மாற்றம்  ஃபவுண்டேஷன் மற்றும் ரெயின்டிராப்ஸ் கல்வி உதவித்திட்டத்தின் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், ரெயின்டிராப்ஸ் அன்பகம் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்கள், பார்வைத்திறன் குறைபாடுடைய ஒரு மாணவர் மற்றும் ஒரு திருநம்பி ஆகியோரும் இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர்.


குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்களை ஒரே பயணத்தில் ஒன்றிணைப்பதன் மூலம், வயது, உடல்திறன், பொருளாதார நிலை ஆகியவற்றைக் கடந்து அனைவருக்கும் சமமான மகிழ்ச்சியும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை இந்த முன்னெடுப்பு வெளிப்படுத்துகிறது.


தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களையும் உள்ளடக்கிய ரெயின்டிராப்ஸ் பயணம்!

ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை முன்னெடுப்பின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, இந்த ஆண்டு நடைபெறும் சென்னை – திருச்சி விமானப் பயணத்தின் மூலம், கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னெடுப்பில் தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களையும் ரெயின்டிராப்ஸ் உள்ளடக்கியுள்ளது.


வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு முதல் விமானப் பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, பல ஆண்டுகளாகப் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது. இந்த ஆண்டின் பயணம், ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை முயற்சியின் பயணத்தில் மற்றுமொரு மகிழ்ச்சியான மைல்கல்லாக அமைவதுடன், இன்னும் பலரது கனவுகளுக்குச் சிறகளிக்கும் ஊக்கமாகவும் அமையும்.


வானில் தொடங்கி, சோழர்களின் வரலாற்றுப் பாதையில் ஒரு பயணம்!

திருச்சி சென்றடைந்ததும், குழுவினர் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணையை (Grand Anicut) பார்வையிட உள்ளனர். கரிகால சோழனால் கட்டப்பட்ட உலகின் பழமையான பயன்பாட்டில் உள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்புகளில் ஒன்றான கல்லணை, தமிழர்களின் பொறியியல் திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் சென்று உலகப் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் திருக்கோயில் (தஞ்சைப் பெரிய கோயில்) பார்வையிட உள்ளனர். யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கோயில், சோழர் காலக் கட்டிடக்கலையின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது.


இந்தச் சுற்றுலா மற்றும் பாரம்பரியப் பயணத்தைத் தொடர்ந்து, அனைவரும் ரயில் மூலம் சென்னைக்குத் திரும்ப உள்ளனர். முதல் விமானப் பயணம், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிடுதல், புதிய அனுபவங்கள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து உருவாகும் அன்பான பிணைப்பு என இந்தப் பயணம் பங்கேற்பாளர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைப் பரிசளிக்க உள்ளது.


ஆனந்தம் மற்றும் VGP உலகத் தமிழ்ச் சங்கம் ஆதரவுடன்!

இந்த ஆண்டின் ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை முன்னெடுப்பு, ஆனந்தம் டிரஸ்ட் மற்றும் VGP உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெறுகிறது. இந்தச் சிறப்புப் பயணத்தில் ரெயின்டிராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷனின் நல்லெண்ணத் தூதர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரைஹானா மற்றும் VGP குழுமத்தின் டாக்டர் வி.ஜி. சந்தோசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். ரெயின்டிராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அரவிந்த் ஜெயபால் மற்றும் ரெயின்டிராப்ஸ் குழுவினரும் சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர்.


நிறுவனர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில்: “நம்மில் பலருக்கு விமானப் பயணம் என்பது ஒரு சாதாரண அனுபவமாக இருக்கலாம். ஆனால், இந்தக் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அது வாழ்நாள் கனவாக இருக்கிறது. அவர்களுக்கு விமானப் பயணத்தை மட்டும் வழங்குவது எங்கள் நோக்கமல்ல; அவர்கள் மதிக்கப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள், அவர்களுடைய கனவுகளும் முக்கியமானவை என்ற உணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.

இந்த ஆண்டு பயணத்தின் மூலம், கடந்த பல ஆண்டுகளாக எங்களது வானமே எல்லை முன்னெடுப்பில் தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களையும் உள்ளடக்கியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை என்பது வெறும் விமானப் பயணம் மட்டுமல்ல; வசதி வாய்ப்புகள் குறைந்தவர்களின் கனவுகளுக்கு சிறகளிக்கும் ஒரு தொடர் சமூக முன்னெடுப்பாகும். கனவுகளுக்கு வயது கிடையாது, திறன்களின் அடிப்படையில் கனவுகள் கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அழகான அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

 

வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அன்பும், அக்கறையும் மனதில் நீங்காத நினைவுகளாக மாறிவிடும். அந்த வகையில், சோனி விழாவில் ஒளிபரப்பாகும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’  நிகழ்ச்சி சமையல் போட்டியைத் தாண்டி, பல உணர்வுப்பூர்வமான தருணங்களையும் அழகான உறவுகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், நிகழ்ச்சியின் வரவிருக்கும் எபிசோடில் நடிகை சாமந்தா ரூத் பிரபுவுக்கு போட்டியாளர்கள் அளிக்கும் இன்ப அதிர்ச்சி அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சாமந்தாவின் நிகழ்ச்சிப் பயணத்தைப் பாராட்டும் வகையில், போட்டியாளர்கள் இணைந்து அவருக்காக ஒரு சிறப்பு காணொளியைத் தயாரித்துள்ளனர். அதில் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற மறக்க முடியாத தருணங்கள் இடம்பெற்றுள்ளன. அதைப் பார்த்து உணர்ச்சிவசப்படும் சாமந்தாவுக்கு, குழந்தைகளுக்கான உடைகள், பொம்மைகள், ஓவியங்கள் மற்றும் சாக்லேட்டுகள் என அன்புடன் தேர்ந்தெடுத்த பரிசுகளை வழங்கி மேலும் ஆச்சரியப்படுத்துகின்றனர்.


இதில் மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைவது போட்டியாளர் ஜனனி பகிர்ந்துகொள்ளும் அனுபவம். தனது சகோதரி வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தைச் சந்தித்தபோது, சாமந்தாவின் வாழ்க்கைப் பயணம் அவருக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்ததாக ஜனனி கூறுகிறார். சாமந்தாவின் தன்னம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட தனது சகோதரி, மீண்டும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது உடற்பயிற்சிப் பயிற்சியாளராகவும் யோகா பயிற்றுநராகவும் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கிறார். ஒருவரின் வாழ்க்கைப் பயணம் மற்றொருவருக்கு எப்படியெல்லாம் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.


தொடர்ந்து, தனது சிறுவயது நினைவுகளையும் சாமந்தா போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். பல்லாவரத்தில் வளர்ந்த தனது குழந்தைப் பருவத்தை நினைவுகூரும் அவர், தனது வீட்டின் அருகே இருந்த மலையுடன் தொடர்புடைய பல இனிமையான நினைவுகளைப் பகிர்கிறார். படிப்பில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியான தருணங்கள் முதல் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளால் மனம் வருந்திய நாட்கள் வரை, தனது வாழ்க்கையின் பல்வேறு தருணங்களுக்கு அந்த இடம் சாட்சியாக இருந்ததாகக் கூறுகிறார்.


திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் தனக்கு, ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’  நிகழ்ச்சி சாமந்தாவாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியதாகக் கூறுகிறார். போட்டியாளர்களுடன் பழகவும், அவர்களது கனவுகளையும் வாழ்க்கைப் பயணங்களையும் தெரிந்துகொள்ளவும் இந்த நிகழ்ச்சி உதவியதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார். மேலும், தனது கர்ப்ப கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் அவர், முதல் ஏழு மாதங்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும், அதன் பிறகு சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்ட உணவுகளை ரசித்து உண்டதாகவும் கூறுகிறார். இதைக் கேட்கும் RJ விஜய், பிறப்பதற்கு முன்பே குழந்தை பலவிதமான உணவுகளின் சுவையை அறிந்துவிட்டதாக நகைச்சுவையாகக் கூற, அரங்கமே கலகலப்பாகிறது.


இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி, போட்டியாளர்களுடன் உருவான நட்பும் அன்பும்தான் என்று சாமந்தா நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். அவர்கள் அளித்த அன்புக்கும் மறக்க முடியாத நினைவுகளுக்கும் நன்றி கூறும் அவர், நிகழ்ச்சி முடிந்த பிறகும் இந்த நட்பு தொடர்ந்து நீடிக்கும் என உறுதியளிக்கிறார்.


Endemol Shine India தயாரிப்பில் உருவாகும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி, சமையல் மூலம் மனிதர்களை ஒன்றிணைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குள் உருவாகும் அன்பு, நட்பு மற்றும் உணர்வுப்பூர்வமான நினைவுகளையும் அழகாக வெளிப்படுத்தி வருகிறது.


‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு சோனி விழா  ( Sony VIZHA ) தொலைக்காட்சியில் காணலாம். மேலும், சோனி லிவ் ( Sony LIV ) தளத்திலும் பார்த்து ரசிக்கலாம்.

 

Following the massive theatrical success of Bethlehem Kudumba Unit, leading distribution company Future Runup Films has announced its next major theatrical releases. The company has officially acquired the South Indian theatrical distribution rights for two highly anticipated Malayalam films Bouma, a mystery thriller produced by Advus Films, and Deux, an action-crime drama produced by Anwar Rasheed Entertainment.

Anup Kumar and Arun Narayanan of Future Runup Films have been focusing on bringing quality, content-driven films to the big screen. Their vision extends beyond Tamil Nadu, with plans to expand across all South Indian territories and eventually reach a pan-India audience. As part of this ambitious expansion, Future Runup Films will leverage its strong distribution network to bring these films to a wider audience across South India.

Bouma will be released theatrically in Tamil Nadu, Andhra Pradesh, Telangana and Puducherry, while Deux will hit theatres in Tamil Nadu, Karnataka, Andhra Pradesh and Telangana.

Written and directed by Regin S. Babu, Bouma features an ensemble cast comprising Dileesh Pothan, Sagar Surya, Vineeth and Aditi Balan. The film's background score, composed by Christo Xavier, adds further intensity and mystery to this gripping thriller.

Directed by Amal Neerad, Deux is a stylish action-crime drama featuring an impressive ensemble cast that includes Naslen, Kunchacko Boban, Tovino Thomas, Soubin Shahir, Sharafudheen, Sreenath Bhasi and Rajisha Vijayan. The film's dialogues are penned by Unni R., while Christo Xavier has composed both the songs and the background score.

Speaking about the association, Anup Kumar said:

"Following the tremendous response to Bethlehem Kudumba Unit, we are delighted to collaborate with Advus Films and Anwar Rasheed Entertainment to bring these two exceptional films to audiences beyond Kerala. Director Regin S. Babu has crafted an extraordinary mystery thriller in Bouma, backed by a talented cast and the brilliant music of Christo Xavier. Similarly, Amal Neerad's Deux brings a high-quality action-crime drama to the big screen with an impressive ensemble cast. We are confident that audiences across Andhra Pradesh, Telangana, Tamil Nadu, Karnataka and Puducherry will enjoy an exciting theatrical experience.

The official release dates, trailer launches and complete theatre lists for both films will be announced soon through the companies' official distribution channels.

 

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஜே.டி. சக்கரவர்த்தி இணைந்து நடித்துள்ள அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘BANG’ விரைவில் தமிழ் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.


எஸ்.எஸ். சமீர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தனது ஸ்டைலான நடிப்பு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ஜே.டி. சக்கரவர்த்தியும் தனது தனித்துவமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். இருவரும் இணைந்து திரையில் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு இப்படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக அமைந்துள்ளது.


குட்டி ராதிகா, அர்ச்சனா கௌதம், சோனி சரிஷ்டா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ராம் ஜெகன், கே. விஸ்வநாத், அசோக் குமார், ஆபித் பூஷண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மும்பை, பெங்களூரு மற்றும் பாங்காக் போன்ற நகரங்களில் விலை உயர்ந்த கார்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு கூடுதல் சிறப்பைச் சேர்க்கின்றன.


DSR Films, Mobeen Production மற்றும் SAMEER Productions ஆகிய நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் இப்படத்தை M.D. சலார் பேக் தயாரித்துள்ளார்.இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பி. சுபாஷினி ரெட்டி பணியாற்றியுள்ளார்.


அமீர்லால் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுபாஷ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சைமன் கே. கிங் அமைத்துள்ளார். பிரபு மற்றும் நாகராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். நடன இயக்கத்தை அம்மா ராஜசேகர் கவனித்துள்ளார். சண்டைக் காட்சிகளை கிக்காஸ் காளி அமைத்துள்ளார். இணை இயக்குநராக பி. சேதுபதி பணியாற்றியுள்ளார்.


பிரம்மாண்டமான தயாரிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, அர்ஜுன் – ஜே.டி. சக்கரவர்த்தியின் வலுவான நடிப்பு என ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ள ‘BANG’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Pageviews