தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். தற்போது ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ திரையுலக ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தினர் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. 


இயக்குநர் விஷால் வெங்கட், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான 'பாம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்ற 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தையும், 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி' இணையத் தொடரையும் இயக்கியுள்ளார்.


புதிய படம் குறித்து இயக்குநர் விஷால் வெங்கட் கூறுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான அனுபவம். ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பு எனக்கு முழுப் படப்பிடிப்பிலும் ஊக்கமளித்தது. நாசர் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.


ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டதாவது, “விஷால் வெங்கட் மிகச்சிறந்த இயக்குநர். அவரது ஐடியா எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். கதை விவாதம் தொடங்கி தயாரிப்பு மற்றும் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் வரை அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். நாங்கள் அனைவரும் இணைந்து ரசிகர்களுக்கு முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ணந்து கொண்டதாவது, “தமிழ் சினிமாவில் எங்களது பயணம் மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு திரைப்படமும் இந்தத் துறையின் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்பை வழங்குகிறது. 


முன்தயாரிப்புப் பணிகளின்போது சொன்னபடியே இயக்குநர் விஷால் வெங்கட் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்படம் குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இப்படமும் மற்றுமொரு பெருமைமிக்க படைப்பாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றனர்.


தொழில்நுட்பக்குழு விவரம்:


கதை: ஹரிஹரன் ராஜு,

இசையமைப்பாளர்: ஹேஷம் அப்துல் வஹாப்,

ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே.,

படத்தொகுப்பு: பிரசன்னா ஜி.கே.,

கலை இயக்கம்: மனோஜ் குமார் கே.,

வசனங்கள்: ஆஷாமீரா ஐயப்பன்,

தலைமைச் செயல் தயாரிப்பாளர்கள்: ஏ. ஜெய் சம்பத், தினேஷ் நரசிம்மன்,

இணைத் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி,

ஆடை வடிவமைப்பு: ஜீவா காருண்யா,

விளம்பர வடிவமைப்பு: வியாகி

 

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


இணைத்தயாரிப்பாளர் ஷிவானி சுப்ரமணி, " இயக்குநர்கள் பேரரசு சார், உதயகுமார் சார் இவர்களது படங்கள் பார்த்துதான் சினிமா மீது ஆர்வமே வந்தது. தனஞ்செயன் சாருடன் பேசும்பொழுது எப்பொழுதுமே ஒரு பாசிட்டிவ் வைப் இருக்கும். டி. இமான் எங்கள் படத்திற்கு பெரும் பலம். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இயக்குநராக என் அம்மா படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்".


கலை இயக்குநர் முனி கிருஷ்ணன், " படம் சிறப்பாக வந்துள்ளது"


ஒளிப்பதிவாளர் ராஜா, "படத்தில் முழு அர்ப்பணிப்புடன் அனைவரும் வேலை செய்திருக்கிறோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள்".


நடிகர் ஜெயப்பிரகாஷ், " படத்தின் கதை எனக்கு முழுதாக தெரியாது. நான் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே தெரியும். ஆனால், இப்பொழுது டிரெய்லர் பார்க்கும்பொழுது அற்புதமாக வந்துள்ளது. சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரை இயக்குநர் தேர்வு செய்துள்ளார். தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


தயாரிப்பாளர் தனஞ்செயன், "சினிமா மீது உள்ள ஆர்வத்தால் வேறு துறையில் இருந்து இயக்குநர் மலர்விழி சினிமாவுக்குள் வந்திருக்கிறார். படம் பார்த்தேன். வித்தியாசமாக சுவாரசியமாக உள்ளது. சமீப காலமாக தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. நல்ல வசூலும் இருக்கிறது. அந்த வரிசையில் இந்தப் படமும் இணைய வேண்டும். தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பல கோரிககைகள் தமிழக அரசிற்கு முன்வைத்திருக்கிறோம். அவை ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.


இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “தமிழ் சினிமாவை நம் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. அதனால் தான் இங்கிருந்து முதலமைச்சர்கள் உருவாகிறார்கள். வேறு துறையில் இருந்து சினிமாவிற்கு வந்து உள்ள இயக்குநர் மலர்விழி மற்றும் அவரது மகளுக்கு வாழ்த்துக்கள். இந்த படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் ஆதரவு தேவை. இந்த படத்தில் நடித்த மற்றும் பணிபுரிந்த அனைவரும் மிகப்பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும். வாழ்த்துக்கள்".


இயக்குநர் பேரரசு, " பள்ளிக்கூடம் நடத்தும் ஒருவர் படம் எடுத்திருக்கிறார் என்றால் நிச்சயம் நல்ல கதையை தான் சொல்லி இருப்பார். இயக்குநர் மலர்விழி மீது அந்த நம்பிக்கை உள்ளது. இளையராஜாவுக்கு அடுத்து மனதை தொடும் இசை தருபவர் இமான் தான். சந்தோஷ் பிரதாப் மற்றும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்பதை டிரெய்லர் சொல்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்".


எடிட்டர் கலைவாணன், " சின்ன படங்கள் தான் என்னைப் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களை வாழ வைக்கும். இவர்களை வாழ்த்தவில்லை என்றாலும் இவர்களை பாதுகாக்க வேண்டும். இதே பதிவு செய்யவே இங்கு வந்தேன். மலர்விழி மேடம் கஷ்டப்பட்டு படம் எடுத்து இருக்கிறார். படத்தை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடுங்கள்".


பாடலாசிரியர் மோகன்ராஜா, "இந்தப் படத்தில் உள்ள ஜோஜோ பாடலை நான் தான் எழுதினேன். மனதுக்கு நிறைவான பாடல் இது. இமானுடன் இணைந்து பல படங்கள் பணிபுரிந்து உள்ளேன். இந்த வாய்ப்புக்கு நன்றி. இயக்குநர் மலர்விழி மேடமும் நானும் சென்னையில் ஒரே ஏரியா தான். படம் நிச்சயம் வெற்றி பெறும். சந்தோஷ் இன்னும் நிறைய படங்களில் கதாநாயகனாக நடிக்க வேண்டும். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி".


'பிளாஸ்ட்' பட இயக்குநர் சுபாஷ், " இயக்கம், தயாரிப்பு இரண்டையும் ஒருவரே செய்கிறார்கள் என்ற செய்தி கேட்போது ஆச்சரியமாக இருந்தது. இந்த உழைப்புக்காகவே படம் நிச்சயம் வெற்றி பெறும். கடினமாக உழைக்கும் சந்தோஷ் ப்ரோ இன்னும் பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும். இமான் இசை அருமை. நிச்சயம் உங்கள் அனைவரது ஆதரவும் இந்த படத்திற்கு வேண்டும்".


நடிகர் விதார்த், "நடிகர் பிரதாப் மிகவும் மென்மையானவர், எல்லோரிடமும் அன்பாக பழகுவார். அவருக்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும். தனஞ்செயன் சார் இந்த படம் பார்த்து வந்திருக்கிறார் என்றால் படம் நிச்சயம் பிரமாதமாக வந்திருக்கிறது. என்னுடைய இசையமைப்பாளர் இமான் ஆதரவு இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்".


நடிகை பவ்யா, " எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மலர்விழி மேமுக்கு நன்றி. கடினமாக உழைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் படக்குழுவினருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இமான் சாரின் இசை அற்புதம். ஜோ ஜோ பாடல் எனக்கு பர்சனலாக கனெக்ட் ஆனது. இது வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம். எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் ".


நடிகை புஜிதா, " சிக்னல் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். எனக்கு வாய்ப்பு கொடுத்த மலர் மேமுக்கு நன்றி. மிகவும் திறமையான, பாசிட்டிவான கோ-ஸ்டார் சந்தோஷ். பவ்யாவுடன் காம்பினேஷன் இல்லை. ஆனால், அவரை எனக்கு முன்பே தெரியும். இமான் சாரின் இசை மேஜிக். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி".


நடிகர் சந்தோஷ், "இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த மலர் மேமுக்கு நன்றி. நாங்கள் எல்லோரும் இந்த படத்தின் கிரீடம் என்றால் அதன் மேல் உள்ள வைரம் இசையமைப்பாளர் இமான் சார் தான். அவருடைய பாடலுக்கு நடனமாடி இருப்பது மகிழ்ச்சி. பல வருடங்கள் கழித்து சினிமாவில் ஒரு திரைப்படத்தில் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறேன் என்றால் அது சிக்னல் படத்தில் தான். சமூகத்தில் பெண்கள் பலதுறைகளில் முன்னேறி விட்டார்கள். என்றுமே அவர்களுக்கு தான் முதலிடம். எப்போதும் பல தடைகள் இருந்தாலும் அதை எல்லாம் எதிர்க்கவும் தாண்டி வரவும் கற்று விட்டோம். அதனால் மலர்விழி மேடம் பெரிய இடத்திற்கு செல்வார். படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவும் நிச்சயம் தேவை".


இயக்குநர் மலர்விழி நடேசன், "இது என்னுடைய இரண்டாவது படம். நான் ரசித்த படங்களின் இயக்குநர்களான உதயகுமார் சார், பேரரசு சார் என இங்கு வந்திருக்கும் பலரின் படங்களுக்கு நான் ரசிகை. அவர்கள் என் படத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வாழ்த்த வந்திருப்பது கனவு நனவான தருணம். தனஞ்செயன் சாருக்கு படம் பிடித்திருப்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது. படத்திற்கு இசை மிக முக்கியம் என்பது என் எண்ணம். இந்தப் படத்திற்கு இமான் சாரின் இசை மிகப்பெரிய பலம். இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதற்கு மிகப்பெரிய பங்களிப்பு இமான் சாருக்கு உள்ளது. அவருக்கு நன்றி. சந்தோஷ், புஜிதா, பவ்யா மற்றும் என்னுடைய தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் உங்கள் அனைவரது ஆதரவும் இந்தப் படத்திற்கு தேவை".


இசையமைப்பாளர் டி. இமான், "இந்தப் படத்தின் கதை என்பதை தாண்டி பெண் இயக்குனருடன் எனது பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த படத்திற்கு இசையமைத்தேன். கல்வியாளர் இயக்குநராக சினிமாவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். சந்தோஷ பிரதாப் நிச்சயம் பெரிய இடத்திற்கு செல்வார். ஹீரோயின்ஸ் அழகாக நடித்திருக்கிறார்கள். படத்திற்கு சப்போர்ட் செய்ய வந்துள்ள விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்"

 

இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது இரண்டாவது திரைப்படமான ‘டெத் ரயில்வே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளை தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படத்தை இயக்குகிறார் தரணி ராசேந்திரன்.


இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த 1944 ஆம் ஆண்டில், ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை இப்படம் பின்னணியாகக் கொண்டுள்ளது என்பதை கிளிம்ப்ஸ் நமக்கு காட்டுகிறது. இந்தியா தனது சொந்த மண்ணில் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அதே வேளையில், இந்திய வீரர்கள் தொலைதூர எல்லைகளில் அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகம் அறியப்படாத இந்த வரலாற்றுப் பக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டெத் ரயில்வே’ திரைப்படம் போர்க்களத்தின் தீவிரத்துடன் உணர்வுப்பூர்வமான காதலையும் இதில் பேசுகிறது. 


இப்படத்தில் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில், இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ மற்றும் ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். திறமையான நடிகர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படம், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பின்னணியில் வலுவான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என எதிர்பார்க்கலாம்.


‘யாத்திசை’ படத்தின் மூலம் பிரம்மாண்டமான வரலாற்றுக் கதை சொல்லல் மற்றும் தனித்துவமான திரைப்பட உருவாக்கத்தால் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் தரணி ராசேந்திரன். தற்போது விரிவான களத்துடனும், சுவாரஸ்யமான காலகட்டப் பின்னணியுடனும் ‘டெத் ரயில்வே’ படத்தின் மூலம் மீண்டும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் பிரம்மாண்டத்தையும், அந்த உலகத்தை மீண்டும் உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நுணுக்கமான உழைப்பையும் வெளிப்படுத்துகின்றன.


ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கும் இப்படத்தை தரணி ராசேந்திரன் எழுதி இயக்குகிறார். சர்தக் கல்யாணி இசையமைக்க, ஏ.சி. சார்லஸ் ராஜ் கூடுதல் இசையமைத்துள்ளார். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். மாலதி நாராயணன் இணை இயக்குநராகவும், வீரமணி கணேசன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், லிவி ஜேம்ஸ் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.


சண்டைப் பயிற்சி மிரட்டல் செல்வா, ஒலி வடிவமைப்பாளர் சரவணன் ராமச்சந்திரன், விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணர் டி.எஸ். ஹரி ஹர சுதீன், ஒலி கலவைப் பணிகளை கே.சி. பூபதி ராஜா, பாடலாசிரியர் நெய்தல், ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீ நிஷா, கலரிஸ்ட் பராஜிதர் ஆகியோர் பணியாற்றுகின்றனர். விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்களாக பி.ஜே. ஆகாஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளனர். குமரன் கே. புகைப்படக் கலைஞராகவும், நாகராஜ் செல்வம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், திருநீலகண்டன் ஜி. தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர்.


சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணி, திறமையான நடிகர்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்புணர்வுடனும் தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் 01.11.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.


துளி அறக்கட்டளை (Thuli Trust) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் திரு. விஜய் சேதுபதி, திரு. அஜித்குமார் ரவீந்திரன், திரு. சிவாஜி பிரபாகர் மற்றும் திரு. ஜெய் பாலா ஆகியோர் இணைந்து முன்னெடுத்தனர்.


இந்நிகழ்ச்சி விஜய் சேதுபதி நற்பணி மன்றம், வள்ளலார் வேலைவாய்ப்புச் சேவை இயக்கம் (VVVSI Trust), நர்சிங் ஸ்டேஷன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ் மண் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டது.


*200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீபாவளி ஆடைகள்!*


தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் உயரிய நோக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முதியோர்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 200 பயனாளிகளுக்கு ஆடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


முதியோர்களும் குழந்தைகளும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற மனிதநேய நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. சமூக ஒற்றுமை, அன்பு, அக்கறை மற்றும் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.


*ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!*


இந்நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சமாக நடைபெற்ற மருத்துவ முகாமில் ஆய்க்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவச் சேவைகளைப் பெற்றனர்.


முகாமில் பொதுமக்களுக்கு அடிப்படை உடல்நலப் பரிசோதனைகள், இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரைப் பரிசோதனைகள், இதய மின் பதிவுப் பரிசோதனை (ECG), பொது மருத்துவர் ஆலோசனைகள், உணவுமுறை வழிகாட்டுதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வுச் சேவைகள் வழங்கப்பட்டன.


மக்கள் தங்களது உடல்நலத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளவும் இம்மருத்துவ முகாம் பயனுள்ளதாக அமைந்தது.


*மனிதநேயமும் சமூகப் பொறுப்புணர்வும் இணைந்த முன்னெடுப்பு!*


பண்டிகைக் காலங்களில் மகிழ்ச்சியைத் தங்களுக்குள் மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், சமூகத்தில் உதவி தேவைப்படும் மக்களுடனும் பகிர்ந்து கொள்வதே உண்மையான கொண்டாட்டம் என்ற உயரிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


ஒருபுறம் 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், மறுபுறம் ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டதும் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.


சமூக நலனுக்காகப் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்க முடியும் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.


இந்நிகழ்ச்சியின் மூலம் பயன்பெற்ற முதியோர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள், இத்தகைய சமூகநல முன்னெடுப்பை மேற்கொண்ட நடிகர் திரு. விஜய் சேதுபதி அவர்களுக்கும், நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அமைப்புகளுக்கும், நிர்வாகிகளுக்கும், மருத்துவக் குழுவினருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

Starring Nayanthara, Duniya Vijay, Regena Cassandrra, Urvashi, Yogi Babu,  Maina Nandini, Garuda Ram, Abhinaya, Shruthy.S, Singapuli Annavi, V.R.Swaminathan, Sivakumar S, Sunil Varma Indukuri, Varshini Venkat, Pala Karuppiah, Ananda Adhista Lakshmi, Nitin Sathyaa, Deblina Chaki.

Director: Sundar. C

Producer: Dr. Ishari K Ganesh

Production House : VELS Film International Limited 

Co Producers: Khushbu Sundar, Kushmitha Ganesh, Vignesh Shivan 

Music: Hiphop Tamizha

Screenplay & Dialogues: Venkatt Ragavan

Dop: Gopi Amarnath

Stunt: Rajasekar K 

Editor: Fenny Oliver

Executive producer: N. Manivannan

Production executive: R. P. Balagopi

Vfx producer: B R Venkatesh

Colorist: Shiva Shankar

Sound design: Udhaykumar

Stills: V Rajan

Make-up: N. Chelladurai

Publicity Design: Pawan

Pro: Sathish (AIM) 

Creative Promotions: The Tabs

*Mookuthi Amman* offers the experience of watching a quintessential devotional film a rarity in recent times. While it retains certain tropes typical of the *Amman* (goddess-centric) genre, the screenplay weaves in elements of mystery, horror, vengeance, and themes related to past lives.

The film draws the audience into its narrative within the first few minutes. Sequences involving a *sadhu* (ascetic) striving to contain malevolent forces, a sorcerer named Sunil, and a character played by Duniya Vijay (son of Pazha Karuppaiah) raise a series of intriguing questions. As the plot unfolds to provide answers, the pace of the story intensifies.

From the outset, the narrative is steeped in mystery—marked by the bizarre experiences of a police constable (played by Nayanthara) and unsettling events involving a ghost and a horse. The scenes where she seeks help from Urvashi to escape these predicaments are quite engaging. The events surrounding Nayanthara, coupled with the growing anxiety of the villains pursuing her, lend a brisk momentum to the film.

The sequences depicting the plot to abduct and kill Nayanthara—set against a backdrop of tribal surroundings and the presence of serpents—are visually compelling. The introduction of antagonistic characters, portrayed in the vein of Duniya Vijay and Ramachandra Raju, adds a new dimension to the story.

A pivotal turning point arrives in the form of a flashback that reveals the motive behind the attempt on Nayanthara’s life. The exploration of past-life connections, along with the link between the divine power of Mookuthi Amman and the character played by Duniya Vijay, propels the narrative to a higher level. Furthermore, the film effectively captures the transformation of an individual who, having pursued success through unscrupulous means, eventually realizes the consequences of his actions and undergoes a change of heart. 

As for the acting, Nayanthara has handled her assigned role exceptionally well. Her appearance and attire in the sequences involving the Goddess (Amman) are truly majestic. Urvashi, as always, strengthens the scenes with her seasoned performance, while Yogi Babu’s presence provides some laughs here and there. Although Sundar C.’s signature brand of comedy is prominent as usual, the contributions of the other characters fit the narrative well. Regina’s costumes and the overall production design are particularly noteworthy. The antagonists, including Ramachandra Raju, have also done justice to their respective roles.

Director Sundar C. has made a sincere effort and film’s greatest strength is its music. The score complements Nayanthara’s look and the sequences featuring the Goddess perfectly; the background music, in particular, evokes a distinct, powerful emotion whenever the Goddess appears on screen. The music also effectively supports the grandeur of the visuals.

The moments depicting the reconstruction of the temple after many years and the subsequent blessings of Mookuthi Amman evoke a sense of devotion. Director Sundar C. has managed conflict between the forces of evil and the divine power engaging right until the end.

The film serves as an entertaining package, blending elements of devotion, mystery, horror, and sentiment. the film’s core strength lies in its ability to maintain a steady, engaging pace from start to finish. For those who enjoy films centered on the Goddess (Amman) and are looking for a unique devotional experience, this movie is worth a watch.

Music that strengthens the sense of devotion… and an element of mystery that adds momentum to the screenplay!

Verdict : Mookuthi Amman 2 - A Must Watch Amman Film.

Rating : 4 / 5

- NithyaSana

 

Starring : Harish Kalyan, Siddhi Idnani, Kovai Sarala, Thambi Ramaiah, Chinni Jayanth, Sampath, M.Rinil, VJ Parvathy

Written & Directed by Sasi

Produced by Balaji Kapa | Arun Arunachalam

Cinematography : Prasanna.S.Kumar

Music : Siddhu Kumar

Editor : M.Subarak

Art Director : E.Thiyagarajan

Lyrics : Mohan Rajan | Vignesh Ramakrishna

Choreographer : Santhosh

Costume Designer : Nandhini N.K

VFX Head : Surendhar

Audiography : Thapas Nayak

Sound Engineer : A.Murugan

Makeup : R.Ganapathy

Costumer : P.R.Ganesh | R.ManjuNaathan

Stills : Motilal

PRO : Sathish (AIM)

Designs : Joseph Jaxson

Executive Producer : N.Pradeep | Suganya Sudevan | Deenadayalan

Production Controller : K.Sridhar Raj

Production Mangers : P. Manoj Kumar | R.Veerasangili

Producer : Balaji Kapa | Arun Arunachalam

Production Company : Madhav Media | Arun Arunachalam 

Motion Poster : fixitinpost studios

Creative Promotions : CTC Mediaboy

Harish Kalyan, who works for a private television network in Mumbai, is sent to the company’s Goa branch for a work assignment. There, he is tasked with developing a new television program.

During this process, he meets Siddhi Idnani. Siddhi’s boyfriend, Richie, has been in a coma for several days following an accident. Holding onto the hope then he will recover one day. Siddhi records the events of her daily life on video to show him.

Harish is deeply moved by Siddhi’s devotion. Initial friction between the two gradually gives way to friendship. Harish decides to turn Siddhi’s life story into the subject of his television program, which leads to them spending a great deal of time together.

As their friendship deepens, Harish finds himself falling in love with Siddhi. However, because she remains anchored to the memories of Richie, Siddhi is unable to reciprocate Harish’s feelings.

In the midst of this, Richie regains consciousness and recovers from his coma. What happens next in Siddhi’s life? How does she navigate the dilemma between her past love and this new one? And does Harish’s love ultimately succeed? The rest of the film unfolds to answer these questions.

Harish Kalyan once again proves that he is perfectly suited for romantic roles. He begins with a lively, energetic presence, and as his character falls in love, he portrays those emotions with great naturalism.

He delivers a nuanced performance, particularly in moments where he struggles to confess his love or faces the disappointment of his feelings not being returned.

Siddhi Idnani, who plays a pivotal role, delivers an excellent performance—capturing both the steadfastness of a woman waiting for her partner and the internal conflict she experiences when a new love enters her life. His facial expressions often speak louder than the dialogues.

Kovai Sarala, Thambi Ramaiah, and Chinni Jayanth lend strong support to the narrative with their seasoned performances. Sampath Raj, VJ Parvathy, and others also make an impact in their respective roles.

Director Sasi, known for films like ‘Poo’, ‘Pichaikkaran’, and ‘Sivappu Manjal Pachai’, has a knack for capturing profound emotions within simple storylines.

This time, too, he attempts to explore the emotion of love from a fresh perspective—delving into the complexities of the human mind: waiting for love, developing an unexpected attraction toward someone else, and the inner turmoil of being unable to choose between two relationships.

The film’s greatest strength is Prasanna S. Kumar’s cinematography; he captures the beaches of Goa, the natural beauty, and the vibrant surroundings in a truly delightful way.

Sidhu Kumar’s music adds a sweet touch to the love story. Both the songs and the background score align well with the characters' emotions—the background music, in particular, stands out during scenes centered on love and separation.

Director Sasi has endeavored to portray the various facets of human relationships, including love, friendship, separation, and anticipation.

With the performances of Harish Kalyan and Siddhi Idnani, visually appealing cinematography, and a pleasant musical score, the film remains watchable and, to an extent, enjoyable.

Verdict : Nooru Kodi Vanavil - Rainbow of Tamil Cinema.

Rating : 3.5 / 5

- NithyaSana

 

'ஜான் டோ' திரைப்படத்தின் முதல் பாடல் 'நான் போதுமா' அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. நடிகர் அர்ஜுன் தாஸின் ராப் குரலில் உருவாகியுள்ள இந்த முதல் பாடல், இயக்குநர் மதுமிதாவின் வரவிருக்கும் திரில்லர் படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு முன்பாக, தி ஆர்ட்டிஸ்ட் 404-இன் சுவாரஸ்யமான இசையுலகை அறிமுகப்படுத்துகிறது.


உலகளாவிய இசை உலகில், ஒரு கலைஞரின் முகத்தை விட அவரது அடையாளம் சில சமயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். மார்ஷ்மெல்லோ (Marshmello), டிராஃப்ட் பன்க் (Daft Punk) முதல் எம்.எஃப். டூம் (MF DOOM) வரை பல புகழ்பெற்ற சர்வதேச கலைஞர்கள் தங்கள் முகங்களை மறைத்து, முகமூடிகளை தனித்துவமான அடையாளங்களாக மாற்றி, தங்களது முகத்தை காட்டாமலேயே ரசிகர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். அதே சுவாரஸ்யமான உத்தியைத் தமிழ் சினிமாவிற்கு கொண்டுவருகிறார் முகமூடி அணிந்த இசை ஆளுமை 'தி ஆர்ட்டிஸ்ட் 404'.


வரவிருக்கும் 'ஜான் டோ' படத்தின் முதல் பாடலான 'நான் போதுமா' மூலம் இவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இப்பாடலின் சிறப்பம்சமாக, இதன் குரல் கூட்டணி அமைந்துள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் முதன்மை ராப் குரலில் கலக்கியுள்ளார், மேலும் மாளவிகா பாடலுக்கு தன் குரலை வழங்கியுள்ளார். ராப் வரிகளை அர்குஸ் அரியன் (Arcus Aryian) மற்றும் தி ஆர்ட்டிஸ்ட் 404 இணைந்து எழுதியுள்ளனர். இசையமைத்து, ஏற்பாடுகளையும் தி ஆர்ட்டிஸ்ட் 404 செய்துள்ளார். இதன் தனித்துவமான படைப்பாற்றல் மற்றும் வித்தியாசமான இசைக்கூட்டமைப்பு மூலம் 'நான் போதுமா' பாடல் 'ஜான் டோ' படத்தின் இசை உலகிற்கான ஒரு சிறந்த அறிமுகத்தை வழங்குகிறது.


கடந்த சில ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் நடிகர் அர்ஜுன் தாஸ் தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், 'ஜான் டோ' அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக மாறியுள்ளது.


'தி ஆர்ட்டிஸ்ட் 404' ஐ சுற்றியுள்ள மர்மமும் படத்தின் விளம்பர பயணத்தில் பேசுபொருளாகியுள்ளது. படத்தின் முன்னோட்ட விழாவில் தனது முகத்தை வெளிப்படுத்தாமல் முகமூடியுடன் தோன்றி அனைவரையும் வியக்க வைத்தார் இந்த கலைஞர். தற்போது 'நான் போதுமா' பாடலின் வெளியீட்டின் மூலம் இசை முன்னணிக்கு வந்துள்ளது, அதே நேரத்தில் முகமூடிக்கு‌ பின்னால் இருப்பவர் பற்றிய மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.


மதுமிதா எழுதி இயக்கியுள்ள 'ஜான் டோ' படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, அனுபமா குமார், அர்ச்சனா சந்தோக், படவா கோபி, ஸாரா வினீத் சந்தோக் மற்றும் நீரவ் எஸ். ஆகியோர் அடங்கிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யர்லகா தயாரித்துள்ளனர். கிஷோர் கேடாரி மற்றும் மதுமிதா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். கதை மற்றும் திரைக்கதையை மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் எழுதியுள்ளனர், சௌம்யா சர்மா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார்.


பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் வெங்கட்ராமன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.


'நான் போதுமா' பாடல் தற்போது வெளிவந்துள்ள நிலையில், 'ஜான் டோ' படம் தனது இசை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. முகம் வெளிப்படும் முன்பே இசையை பேச வைக்கும் இந்த கலைஞருடன், 'தி ஆர்ட்டிஸ்ட் 404'-ன் மர்மம் நாளுக்கு நாள் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது.


'ஜான் டோ' திரைப்படம் வரும் நவம்பர் 13, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அசல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடுமையான போட்டிகள் மூலம் வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் ஹிப்-ஹாப் கலைஞர்களின் திறமைகளைக் கொண்டாடுகிறது. 


தேசியம், XX 2026: தமிழ் ஹிப்-ஹாப்பின் ஆற்றலையும் வளர்ந்து வரும் இசை வடிவத்தையும் கொண்டாடும் வகையில், தமிழ் ZEE5, ZEE மியூசிக் உடன் இணைந்து ‘தீக்குரல்’ என்ற புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் கலைஞர்களை ஒன்றிணைத்து, அடுத்த தலைமுறை தமிழ் ராப்பின் குரலாக உருவெடுப்பதற்கான போட்டியை இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கிறது. கருப்பொருள் சார்ந்த இசை நிகழ்ச்சிகள், படைப்பாற்றல் சவால்கள், தீவிரமான போட்டிகள் மற்றும் பார்வையாளர்களின் பங்கேற்பு எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, தனித்துவம், பாடல் வரிகளின் ஆற்றல் மற்றும் உண்மையான கதைசொல்லல் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது. ‘தீக்குரல்’ நிகழ்ச்சி நவம்பர் 5, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.


போட்டியாளர்கள், அவர்களின் தனிப்பட்ட கதைகள் மற்றும் இசை அடையாளங்களை அறிமுகப்படுத்தும் பிரம்மாண்டமான சைஃபர் (Cypher) நிகழ்ச்சியுடன் இந்தப் போட்டி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு கருப்பொருள்களின் அடிப்படையில் அமைந்த நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதில் போட்டியாளர்கள் தங்களது படைப்பாற்றல், கதைசொல்லும் திறன் மற்றும் மேடை ஆளுமையை வெளிப்படுத்தும் சவால்களை எதிர்கொள்வார்கள்.


பாடல் வரிகளின் வெளிப்பாடு, ராப் நுணுக்கங்கள் மற்றும் இசையமைப்பு ஆகியவற்றில் தனித்துவமான பார்வைகளைக் கொண்ட அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் சிறப்புமிக்க நடுவர் குழுவில் இடம்பெறுகின்றனர். சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கும் போட்டியாளர்கள் ‘தீ மீட்டர்’ (Thee Meter) மூலம் அங்கீகரிக்கப்படுவார்கள். அதேபோல், சிறந்த திறமையாளர்கள் ‘வால் ஆஃப் ஃபேம்’ (Wall of Fame) பகுதியில் இடம்பிடிப்பார்கள். டேஞ்சர் ஸோனுக்குள் (Danger Zone) நுழையும் போட்டியாளர்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடன் பொதுமக்களின் வாக்குப்பதிவும் இணைவதால், போட்டியில் மேலும் ஒரு சுவாரஸ்யமான அம்சமும் பார்வையாளர்களின் பங்கேற்பும் அதிகரிக்கிறது.


நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கிணைக்கும் DJ/Big Bro, போட்டியாளர்களுக்கும் நடுவர்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவதுடன், ஒவ்வொரு வாரத்திற்கான கருப்பொருள்களை அறிமுகப்படுத்தி, போட்டியின் மிகத் தீவிரமான தருணங்களிலும் நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறார்.


ZEE5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளுக்கான வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் கூறியதாவது, “தமிழ் ஹிப்-ஹாப் இன்று ஒரு வலுவான படைப்பாற்றல் இயக்கமாக வளர்ந்துள்ளது. புதிய தலைமுறை கலைஞர்கள் தங்களது அடையாளங்கள், அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. தமிழ் ZEE5-ல், தமிழ் கலாச்சாரத்தையும் வளர்ந்து வரும் அனைத்து விதமான படைப்பாற்றல் வெளிப்பாடுகளையும் நாங்கள் கொண்டாடுகிறோம். உண்மையிலேயே சிறந்த திறமைகளைக் கொண்ட பல கலைஞர்களுக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நம்புகிறோம்.


ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘தீக்குரல்’ நிகழ்ச்சியின் மூலம், இதுவரை வெளிச்சத்திற்கு வராத திறமைகளை முன்னிலைக்குக் கொண்டுவருவதும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி, அதிகமான பார்வையாளர்களின் பாராட்டைப் பெறுவதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதுமே எங்களது நோக்கம். இந்தத் தனித்துவமான நிகழ்ச்சி வடிவத்தின் மூலம், இயல்பான திறமை, தனித்துவம் மற்றும் தங்களது குரலை வெளிப்படுத்தும் துணிச்சல் ஆகியவற்றைக் கொண்டாட விரும்புகிறோம். அனுபவம் வாய்ந்த நடுவர் குழு, போட்டித்தன்மை கொண்ட நிகழ்ச்சி வடிவம் மற்றும் பார்வையாளர்களின் நேரடிப் பங்கேற்பு ஆகியவற்றுடன் ‘தீக்குரல்’ எங்களது தமிழ் உள்ளடக்கப் பட்டியலில் ஒரு சுவாரஸ்யமான புதிய சேர்க்கையாக அமைகிறது. அசல் படைப்புகள், திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எனப் பலதரப்பட்ட படைப்புகளுடன் எங்களது உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதி வரையிலும் அதற்குப் பிறகும் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து மகிழ்விக்க இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.”


நிகழ்ச்சியின் நடுவர் அறிவு கூறியதாவது, “ராப் என்பது எப்போதும் வெறும் இசைத் தாளங்களையும் பாடல் வரிகளையும் மட்டுமே கொண்டதல்ல. கதைகளைச் சொல்வதற்கும், நிஜ வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிப் பேசுவதற்கும் இது ஒரு வலிமையான வழியாகும். வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்களது சொந்த அனுபவங்கள், பார்வைகள் மற்றும் அடையாளங்களை முன்னிலைக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ‘தீக்குரல்’ உருவாக்கியிருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், தங்களுக்குத் தாங்களே சவால் விடுக்கவும், தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளில் உறுதியாக நிற்கவும் தயாராக இருக்கும் கலைஞர்களைக் காண ஆவலுடன் இருக்கிறேன். இறுதியாக, ஒரு குரலை நீண்ட காலம் நினைவில் நிற்கச் செய்வது அதன் உண்மைத்தன்மைதான். போட்டியாளர்கள் தங்களுக்கான தனித்துவமான குரலைக் கண்டறிந்து, அதனைத் தங்களுடையதாக நிலைநிறுத்திக் கொள்ள இந்தத் தளம் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்.”


நிகழ்ச்சியின் நடுவர் யோகி B கூறியதாவது, “1970-களில் அமெரிக்காவின் பிராங்க்ஸ் பகுதியில் ஹிப்-ஹாப் பிறந்தது. அப்போது சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்ட கறுப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க இளைஞர்கள், தங்களது படைப்பாற்றலை ஒரு கலாச்சாரமாக மாற்றினார்கள். DJing, MCing, Breaking மற்றும் Graffiti போன்ற கலை வடிவங்கள் மூலம் தங்களது கதைகளைச் சொல்லவும், தங்களது சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையைக் கொண்டாடவும் வழிகளைக் கண்டறிந்தார்கள். அந்த உணர்வைத் தமிழ் ராப்பிற்குக் கொண்டுவரும் ‘தீக்குரல்’, போட்டியாளர்கள் தங்களது தனித்துவம், படைப்பாற்றல் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேடையை அமைத்துக் கொடுக்கிறது.


ஒரு நடுவராக, இசையின் ஓட்டம், வெளிப்படுத்தும் விதம், பாடல் வரிகளின் ஆழம், மேடை ஆளுமை மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றை நான் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கான உண்மையான அடையாளத்துடன் இருங்கள், நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கட்டும், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயங்களில் உறுதியாக நில்லுங்கள். போட்டி மனப்பான்மை நம்முடைய தரத்தை உயர்த்துவதற்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழ் மரபையும் ஹிப்-ஹாப் கலாச்சாரத்தையும் மதிக்க வேண்டும். ஹிப்-ஹாப்பின் வேர்களை மதித்து, திறமையுடனும் உறுதியுடனும் தமிழ் ராப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் கலைஞர்களைக் கண்டறிய ஆவலுடன் இருக்கிறேன். தீக்குரல், உண்மையான ஆட்டத்தைக் காட்டுங்கள்!”


நிகழ்ச்சியின் நடுவர் சீன் ரோல்டன் கூறியதாவது, “இசை என்பது தொடர்ந்து புதிய விஷயங்களைக் கண்டறியும் ஒரு பயணமாகும். ‘தீக்குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெவ்வேறு கருப்பொருள்களை எவ்வாறு புரிந்துகொண்டு, தங்களது கருத்துகளை அசல் இசை நிகழ்ச்சிகளாக மாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். பாடல் வரிகள் மற்றும் இசை என இரண்டிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு ராப் இசை மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு கலைஞரும் வெவ்வேறு இசை ஓட்டம், பார்வை மற்றும் படைப்பாற்றல் உணர்வுடன் வருகிறார்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், தங்களுக்கான இசை அடையாளத்தை வளர்த்துக்கொள்ளவும், மேடையில் எதிர்பாராத புதிய அனுபவங்களை வழங்கவும் தயாராக இருக்கும் போட்டியாளர்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”


‘தீக்குரல்’ நிகழ்ச்சி நவம்பர் 5, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.

Pageviews