Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.


ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது  குறிப்பிடத்தக்கது.


குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது.


இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், சேகர் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். அனுவர்தன் மற்றும் நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.


கேமரா செந்தில் விளம்பரப் புகைப்படப் பணிகளையும், மணியன் படப்பிடிப்புத் தளப் புகைப்படப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். R.J. சுரேஷ் குமார் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றுகிறார். கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பையும், சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். சிவகாந்த் தலைமை இணை இயக்குநராகவும், தினேஷ்.E  இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார். பிரசாந்த் எக்செக்ட்யூவ் தயாரிப்பாளராகவும், சரத் J. சாமுவேல் இணைத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வரும் MRP Entertainment நிறுவனம், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பாக ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தை உருவாக்குகிறது. இப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்குகிறார்.


இப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் ஹனு ராகவபூடி - மைத்ரி மூவி மேக்கர்ஸ் - டி-சீரிஸ் கூட்டணியில் தயாராகி, பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள 'ஃபௌஜி' திரைப்படத்திலிருந்து, 'ஃபைல் நம்பர் 25' என்ற பெயரில் சக்திவாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தேசபக்தியின் காவியக் கதையாகத் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் 2027 மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.


படைப்பாற்றல் மிக்க திரைப்பட இயக்குநரான ஹனு ராகவபூடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி-சீரிஸ் நிறுவனம் வழங்கும் பிரம்மாண்டமான பீரியட் ஆக்‌ஷன் திரைப்படமான 'ஃபௌஜி'யில், 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, Y. ரவிசங்கர், பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி தொடர்பான போஸ்டர்கள் ஏற்கெனவே ரசிகர்களிடையே வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் 'ஃபைல் நம்பர் 25' எனும் சக்திவாய்ந்த புதிய முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இது அவரது கதாபாத்திரத்தின் அடையாளம், புத்திசாலித்தனம், அசாதாரணமான நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை வெளிப்படுத்துகிறது.


இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமைந்துள்ள இந்த முன்னோட்டம், 1942 மே 29ஆம் தேதி பெர்லினில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - அடால்ஃப் ஹிட்லர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புடன் தொடங்குகிறது. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில், போஸ் ஜெர்மனியின் ஆதரவைக் கோருகிறார். இது, கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு கால அடக்குமுறைக்குப் பிறகு சுதந்திரம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விறுவிறுப்பான உரையாடலுக்கு வழிவகுக்கிறது. இந்தியாவால் பிரிட்டிஷ் பேரரசை வெல்ல முடியுமா என்று ஹிட்லர் கேள்வி எழுப்புகிறார். அதற்குச் சுபாஷ் சந்திர போஸ், 'சுதந்திரம் அடைவதற்கான உறுதியை ஒருபோதும் அணைக்க முடியாது' என்று உறுதியாகக் கூறுகிறார்.


ராணுவ வலிமையைவிட உளவுத்துறை வலிமைமிக்கதாக நிரூபிக்க முடியும் என்று போஸ் வாதிடும்போது, இந்த உரையாடல் எதிர்பாராத சுவாரசியமான திருப்பத்தை அடைகிறது. தனது கருத்தை வலுப்படுத்தும் வகையில், கவனமாகத் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் மூலம் பிரிட்டிஷ் உளவுத்துறைக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவரும் ஓர் அசாதாரணமான இந்திய உளவாளியின் கதையை அவர் அறிமுகப்படுத்துகிறார். இந்த மர்மமான நபர், தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், ராணுவப் படைகளைத் திசைதிருப்பி, முக்கியப் பணிகளைச் சீர்குலைத்து, காலனித்துவ நிர்வாகத்தை மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாக முறியடித்தார் என கூறப்படுகிறது.


இந்தக் காட்சி, அந்தக் கதாபாத்திரத்தின் தனித்துவமான தகவல் தொடர்பு அமைப்பின் மூலம் அவருக்கு மற்றொரு வசீகரமான பரிமாணத்தை வழங்குகிறது. பகவத் கீதையால் ஈர்க்கப்பட்ட அந்த ரகசியக் குறியீடு, ஜெர்மனியின் 'எனிக்மா' குறியீட்டைவிடவும் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமானது என விவரிக்கப்படுகிறது. அந்த உளவாளியின் செல்வாக்கு அதிகரித்து வந்தபோதிலும், பிரிட்டிஷார் அவனது உண்மையான அடையாளத்தை அறியாமல் இருப்பதாக போஸ் வெளிப்படுத்துகிறார். இதன் மூலம், அந்த உளவாளி நிழலில் இயங்கும் ஒரு வலிமைமிக்க சக்தியாகச் சித்தரிக்கப்படுகிறார்.


'ஃபைல் நம்பர் 25' முன்னோட்டத்தின் மிகவும் ஈர்க்கக்கூடிய தருணங்களில் இந்த அடையாள வெளிப்பாடும் ஒன்றாகும். பிரிட்டிஷாரால் 'ஃபௌஜி' என அறியப்படும் அந்த வீரனின் உண்மையான பெயர் புதிராகவும் மர்மமாகவும் உள்ளது. 1932 முதல் காலனித்துவ அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் அவன், தனது தாய்நாட்டைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்ட அச்சமற்ற புரட்சியாளனாகச் சித்தரிக்கப்படுகிறான். பிடிபடாத அந்த உளவாளி தற்போது கல்கத்தாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்கிறான் என்றும் போஸ் விரிவாக எடுத்துரைக்கிறார்.


அந்தக் காட்சியின் இறுதியில் பிரபாஸின் அதிரடியான திரைத் தோற்றம் இடம்பெறுகிறது. காலனித்துவ அதிகாரத்திடம் சரணடைய மறுக்கும் இரக்கமற்ற புரட்சிவீரனாக அவர் உருமாறுகிறார். உதடுகளுக்கு இடையே ஒரு சிகரெட்டையும், கையில் ஒரு பெரிய துப்பாக்கியையும் ஏந்தியபடி, அவர் அப்பட்டமான ஆக்ரோஷத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறார். பிரிட்டிஷாருக்குக் கடுமையாகச் சவால் விடுக்கும் அவரது தோற்றம் இந்த முன்னோட்டத்திற்கு முன்னதாய் அமைகிறது. மேலும், இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய கம்பீரமான திரைத் தோற்றம் மற்றும் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளின் சிறு தொகுப்பையும் இந்த முன்னோட்டம் வழங்குகிறது.


உடல் வலிமை மற்றும் போர்க்களத்தின் வீரதீரச் செயல்களைக் கடந்து, கதாநாயகனைப் பரந்த கண்ணோட்டத்தில் கட்டமைக்க முயல்வதே 'ஃபைல் நம்பர் 25' முன்னோட்டத்தைத் தனித்துவமாக்குகிறது. ரகசிய நடவடிக்கைகள், உளவுப் போர், குறியீட்டுத் தகவல் தொடர்பு மற்றும் வெளிப்படுத்தப்படாத அடையாளம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், கதையில் சுவாரசியமான மர்ம அடுக்குகளை அறிமுகப்படுத்துகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியை இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் இணைப்பதன் மூலம், இந்த முன்னோட்டம் 'ஃபௌஜி'யைத் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மையக் கதாபாத்திரமும் கொண்ட பீரியட் ஆக்‌ஷன் திரைப்படமாக நிலைநிறுத்துகிறது.


இயக்குநர் ஹனு ராகவபூடி வரலாற்றுத் தொடர்புகள், உளவு, தேசபக்தி மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பிரபாஸை வழக்கத்திற்கு மாறான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது இந்த முன்னோட்டத்தின் மூலம் தெரியவருகிறது. இந்த முன்னோட்டம் கதாநாயகனின் உலகத்தைப் பற்றிய ஒரு சிறிய பார்வையை மட்டுமே வழங்குகிறது. அவரது தோற்றம், செயல்படும் விதம், பிரிட்டிஷ் பேரரசால் பிடிக்க முடியாத எதிரியாக அவரை உருவாக்கிய நிகழ்வுகள் ஆகியவை குறித்த பல கேள்விகளுக்கு இது விடையளிக்காமல் விட்டுவிடுகிறது.


'ஃபௌஜி' திரைப்படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அனுபம் கேர்,மிதுன் சக்கரபோர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை அனில் விலாஸ் ஜாதவ் கவனித்துள்ளார்.


இந்த முன்னோட்டம், விறுவிறுப்பான பீரியாடிக் ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2027 மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.


நடிகர்கள்:


பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரபோர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து மற்றும் இயக்கம்: ஹனு ராகவபூடி

தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

வழங்குபவர்கள்: குல்சன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் 

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y. ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார்

ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி ISC

இசை: விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ்

படத்தொகுப்பு: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்

VFX: R. C. கமலக்கண்ணன்

நடன இயக்குநர்: பிரேம் ரக்ஷித்

ஆடை வடிவமைப்பாளர்கள்: ஷீத்தல் இக்பால் சர்மா, டி. விஜய் பாஸ்கர்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

 

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரையுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ஷெர்ரி அகர்வால். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும் இணைக்கும் உணர்வுப்பூர்வமான மியூசிக்கல் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சைக்கிள் கேப்’. 


இசை, காதல் மற்றும் அனைவருக்கும் நெருக்கமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இரண்டு தலைமுறைகளின் காதல் உணர்வுகளையும் ஒரே கதையில் இணைக்க முயல்கிறது. கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டெடுக்கும் அதேவேளையில், இன்றைய தலைமுறை ரசிகர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார்.

 

'சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஷெர்ரி அகர்வால் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு நடிகையாக, ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் பாசிட்டிவாக இருந்ததுடன் படக்குழுவினர் அனைவரும் இனிமையாக பழகினர். பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் மாற்றியது. இவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். 


ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி சார், ஒளிப்பதிவாளர் சாலமன் சார், ஹேமந்த் செல்வராஜ் சார், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா மற்றும் ‘சைக்கிள் கேப்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார். 


தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ ஆகிய திரைப்படங்களிலும் ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார். டீசர் வெளியாகியுள்ள ‘எந்தவாருகானி’ என்ற வரவிருக்கும் தெலுங்குப் படத்திலும், ‘ஆகர்ஷிதா’ என்ற கன்னடப் படத்திலும், ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ ஆகிய இந்திப் படங்களிலும், ‘பெனாமி’ என்ற தெலுங்குப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.


திரைப்படங்கள் மட்டுமல்லாது, சௌபால் தளத்தில் வெளியிடப்பட்டு யூடியூப்பிலும் காணக்கிடைக்கும் பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ தொடரிலும் நடித்துள்ளார். இதுதவிர, டி-சீரிஸ், ஜீ மியூசிக் மற்றும் ரெட் ரிப்பன் மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளில் உருவான பஞ்சாபி மற்றும் இந்தி இசை வீடியோக்களிலும் அவர் நடித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் தான் அறிமுகமாகும் ‘சைக்கிள் கேப்’ தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்கிறார் ஷெர்ரி அகர்வால். இசை, காதல் மற்றும் 1990களின் காதலில் நிறைந்திருந்த அப்பாவித்தனம் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், பல தலைமுறை ரசிகர்களின் மனங்களிலும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நெட்ஃபிளிக்ஸின் ‘அக்கா’ தொடரில் பவானியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விசுவாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாட்சி. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படும் ஒரு பாரம்பரியம். இவை அனைத்தையும் தலைகீழாக மாற்ற அச்சுறுத்தும் ஒரு போட்டியை பெர்னூருவில் எதிர்கொள்கிறாள் பவானி. தனது அதிகாரத்தை நிலைநாட்டவும் இதுவரை இல்லாத அளவுக்குச் சோதனைகளை எதிர்கொள்பவள்தான் பவானி. 


‘மகாநதி’, ‘சாணி காயிதம்’, ‘தசரா’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பிற்க்காக பாராட்டுகளைப் பெற்ற கீர்த்தி சுரேஷ், இதுவரை முயற்சி செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’அக்கா' தொடரில் நடிப்பதற்கு முன்பு தன்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என தான் நம்பவில்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ். 


தலைமுறை தலைமுறையாகப் பெண்களே ஆட்சி செய்து, தங்களுக்குச் சொந்தமானவற்றைப் பாதுகாத்து வரும் ஒரு அரசாட்சியின் பின்னணியில் ‘அக்கா’ தொடர் உருவாகியுள்ளது. அதிகாரம் என்பது பாரம்பரியமாகக் கைமாறும், விசுவாசம் என்பது அனைத்தையும் விட முக்கியமானதாகக் கருதப்படும் இந்த உலகில், தங்களது பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்குப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழலும் உருவாகிறது. தான் நம்பும் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் பவானி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


இதுகுறித்துப் பேசிய கீர்த்தி சுரேஷ், “பவானி தன் பக்க நியாயம் என்ன என்பது குறித்து தெளிவாக அறிந்த ஒரு பெண். தனது பாரம்பரியத்தையும் மரபையும் பாதுகாப்பதற்காக அவள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பாள். அவளிடம் இருக்கும் வலிமையும் அதிகாரமும் அவள் எடுக்கும் கடினமான முடிவுகளும் சுவாரஸ்யமானது” என்றார்.


ஆனால், பெர்னூருவின் ஆட்சிக்கு ராதிகா ஆப்தே நடித்திருக்கும் ருத்ரா கதாபாத்திரம் மூலம் மிகப்பெரிய சவால் உருவாகிறது. அவளுடைய லட்சியங்களும் நம்பிக்கைகளும் பவானியின் அதிகார அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகின்றன. இதனால், அதிகார போட்டியைத் தாண்டி பெரும் மோதல் உருவாகிறது. பதற்றம் அதிகரித்து, விசுவாசங்கள் சோதிக்கப்படும் நிலையில், இந்த அரசாட்சியின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய போராட்டத்தின் மையப்புள்ளியாக பவானி மாறுகிறார்.


தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள ‘அக்கா’ தொடரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இத்தொடரில் தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர் மற்றும் மோனிகா பன்வார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


‘அக்கா’ தொடர் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

 

98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் (Oscar Consideration Ballot) நுழைந்து உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ள 'கெவி' (Gevi) திரைப்படத்தின் படக்குழு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிஜ உலக வெற்றியைத் தங்களது 'மலை கீதத்தின்' (Hill Anthem) மூலம் கொண்டாடியுள்ளது. ஆர்டப் ட்ரையாங்கிள்ஸ் (Artuptriangles Film Kampany) தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் மிக முக்கியமான இப்பாடலுக்கு, இசை ஜாம்பவான் 'தேனிசைத் தென்றல்' தேவா தனது கணீரென்ற குரலால் உயிர் கொடுத்துள்ளார். இப்பாடலின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். பாடலைத் தொடர்ந்து, தேவா சார் பாடியுள்ள இப்பாடல் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டாடுகிறது. கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகெவி கிராமத்தின் 400 ஆண்டுக்கால வரலாற்றில், முதல்முறையாக ஒரு அரசு ரேஷன் கடை கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் உள்ள எளிய மக்களின் போராட்டமே இப்பாடலின் மையக்கருப் பொருள் ஆகும்.


இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தயாளன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அறிக்கை:


"எங்கள் நெஞ்சம் நன்றியால் நிறைந்திருக்கிறது. வெள்ளகெவி கிராம மக்களுக்கு ஒரு முறையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் எங்களது உண்மையான, நீண்ட காலப் போராட்டமாக இருந்தது. அந்த உள்கட்டமைப்பு வசதிக்காக நாங்கள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கும் வேளையிலும், இந்த 400 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக எங்கள் கிராமத்திற்கு ஒரு அரசு ரேஷன் கடையைக் கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதை ஒரு மைல்கல்லாகப் பார்த்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் சாலையை எதிர்பார்த்தோம், ஆனால் எங்களால் குறைந்தபட்சம் ஒரு ரேஷன் கடையையாவது எங்கள் மக்களுக்குக் கொண்டுவர முடிந்தது. இது நிச்சயமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு வெற்றி! இந்த எளிய மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் இன்று ஆஸ்கார் தகுதிப் பட்டியல் மூலம் உலக மேடை வரை சென்றிருப்பதும், தேவா சார் மற்றும் வைரமுத்து சார் போன்ற மாபெரும் ஆளுமைகள் எங்கள் மக்களின் வலியையும் வெற்றியையும் தங்களது குரலாலும் வரிகளாலும் எதிரொலித்திருப்பதும், ஒரு படைப்பாளியாக எனக்குக் கிடைத்த பெருமைமிகு தருணம்."

 

எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. ஏ. மகேந்திரன் வழங்க, மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் ராஜ் அய்யப்பா மற்றும் டெல்னா டேவிஸ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் சுனில் ரெட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.


இன்றைய தலைமுறையின் சமகால உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் ‘லவ் இங்க்’, நவீன காதலை ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையுடன் சொல்லும் படமாக அமைவதுடன், அனைத்து வயதினரையும் கவரும் வகையிலும் உருவாகி வருகிறது. 


இப்படத்தில் சுனில் ரெட்டி, ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா, கேபிஒய் வினோத், மௌரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் நடைபெற்றது. தற்போது படக்குழு மீண்டும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெறும்.  திட்டமிட்டபடி வரும் டிசம்பர் மாதம் படத்தைத் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். 


படம் குறித்துப் பேசிய இயக்குநர் மேகராஜ் தாஸ், “இன்றைய ஜென்ஸீ தலைமுறையினருக்கு பிடித்த படமாக ‘லவ் இங்க்’ நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்.  ரசிகர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்.  இளைஞர்களை மட்டுமல்லாமல், குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து, கொண்டாடக்கூடிய படமாகவும் ‘லவ் இங்க்’ இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.


மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியிருக்க, மகேந்திரன் வழங்கும் இப்படத்தை எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஐ. மருதநாயகம் மேற்கொள்ள, கலை இயக்குநராக ராமு தங்கராஜ் பணியாற்றுகிறார். புவன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.


‘லவ் இங்க்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

வசீகரிக்கும் தோற்றம், யாராலும் எளிதில் கணிக்க முடியாத நடவடிக்கை என வலம் வரும் ருத்ரா பல தலைமுறைகளாகப் பெண்களின் ஆதிக்கத்தில் இருந்து வரும் பெர்னூரு நகருக்குள் நுழைகிறாள். மற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கட்டிக்காத்து வந்த அதிகார அமைப்பைப் பற்றியோ, அதன் விதிமுறைகளைப் பின்பற்றுவது பற்றியோ அவளுக்குக் கவலையில்லை. ‘ஃபோபியா’, ‘அந்தாதுன்’, ‘ஸ்கேர்ட் கேம்ஸ்’, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ராதிகா ஆப்தே, இதுவரை தான் ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரமாக ருத்ராவைக் சொல்கிறார்.


“தான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளால் தனக்கான அடையாளம் தீர்மானிக்கப்படுவதை ருத்ரா ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள். அவள் துணிச்சலானவள், லட்சியவாதி,ஏற்கெனவே இருக்கும் அதிகார அமைப்பையே எதிர்த்துக் கேள்வி கேட்கத் தயங்காதவள். அதனால்தான் அவளுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமானது” என்கிறார் ராதிகா.


ருத்ரா  மற்றும் கீர்த்தி சுரேஷின் பவானி கதாபாத்திரம் என இருவருக்கும் இடையிலான மோதலை டிரெய்லர் முன்னிறுத்துகிறது. இருப்பினும், இந்த மோதலை வெறுமனே அதிகாரத்தை அடைவதற்கான போட்டியாக ராதிகா பார்க்கவில்லை. “‘அக்கா’ தொடரில் நான் மிகவும் ரசித்த விஷயம் என்னவென்றால், இங்கு மோதல் என்பது யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது மட்டுமல்ல. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்கும் வெவ்வேறு நம்பிக்கைகள், விசுவாசங்கள் மற்றும் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமான விஷயங்களும் இந்த மோதலுக்குக் காரணமாக இருக்கின்றன” என்கிறார்.


எது சரி, எது தவறு என்ற வழக்கமான வரையறைகளின் அடிப்படையில் ருத்ரா செயல்படுவதில்லை. மாறாக, தனது நம்பிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்பச் செயல்படுகிறாள். கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் ருத்ரா. இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மோதலே தொடரின் மையக்கருவாக அமைகிறது.


தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள ‘அக்கா’ தொடரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஆதித்யா சோப்ரா, யோகேந்திர மோக்ரே மற்றும் அக்ஷய் விதானி ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். ராதிகா ஆப்தே, கீர்த்தி சுரேஷ், தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்ட பலர் இத்தொடரில் நடித்துள்ளனர்.


வசனங்களை ஹுசைன் தலால் மற்றும் அப்பாஸ் தலால் எழுதியுள்ளனர். ஜான் ஸ்டீவர்ட் எடுரி இசையமைத்துள்ளார். சங்க்யுக்தா காஸா மற்றும் சாஹீப் பாக்சி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். லக்ஷ்மி கேலுஸ்கர் தயாரிப்பு வடிவமைப்பையும், ஷீட்டல் இக்பால் ஷர்மா ஆடை வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். சண்டைக் காட்சிகளை சுனில் ரோட்ரிக்ஸ் வடிவமைத்துள்ளார்.

 

'வல்லமை', 'நரி வேட்டை' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய சி. கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ் பேனரில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் புதிய படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகிறார். 


இளம்பெண் ஒருவரை யார் கொலை செய்தார்கள், எதற்கு செய்தார்கள் என்பதை மர்ம முடிச்சுகளோடு பார்வையாளர்களுக்கு சொல்லும் இந்த கிரைம் திரில்லர் கதையில் பிரேம்ஜி அமரன் முதன்மை வேடத்தில் நடிப்பதோடு இசையும் அமைக்கிறார்.


போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் வேகமாக வளர்ந்து தற்போது படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் உள்ளது. அனைத்து பணிகளையும் இதே வேகத்தில் முடித்து படத்தை விரைவில் வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை குறித்து பேசிய இயக்குநர் சி. கணேஷ் குமார், "தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. இதுவரை ஏற்றிராத வேடத்தில் பிரேம்ஜி அமரன் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட் போன்ற அனுபவமிக்க நடிகர்களோடு பணிபுரிவது சிறந்த அனுபவமாக உள்ளது," என்றார்.


இந்த திரைப்படத்திற்கு சிற்பி குமார் ஒளிப்பதிவு செய்ய இயக்குனர் சி. கணேஷ் குமாரே படத்தொகுப்பையும் கையாளுகிறார். சண்டைப் பயிற்சி: எஸ். ஆர். ஹரி முருகன். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. 

Pageviews