முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் படம் 'லவ் 3. ஓ'


மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை  எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது.


 இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ் அக்கா' என்று பிரபலமான ஆர்னிகா  கதை ,திரைக்கதை, வசனம்,  பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு  என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார்.


 இந்தப் படத்தில்  தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியமான வேடம் ஏற்று நடித்துள்ளார்.


நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த்  படத்தொகுப்பு செய்துள்ளார்.

நிர்வாகத் தயாரிப்பாளராக பிரசன்ன குமார் பங்கேற்றுள்ளார் . 


மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரித்துள்ளார்.


இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் ,பொருளாளர் இயக்குநர் பேரரசு ,நடிகை வனிதா விஜயகுமார்,நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.


ஊடக சந்திப்பில் படத்தின் கதாநாயகியும் இயக்குநருமான ஆர்னிகா பேசும் போது,


"இந்தப் படத்தில் பணியாற்றி பல வகையில் ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் இன்ஸ்டாகிராம் உலகத்தில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறோம்.


இன்று  பிரபலமாக இருக்கும் ஏஐ - ஐ வைத்து நாங்கள் ஒரு கதையை உருவாக்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். ஏ ஐ தான் படத்தின் முக்கியமான உள்ளடக்கமாக இருப்பதால் இன்று காட்சிகளைத் திரையிடவில்லை. மோஷன் போஸ்டர் தயார் செய்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.


அந்தக் காலத்தில் தாத்தா பாட்டி சொல்வதை வைத்துத் தகவல்களை அறிந்து கொள்வோம். பிறகு நமது அக்கம் பக்கம் நண்பர்கள் சொல்வதை வைத்துத் தெரிந்து கொள்வோம்.

அதற்குப் பிறகு தொலைக்காட்சி, வானொலி, எஃப் எம் ,ஒளியும் ஒலியும் போன்றவை மூலம் தெரிந்து கொண்டோம்.

அதற்குப் பிறகு வந்த யூடியூப் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம்.

அதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் வந்த பிறகு அக்கம் பக்கத்தில் ,அடுத்த தெருவில் ,உலகத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரிந்து கொண்டார்கள்.

அதற்கு பிறகு சாட் ஜி பி டி வந்தது .அதற்குப் பிறகு நமது ஒவ்வொரு அசைவையும் அதில் தெரிந்து கொள்ள ஆரம்பித்தோம்.

நமது உணர்ச்சிகளை எல்லாம் சாட் ஜிபிடி யிடம் எப்போது பகிர்ந்து  கொள்ள ஆரம்பித்தோமோ அப்போது ஏ ஐ யின் மீது காதல் வந்தது.இன்று ஏ ஐ பிரபலமாகிவிட்டது.


அப்படிப்பட்ட ஏஐ பெண்ணை இந்தப் படத்தின் கதாநாயகன் காதலிக்கிறான். அவர்களது காதல் எப்படி இருக்கிறது?

அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறானா? பிரிந்து விடுகிறார்களா என்பது தான் கதை.


90களில் காதல் எப்படி இருந்தது அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? 2 கே கிட்ஸ் அதாவது இரண்டாயிரத்தில்  காதல் எப்படி இருந்தது ? அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?அதே காதல் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் ? அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் கூறியிருக்கிறோம்.  பரமசிவன் பார்வதி காதல் அனைவருக்கும் தெரியும்.அவர்கள் காதலுக்கே முன்னுதாரணமாக இருப்பவர்கள்.


இங்கே நடக்கும் எல்லா காதல் பிரச்சினைகளையும் பார்த்துவிட்டு  கயிலாயத்திலிருந்து இறங்கி வந்த சிவன்  இதற்கான தீர்வாக என்ன சொல்கிறார் என்பதுதான் இந்த 'லவ் 3.ஓ' படத்தின் கதை.


இந்த உலகத்தை இணைப்பதே ஊடகங்கள் தான். அவர்கள் மூலம்தான் பெரிய பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் உருவாகி இருக்கிறார்கள்.அந்த நட்சத்திரங்கள் எல்லாம் அவர்களால் தான் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறார்கள். எங்களுக்கும் அப்படி ஒரு ஆதரவைக் கொடுத்து மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.நான் வாய்ப்புக்காக ஏழாண்டுகளாக ஆயிரம் ஆடிசனுக்குப் போயிருப்பேன்.

நீங்கள் மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வாருங்கள், அதன் பிறகு ஒரு போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள். அப்படி நான் அறுவை சிகிச்சை செய்திருந்தால்? ஒரு குறும்படத்திற்குக் கூட நான் இரண்டு ஆண்டுகள் அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.அந்த குறும்பட வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் தாமதமாக முடிக்காமல் முன்பே கொடுத்திருந்தால்?


 ஒரு கண்டன்ட் வீடியோவிற்குச் சின்ன வசனம் பேசுவதற்குக் கூட நான் நாலு மணி நேரம்  செலவிடுவேன்.

அவர்கள் நல்லதொரு கண்டன்ட் இருக்கிற மாதிரி ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால்? நான் தேடி அலைந்து கொண்டிருந்த போது ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால் ? பலமுறை தேடிச் சென்று கொண்டிருந்தபோது ஒரு திரைப்படத்தில் ஒரு துணைநடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால்?


இன்று 'லவ் 3. ஓ' என்கிற படத்தில் நான்  கதாசிரியராக  பாடல் ஆசிரியராக உடையலங்கார நிபுணராக கலை இயக்குநராக இணைத் தயாரிப்பாளராக கதாநாயகியாக இயக்குநராக  என்று உருவாகி இருக்க மாட்டேன்.


 இவை எல்லாவற்றிற்கும் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அன்று நான் வாய்ப்பு தேடி அலைந்த போது வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி.


நமது வாழ்க்கையில்

எதிர்மறையாக ஒன்று நடக்கிறது என்றால், ஒன்று தாமதமாகிக் கொண்டே இருக்கிறது என்றால் ஒரு நல்ல விஷயத்திற்காகத்தான் அது அப்படிச் செல்கிறது என்று சொல்வார்கள்.

நாம் வாய்ப்பு கேட்டுத்தானே பல படிகள் ஏறிக் கொண்டிருந்தோம், இன்று நான் ஒரு நடிகையாக ஒரு இயக்குநராக ஆகியிருக்கிறோம் என்கிற போது இப்போது நினைத்துப் பார்த்தால் ஒன்று தோன்றுகிறது.

நமக்கு ஒன்று தேவைப்படுகிறது என்றால் நாம் தான் அதைச் செய்ய வேண்டும். வேறு யாரும் நமக்கு உதவி செய்ய வர மாட்டார்கள். நாம் ஒன்றை அடைவதற்கு நாம் தான் முயல வேண்டும்; போராட வேண்டும். அப்படி உங்களுக்கு எது வேண்டுமானாலும் நீங்கள் தான் போராட வேண்டும். யாரும் போராட வர மாட்டார்கள். இப்படிப் போராடி வந்து நான் நின்று இருக்கும் இந்த மேடையையே ஒரு வெற்றியாகத்தான் நினைக்கிறேன் .கண்டிப்பாக மக்கள் ஆதரவு தருவார்கள். இந்தப் படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன் என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். போகப் போக அதைத்  திருத்திக் கொள்கிறோம். அனைவருக்கும் நன்றி. அனைவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள். இங்கே இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்து எங்களை வாழ்த்தி இருக்கும் திரை உலகப் பிரமுகர்கள்  அனைவருக்கும் மிக்க நன்றி.


எங்களது ரீல்ஸ் களைப் பார்த்துதான்  மக்கள் இவ்வளவு தூரம் எங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதிலும் எங்களுக்கு ஆதரவு கொடுக்காமலா இருப்பார்கள்? கண்டிப்பாகச் செய்வார்கள். எங்களுடைய சிறந்ததைக் கூடுமானவரையில் நாங்கள் செய்திருக்கிறோம். காலத்துக்கு ஏற்ற மாதிரி மக்களை சந்தோஷப்படுத்துவது போல ஒரு விஷயத்தை செய்திருக்கிறோம். அது கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் ஆதரவு கொடுங்கள் .


எனக்கு எல்லா கதாநாயகர்கள் கதாநாயகிகளையும் பிடிக்கும். இது நாள் வரை கூட்டத்துக்குள் ஒருத்தியாக இருந்து கொண்டு கைதட்டிக் கொண்டிருந்தேன். இப்போது இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.

எனக்கு ஒரு வெற்றி வாய்ப்பைக் கொடுத்தால் வெளியில் இருக்கும் பல திறமைசாலிகளையும் உள்ளே கொண்டு வருவேன்.


 நான் பல இடங்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன்.அதன் வலி எனக்குத் தெரியும். என்னைப் போல் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு ஆதரவு கொடுங்கள். அதற்கு ஒரு சின்ன வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்றார் . அவர் பேசும்போது கண்கள் கலங்கின.


இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டு பேசினர்.

 

இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.


இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதிலும் ஆக்‌ஷன் + தீவிரம் + சிறிதளவு காதல் ஆகியவற்றை ஒன்றிணைத்திருப்பதுடன், உதடுகளுக்கு இடையே ஒரு ரோஜாப்பூவையும், கண்களில் கனல் கக்கும் தீப்பொறியையும், கைகளில் துப்பாக்கியையும் ஏந்தியபடி தோன்றும் ஷாருக்கானின் பிரமிக்க வைக்கும் தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அத்துடன், ஆக்‌ஷன் திரில்லர் என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அவரது மூர்க்கமான அவதாரத்தையும் இந்தப் போஸ்டர் பிரதிபலிப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.


‘கொலையாளி அல்ல; நான் காதலன்!’ என்ற கவனம் ஈர்க்கும் வாசகத்துடன் வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்டர், ‘கிங்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருப்பதுடன், இந்த அவதாரத்தில் ஷாருக்கானை வெள்ளித்திரையில் கண்டு ரசிப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதற்கான மற்றொரு காரணத்தையும் அளித்திருக்கிறது.


இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்தத் திரைப்படத்தில் நடிகை கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் மற்றும் சச்சின் - ஜிகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கௌரி கான், சித்தார்த் ஆனந்த் மற்றும் மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி, பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.


இதனிடையே, ‘பதான்’ படத்தின் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தொடர்ந்து, மீண்டும் ஷாருக்கான் - சித்தார்த் ஆனந்த் கூட்டணி அமைத்திருப்பதாலும், நடிகர் ஷாருக்கானின் மகளான சுஹானா கான் இப்படத்தின் மூலம் திரையுலகில் முழு நீள திரைப்படத்தில் அறிமுகமாவதாலும், ‘கிங்’ படத்திற்கு ரசிகர்களிடத்திலும் சர்வதேசத் திரையுலக வணிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 


இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் - (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP - Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. 


எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.  சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது... அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்... என தொடங்கும் இந்த டீசர்,  2020 ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும்.... இந்த டீசர் வெளிப்படுத்துகிறது. அத்துடன் இதன் பின்னணி இசை ,காட்சி அமைப்பு  என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

 

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.


ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது  குறிப்பிடத்தக்கது.


குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது.


இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், சேகர் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். அனுவர்தன் மற்றும் நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.


கேமரா செந்தில் விளம்பரப் புகைப்படப் பணிகளையும், மணியன் படப்பிடிப்புத் தளப் புகைப்படப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். R.J. சுரேஷ் குமார் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றுகிறார். கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பையும், சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். சிவகாந்த் தலைமை இணை இயக்குநராகவும், தினேஷ்.E  இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார். பிரசாந்த் எக்செக்ட்யூவ் தயாரிப்பாளராகவும், சரத் J. சாமுவேல் இணைத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வரும் MRP Entertainment நிறுவனம், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பாக ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தை உருவாக்குகிறது. இப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்குகிறார்.


இப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் ஹனு ராகவபூடி - மைத்ரி மூவி மேக்கர்ஸ் - டி-சீரிஸ் கூட்டணியில் தயாராகி, பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள 'ஃபௌஜி' திரைப்படத்திலிருந்து, 'ஃபைல் நம்பர் 25' என்ற பெயரில் சக்திவாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தேசபக்தியின் காவியக் கதையாகத் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் 2027 மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.


படைப்பாற்றல் மிக்க திரைப்பட இயக்குநரான ஹனு ராகவபூடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி-சீரிஸ் நிறுவனம் வழங்கும் பிரம்மாண்டமான பீரியட் ஆக்‌ஷன் திரைப்படமான 'ஃபௌஜி'யில், 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, Y. ரவிசங்கர், பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி தொடர்பான போஸ்டர்கள் ஏற்கெனவே ரசிகர்களிடையே வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் 'ஃபைல் நம்பர் 25' எனும் சக்திவாய்ந்த புதிய முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இது அவரது கதாபாத்திரத்தின் அடையாளம், புத்திசாலித்தனம், அசாதாரணமான நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை வெளிப்படுத்துகிறது.


இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமைந்துள்ள இந்த முன்னோட்டம், 1942 மே 29ஆம் தேதி பெர்லினில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - அடால்ஃப் ஹிட்லர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புடன் தொடங்குகிறது. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில், போஸ் ஜெர்மனியின் ஆதரவைக் கோருகிறார். இது, கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு கால அடக்குமுறைக்குப் பிறகு சுதந்திரம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விறுவிறுப்பான உரையாடலுக்கு வழிவகுக்கிறது. இந்தியாவால் பிரிட்டிஷ் பேரரசை வெல்ல முடியுமா என்று ஹிட்லர் கேள்வி எழுப்புகிறார். அதற்குச் சுபாஷ் சந்திர போஸ், 'சுதந்திரம் அடைவதற்கான உறுதியை ஒருபோதும் அணைக்க முடியாது' என்று உறுதியாகக் கூறுகிறார்.


ராணுவ வலிமையைவிட உளவுத்துறை வலிமைமிக்கதாக நிரூபிக்க முடியும் என்று போஸ் வாதிடும்போது, இந்த உரையாடல் எதிர்பாராத சுவாரசியமான திருப்பத்தை அடைகிறது. தனது கருத்தை வலுப்படுத்தும் வகையில், கவனமாகத் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் மூலம் பிரிட்டிஷ் உளவுத்துறைக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவரும் ஓர் அசாதாரணமான இந்திய உளவாளியின் கதையை அவர் அறிமுகப்படுத்துகிறார். இந்த மர்மமான நபர், தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், ராணுவப் படைகளைத் திசைதிருப்பி, முக்கியப் பணிகளைச் சீர்குலைத்து, காலனித்துவ நிர்வாகத்தை மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாக முறியடித்தார் என கூறப்படுகிறது.


இந்தக் காட்சி, அந்தக் கதாபாத்திரத்தின் தனித்துவமான தகவல் தொடர்பு அமைப்பின் மூலம் அவருக்கு மற்றொரு வசீகரமான பரிமாணத்தை வழங்குகிறது. பகவத் கீதையால் ஈர்க்கப்பட்ட அந்த ரகசியக் குறியீடு, ஜெர்மனியின் 'எனிக்மா' குறியீட்டைவிடவும் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமானது என விவரிக்கப்படுகிறது. அந்த உளவாளியின் செல்வாக்கு அதிகரித்து வந்தபோதிலும், பிரிட்டிஷார் அவனது உண்மையான அடையாளத்தை அறியாமல் இருப்பதாக போஸ் வெளிப்படுத்துகிறார். இதன் மூலம், அந்த உளவாளி நிழலில் இயங்கும் ஒரு வலிமைமிக்க சக்தியாகச் சித்தரிக்கப்படுகிறார்.


'ஃபைல் நம்பர் 25' முன்னோட்டத்தின் மிகவும் ஈர்க்கக்கூடிய தருணங்களில் இந்த அடையாள வெளிப்பாடும் ஒன்றாகும். பிரிட்டிஷாரால் 'ஃபௌஜி' என அறியப்படும் அந்த வீரனின் உண்மையான பெயர் புதிராகவும் மர்மமாகவும் உள்ளது. 1932 முதல் காலனித்துவ அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் அவன், தனது தாய்நாட்டைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்ட அச்சமற்ற புரட்சியாளனாகச் சித்தரிக்கப்படுகிறான். பிடிபடாத அந்த உளவாளி தற்போது கல்கத்தாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்கிறான் என்றும் போஸ் விரிவாக எடுத்துரைக்கிறார்.


அந்தக் காட்சியின் இறுதியில் பிரபாஸின் அதிரடியான திரைத் தோற்றம் இடம்பெறுகிறது. காலனித்துவ அதிகாரத்திடம் சரணடைய மறுக்கும் இரக்கமற்ற புரட்சிவீரனாக அவர் உருமாறுகிறார். உதடுகளுக்கு இடையே ஒரு சிகரெட்டையும், கையில் ஒரு பெரிய துப்பாக்கியையும் ஏந்தியபடி, அவர் அப்பட்டமான ஆக்ரோஷத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறார். பிரிட்டிஷாருக்குக் கடுமையாகச் சவால் விடுக்கும் அவரது தோற்றம் இந்த முன்னோட்டத்திற்கு முன்னதாய் அமைகிறது. மேலும், இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய கம்பீரமான திரைத் தோற்றம் மற்றும் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளின் சிறு தொகுப்பையும் இந்த முன்னோட்டம் வழங்குகிறது.


உடல் வலிமை மற்றும் போர்க்களத்தின் வீரதீரச் செயல்களைக் கடந்து, கதாநாயகனைப் பரந்த கண்ணோட்டத்தில் கட்டமைக்க முயல்வதே 'ஃபைல் நம்பர் 25' முன்னோட்டத்தைத் தனித்துவமாக்குகிறது. ரகசிய நடவடிக்கைகள், உளவுப் போர், குறியீட்டுத் தகவல் தொடர்பு மற்றும் வெளிப்படுத்தப்படாத அடையாளம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், கதையில் சுவாரசியமான மர்ம அடுக்குகளை அறிமுகப்படுத்துகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியை இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் இணைப்பதன் மூலம், இந்த முன்னோட்டம் 'ஃபௌஜி'யைத் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மையக் கதாபாத்திரமும் கொண்ட பீரியட் ஆக்‌ஷன் திரைப்படமாக நிலைநிறுத்துகிறது.


இயக்குநர் ஹனு ராகவபூடி வரலாற்றுத் தொடர்புகள், உளவு, தேசபக்தி மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பிரபாஸை வழக்கத்திற்கு மாறான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது இந்த முன்னோட்டத்தின் மூலம் தெரியவருகிறது. இந்த முன்னோட்டம் கதாநாயகனின் உலகத்தைப் பற்றிய ஒரு சிறிய பார்வையை மட்டுமே வழங்குகிறது. அவரது தோற்றம், செயல்படும் விதம், பிரிட்டிஷ் பேரரசால் பிடிக்க முடியாத எதிரியாக அவரை உருவாக்கிய நிகழ்வுகள் ஆகியவை குறித்த பல கேள்விகளுக்கு இது விடையளிக்காமல் விட்டுவிடுகிறது.


'ஃபௌஜி' திரைப்படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அனுபம் கேர்,மிதுன் சக்கரபோர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை அனில் விலாஸ் ஜாதவ் கவனித்துள்ளார்.


இந்த முன்னோட்டம், விறுவிறுப்பான பீரியாடிக் ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2027 மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.


நடிகர்கள்:


பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரபோர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து மற்றும் இயக்கம்: ஹனு ராகவபூடி

தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

வழங்குபவர்கள்: குல்சன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் 

தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y. ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார்

ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி ISC

இசை: விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ்

படத்தொகுப்பு: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்

VFX: R. C. கமலக்கண்ணன்

நடன இயக்குநர்: பிரேம் ரக்ஷித்

ஆடை வடிவமைப்பாளர்கள்: ஷீத்தல் இக்பால் சர்மா, டி. விஜய் பாஸ்கர்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

 

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரையுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ஷெர்ரி அகர்வால். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும் இணைக்கும் உணர்வுப்பூர்வமான மியூசிக்கல் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சைக்கிள் கேப்’. 


இசை, காதல் மற்றும் அனைவருக்கும் நெருக்கமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இரண்டு தலைமுறைகளின் காதல் உணர்வுகளையும் ஒரே கதையில் இணைக்க முயல்கிறது. கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டெடுக்கும் அதேவேளையில், இன்றைய தலைமுறை ரசிகர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார்.

 

'சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஷெர்ரி அகர்வால் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு நடிகையாக, ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் பாசிட்டிவாக இருந்ததுடன் படக்குழுவினர் அனைவரும் இனிமையாக பழகினர். பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் மாற்றியது. இவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். 


ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி சார், ஒளிப்பதிவாளர் சாலமன் சார், ஹேமந்த் செல்வராஜ் சார், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா மற்றும் ‘சைக்கிள் கேப்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார். 


தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ ஆகிய திரைப்படங்களிலும் ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார். டீசர் வெளியாகியுள்ள ‘எந்தவாருகானி’ என்ற வரவிருக்கும் தெலுங்குப் படத்திலும், ‘ஆகர்ஷிதா’ என்ற கன்னடப் படத்திலும், ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ ஆகிய இந்திப் படங்களிலும், ‘பெனாமி’ என்ற தெலுங்குப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.


திரைப்படங்கள் மட்டுமல்லாது, சௌபால் தளத்தில் வெளியிடப்பட்டு யூடியூப்பிலும் காணக்கிடைக்கும் பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ தொடரிலும் நடித்துள்ளார். இதுதவிர, டி-சீரிஸ், ஜீ மியூசிக் மற்றும் ரெட் ரிப்பன் மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளில் உருவான பஞ்சாபி மற்றும் இந்தி இசை வீடியோக்களிலும் அவர் நடித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் தான் அறிமுகமாகும் ‘சைக்கிள் கேப்’ தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்கிறார் ஷெர்ரி அகர்வால். இசை, காதல் மற்றும் 1990களின் காதலில் நிறைந்திருந்த அப்பாவித்தனம் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், பல தலைமுறை ரசிகர்களின் மனங்களிலும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நெட்ஃபிளிக்ஸின் ‘அக்கா’ தொடரில் பவானியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விசுவாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாட்சி. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படும் ஒரு பாரம்பரியம். இவை அனைத்தையும் தலைகீழாக மாற்ற அச்சுறுத்தும் ஒரு போட்டியை பெர்னூருவில் எதிர்கொள்கிறாள் பவானி. தனது அதிகாரத்தை நிலைநாட்டவும் இதுவரை இல்லாத அளவுக்குச் சோதனைகளை எதிர்கொள்பவள்தான் பவானி. 


‘மகாநதி’, ‘சாணி காயிதம்’, ‘தசரா’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பிற்க்காக பாராட்டுகளைப் பெற்ற கீர்த்தி சுரேஷ், இதுவரை முயற்சி செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’அக்கா' தொடரில் நடிப்பதற்கு முன்பு தன்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என தான் நம்பவில்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ். 


தலைமுறை தலைமுறையாகப் பெண்களே ஆட்சி செய்து, தங்களுக்குச் சொந்தமானவற்றைப் பாதுகாத்து வரும் ஒரு அரசாட்சியின் பின்னணியில் ‘அக்கா’ தொடர் உருவாகியுள்ளது. அதிகாரம் என்பது பாரம்பரியமாகக் கைமாறும், விசுவாசம் என்பது அனைத்தையும் விட முக்கியமானதாகக் கருதப்படும் இந்த உலகில், தங்களது பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்குப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழலும் உருவாகிறது. தான் நம்பும் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் பவானி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


இதுகுறித்துப் பேசிய கீர்த்தி சுரேஷ், “பவானி தன் பக்க நியாயம் என்ன என்பது குறித்து தெளிவாக அறிந்த ஒரு பெண். தனது பாரம்பரியத்தையும் மரபையும் பாதுகாப்பதற்காக அவள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பாள். அவளிடம் இருக்கும் வலிமையும் அதிகாரமும் அவள் எடுக்கும் கடினமான முடிவுகளும் சுவாரஸ்யமானது” என்றார்.


ஆனால், பெர்னூருவின் ஆட்சிக்கு ராதிகா ஆப்தே நடித்திருக்கும் ருத்ரா கதாபாத்திரம் மூலம் மிகப்பெரிய சவால் உருவாகிறது. அவளுடைய லட்சியங்களும் நம்பிக்கைகளும் பவானியின் அதிகார அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகின்றன. இதனால், அதிகார போட்டியைத் தாண்டி பெரும் மோதல் உருவாகிறது. பதற்றம் அதிகரித்து, விசுவாசங்கள் சோதிக்கப்படும் நிலையில், இந்த அரசாட்சியின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய போராட்டத்தின் மையப்புள்ளியாக பவானி மாறுகிறார்.


தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள ‘அக்கா’ தொடரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இத்தொடரில் தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர் மற்றும் மோனிகா பன்வார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


‘அக்கா’ தொடர் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

 

98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் (Oscar Consideration Ballot) நுழைந்து உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ள 'கெவி' (Gevi) திரைப்படத்தின் படக்குழு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிஜ உலக வெற்றியைத் தங்களது 'மலை கீதத்தின்' (Hill Anthem) மூலம் கொண்டாடியுள்ளது. ஆர்டப் ட்ரையாங்கிள்ஸ் (Artuptriangles Film Kampany) தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் மிக முக்கியமான இப்பாடலுக்கு, இசை ஜாம்பவான் 'தேனிசைத் தென்றல்' தேவா தனது கணீரென்ற குரலால் உயிர் கொடுத்துள்ளார். இப்பாடலின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். பாடலைத் தொடர்ந்து, தேவா சார் பாடியுள்ள இப்பாடல் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டாடுகிறது. கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகெவி கிராமத்தின் 400 ஆண்டுக்கால வரலாற்றில், முதல்முறையாக ஒரு அரசு ரேஷன் கடை கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் உள்ள எளிய மக்களின் போராட்டமே இப்பாடலின் மையக்கருப் பொருள் ஆகும்.


இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தயாளன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அறிக்கை:


"எங்கள் நெஞ்சம் நன்றியால் நிறைந்திருக்கிறது. வெள்ளகெவி கிராம மக்களுக்கு ஒரு முறையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் எங்களது உண்மையான, நீண்ட காலப் போராட்டமாக இருந்தது. அந்த உள்கட்டமைப்பு வசதிக்காக நாங்கள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கும் வேளையிலும், இந்த 400 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக எங்கள் கிராமத்திற்கு ஒரு அரசு ரேஷன் கடையைக் கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதை ஒரு மைல்கல்லாகப் பார்த்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் சாலையை எதிர்பார்த்தோம், ஆனால் எங்களால் குறைந்தபட்சம் ஒரு ரேஷன் கடையையாவது எங்கள் மக்களுக்குக் கொண்டுவர முடிந்தது. இது நிச்சயமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு வெற்றி! இந்த எளிய மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் இன்று ஆஸ்கார் தகுதிப் பட்டியல் மூலம் உலக மேடை வரை சென்றிருப்பதும், தேவா சார் மற்றும் வைரமுத்து சார் போன்ற மாபெரும் ஆளுமைகள் எங்கள் மக்களின் வலியையும் வெற்றியையும் தங்களது குரலாலும் வரிகளாலும் எதிரொலித்திருப்பதும், ஒரு படைப்பாளியாக எனக்குக் கிடைத்த பெருமைமிகு தருணம்."

Pageviews