செல்வி ஹோமியோபதி கிளினிக் தொடக்கம்
எஸ்.வி. சேகர் பேசியது,
டாக்டர் மகேஷ் அவர்கள் உதவி செய்து இந்த 'செல்வி ஹோமியோபதி கிளினிக்' ஆரம்பித்திருக்கிறார்கள். செல்வி என்னைக்குமே ராசியானவர் . ஜோசியம் என்று எடுத்தாலும் அவர்தான் இன்று அதிகபட்ச பார்வையாளர்களுடனும், டி.ஆர்.பி-யிலும் சென்று கொண்டிருப்பவர். அவர் எது சொன்னாலும் அவருக்குப் பிரச்சனையே இல்லை; "கட்டம் சொல்லுது" என்று கட்டத்தின் மேல் பழியைப் போட்டுவிட்டு இருக்கும் உண்மையை எல்லாம் சொல்லிட்டுப் போய்விடுவார். நாம் சொல்வதற்குத்தான் நாலு தடவை யோசிக்க வேண்டும். இத்தனை கேமராக்கள் வந்தவுடன் மௌனமாக இருப்பதுதான் நமக்குப் பாதுகாப்பானது.
ஹோமியோபதியை நான் ஒரு 20-25 வருஷமாகப் பயன்படுத்தி வருகிறேன். நான் எதை அனுபவ ரீதியாக உணரவில்லையோ அதற்கு விளம்பரமோ, ஆதரவோ செய்யவே மாட்டேன். மேலே விமானம் பறக்குது, கீழே ரயில் போகுது என்று நிலம் விற்பது, ஈமு கோழி போன்ற விஷயங்களில் எல்லாம் என்னைப் பார்த்திருக்க முடியாது.
எத்தனையோ நோய்களுக்கு, புற்றுநோய்க்கு (Cancer) உண்டான மருந்தைக் கூட ஹோமியோபதி மூலமாகக் கொடுக்க முடியும். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், எந்தப் பக்கவிளைவுகளும் (Side effects) கிடையாது. ஹோமியோபதி சாப்பிட்டால் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது சாப்பிட்டால்தான் குணமாகும் என்று சொல்வார்கள்; அதெல்லாம் இப்போது மாறிப்போச்சு. எனக்கு ஒரு வாரமாகத் தொடர்ந்து இருமல் இருந்தபோது, தினமும் மூன்று சொட்டு மருந்து சாப்பிட்டதில் மூன்று நாட்களிலேயே குணமாகிவிட்டது. இது தற்காலிக நிவாரணம் தருவதல்ல, நிரந்தரமாக நோயிலிருந்து விடுதலை கொடுக்கக்கூடியது.
ஆங்கில மருத்துவத்தில் டாக்டர் அப்பாயிண்ட்மென்ட் கட்டணத்திற்கு இங்கே மருந்துக்கும் சேர்த்தே அவ்வளவுதான் ஆகும். "இது எளிய முறை, எளியவர்களுக்கு உண்டான மருத்துவம்" என்று திரு. செல்வி அவர்கள் சொல்வது 100% உண்மை. மோடியின் 'மக்கள் மருந்தகத்தில்' 100 ரூபாய் மருந்து 18 ரூபாய்க்குக் கிடைப்பது போல, பிராண்ட் பெயருக்காக அதிகப் பணம் கொடுத்துப் பக்கவிளைவுகளைச் சந்திக்காமல், பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமாக ஹோமியோபதி உள்ளது. ஐந்து வருடத்தில் விரிவுபடுத்துவோம் என்று அவர் சொன்னாலும், செல்வி மற்றும் மகேஷின் வேகத்திற்கு ஒரு வருடத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் கொண்டு வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். வேளச்சேரியில் ஆரம்பித்திருக்கிறார்கள்; அதை அப்படியே மந்தைவெளி வரை கொண்டு வந்தால் எங்கள் வீட்டுக்கும் அருகில் இருக்கும். இதில் ஆறு ஆலோசனை அறைகள் (Consulting rooms) இருப்பதால் குறைந்தபட்சம் ஆறு மருத்துவர்கள் இருப்பார்கள். சினிமாவில் காட்டுவது போல ஒரு வயதானவர் துண்டைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நாட்டு வைத்தியம் போல இல்லாமல், நவீன முறையில் அமைத்துள்ளார்கள் . தவறான மருந்து, தவறான சிகிச்சை என்பதே இல்லாத இந்த மருத்துவம் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
டாக்டர் மகேஷ் பேசியது,
இன்று வேளச்சேரியில் செல்வி ஹோமியோபதி கிளினிக்கைத் தொடங்குகிறோம். உலகம் முழுவதும் ஆங்கில மருத்துவத்திற்கு அடுத்தபடியாக மாற்று மருத்துவத்தில் ஹோமியோபதிதான் முதல் தேர்வாக உள்ளது. இந்தியாவில் இதன் வளர்ச்சி நன்றாக இருந்தாலும், தமிழ்நாட்டில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் வளர்ச்சி மெதுவாக உள்ளது. நாள்பட்ட நோய்களுக்கு நல்ல தீர்வு தரும் இந்த மருத்துவத்தைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்கள் குருநாதர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எங்களுக்குக் கொடுத்த வழிகாட்டி திரு. செல்வி அண்ணா அவர்களும், திரு. எஸ்.வி. சேகர் அவர்களும் வந்து தொடங்கி வைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
செல்வி பேசியது,
டாக்டர் மகேஷ் ஒரு பிரபல ஹோமியோபதி நிறுவனத்தில் ஜி.எம் (GM) மற்றும் சி.இ.ஓ-வாக (CEO) இருந்து, தமிழ்நாட்டில் ஹோமியோபதியை வளர்த்ததில் முக்கியப் பங்காற்றிய அனுபவசாலி. மேற்கத்திய நாடுகளில் முக்கியப் பங்காற்றும் இந்த எளிமைப்படுத்தப்பட்ட மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க, சிங்கப்பூர் நண்பர் கிருஷ்ணமூர்த்தி, நான் மற்றும் டாக்டர் மகேஷ் இணைந்து இதைத் தொடங்கியுள்ளோம். ஐந்தாண்டுத் திட்டத்திற்குள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை இதை விரிவுபடுத்துவோம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சித்திராமணி அண்ணன் மற்றும் வருகை தந்த பார் கவுன்சில் ஐயப்பமணி, அருணாச்சல ஓட்டல் உரிமையாளர், ஸ்ரீதர், நாராயணன் சங்கர், ஏ.ஆர்.எஸ் உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றி. செல்வி ஹோமியோபதி கிளினிக் மருத்துவர்களின் வளர்ச்சியோடு தமிழ்நாட்டு மக்களின் ஆரோக்கியமும் வளர வாழ்த்துகிறேன்.














0 comments:
Post a Comment