'The End of Oak Street’ Releases only in Cinemas in August 2026
ஒரு மர்மமான விண்வெளி சார்ந்த நிகழ்வின் விளைவாக, புறநகர்ப்பகுதியிலிருக்கும் ஓக் ஸ்ட்ரீட் பெயர்த்தெடுக்கப்பட்டு அதன் அக்கம் பக்கமுள்ள வீடுகள் முன்பின் தெரியாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், அடையாளம் தெரியாத சுற்றுச்சூழலில் வழி தேடி சுற்றும் ப்ளாட் குடும்பம், தாங்கள் ஒன்றாக இணைந்திருந்தால் தான் உயிர் பிழைக்க முடியுமென்பதை புரிந்து கொள்கிறது.
ஆன் ஹாத்அவே மற்றும் ஈவன் மெக்க்ரெகர் ஆகியோர் நடிக்கும் தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் திரைப்படத்தில் மெய்ஸி ஸ்டெல்லா மற்றும் க்றிஸ்டியன் கான்வெரி ஆகியோரும் நடித்துள்ளனர். டேவிட் ராபர்ட் மிட்ச்செல் எழுதி இயக்க, ஜே.ஜே.ஏப்ரம்ஸ், ஹானா மிங்கெல்லா, ஜான் கோஹென், டேவிட் ராபர்ட் மிட்ச்செல், மாட் ஜாக்சன் மற்றும் டாமி ஹார்ப்பர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்கள் க்றிஸ் பெண்டர், ஜேக் வீனர், ஜோஆன் லீ மற்றும் லீஆன் ஸ்டோன்ப்ரேக்கர்.
கேமராவுக்கு பின்னால் மிட்ச்செலின் குழுவில் ஒளிப்பதிவு இயக்குனர் மைக்கேல் ஜியோலாகிஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் மாயா ஷிமோகுச்சி, படத் தொகுப்பாளர் ஜான் ஆக்ஸல்ராட், இசையமைப்பாளர் மைகேல் ஜிக்கீனோ மற்றும் ஆடை வடிவமைப்பாளர் எரின் பெனக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வார்னர் ப்ராஸ். பிக்சர்ஸ் வழங்கும் பேட் ரோபாட் தயாரிப்பு, ஜாக்சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஒரு டேவிட் ராபர்ட் மிட்ச்செல் திரைப்படம்: தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட். வார்னர் ப்ராஸ். பிக்சர்ஸ் உலகமெங்கும் விநியோகிக்கும் இத்திரைப்படம், இந்தியாவில் திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸில் மட்டும் ஆகஸ்ட் 2026ல் வெளியாகிறது.











0 comments:
Post a Comment