சாருகேசி திரை விமர்சனம்

 

உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை வித்வானான சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) சங்கீதமே உலகம் என்று வாழ்பவர். அவருக்கு திடீரென அல்சைமர் (ஞாபக மறதி) நோய் தாக்கத் தொடங்குகிறது. தான் பாடிய ராகங்கள், தனது குடும்பத்தினர், ஏன் தனது சொந்த அடையாளம் வரை அனைத்தையும் அவர் மெல்ல மெல்ல மறக்கிறார். அதே நேரத்தில், மகனுடனான (ராஜ் ஐயப்பா) விரிசலடைந்த உறவு மற்றும் மருமகளின் (ரம்யா பாண்டியன்) பழிவாங்கும் நோக்கம் ஆகியவற்றால் குடும்பத்தில் புதைந்து கிடக்கும் சில ரகசியங்கள் வெளிவருகின்றன. இறுதியில் இந்த மனக்காயங்களை இசை எவ்வாறு குணப்படுத்துகிறது, அல்சைமர் பாதிப்புடன் சாருகேசியின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.


இசை சாம்ராட்டாகவும், மகனால் அவமதிக்கப்படும் தந்தையாகவும், அல்சைமர் நோயால் நினைவுகளை இழந்து தவிக்கும் மனிதராகவும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து அசத்தியுள்ளார். சாருகேசியின் மனைவியாக வரும் சுஹாசினி மணிரத்னம், கணவன்-மகன் இடையேயான மோதலைச் சமாளிக்கும் தாயாக மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கவுரவ வேடங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.


தேனிசைத் தென்றல் தேவாவின் இசையும் பின்னணி இசையும் படத்திற்குப் மிகப்பெரிய பலம். பா.விஜய் வரிகளில் வரும் பாடல்களும், குறிப்பாகக் கிளைமாக்ஸ் பாடலும் உருக வைக்கின்றன.


உணர்ச்சிகரமான திரைக்கதை,குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், தலைமுறைகளுக்கு இடையிலான புரிதலையும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். கத்தி, ரத்தம், வன்முறை இல்லாத ஒரு பாசிட்டிவான படம்.

0 comments:

Pageviews