சாரா திரை விமர்சனம்
கட்டிடப் பொறியியல் படித்த சாக்க்ஷி அகர்வால், ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கேயே பணியாற்றும் விஜய் விஸ்வாவுடன் காதல் வயப்பட்டு, திருமணத்திற்குத் தயாராகிறார். ஆனால், திடீரென நிறுவன காவலாளி ரோபோ சங்கர், சாக்க்ஷியை கொலை செய்யத் திட்டமிடுகிறார். அதற்கு முன்பே, அனைவருக்கும் கோமாளியாகத் தோன்றும் சாதாரண தொழிலாளி செல்லகுட்டி, சாக்ஷி, விஜய் உள்ளிட்டோரை கடத்திவிடுகிறார். சாக்ஷி, விஜய் விஸ்வாவை ஏன் கடத்தினார் ? பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
நாயகியாக சாக்க்ஷி அகர்வால் தனது பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். காதல், பயம், அதிர்ச்சி என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதலராக வரும் விஜய் விஸ்வா, ஆரம்பத்தில் ஹீரோ போல எண்ட்ரி கொடுத்தாலும், பின்னர் படத்தில் காணாமல் போகிறரர், கொடுத்த பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். தங்கதுரை, ரோபோ சங்கர் மற்றும் யோகிபாபுவின் காமெடி படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. இருவரும் அடிக்கும் காமெடிகள் கலகலப்பை கொண்டு வருகின்றன. செல்லக்குட்டியின் அம்மாவாக நடித்திருக்கும் அம்பிகா, தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். சாக்ஷியின் தந்தையாக நடித்திருக்கும் பொன்வண்ணன், குறைந்த காட்சிகளில் நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பு.
படத்தில் பின்னணி, ஒளிப்பதிவும் ஓகே ரகம்.
மொத்தத்தில் படத்தின் இயக்குனர் செல்லக்குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோவும் இவரே வில்லனும் இவரே என்ற கோணத்தில் இவரின் கதாபாத்திரம் நகர்கிறது. நல்லதொரு கதையை கையில் எடுத்த செல்லக்குட்டி அதனை காட்சிப்படுத்தும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.











0 comments:
Post a Comment