நிர்வாகம் பொறுப்பல்ல திரை விமர்சனம்

 

கார்த்தீஸ்வரன், ஆதவன் உட்பட ஐவர் சேர்ந்து மக்களிடையே ஆன்லைன் மூலம் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆன் லைன் செக்ஸ் மோசடி, குறைந்த பணத்திற்கு அதிகமான வட்டி, 250 ரூபாய்க்கு மொபைல் போன் என பல விதங்களில் மக்கள் தலையில் மிளகாய் அரைத்து அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறது இந்த கும்பல். இந்த கும்பலை பிடிப்பதற்காக களம் இறங்குகிறது ஸ்ரீநிதி தலைமையிலான போலீஸ் படை. இறுதியில் கார்த்தீஸ்வரன் பிடிபட்டாரா இல்லையா என்பது படத்தின் மீதிக் கதை.


இந்த சுவாரஸ்யமான கதையை எழுதி படத்தை இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன். கச்சிதமாக நடித்து கோலிவுட்டில் தனக்கொரு முத்திரையை பதித்துள்ளார். அவரது மோசடி குழுவில் இடம்பெற்றுள்ள லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, ஆதவன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார்.


ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ் தன் வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகமாக அமைந்து ஆட்டம் போட வைக்கிறது.


மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும் தான் சொல்ல வந்த கருத்தை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

0 comments:

Pageviews