உருட்டு உருட்டு திரை விமர்சனம்
எந்த நேரமும் குடித்து விட்டு, வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் கஜேஷ் நாகேஷை காதலிக்கும் நாயகி ரித்விகா ஸ்ரேயா. நாயகனோ மது குடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். தன் அழகால் நாயகனை வசீகரிக்க நாயகி பல முயற்சிகள் செய்தாலும், நாயகன் மது மீதே அதீத காதல் கொண்டவராக இருக்கிறார். காதலனின் நிலை அறிந்து அவரை திருத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நாயகி, இறுதியில் எதிர்பார்க்காத ஒரு விசயத்தை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் உரைய வைக்கிறார். அது என்ன ?, எதற்காக அப்படி செய்தார் ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கச்சிதமாக நடித்திருக்கிறர். நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரித்விகா ஸ்ரேயா, வழக்கமான வணிகப்பட கதாநாயகியாக ஆடல்,பாடல் என்று வலம் வருகிறார். நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமியாக நடித்திருக்கிறார். மூன்று பொண்டாட்டிகளாக நடித்திருக்கும் அஸ்மிதா, ஹேமா, சின்னாளப்பட்டி சுகி ஆகியோர், எந்தவித பாகுபாடும் இன்றி மொட்டை ராஜேந்திரனையும், பார்வையாளர்களையும் கிளுகிளுப்பு கலகலப்பு என்று குஷிப்படுத்துகிறார்கள்.
இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிற ரகம். கமர்சியல் பாணியில் பாடல்கள் ஒலிக்கின்றன.
சமூக அக்கறையோடு ஒரு க்ளைமாக்ஸை கொடுத்து கண்கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர். எல்லாவற்றையும் நகைச்சுவை கலந்து சொல்லவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்.அதே கவனத்தை மொத்தத் திரைக்கதையிலும் செலுத்தியிருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment