குமார சம்பவம் திரை விமர்சனம்

 

ஒருவன் இயக்குனராக முயற்சித்து கொண்டிருக்கிறான் , இதனால் இவர் பல தயாரிப்பாளர்களிடம் தன்னுடைய கதையை சொல்கிறார். ஆனால், யாருமே அவருடைய கதையை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து தாத்தா, அம்மா, தங்கையுடன் தான் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேல் மாடியில் ஒரு சமூக ஆர்வலர் குடி இருக்கிறார். அவரும் நாயகனின் தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். இதனாலே வீட்டில் தங்க இடம் கொடுத்தார் தாத்தா. சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார். இதனால் பல பிரச்சனைகளை நாயகன் சந்தித்து வருகிறார். இதனால் இருவருக்கும் ஒத்து போகவில்லை. இருந்தாலும் தன்னுடைய தாத்தாவிற்காக  பொறுத்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மர்மமான முறையில் அந்த சமூக ஆர்வலர் இறந்து கிடக்கிறார். அதன் காரணம் என்ன ? அதனால் நடந்த குழப்பம் என்ன என்பதே இந்தப் படம். 



ஹீரோ குமரன் தங்கராஜன் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் படத்திலேயே காமெடி, ஆக்‌ஷன், காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். முகபாவனைகள் தான் இவருக்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.



இவரை அடுத்து ஹீரோயினி பாயல் ராதாகிருஷ்ணன் தன்னுடைய அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர்களுக்கு பின் தாத்தா வேடத்தில் ஜிஎம் குமார் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். பின் சமூக ஆர்வலராக இளங்கோ குமாரவேல் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் பால சரவணன் நடித்திருக்கிறார். படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்கள் வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.



ஒரு சாதாரண கதையை இயக்குனர் கிரேசி மோகன் பாணியில் ட்விஸ்ட் நகைச்சுவையாக கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். முதல் பாதி பொறுமையாக சென்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சிறப்பாக இருக்கிறது.



படத்தில் குமரன் தங்கராஜின் நடிப்பு நன்றாக இருக்கிறது. நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.



நகைச்சுவை நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக ஒரு நல்ல பொழுது போக்கு படமாக உருவாகியுள்ளது இந்த " குமார சம்பவம் ".

0 comments:

Pageviews