பண்டோரா உலகிற்கும் மீண்டும் திரும்ப ஒரு வாரமே உள்ளது


பண்ரோராவின் உலகிற்கு மீண்டும் செல்ல இன்னும் ஏழு நாட்களே உள்ளது. ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அக்டோபர் 2, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அக்டோபர் 2, 2025 அன்று பிரம்மாண்டமாக 3டியில் (1 வாரத்திற்கு மட்டும்) திரையரங்குகளில் வெளியாகிறது. 

டிசம்பர் 19 அன்று வெளியாக இருக்கும் ’அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இதன் முந்திய பாகமான ஆஸ்கார் விருது வென்ற ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் காணத் தயாராகுங்கள். டிசம்பர் 2022 இல் வெளியான இந்தத் திரைப்படம், உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்தது. நீருக்கடியில் பண்டோராவின் உலகத்தை சிறப்பான முறையில் கொண்டு வந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக இந்தத் திரைப்படம் அகாடமி விருது வென்றது.

சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, சிகோர்னி வீவர், கேட் வின்ஸ்லெட் மற்றும் ஸ்டீபன் லாங் ஆகியோருடன் சல்லி குடும்பத்தின் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் மீண்டும் ஒருமுறை பாருங்கள்.

20த் சென்ச்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா, ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை அமெரிக்க மறுவெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாகவே, அக்டோபர் 2, 2025 அன்று இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் 3Dயில் (1 வாரத்திற்கு மட்டும்) வெளியிடுகிறது.

0 comments:

Pageviews