நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்

*நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்- திரையில் நீங்கள் கேமை தொடங்கலாம் ஆனால் ஒருபோதும் அது முடிவதில்லை' டிரெய்லர் வெளியாகியுள்ளது!*

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்'. இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. 

விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே! ஆனால், அந்த விளையாட்டே உங்களுக்கு வினையாக மாறினால்? அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்' தொடரின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உங்கள் விர்ச்சுவல் உலகம் நிஜ வாழ்க்கையை சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை ரகசியங்கள் மற்றும் உண்மைக்கு நெருக்கமாக பேசவுள்ளது. 

'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்' தமிழ் த்ரில்லர் சீரிஸூக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் இணைந்துள்ளது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில், தீப்தி கோவிந்தராஜன் திரைக்கதை எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து செல்வா மற்றும் கார்த்திக் பாலாவும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களிலும் சாந்தினி, ஷ்யாமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சந்த், தீரஜ் மற்றும் ஹேமா ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். விர்ச்சுவல் உலகம் உண்மையான உலகத்தை சந்திக்கும்போது குடும்பம், உறவுகளில் எப்படி நம்பிக்கை இழக்க நேரிடுகிறது என்பதை இந்த தமிழ் த்ரில்லர் பேசுகிறது.  

இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா பகிர்ந்து கொண்டதாவது, "இந்தக் கதை வெறும் த்ரில்லர் மட்டுமல்ல! இது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பாகும். த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இதில் குடும்பம் மற்றும் உறவுகள் பற்றியும் பேசியுள்ளோம். தற்போது விர்ச்சுவல் உலகம் வெறும் விர்ச்சுவல் உலகமாக மட்டும் இருப்பதில்லை. அது நம் வாழ்க்கையை சந்திக்கும்போது நிகழும் விளைவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. என்னுடைய முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்டுடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் படைப்புக்கு எல்லையற்ற சுதந்திரம் கொடுத்தது. பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்த்து அவர்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்" என்றார். 

தொடர் குறித்து நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பகிர்ந்து கொண்டதாவது, "சுதந்திரமான கேமிங் டெவலப்பர் பெண் கதாபாத்திரத்தில் நடித்துப்பது எனக்கு புது அனுபவம். த்ரில்லர் ஜானரில் அமைக்கப்பட்ட என் கதாபாத்திரம் எனக்கே எதிராக திரும்பும்போது அவளால் தப்ப முடியவில்லை. ரியாலிட்டி அவளுக்கு சவாலானதாக உள்ளது. ஒவ்வொரு ஃபிரேமிலும் தீவிரம், ஆழத்தைக் கொண்டு வந்த இயக்குநர் ராஜேஷூடன் இணைந்து பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். நெட்ஃபிலிக்ஸ் உடன் இணைந்ததன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைய முடியும்" என்றார்.  

அவசரம், பயம், மனிதத்தன்மை, பதட்டம் என அனைத்து உணர்வுகளும் டிரெய்லரில் உள்ளது. கேமில் ஒவ்வொரு க்ளிக்கும் உங்கள் சாய்ஸ். ஒவ்வொரு மாஸ்க்கும் உண்மையை மறைத்துள்ளது. ஒவ்வொரு உண்மையும் கேமை மாற்றும். இந்த கேம் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா என்பதில்லை, நீங்கள் உருவாக்கிய உலகில் உங்களால் வாழ முடிகிறதா என்பதைப் பற்றியது! 

நெட்ஃபிலிக்ஸில் அக்டோபர் 2 அன்று 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்' பாருங்கள்!

*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*

நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

0 comments:

Pageviews