தலைவன் தலைவி திரை விமர்சனம்
புதுமண தம்பதியான விஜய் சேதுபதி – நித்யா மேனன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மனைவி மீது விஜய் சேதுபதி அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருக்கும் நிலையில், திடீரென்று கணவன் – மனைவி பிரிந்து விடுகிறார்கள். அவர்களது பிரிவுக்கு என்ன காரணம் ? பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருமே தங்களுடைய நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். உண்மையாகவே இருவரும் கணவன், மனைவியாகவே நடித்து இருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம். கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் எப்படி இருப்பார்களோ அதே மாதிரி தான் படத்தில் இருவரும் இருக்கிறார்கள். மொத்த படத்தையுமே இருவரும் தோளில் சுமந்து சென்றிருக்கிறார்கள்.
நாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சரவணன் – தீபா சங்கர், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் செம்பன் வினோத் – ஜானகி சுரேஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் ஆகியோரும் கவனிக்கத்தக்க நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் இசை, எம்.சுகுமார் ஒளிப்பதிவு, பிரதீப் இ.ராகவ் எடிட்டிங் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
எழுதி இயக்கியிருக்கும் பாண்டிராஜ், வழக்கமான குடும்ப சிக்கல்களை குட்டி அறிவுறையோடு, நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறார்.
தலைவன் தலைவி - கல்யாணம் ஆகி கரடு முரடாக சண்டை போடுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
0 comments:
Post a Comment