பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்!
இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் சிறீஸ்கந்தராஜா அவர்கள் ட்ரிம்லைன் புரடக்ஷன்ஸ் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளார்.
ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன. DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, Foly Sounds, Dubbing Theater போன்ற ஒழுங்கமைப்புகளுடன் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடக்கும் தொழில்நுட்பக்கூடமும் அதற்கான ஸ்டுடியோவும் அமைந்துள்ளன.
திரைப்படங்களை எடுப்பதற்கான நவீன தரத்திலான ஏரி அலெக்ஸா SXT கேமரா, அபெச்சர் (Aputure) மற்றும் ஆமரான் (Amaran) லைட்ஸ் போன்ற ஒளி அமைக்கும் யூனிட் ஒன்றையும் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு திரைப்படம் எடுப்பதற்கான தயாரிப்பு வசதிகள் முதல் விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ , ஒலிக் கலவை என அனைத்தையுமே ஒரிடத்தில் பெறுவதற்கான வசதிகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன
இந்த தொடக்கவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து பருத்திவீரன் திரைப்பட புகழ் இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - கதை சொல்லி பவா செல்லத்துரை, டிராபிக் ராமாசாமி திரைப்பட இயக்குநர் விக்கி, ஆவணப்படம் மற்றும் திரைப்பட இயக்குநர் சோமீதரன், படத்தொகுப்பாளர் அஹமத் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களோடு இலங்கைத் தமிழ் கலைஞர்களாக 'வெந்து தணிந்தது காடு' திரைப்பட இயக்குநர் மதிசுதா, சரிகம புகழ் கில்மிஷா, இசையமைப்பாளர்கள் பத்மயன், பூவன் மதீசன், முரளி, ஒளிப்பதிவாளர்கள் ஏ.கே. கமல், ரிஷி செல்வம், ரெஜி செல்வராசா, படத்தொகுப்பாளர் அஞ்சலோ ஜோன்ஸ், துஷிகரன், அதிரன் திரைப்பட இயக்குநர் தினேஷ் கனகராஜ், தீப்பந்தம் திரைப்பட இயக்குநர் சிவராஜ், இதுவே ஆரம்பம் திரைப்பட இயக்குநர் சஞ்சய் யோ, தீ மாதர் திரைப்பட இயக்குநர் பிரவீன் கிருஷணராஜா, நடிகைகள் அஜித்தா, சப்னா படுக்க, நடிகர்கள் ஜெராட் நோயல், சிந்தர் அமிர்தலிங்கா ஆகியோருடன் இன்னும் பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் மட்டுமில்லாமல் தென்னிலங்கையிலிருந்து கோமாளி கிங்ஸ் திரைப்பட இயக்குநர் கிங் ரட்ணம், இலங்கை சார்க் அமைப்பின் தலைவர் கெளசல்யா குமாரசிங்க, VFX தொழிநுட்பக் கலைஞர் சாதா வீரம, திரைப்பட இயக்குநர் சனேஷ் டிசா நாயக்க போன்ற இலங்கை முன்னணித் திரைக் கலைஞர்களும் இலங்கை திரைப்பட கூட்டு ஸ்தாபன தலைவர் சுடத் மஹாடிவுலுவேவா மற்றும் சரசவிய ஊடகங்களில் இருந்து ஹேமாலி விஜயரத்ன, நயனாஞ்சலி டேகிபிட்டிய, நிஷங்க விஐயரத்ன, காயன் ரத்னாயக்க, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒழுங்கமைப்பாளர் அனோமா ராஜகருணாயக்க போன்றோரும் வருகை தந்து சிறப்பித்தனர்.
யாழ்ப்பாணத்தில் மாபெரும் நிகழ்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் இந்த வருடத்திற்கான 5 முழுநீளத் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான ஆரம்ப நிகழ்வும் நிடைபெற்றது.
லூயிஸ், அந்தோனி, மிஷன் லங்கா, சாசுவதம், திரவி போன்ற வரிசையில் திரைப்படத் தலைப்புக்களை அறிமுகப்படுத்தி இயக்குநர்கள் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.
இலங்கையில்
ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ் ஒரு முக்கியமான திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக முன்னேறிவரும் என்பதில் சந்தேகம் இல்லை என வந்திருந்த பிரபலங்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வாழ்த்தினர்.
0 comments:
Post a Comment