பறந்து போ திரை விமர்சனம்

 

பறந்து போ - அம்மா அப்பா வேலை காரணத்தால் பையனை வீடு என்கிற சிறைச்சாலையில் விட்டுட்டு தினமும் வேலைக்கு போயிடுறாங்க. ஒரு நாள் அந்த பையனுக்கு வெளியில போகுனும்னு ஆசை, அதுக்கு பக்காவா பிளான் போட்டு அப்பா கூட வெளியில போறான், வெளியில் போகும் போது ஒரு பிரச்னையால அந்த பிளான் நெடுந்தூர பயணமா மாறுது. அந்த பயணத்தில் அன்புங்கிற அந்த பையன் நம்ம எல்லாருக்கும் ஒரு அழகான உலகத்தை காட்டுறான். அந்த உலகம் தான் பறந்து போ .


படத்தை தன் தோளிலே சுமர்ந்து சென்றார் என்று சொல்லலாம். ஒரு குழந்தையின் ஆசையை தந்தை எப்படி நிறைவேற்றுவார் என்பதை மிர்ச்சி சிவா சிறப்பாக செய்திருக்கிறார். இவரை அடுத்து வரும் கிரேஸ் ஆண்டனி தனக்கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அவருடைய பாடி லாங்குவேஜும் வசனங்களுமே நன்றாக இருக்கிறது. இவர்களுடைய மகனாக வரும் மிதுல் ராயன் சுட்டித்தனம் குறும்புக்கார பையனாக சிறப்பாக நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸின் திரை இருப்பு மற்றும் அவர்களது நடிப்பு கைதட்டல் பெறுகிறது.


இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசை, யுவனின்  பின்னணி இசை,என்.கே.ஏகாம்பரம்  ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. குடும்பம், குழந்தைகள், பரபரப்பான வாழ்க்கை, ஓட்டம் என்று ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை கண்முன் பித்திருக்கிறார்.கஷ்டத்திலும் வாழ்க்கையினுடைய சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டும் என்ற மெசேஜையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராம்.


நீங்களும் உங்க குழந்தைகளுக்காக பறந்து போ அப்படிங்கிற அந்த அழகான உலகத்தை நீங்களும் பாத்துட்டு வாங்க.

0 comments:

Pageviews