பீனீக்ஸ் திரை விமர்சனம்
அண்ணனை கொலை செய்த எம்.எல்.ஏ-வை நாயகன் சூர்யா சேதுபதி, பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கிறார். அவரை கைது செய்யும் போலீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கிறது. கணவரை கொலை செய்த சூர்யாவை கொலை செய்ய துடிக்கும் எம்.எல்.ஏ-வின் மனைவி வரலட்சுமி சரத்குமார், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைத்து அவரை கொலை செய்ய திட்டமிட, அவரது திட்டத்தை தகர்த்தெரிகிறார் சூர்யா விஜய்சேதுபதி. இறுதியில், வரலட்சுமி தனது பகையை தீர்த்துக் கொண்டாரா இல்லையா? எம் எல் ஏ-வை கொலை செய்யும் அளவிற்கு சூர்யா சேதுபதிக்கு என்ன நடந்தது.? என்பதே படத்தின் மீதிக் கதை.
சூர்யா சேதுபதி தனது முதல் ஆக்ஷன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அதிகம் பேசாமல், அளவாக நடித்து பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருக்கிறார். காக்காமுட்டை படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ், இப்படத்தில்மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த, வரலக்ஷ்மி சரத்குமார், முத்துக்குமார், ஹரீஷ் உத்தமன், சம்பத், நக்ஷத்ரா, தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருக்கின்றனர்.
பாடல்களை விட சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையை ரசிக்க முடிகிறது. ஆர். வேல்ராஜின் ஒளிப்பதிவு மற்றும் சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இயக்குனர் அனல் அரசு ஸ்டன்ட் மாஸ்டர் அப்படிங்கறதால அதுக்கு தகுந்த மாதிரியான கதையை தேர்வு செஞ்சு எடுத்துருக்காரு. சண்டைக் காட்சிகள் எல்லாமே அவ்ளோ நல்லா வந்திருக்கு.
"பீனீக்ஸ்" திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் ரசிகர்களுக்கு தரமான சம்பவம்.
0 comments:
Post a Comment