ஜென்ம நட்சத்திரம் திரை விமர்சனம்

 

பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்படுகிறது.வைத்தவர் காளிவெங்கட்.அவர்,பணம் இருக்கும் தகவலை நாயகனிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.அந்தப் பணத்தை எடுப்பதற்காக நாயகன் தமன்,அவர் மனைவி மால்வி மல்ஹோத்ரா மற்றும் சில நண்பர்கள் செல்கிறார்கள்.போகிற இடத்தில் பல பயங்கரங்கள் நடக்கின்றன.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பதைச் சொல்வதுதான் படம்.


படத்தின் ஹீரோ தமன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக மல்வி மல்கோத்ரா நடித்திருக்கிறார். இவருமே தனக்கு கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக முடித்து தனக்கு படம் முழுவதையும் இவர்கள் இருவருமே சுமந்து சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். தமனின் நண்பர்கள், காளி வெங்கட் எல்லோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பரபரப்பாக செல்கிறது. அதை தங்களுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக காட்டி இருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் கே.ஜி, பாழடைந்த தொழிற்சாலையையும், அதில் நடக்கும் சம்பவங்களையும் பார்வையாளர்கள் மிரளும் வகையில் படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் கதைக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார். திகில் காட்சிகளில் பார்வையாளர்களின் பயத்தை பின்னணி இசை அதிகரிக்கச் செய்கிறது.


கடவுள் நம்பிக்கை சார்ந்து நிறையப் படங்கள் வருகின்றன,அதற்கு நேரெதிரான சாத்தான் நம்பிக்கை அதன் மூலம் நடக்கும் நிகழ்வுகள் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு ஒரு திகில் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் பி.மணிவர்மன்.


0 comments:

Pageviews