கெவி திரை விமர்சனம்
மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் நாயகன் ஆதவன்.அந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள் கிடையாது மருத்துவ வசதியும் கிடையாது.இதுதொடர்பாக ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒன்றும் நடக்கவில்லை.இதனால், தேர்தல் நேரத்தில் சந்திக்க வரும் ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கிறார்.அதனால், அவர்களுடன் வந்த வனத்துறை காவலர்களுடன் மோதல் இதனால்,ஆதவன் மீது கோபமடையும் வனத்துறை அதிகாரி அவரைப் பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். நிறைமாத கர்ப்பிணி மனைவியைத் தனியாக விட்டு விட்டு, மலையை விட்டுக் கீழே இறங்கும் போது, வனத்துறை அதிகாரியும், காவலர்களும் சேர்ந்து ஆதவனை கொலை செய்ய முயல்கிறார்கள். மறுபக்கம் அவரது மனைவிக்கு பிரசவவலி, போக்குவரத்து வசதியே இல்லாத அந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்வது சவாலாகிறது. ஒரு பக்கம் ஆதவனின் உயிருக்கு போராட்டம், மறுபக்கம் மனைவியை காப்பாற்றும் போராட்டம் இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
கதையின் நாயகனாக மலையன் கதாபாத்திரத்தில் அறிமுக நாயகனாக ஆதவன், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். நிறைமாத கர்பிணி மந்தாரை கதாபாத்திரத்தில் ஷீலா, பிரசவ வலி ஏற்படும் போது அந்த பெண் படம் வலியை அனைவரும் உணரும்படி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சார்லஸ் வினோத், ஜாக்குலின், காயத்ரி, விவேக் மோகன் உள்ளிட்ட பிற நடிகர்களும் கதாபாத்திரத்துடன் கரைந்துத் தோன்றுகிறார்கள்.
ஒளிப்பதிவு செய்த ஜெகன் ஜெயசூர்யா, மலைவழி இயற்கையின் வன்மத்தையும், அந்த சூழலில் வாழும் மக்களின் வலியையும் திறமையாக பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசை, குறிப்பாக தொடக்கக் காட்சியில், கதையின் தீவிரத்தைக் கடத்துகிறது. பாடல்கள் வைரமுத்து, யுகபாரதி, வினையன்படத்தின் சாயலை எளிமையாக எடுத்துரைக்கின்றன.
இயக்குநர் தமிழ் தயாளன் மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி இல்லாத கிராமங்களில் வாழும் மக்களின் வலியையும், அவர்கள் அன்றாட சந்திக்கும் உயிர் பலியையும் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
0 comments:
Post a Comment