’சட்டமும் நீதியும்’ திரை விமர்சனம்
ஒருவர் நீதிமன்றத்துக்கு வெளியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் பணியை செய்து கொடுக்கிறார், அவரிடம் உதவியாளராக பணி புரிய ஒரு பெண் விரும்புகிறார் ஆனால் அவர் ஒப்புக்கொள்ள வில்லை , இந்நிலையில் காணாமல் போன தனத மகளை கண்டு பிடித்து தருமாறு ஒருவர் நீதிமன்ற வாசலில் தீக்குளிக்க முயற்சி செய்கிறார், அந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கிறார், பல தொடர் விசாரணைக்கு பின் அந்த பெண் தொலைந்து பல ஆண்டுகள் ஆனது தெரிய வருகிறது, இதை தெரிந்த அனைவரும் ஆச்சர்யம் கொள்கின்றனர், இதன் பின் அந்த வழக்கை எப்படி அவர் விசாரித்தார் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை,
இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் சரவணன், வழக்கம் போல் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். கருப்பு அங்கி போட்டு, நீதிமன்றத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும், அளவான நடிப்பு, இயல்பான உடல் மொழி மூலம் சுந்தரமூர்த்தி என்ற சாதாரண வழக்கறிஞர் வேடத்தை மிக கச்சிதமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார் நடிகர் சரவணன். நீண்ட நாட்களுக்கு பிறகு நாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே போல் சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் நம்ரிதா, துணிவு மிக்க பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் பரபரப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் அளவாக கையாண்டிருக்கிறார். சாதாரண வழக்கறிஞராக சித்தரிக்கப்பட்டாலும், அந்த கதாபாத்திரத்தையும் தனது பீஜியம் மூலம் பல இடங்களில் மாஸாக காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் நீதிமன்ற வளாகம், நீதிமன்ற வழக்கு விசாரணை என முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் பயணிக்கும் கதையாக இருந்தாலும், அதை பல்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தி அனைத்து எப்பிசோட்களையும் சலிப்பின்றி நகர்த்திச் சென்றிருக்கிறார்.
கதையாசிரியர் சூர்யபிரதாப்.எஸ்-ன் கதையில், ஏற்கனவே வெளியான சில நீதிமன்ற கதையம்சம் கொண்ட படங்களின் சாயல் தெரிந்தாலும், திரைக்கதை மற்றும் திருப்பங்கள் மூலம் அதை வேறு ஒரு பாணியில் சுவாரஸ்யமாகவே நகர்த்தி சென்றிருக்கிறார். இந்த தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ், கடத்தப்பட்ட பெண், பிறகு 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி என திடீர் திருப்பம் மூலம் தொடரை வேறு பக்கம் பயணிக்க வைப்பவர், மீண்டும் அதே பெண் யார்? என்ற கேள்வியை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி, அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டி, அவளுக்கு என்ன நடந்திருக்கும், என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, 7 எப்பிசோட்களையும் கண்கள் இமைக்காமல் பார்க்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘சட்டமும் நீதியும்’ விறுவிறுப்பு.
0 comments:
Post a Comment