கூரன் திரை விமர்சனம்
கொடைக்கானலில் ஜான்சி என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையை கடக்க… குடிகாரன் ஒருவன் தாறுமாறாய் காரை ஓட்டி நாய்க்குட்டியைக் கொன்றுவிடுகிறான். நாய் ரத்தச் சகதியாய் கிடக்க, கதைட்டி சிரித்தபடி காரில் பறந்துவிடுகிறான்.
தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது. கார் கடந்து மறைந்துவிடுகிறது.
நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது, நாய். அங்கி இதன் ‘மொழி’ புரியாமல் துரத்தி அடிக்கப்படுகிறது. ஆனாலும் நகராமல், அங்கேயே ஒரு மூலையில் படுத்துக் கொள்கிறது. அதன் பிறகு வழக்கறிஞர் தர்மராஜ் வீட்டுக்குச் செல்கிறது. அங்கே காவலாளி விரட்டி அடித்தாலும், மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறது.
கூர்மையான அறிவுத்திறன் கொண்ட ஒரு நாய், தனக்கு நடந்த அநீதிக்காக போராடுவதால் ’கூர்மையான அறிவுத்திறன்’ என்பதை சுருக்கி ‘கூரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் வயதுக்கு ஏற்ற வேடத்தில் கூர்மையாக நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் நிதானமாக செயல்பட்டிருப்பவர் நீதிமன்ற வழக்கின் போதும் தனது நிதானமான மற்றும் தெளிவான வாதத்தின் மூலம் நாய் பக்கம் இருக்கும் நியாயத்தை படம் பார்ப்பவர்களிடமும் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
ஜென்ஸி மற்றும் பைரவா என்ற பெயர் கொண்ட நாய் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக வலம் வந்திருக்கிறது. பயிற்சியாளரின் சொல்படி கேட்டு சிறப்பாக நடித்திருக்கிறது.
மொத்தத்தில் விலங்குகளும் மனிதர்களைப் போன்றவை தான், அவற்றுக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உண்டு .தான் வாழ்வதற்காக மனிதன் அதை அழிக்கக்கூடாது, துன்புறுத்தக் கூடாது என்கிற கருத்தை நாகரிகமாகக் கூறி இருக்கிறார்கள்.
இந்த வகையில் ‘கூரன்’ நல்ல கருத்தைச் சொன்ன தரமான படம் எனலாம்.இன்றைய சூழலில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் வந்திருக்கும் அரிதான படம் என்று கூடக் கூறலாம்.
0 comments:
Post a Comment