Sabdham Movie Review

 
Casting : Aadhi, Lakshmi Menon, Simran, Laila, Rajiv Menon, MS Bhaskar, Abinaya, Vivek Prasanna, Reding Kingsly

Directed By : Arivazhagan

Music By : Thaman.S

Produced By : 7G Films - 7G Siva

மும்பையில் வசிக்கும் ஆதி சப்தங்கள் மூலம் ஆவிகளை கண்டறிந்து பலரது பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். இந்நிலையில் மூணார் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி அடுத்தடுத்து மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்த தற்கொலை எதனால் நடக்கிறது என்பதை விசாரிக்க பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணரான ஆதி  மூணார்  வருகிறார். மருத்துவக் கல்லூரியில் நடந்த மர்ம மரணங்களின் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆதிக்கு பல அதிர்ச்சி யூட்டும் நிகழ்வுகள் நடக்கின்றன.

இதே கல்லூரி மாணவியான  லட்சுமி மேனன் அக்கல்லூரி பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார். கல்லூரியில் உள்ள  நூலகத்திற்கு  செல்லும் லட்சுமி மேனனை  அமானுஷ்யம் ஒன்று பிடித்துவிடுகிறது. ஆதி அந்த  அமானுஷ்யம்  குறித்து ஆராச்சி  மேற்கொள்ளையில் அந்த நூலகத்தில் 42 குழந்தைகளின் ஆன்மாக்கள் இருப்பதை கண்டு ஆதி அதிர்ச்சி  அடைகிறார்.  

இறுதியில் 42 குழந்தைகளை கொன்றது யார் ? குழந்தைகளை  கொன்ற கொலைகாரன் யார் என்பதை ஆதி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘சப்தம்’  படத்தின் மீதிக்கதை.

ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளராக நடித்திருக்கும் ஆதி எதார்த்த நாயகனாக வலம் வருகிறார். கொடுத்த வேலையை சரியாக செய்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் லஷ்மி மேனன் அழகாக வந்து அளவான நடிப்பின் மூலம் கவர்கிறார். சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் ஆகியோர் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா ஆகியோர் ஒரு சில காட்சிகளீலேயே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி வரும்காட்சிகள் சிரிப்புக்கு பதில் வெறுப்பே வருகிறது.

இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் uள்ளது. அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் இருக்கிறது.

ஈரம் திரைப்படத்தில், தண்ணீரை அமானுஷ்யமாக காண்பித்து மிரட்டிய, இயக்குநர் அறிவழகன், சப்தம் படத்தில் ஓசைகளை அமானுஷ்யமாக்கி  மிரட்டியிருக்கிறார். அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்போடு கதையை நகர்த்தி சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.


நடிகர்கள்: ஆதி, லஷ்மி மேனன்,சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம் எஸ் பாஸ்கர், ராஜிவ் மேனன், விவேக் பிரசன்னா
இசை: தமன்
இயக்கம்: அறிவழகன்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2)







 



 

0 comments:

Pageviews