சூழல் 2 விமர்சனம்

 

தனது தங்கையையும் தன்னையும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த அரக்கனை தங்கையை கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக கொலை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறையில் அடைக்கப்பட அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி எஸ்ஐ கதிர் என்பது குறித்த இன்னொரு வழக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. நந்தினி தற்காப்புக்காகத்தான் அந்த கொலையை செய்தார் என கோர்ட்டையே அலற விடும் லால் திடீரென கொல்லப்படுகிறார். அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்கிற விசாரணையில் இருந்து துவங்குகிறது சுழல் 2. இதிலும் விசாரணை அதிகாரி கதிர் தான். இது தற்கொலை என நினைத்துக் கொண்டிருக்க 8 பெண்கள் செல்லப்பாவை நான் தான் கொன்றேன் என காவல் நிலையங்களில் ஆஜராக அந்த ஊரில் அஷ்டகாளி திருவிழாவும் நடைபெறுகிறது. 8 பெண்களின் பெயர்களையும் அஷ்ட காளிகளின் பெயர்களாகவே வைத்துள்ள நிலையில், தீய சக்தியை அவர்கள் வதம் செய்தார்களா? அவர்கள் கொலை வழக்கில் சரண்டராக என்ன காரணம் என்பதை ஹீரோ கதிர் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதும் இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் வேலை என்ன என்பதும் தான் இந்த சுழல் 2 வெப்சீரிஸின் கதை.

அஷ்ட காளிகள் திருவிழாவும் 8 தெய்வங்களின் பெயர்களை 8 பெண்களுக்கு வைத்து கதையை இயக்குனர்கள் கொண்டு சென்றுள்ளனர். அந்த பொறுப்பை உணர்ந்து அந்த கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அதேபோல் இந்த திருவிழாவை தொடங்கி வைக்கும் லால் இறப்பின் பின்னணி பல ட்விஸ்ட் தருகிறது. யார் கொலையாளி என்பதை இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமல் ஆடியன்ஸை டென்ஷனில் வைத்திருக்கிறது.

அதற்கேற்றார் போல் வசனங்கள் ஒளிப்பதிவு கதாபாத்திரங்கள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. இதுவே மிகப்பெரும் பலமாக இருக்கிறது. 

ஒட்டு மொத்தத்தில் மீண்டும் ஒரு தரமான வெப் சீரியஸாக தமிழில் வந்திருக்கிறது சூழல் 2.

0 comments:

Pageviews