அகத்தியா திரை விமர்சனம்

 

அகத்தியன் ( ஜீவா) திரைப்படத் துறையில் கலை இயக்குநராக பணியாற்ற விரும்புகிறார். இதற்காக அவர் அறிமுகமாகும் முதல் திரைப்படத்திற்காக லட்சக்கணக்கில் செலவழித்து பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றை வடிவமைக்கிறார். அந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெறாமல் படத்தின் பணிகள் தடை ஏற்படுகிறது. இதனால் அகத்தியன் மனதளவில் சோர்வடைய, அவருடைய உதவியாளராக இருக்கும் வீணா ( ராஷி கண்ணா) இந்த அரங்கத்தை மக்கள் அனைவரும் வந்து செல்லும் வகையில் ஸ்கேரி ஹவுஸ் ஆக மாற்றி வடிவமைக்கலாம் என சொல்கிறார். ஸ்கேரி ஹவுஸ்சாக மாற்றிய பின் மக்களின் ஆதரவு பெருக அங்கு சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகிறது.  எதனால் இப்படி நடக்கிறது ? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

அம்மா மீது பாசத்தில் இருக்கும் ஜீவா அவருடைய நோயை குணப்படுத்த முயல்வதும். அதற்காக அவர் எடுக்கும் ரிஸ்க் என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

அதேபோல் சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் தனக்கான வேலையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். ராஷி கண்ணா வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை, அமானுஷ்ய கதைக்கேற்ற அதிரடி பின்னணி இசையை அளித்து இருக்கிறது. அதே நேரம், காதல் பாடலான ’என் இனிய பொன்நிலாவே’ வை அழகாக ரீமிக்ஸில் அளித்து இருக்கிறார்கள்.

அதேபோல் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரும் பிளஸ் ஆக இருக்கிறது. 

பா விஜய் இயக்கத்தில் ரசிக்கும்படியான ஹாரர் திரைப்படமாக அகத்தியா அமைந்திருக்கிறது.

0 comments:

Pageviews