படவா திரை விமர்சனம்

 

நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை  கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார். விமலை கண்டால் பயந்து ஓடும் ஊர் மக்கள், இந்த முறை மாலை மரியாதையுடன் அவரை வரவேற்பதோடு, அவரை ஊர் தலைவராகவும் தெர்ந்தெடுக்கிறார்கள். கிராம மக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன?, மக்களின் மாற்றம் விமலின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?, என்பதை விமலின் வழக்கமான கமர்ஷியல் பட பாணியில் சொல்வது தான் ‘படவா’.

 

விமல் இந்த படத்திலும் அவரது அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது. விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரி, விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணித்து படம் முழுவதும் வருகிறார். தேவதர்ஷினி, நமோ நாராயணன், கே.ஜி.எப் ராம் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

 

ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா வழக்கமான மற்றும் அதர பழசான கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், கமர்ஷியலாக இயக்கியிருப்பது படத்திற்கு பலம்.


0 comments:

Pageviews