நிறம் மாறும் உலகில் திரை விமர்சனம்

 

அம்மா விஜியுடன் (விஜி சந்திரசேகர்) சண்டை போட்டுவிட்டு, சூட்கேஸ் சகிதம் வீட்டை விட்டு வெளியேறுகிறார் அபி (லவ்லின் சந்திரசேகர்). தோழியின் வீட்டுக்குச் செல்ல அவர் ரயிலில் பயணிக்கும்போது, டிக்கெட் பரிசோதகர் முத்துக்குமாரை (யோகி பாபு) சந்திக்கிறார். அபியிடம் பேச்சுக் கொடுத்து அவரது சூழ்நிலையையும், மனநிலையையும் புரிந்துகொள்ளும் முத்துக்குமார், உறவின் மேன்மையையும், முக்கியத்துவத்தையும் அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு உண்மைக் கதைகளைச் சொல்கிறார். அந்த நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமைஅம்மாஎன்ற உறவு மட்டுமே

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள இந்த திரைப்படம் உண்மையாகவே பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. “அம்மா” எப்படிப்பட்ட நிபந்தனையற்ற அன்பை தருகிறார் என்பதை நான்கு கதைகளின் மூலம் இயக்குனர் பிரிட்டா ஜே.பிஅழகாக சொல்லியுள்ளார்.ஒவ்வொரு கதைக்கும் ஒன்றோடொன்று தொடர்பில்லாத போதிலும்அம்மா என்ற செந்தமிழ் வார்த்தை நான்கிலும் மையப் புள்ளியாக உள்ளது.

 இதில் நடித்துள்ள பாரதிராஜாவடிவுக்கரசி, நட்டி, ஆதிரைரியோ ராஜ், சாண்டிதுளசி ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு துணையாக சுரேஷ் மேனன், ஏகன், ரிஷிகாந்த், விக்னேஷ்காந்த், மைம் கோபி, ஆடுகளம் நரேன், சுரேஷ் சக்கரவர்த்தி, அய்ரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பாக பங்களித்துள்ளனர்இவர்களோடு இந்த நான்கு கதைகளை ரசிகர்களுக்கு சொல்லும் டிடிஆர் கதாபாத்திரத்தில் யோகி பாபு தனது நடிப்பால் மெருகேற்றியுள்ளார்மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஆகியோரின் ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறதுதேவ் பிரபாகரன் இசையில் பாடல்கள் கேட்கும் ரீதியாக அமைந்துள்ளன. மேலும், பின்னணி இசையிலும் ரசிக்க வைத்துள்ளார்.

0 comments:

Pageviews