லெக் பீஸ் திரை விமர்சனம்

 

கருணாகரன், கிளி ஜோசியம் பார்ப்பவர். இவர், அடுத்து என்ன நடக்க போகும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர். மணிகண்டன், பெண்பித்தர். ஸ்ரீநாத், தங்கையின் மேல் அளவிட முடியாத அன்பு வைத்திருப்பவர். ஆவிகளை தனது கண்களால் பார்க்கக்கூடிய சக்தி படைத்தவர்.  இவரது தொழில் பேய் ஓட்டுவது. ரமேஷ் திலக், பல குரலில் பேசக்கூடிய திறமை படைத்தவர். வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட இவர்கள் நால்வருக்கும், ரோட்டில் கிடந்த 2000 ரூபாய் மூலம் நட்பு உருவாகிறது. அதே போல், இவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘லெக் பீஸ்’ படத்தின் காமெடிக் கதை.

 

குயில் என்ற கதாபாத்திரத்தில் சவுரி முடி வியாபாரம் செய்பவராக நடித்திருக்கும் மணிகண்டன், கிளி ஜோதிடராக நடித்திருக்கும் கருணாகரன், பேய் விரட்டுபவராக நடித்திருக்கும் ஸ்ரீநாத், பலகுரல் கலைஞராக நடித்திருக்கும் ரமேஷ் திலக் என நான்கு பேரும்வறுமையின் நிறம் சிவப்புபடத்தின் கதாபாத்திரங்கள் போல் பசியோடு சுற்றினாலும், ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள்

 

படம் முழுவதும் வரும் யோகி பாபு, வழக்கமான பாணியின் மூலம் சிரிக்க வைத்தாலும், தன் மனைவி குறித்து காமெடி என்ற பெயரில் பேசும் வசனங்கள் அனைத்துமே அநாகரிகமானதாக இருக்கிறது

 

விடிவி கணேஷ், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார்கள்.

 

வெறும் எண்டர்டெயின்மெண்டாக சென்று கொண்டிருந்த படமானது, ஒரு கட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொடர்பான பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை காட்டி கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத்.


0 comments:

Pageviews