ராமம் ராகவும் விமர்சனம்

 

மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் தந்தையாக வருகிறார் சமுத்திரக்கனி. எங்கும் எதிலும் நேர்மை ஒன்றே தனது இலட்சியம் என்ற பாதையில் பயணித்து வருகிறார். அரசு அதிகாரியாக இருந்து எந்த இடத்திலும் யாரிடத்திலும் லஞ்சம் வாங்காமல் தனது பணியை நேர்மையாக செய்து வருகிறார். ஆனால், மகன் தன்ராஜோ குடி, சூதாட்டம், மோசடி என தன் வாழ்க்கையை தவறான பாதையில் கொண்டு செல்கிறார். மகனை நினைத்து நாளுக்கு நாள் கவலையில் வாடுகிறார் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனியை வைத்தே பல இடங்களில் தனது மோசடி வேலையை செய்யத் துவங்குகிறார் தன்ராஜ். இந்த விஷயம் சமுத்திரக்கனிக்கு தெரியவர, தன்ராஜை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார் சமுத்திரக்கனி. அதன்பிறகு,தன்னை போலீஸில் சிக்க வைத்த அப்பாவை கொலை செய்ய முடிவெடுக்கிறார் தன்ராஜ். இதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களே ராமம்ராகவம் படத்தின் மீதிக் கதை.

மகனை திருத்துவதற்காக கண்டிப்பு மற்றும் கோபத்தை வெளிப்படுத்தினாலும், மனதுக்குள் இருக்கும் அன்பை வெளிக்காட்ட முடியாமல் தடுமாறும் தந்தையாக பார்வையாளர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார் சமுத்திரக்கனி. அவர் மனைவியாக நடித்த பிரேமோதினி அக்மார்க் அம்மாவாக வாழ்ந்து இருக்கிறார். ஹீரோ தன்ராஜ் நண்பராக வரும் ஹரிஷ் உத்தமன் நடிப்பு நாடகத்தனம். அதேசமயம், கதைநாயகனாக வரும் தன்ராஜ், நிஜத்தில் நாம் பார்த்த பல மகன்களின் சாயலாக படத்தில் வருகிறார். பணத்தை இழந்து தத்தளிப்பது, அப்பாவை கொல்ல துடிப்பது, பின்னர் , தனது தவறை உணர்ந்து துடிப்பது என பல காட்சிகளில் மனதில் நிற்கிறார்.

அப்பா – மகன் இருவருக்குமிடையேயான பாசம் எப்படியானது, ஒரு தந்தை மகன் மீது எதுவரை பாசம் வைத்திருக்க முடியும் என்பதற்கு இப்படமே ஒரு சான்றாக அமைந்துள்ளது.

0 comments:

Pageviews