நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் விமர்சனம்

 

ஹீரோவாக அறிமுகமாகியுள்ள தனுஷின் அக்கா மகன் பவிஷ் காதல் தோல்வியில் இருக்கிறார்,சமையல் கலைஞரான அவருக்கு அவருடைய பெற்றோராக நடித்துள்ள நரேன்-சரண்யா இருவரும் பெண் பார்க்கும் போது பிரியா வாரியர் அறிமுகம் ஆகிறார், பிரியா வாரியாரை தன்னுடைய பள்ளி தோழி என்று அறிந்த பிறகு இருவரும் தங்களை புரிந்து கொள்ள கால அவகாசம் கேட்கின்றனர், இதற்கிடையில் பவிஷின் முன்னாள் காதலியான அனிகாவிடம் இருந்து திருமண அழைப்பிதழ் வருகிறது,பவிஷின் முன்னாள் காதல் கதையை கேட்ட பிரியா வாரியார் கல்யாணத்திற்கு சென்று வா என்று கூறுகிறார்,திருமணத்திற்கு செல்லும் வழியில் பவிஷ்க்கு என்ன நடந்தது, அவர் யாரை கடைசியில் திருமணம் செய்தார்,அனிகாவை பிரிந்ததற்கு காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.


படத்தின் இயக்குநர் நடிகர் தனுஷின் அக்கா மகன் தான் நாயகன் பவிஷ். அறிமுக காலக்கட்டங்களில் தனுஷை பார்த்தது போலவே இருக்கிறார். மகிழ்ச்சி, சோகம், அழுகை, காதல் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ஸ்கோர் பண்ணியிருப்பவர், நடனத்திலும் வெளுத்தி வாங்கியிருக்கிறார். 

நாயகியாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன், குழந்தை தனம் மாறாத முகமாக இருந்தாலும், இறுதிக் காட்சியில் காதலுக்காக உருகி, ஏங்கும் இடங்களில் அசத்தலாக நடித்திருக்கிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மேத்யூ தாமஸ், வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. வெங்கடேஷ் மேனன் மற்றும் ராபியா கதூன் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.


லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் வெளிச்சம் கொடுத்திருக்கிறது. இரண்டாம் பாதி முழுவதுமே ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறுகிறது. அதை அழகாக கொடுத்து நம்மை அதிகமாகவே ரசிக்க வைத்திருந்தார். ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், பின்னணி இசையும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. படத்தொகுப்பும் ஷார்ப்பாக இருந்தது.


தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மூன்றாவது படமான இப்படத்தில், மிகவும் தெளிவான ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார். எந்தவொரு ஆபாச காட்சிகளும் இல்லாமல், எந்தவொரு சண்டைக் காட்சியும் இல்லாமல் ஒரு நீட்டான காதல் படத்தை கொடுத்து வென்றிருக்கிறார் இயக்குனரான தனுஷ்,


நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – ஜாலியா வாங்க ஜாலியா போங்க

0 comments:

Pageviews