டிராகன் விமர்சனம்

 

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் படிக்கும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், அடாவடி மாணவராக இருக்கிறார். கெத்துக்காக அடிதடி செய்கிறார். ஆனால், 48 அரியருடன் கல்லுாரியை விட்டு வெளியேறுகிறார். ஒரு கட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து, கவுதம்மேனன் ஐடி நிறுவனத்தில் பெரிய சம்பளத்தில் வேலைக்கு சேருகிறார். அதை தெரிந்துகொண்ட கல்லுாரி முதல்வரான மிஷ்கின், ‘‘நீ மீண்டும் கல்லுாரிக்கு வரணும். 3 மாதத்தில் 48 அரியரை கிளியர் பண்ண வேண்டும். இல்லாவிட்டால், உண்மையை சொல்வேன்’’ என்று மிரட்டுகிறார். அதற்கு பிரதீப் ரங்கநாதன் பதிலுக்கு என்ன செய்தார், அரியரை எப்படி கிளியர் செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.


லட் டுடே படத்திற்குப் பிறகு ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் இரண்டாவது படமாகும் இந்த “டிராகன்”. முதல் படத்திலேயே நல்லதொரு நடிப்பைக் கொடுத்திருந்த ப்ரதீப், இரண்டாவது படமான டிராகன் படத்திலும் முத்திரை பதிக்கும் நடிப்பை அள்ளித் தெளித்திருக்கிறார். சேட்டை பிடித்த மாணவனாக, கல்லூரிக்குச் சென்றால் ஒரு மாணவன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியான ஒரு கேரக்டராகவே வாழ்ந்து நடிப்பில் நன்றாகவே முன்னேறியிருக்கிறார் ப்ரதீப் ரங்கநாதன்.


நாயகிகளான அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயடு லோஹர் இருவரும் அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். இருவருக்குமே வந்து செல்லும் காட்சிகளாக இல்லாமல், நல்லதாக பெர்பார்மன்ஸ் கொடுக்கும் இடத்தை இயக்குனர் அதிகமாகவே கொடுத்திருக்கிறார்.அதிலும், குறிப்பாக அனுபமா பரமேஸ்வரன் கைதட்டல் வாங்குகிறார்.


இதுவரை பார்க்காத ஒரு முகமாக மிஷ்கினின் முகம் இப்படத்தில் இருக்கும். நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சியைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். மிகவும் கச்சிதமாக பொருத்தமாக அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கிறார் மிஷ்கின்.


கெளதம் வாசுதேவ் மேனன், ஐடி நிறுவனத்தின் மேலதிகாரியாக மிகவும் நன்றாகவே நடித்திருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அறிவுரை சொன்னாலும், அதை கல்லூரி அலப்பறைகளோடும், கலர்புல்லாகவும் சொல்லி இளசுகளை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்கிறார்.


மொத்தத்தில் டிராகன் திரைப்படம் பக்கா கமர்ஷியல் படமாக அமைத்துள்ளது. விஜே சித்து, ஹர்ஷத் கான் இருவரது காமெடிக் காட்சிகளும் அவ்வபோது சிரிக்க வைக்கிறது.

0 comments:

Pageviews