மழையில் நனைகிறேன் திரை விமர்சனம்

 

லட்சியம் இன்றி ஊர் சுற்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்த நாயகன் அன்சன் பால் வெளிநாட்டில் மேற்படிப்புக்கு செல்லும் கனவுடன் இருக்கும் நாயகி ரெபா ஜானை கண்டதும் காதலிக்கிறார். காதலை ரெபா ஜான் ஏற்க மறுத்த நிலையிலும், தொடர்ந்து முயற்சி செய்து தன்னை காதலிக்க வைத்து விடுகிறார். இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு வருகிறது. ஒரு விபத்திலும் சிக்குகின்றனர். இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.


சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அன்சல் பால், நாயகனாக நடித்து உள்ளார். வசதியான குடும்பத்து இளைஞனாக ஜாலியான ஊர்சுற்றுவது… அதே நேரம் காதல் திருமணம் முடிந்தவுடன் பொறுப்பான மனிதனாக வாழ்வது என சிறப்பாக நடித்து உள்ளார். நாயகியாக வரும் ரெபா ஜான் அந்த கேரக்டரில் அப்படியே பொருந்திப் போகிறார்.


நாயகனின் அப்பாவாக மேத்யூஸ் வர்கீஸ், அம்மாவாக அனுபமா குமார், நாயகனின் அப்பாவாக சங்கர் குரு இயக்குனர் ராஜா, நாயகனின் நண்பனாக கிஷோர் ராஜ்குமார் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.


விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் பழுதில்லை. ஜெ. கல்யாணின் கேமரா காட்சிகளை மனதோடு நெருக்கமாக்கி விடுகிறது.


எழுதி இயக்கி இருக்கும் டி. சுரேஷ்குமார் ஒரு மென்மையான காதலை அதைவிட மென்மையாக சொல்ல முயன்றிருக்கிறார்.

0 comments:

Pageviews