35 சின்ன விஷயம் இல்ல திரை விமர்சனம்
விஷ்வதேவ் – நிவேதா தாமஸ் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அனைத்து பெற்றோர்கள் போல் இவர்களும் தங்களது இரண்டு மகன்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இவர்களது மூத்த மகனான சிறுவன் அருண்தேவுக்கு, ”மதிப்பற்ற பூஜ்ஜியம் அருகே 1 சேர்த்தால் வரும் 10 எப்படி 9-ஐ விட அதிகம் மதிப்பு பெற முடியும்?” என்ற கேள்வி எழுகிறது. கணிதத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை எந்த ஆசிரியராலும் தீர்த்து வைக்க முடியாததால், நாம் படிக்கும் கணிதமே தவறு என்று சொல்லும் சிறுவன், தனக்கு புரியாத கணிதத்தை படிக்க மாட்டேன் என்று கூறி, அனைத்து வகுப்புகளிலும் கணிதத்தில் மட்டும் பூஜ்ஜியம் மதிப்பெண் பெறுகிறார். மகனின் நிலையை கண்டு வருந்தும் நிவேதா தாமஸ், அவரது கணித சந்தேகத்தை வாழ்க்கை சம்பவங்கள் மூலம் தீர்த்து வைக்க முயற்சித்து, ஆசிரியர் வைக்க நினைத்த முற்றுப்புள்ளியை மாற்றும் பயணத்தில் ஈடுபட, அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பெரும்பாலான மாணவர்களின் படிப்பிற்கு முட்டுக்கட்டையாக அமைவது(0 zero பூஜ்ஜியம் ) இந்த கணித பாடம் தான் அதனை திரையில் அனைவரும் புரியும் படியாக திரைக்கதை அமைத்து சிறந்த நடிகர்களை தேர்வு செய்து திரையில் ஒரு கல்வி (கணித) காவியமாக இன்றைய மாணவர்களின் உணர்வுகளையும் பெற்றோரின் உணர்வுகளையும் திரையில் அனைவரும் ரசிக்கும்படி உள்ளது இது குழந்தைகளை பற்றிய படம் அல்ல. தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் ( பாடம் ) படம்..
அறிமுக இயக்குநர் நந்தகிஷோர் இந்த முயற்சி திரையில் அனைவரையும் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை நாம் பள்ளியில் படித்த நாட்களையும், படிக்கும் காலத்தில் நம்மில் பலர் கணிதத்தில் (0 ZERO பூஜ்யம் ) மார்க் மற்றும் கணித பாடத்தால் நம் பட்ட அவமானங்கள் ( குடும்பத்தினர்) அனைவரின் துயரையும் திரையில் ஜொலிக்க வைத்து பள்ளிப் பருவ நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர்.
ஒரு சிறந்த தாயாக நிவேதா தாமஸ் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து திரையில் அனைவரின் கவனத்தை பெறுகிறார் . தன் பையன் நன்றாக படிக்க ஒரு சராசரி தாய் கணிதத்தை , திருமலை படிக்கட்டில் நடந்து, படிக்கட்டுகளை எண்ண வைத்து கழித்தல், கூட்டல் புரிய வைக்கும் தாய் என சில காட்சிகளை பார்க்கும் போது இப்படி வாழக்கையோடு இணைந்த கணிதத்தை புரிய வைப்பது என்ற அனைத்து விஷயங்களையும் செய்கிறார் நிவேதா.
திரைக்கதையில் அப்பாவாக நடித்திருக்கும் விஷ்வதேவ் பாசம், ரொமான்ஸ், கண்டிப்பு என சிறந்த தந்தையாக தனது நடிப்பினை திரையில் ரசிக்கும் படி கொடுத்துள்ளார்.
விவேக் சாகரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
0 comments:
Post a Comment