நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம்
உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர் ஸ்ரீPக்கு (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) பார்வதி (அம்மு அபிராமி) மீது காதல். பார்வதியின் ஆசிரியர் தந்தை வசந்த் (ரஹ்மான்) மீது ஸ்ரீக்கு நன்மதிப்பு உண்டு. ஏனெனில் ஸ்ரீக்கு ஆசிரியர் மட்டுமல்ல ஸ்ரீPயின் குடும்ப பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் நல்ல நண்பராகவும் பழகுகிறார். ஒரு நாள் ஸ்ரீ பார்வதியிடம் தன் காதலை சொல்ல மறுநாள் பார்வதி காணாமல் போகிறாள். இதனால் அதிர்ச்சியாகும் ஸ்ரீ தன் நண்பன் மற்றும் ஆசிரியருடன் சேர்ந்து பார்வதியை தேடுகிறான். சினிமா இயக்குனராகும் கனவோடு பல சினிமா நிறுவனங்களில் முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் போதையில் திளைத்து தவிக்கும் வெற்றி (அதர்வா).வெற்றியின் தந்தை செல்வம் (சரத் குமார்) ஒரு ஊழல் நிறைந்த காவலர். குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையும் மகனும் தனித்தனியே வசிக்கிறார்கள். இந்நிலையில் செல்வத்திற்கும் அமைச்சரின் மகனுக்கும் பகை ஏற்படும் சம்பவங்கள் நடக்கிறது. அமைச்சரின் மகன் அதற்காக செல்வத்தின் மகன் வெற்றியை பழி வாங்க நினைக்கிறான். அதே சமயம் வெற்றியின் ஒரு கதையை திருடி பிரபல இயக்குனர் படம் எடுக்க, அந்த கதை தன்னுடையது என்பதை நிரூபிக்கும் கதை புத்தகம் வீட்டில் திருடு போகிறது. இதனால் வெற்றி மனஉளைச்சல் ஏற்பட்டு போதையில் தவிக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து இயக்குனரை பார்க்க செல்கின்றனர். அதன் பின் என்ன நடந்தது? திருடு போன கதை புத்தகத்தை மீட்டார்களா? யார் சொல்லி எடுக்கப்பட்டது? அந்தக் கதைப்புத்தகம் யாரிடம் இருந்தது? பார்வதியை யார் கடத்தினார்கள்? காரணம் என்ன? பார்வதி கிடைத்தாரா? நல்லவராக தெரிபவரின் முகங்களின் நிறம் என்ன? என்பதே படத்தின் கதை.
அதர்வாவின் நடிப்பை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும். நடிப்புத் திறனை காட்டக் கூடிய வாய்ப்பு கிடைத்து அதை சரியாகப் பயன்படுத்தி ஸ்கோர் செய்து இருக்கிறார் அதர்வா. இயக்குனர் கார்த்திக் நரேனின் லக்கி சார்ம் ஆன ரஹ்மான் நரேன் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்து இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தான் நடிப்பில் எப்போதும் ஜீனியஸ் என்பதையும் நிரூபித்து இருக்கிறார். அம்மு அபிராமியின் நடிப்பும் கிளைமாக்ஸ் காட்சியில் நன்று.
படத்தின் ஹைலைட்டே கார்த்திக் நரேன் அமைத்திருக்கும் திரைக்கதைதான். அத்துடன் எந்தக் குறையும் சொல்ல முடியாத எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு, கதை சொல்லல் ஆகியவற்றில் மிகவும் தேர்ந்து இருக்கிறார் கார்த்திக் நரேன்.
0 comments:
Post a Comment