பராரி திரைப்பட விமர்சனம்

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர். கூலி வேலைகளை மட்டுமே நம்பியிருக்கும் இரண்டு பிரிவினரும் சொந்த ஊரில் வேலை இல்லாத காலங்களில் வேலைக்காக கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைக்கு செல்கிறார்கள். அங்கு இரண்டு பிரிவினரும் தமிழர்கள் என்பதால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? என்பதே படத்தின் கதை.


படத்தின் சிறப்பம்சமே அதன் நட்சத்திரங்கள் தான். புதுமுகங்கள் என்ற அடையாளமே தெரியாமல், நமக்கும் தோன்றாமல் ஒவ்வொருவரும் அவரவர் கேரக்டர்களில் வாழ்ந்து இருக்கிறார்கள்.


குறிப்பாக ஊர் பகைக்கு பயந்து காதலை ஒதுக்கி வைக்கும் ஹரி சங்கரும். என்ன ஆனாலும் சரி, நீதான் என் காதலன் என்று ஒவ்வொரு கட்டத்திலும் காதலை உருவாக்க துடிக்கும் சங்கீதா கல்யாணும் படத்தின் ஜீவ நாடிகள். எழில் பெரிய வேடி இயக்கியிருக்கிறார். அதே போல கிளைமாக்ஸ் காட்சியில் இருவருமே கண்கலங்க வைத்து விடுகிறார்கள்.


ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.  பொதுவாக ஆதிக்க சாதியினரை வசதி படைத்தவராகவே திரைப்படங்களில் காண்பிப்பார்கள். இதில் எதார்த்த நிலையை… அவர்களின் வரிய நிலையை காண்பித்து உள்ளனர்.


“எல்லாருமே கஷ்டப்படுறோம்.. இதுல எதுக்குடா ஜாதி வெறி” என்று கேட் வைக்கிறார் இயக்குநர்.

0 comments:

Pageviews